जागरण हिन्दुस्तान दैनिक भास्कर नईदुनिया नवभारत टाइम्स One India

Bundesliga: Teenager Erling Haaland Scores 40th Goal of Season as Borussia Dortmund Go 2nd

15 minutes ago  
समाचार / IBNLive/   
                 

La Liga 2019-20: Lionel Messi Scores Four as FC Barcelona Run Riot Against Eibar

15 minutes ago  
समाचार / IBNLive/   
                 

Asian Wrestling Championship: Ravi Dahiya Wins Gold But Bajrang Punia Settles for Silver

15 minutes ago  
समाचार / IBNLive/   
                 

ISL 2019-20: Late Goals Help ATK Get a Draw Against Bengaluru FC

15 minutes ago  
समाचार / IBNLive/   
                 

Barcelona Spain Masters: Ajay Jayaram Crashes Out in Semi-final as Indian Challenge Gets Over

15 minutes ago  
समाचार / IBNLive/   
                 

Ahead of Trump visit, US talks tough: Make in India has raised protectionism concerns

14 minutes ago  
समाचार / Indian Express/   
                 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடரும்: ஜவாஹிருல்லா பேட்டி

18 minutes ago  
समाचार / தினகரன்/   
தாம்பரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் என்பிஆர் தொடங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தாம்பரத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கிறிஸ்தவ, இந்து சமய பிரமுகர்கள், ஜமாத் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஜவாஹிருல்லா பேசியதாவது: அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கு தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் சில கேள்விகளை மாற்றும்படி கடிதம் எழுதியிருப்பதாகவும் என்சிஆர் அசாம் போன்ற மாநிலத்திற்கு மட்டும்தான் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நீட் தேர்வு, 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசு எந்த மதிப்பும் கொடுக்காமல் இருந்ததோ, அதுபோல்தான் இந்த கடிதமும் குப்பையில் போடப்படும். கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, என்பிஆர் ஆகியவற்றை செயல்படுத்தமாட்டோம் என அறிவிப்பு ..
                 

பூந்தமல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்தது கன்டெய்னர் லாரி: உடலில் பற்றிய நெருப்புடன் டிரைவர் ஓடியதால் பரபரப்பு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: பூந்தமல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் திடீரென தீப்பற்றியது. டிரைவரின் மீது தீப்பிடித்து அவர் எரிந்தபடி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் கேராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் சிங் (33). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கன்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக வந்தார்.  பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சுரேஷ் கன்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பினார். அப்போது டீசல் நிரப்பும் பைப்பை ராஜேஷ்குமார் சிங்கிடம் கொடுத்துவிட்டு சென்றதை தொடர்ந்து, அவர் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக திடீரென டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. மேலும், தீ மளமளவென ராஜேஷ்குமார் சிங் மீது பரவியது. இதனால் பீதியடைந்த அவர் அங்கும், இங்கும் அலறியபடி ஓடினார்.இதையடுத்து அவர் தீப்பிடித்தபடி ஓடிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர் மீது எர..
                 

பத்திரப்பதிவு துறை வருவாய் குறையும் நிலையில் கம்பெனிகளின் மறு சீரமைப்பை பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம்: பதிவுத்துறை செயலாளர் உத்தரவு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: கம்பெனிகளின் மறு சீரமைப்பை பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம் செய்ய பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்திய கம்பெனி பதிவு சட்டம் 1956ன்படி எல்லா நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சட்டத்தின்படி கம்பெனி சரியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பது அதன் வேலை. அந்த நிறுவனங்களின் பங்குதாரர்கள் பங்குகளின் அளவை பொறுத்து அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்கள் தீர்மானிக்கப்படுகிறது. இந்த  கம்பெனியின் சொத்தை, இன்னொரு கம்பெனி உடன் அந்த சொத்தை இணைக்கும் போதோ மற்றும்  கம்பெனியை மறுசீரமைப்பு செய்யும் போது கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் கம்பெனிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பெனி சொத்தை மாற்றி பத்திரம் பதிவு செய்யும் போது, அசையா சொத்துக்களின் சந்தை மதிப்பில் 2 சதவீதம் முத்திரை தீர்வையோ அல்லது கம்பெனியின் பங்கு (ஷேர்) மதிப்பில் 0.6 சதவீதத்திலோ இதில், எதன் மதிப்பு அதிகமோ, அதனடிப்படையில் கட்டணமாக பதிவுக்கு வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில்..
                 

சட்டவிரோதமாக பயிற்சி வகுப்புகள் ஓமியோபதி பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ்: கமிஷனருக்கு கவுன்சில் பதிவாளர் கடிதம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சட்டவிரோதமாக பயிற்சி வகுப்புகள் நடத்தி ஓமியோபதி சிகிச்சை அளிப்பதற்கு போலி சான்றிதழ்கள் வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில்  பதிவாளர் ஆவுடையப்பன் மற்றும் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போலியான நிறுவனங்களால் சட்டவிரோதமாக ஓமியோபதி வகுப்புகள் ரகசியமாக நடத்தப்படுவதாகவும், அதில் ஓமியோபதி சிகிச்சை அளிப்பதற்கான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. தகுதி வாய்ந்த டாக்டர்கள் மட்டுமே ஓமியோபதி சிகிச்சை அளிக்க முடியும். இது போன்ற வகுப்புகளை அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் நடத்துவது சட்டவிரோதமானது ஆகும்.மேலும், ஒரு ஓமியோபதி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 9 தனியார் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகள் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஓமியோபதி பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளை வெற்றிக்கரமாக நிற..
                 

பாட்டி சாவில் சந்தேகம் பேரன் போலீசில் புகார்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
பெரம்பூர்: வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் இறந்து விட்டதால், மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். நேற்று அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது வள்ளியம்மாள் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வள்ளியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், வள்ளியம்மாவின் பேரன்  சுரேஷ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எங்களது வீட்டில் தனியாக இருந்த பாட்டி திடீரென இறந்துள்ளார். வீட்டில் இருந்த 7 சவரன்  நகை மற்றும் ரூ.5 லட்சம் மாயமாகி உள்ளது. எனவே, அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். போலீசார் இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...
                 

கார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி?... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
* 300 கேள்வியில் 30க்கு மட்டுமே பதில் * 5 நிமிடத்தில் எழுத்து அழியும் மேஜிக் மைசென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்த விசாரணையில், கைதான புரோக்கர் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கார் டிரைவரை கையில் போட்டுக்கொண்டு 2 மணி நேரத்தில் விடைத்தாள் திருத்தி மோசடி செய்ததாகவும், தேர்வில் 300 கேள்விகளுக்கு 30க்கு மட்டுமே பதில் எழுதியும், 5 நிமிடத்தில் அழியும் மை பேனாவை பயன்டுத்தி முறைகேடு செய்ததாகவும் அவர் புட்டு புட்டு வைத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. குறிப்பாக,  ராமேஸ்வரத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 44க்கும்  மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பத்தில்  ராமேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள்  மல்லிகா, விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர்  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய குற்ற..
                 

வாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தயாரிப்பாளருடன் தகராறு ஏற்பட்டதால், வாடகை தராமல் ஓட்டலில் இருந்து நடிகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மெஹரின் பிர்ஸடா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அஸ்வத்தாமா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா ஹீரோ. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சக நட்சத்திரங்களுடன் மெஹரின் கலந்துகொண்டார். கடைசிநாளில் மற்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த மெஹரினை இதில் பங்கேற்க தயாரிப்பாளர் அழைத்தார். ஆனால், தனக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டிருப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளருக்கும், மெஹரினுக்கும் தகராறு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு வராவிட்டால் ஓட்டல் வாடகை தர முடியாது என்று தயாரிப்பாளர் கறாராக சொல்லிவிட்டார். இதில் கடும் கோபமடைந்த மெஹரின், மறுநாள் காலை யாரிடமும் சொல்லாமல், வாடகையும் தராமல் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறினார். இதையறிந்த ஓட்டல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. மெஹரின் தங்கியிருந்த அறைக்கு வாடகை தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டது. ஆனால்..
                 

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
டெல்லி: நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம்  தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால்,  தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது...
                 

எந்த சாலைகளில் எந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்; வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்தது மத்திய அரசு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
டெல்லி: இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான வேகக்கட்டுப்பாடு அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் எந்த எந்த சாலையில் எந்த எந்த வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்து 2018-ம் ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலின்படி, வாகனங்கள் சாலையில் செல்ல வேண்டிய  வேகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது. கார்கள் விரைவுச்சாலையில் 120 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 100 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 70 கி.மீட்டர் வேகம் வரை கார்களை இயக்கலாம். பேருந்துகள் உள்ளிட்ட  பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைவுச்சாலையில் 100 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 90 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை பேருந்துகளை  இயக்கலாம். லாரி உள்ளிட்ட சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள், விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம்..
                 

2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் முதல்ல வன்முறை, கொலையை நிறுத்துங்கப்பா...மேற்குவங்க மாநில ஆளுநர் ஆதங்கம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
கொல்கத்தா: 2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், அரசியல் வன்முறை, கொலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று, மேற்குவங்க மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும், ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் மம்தா, மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இந்நிலையில் வடக்கு வங்காளத்தின் சிலிகுரில் நடந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆளுநர் ஜகதீப் தங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்குவங்க மாநில அரசியலை பொறுத்தவரை வன்முறை மற்றும் கொலைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு அரசியல் வன்முறை மற்றும் கொலைகள் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தற்போது நடக்கும் வன்முறை மற்றும் கொலைகள் தேர்தல்களுடன் தொடர்புடையதாக உள்ளது. அனைவரும் இதை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த 15 முதல் 20 நாட்களில் மாநில அரசாங்கத்துடனான எனது உறவு நன..
                 

மாணவி அமுல்யாவை ஜாமீனில் விட்டால் சுட்டுத் தள்ளுவோம்: ஸ்ரீராமசேனா அமைப்பினர் ஆவேசம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
பல்லாரி: ‘தேச துரோக கோஷங்கள் எழுப்பியவர்களுக்கு  ஜாமீன் வழங்க கூடாது.  அப்படி வழங்கினால் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும்போது நாங்களே  சுட்டு தள்ளுவோம்,’ என்று ஸ்ரீராமசேனா எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது, அமுல்யா என்ற மாணவி, ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டார். அதேபோல், நேற்று முன்தினம் ஆராத்ரா என்ற மாணவி, ‘காஷ்மீர் விடுதலை’ பதாகையை காட்டியதால் கைது செய்யப்பட்டார். இவர்களை கண்டித்து, பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டையில் ஸ்ரீராமசேனா சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அமைப்பின்  பிரமுகர் சஞ்சீவமரடி பேசுகையில், ‘‘பெங்களூருபோராட்டத்தில் அமுல்யா என்ற மாணவி, ‘பாகிஸ்தான் வாழ்க’  என்று கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளா்ர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.  ஜாமீன் வழங்கினால், அவர்கள்சிறையில் இருந்து வெளியே வரும் போது சுட்டு தள்ளுவோம் அல்லது சுட்டு தள்ளுபவர்களுக்கு ரூ.10  லட்சம் பரிசு தரப்படும்,’’ என்றார்...
                 

குஜராத்தில் நடந்தது நினைவில் இருக்கட்டும்: பாஜ எம்எல்சி மிரட்டல் பேச்சு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
நாக்பூர்: `குஜராத்தில் என்ன நடந்தது என்பது நினைவில் இருக்கட்டும்’ என்று வாரிஸ் பதானை பாஜ எம்எல்சி கிரிஸ் வியாஸ் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கலபுர்கியில் கடந்த 16ம் தேதி நடந்த தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் வாரிஸ் பதான் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், `முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். நாம் 15 கோடியாக இருக்கலாம். ஆனால்,100 கோடி மீது நடத்தும் தாக்குதல் நடத்தும் பலம் நமக்கு இருக்கிறது,’ என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மகாராஷ்டிரா வில் டிவி சேனலுக்கு பாஜ எம்எல்சி கிரிஷ் வியாஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் இளைஞர்களும், பாஜ தொண்டர்களும் வாரிஸ் பதானுக்கு அவர் பேசிய அதே மொழியில் பதிலடி கொடுப்பார்கள். நாங்கள் பொறுமையுடன் இருக்கிறோம் என்றால், உங்களுடன் மோத முடியாது என அர்த்தமில்லை. குஜராத்தில் என்ன நடந்தது என்பது நினைவில் இருக்கட்டும். அதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், இன்று பொங்கி எழுவதற்கு தைரியம் இருக்காது. உங்களுடன் மோத தயாராகவே இருக்கிறோம்..
                 

உலகமே அஞ்சிய விவகாரங்களில் 130 கோடி இந்திய மக்களும் தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்: பிரதமர் மோடி பாராட்டு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
புதுடெல்லி: ‘‘உலகமே விவாதித்த, அச்சம் கொண்டிருந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களில், சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை 130 கோடி இந்தியர்களும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்,’’ என பிரதமர் மோடி பாராட்டினார். டெல்லியில் ‘மாறிவரும் உலகமும் நீதித்துறையும்’ என்ற தலைப்பில் சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியது. 20 நாடுகளைச் சேர்ந்த நீதித்துறையினர் பங்கேற்ற இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி  வைத்து பேசியதாவது: பாலின சமநீதி இல்லாமல் உலகில் எந்த நாடும், எந்த சமூகமும் வளர்ச்சியை எட்ட முடியாது. அந்த வகையில், சமத்துவ உரிமையின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பாலின சமநீதியை உறுதிப்படுத்தி வருகிறது. சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு, ராணுவ சேவையில் பெண்கள் நியமனம், பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசு திட்டங்கள் மற்றும் சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுப்பு, முத்தலாக் தடை, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை, திருநங்கைகளுக்கான உரிமை போன்றவற்றை வழங்கிட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாத..
                 

‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வரி பிரச்னைக்கு தீர்வு காணலாம்: புதிய வாய்ப்பு தருகிறது வருமான வரித்துறை

18 minutes ago  
समाचार / தினகரன்/   
புதுடெல்லி: ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வரி வழக்கு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம்,’ என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வரி வழக்குகளை சமூகமாக தீர்த்துக் கொள்ள ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இத்திட்டம் தொடர்பான விளம்பரத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதில், ‘உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருமான வரி வழக்கு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பொன்னான வாய்ப்பு,’ என கூறப்பட்டுள்ளது. * இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 31ம் தேதிக்கு முன்பு வரை நிலுவையில் உள்ள வருமான வரித்துறை தொடர்பான வழக்குகள், மேல்முறையீட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம். * மேல்முறையீடு செய்ய கடந்த ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள வரி வழக்கு பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளலாம். * வருமான வரி, அபராதம், வட்டி, வரி பிடித்தம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் இத்திட்டத்தில் தீர்த்துக் கொள்ள முடியும். * இத்திட்டத்தின் கீழ் மார்ச் 31ம் தேதிக்குள் வரி செலுத்தினால், பிரச்னை தீர்ப்பு வரியை 100 சதவீதம் செலுத..
                 

தாயிடம் ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை: நண்பன் கைது

18 minutes ago  
समाचार / தினகரன்/   
அண்ணாநகர்: கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் ஜெய்குமார் (24). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் (44). இருவரும் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா அடிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெய்குமார் தனது தாய் செல்போன் எண்ணை சேகரிடம் கொடுத்து, ‘‘உனக்கு கஞ்சா வேண்டுமென்றால், இந்த எண்ணில் கூப்பிடு. கொண்டு வந்து தருகிறேன்,’’ என கூறியுள்ளார். அந்த எண்ணில் தொடர்புகொண்ட சேகர், ஜெயக்குமாரின் தாயாரிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஜெய்குமார், சேகரை கண்டித்துள்ளார். பின்னர், ஜெய்குமார், தனது மற்ெறாரு நண்பர் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ், கூவம் நதி அருகே கஞ்சா அடித்துள்ளார்.அப்போது, சேகரை செல்போனில் தொடர்புகொண்டு அங்கு வரவழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த சேகர், இவர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்துள்ளார். போதையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெய்குமார், கார்த்திக்குடன் சேர்ந்து, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து, சேகர் தலையில் சரமாரியாக தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தப்பியுள்ளனர். நேற்று காலை க..
                 

ஏலகிரி மலை பள்ளக்கனியூர் ஆற்றில் தனியார் விடுதிகளில் பயன்படுத்தப்படும் துணிகளை துவைப்பதால் தண்ணீர் மாசுபாடு

19 minutes ago  
समाचार / தினகரன்/   
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வசதிக்காக அரசு தங்கும் விடுதி ஒன்றும், 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. இந்நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளிலிருந்து அழுக்குத் துணிகளை ஆட்டோக்கள் மூலம் கொண்டுவந்து பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள ஆற்றில் துவைப்பதால் தண்ணீர் மாசுபட்டுள்ளது. மேலும் இந்த தண்ணீரை, காட்டுப் பகுதிக்குள் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் குடிப்பதால் நோய்த்தொற்று ஏற்படுவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுமட்டுமின்றி இந்தத் தண்ணீர் காட்டுப்பகுதியில் ஆறாக ஓடி ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கலப்பதால் அதில் குளிக்கும்  பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு துணிகளை துவைக்கும் நபர்களை அங்குள்ள பொதுமக்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இல்லாத நேரத்தில் ஆட்டோக்கள் மூலம் துணிகளை ரகசியமாக எடுத்து..
                 

மகாசிவராத்திரி விழா: திருச்சியில் அகோரிகள் நள்ளிரவு யாகம்

19 minutes ago  
समाचार / தினகரன்/   
திருச்சி: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த தம்பதி ராஜகோபால் - மேரி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது மகன் மணிகண்டன்(38). சிறு வயதிலேயே காசிக்கு சென்று அகோரியாக மாறி விட்டார். (ஆண் அகோரிகள் பூஜையின்போது சிவப்பு நிற லங்கோடு மட்டும் அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசி இருப்பார்கள். பெண் அகோரிகள் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருப்பார்கள்) நள்ளிரவில் பூஜை செய்வது, சுடுகாட்டில் எரியும் சடலத்தின் மாமிசத்தை சாப்பிடுவது ஆகிய செயல்பாடுகளில் அகோரிகள் ஈடுபடுவதாக கூறப்படுகறது. திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இதை அகோரி மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் கடந்த ஆண்டு அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ காலங்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் அகோரி கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. திருச்சி மற்றும் பிற மாவட்டம் பிற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அகோரிகள்..
                 

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் கோடிக்கணக்கில் பணம் விரயம்: துண்டு நோட்டீஸ் வீச்சால் பரபரப்பு

19 minutes ago  
समाचार / தினகரன்/   
தஞ்சை: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் துண்டு நோட்டீஸ் வீசப்பட்டது. அதில், பல்கலையில், கோடிக்கணக்கில் பணம் விரயம் செய்யப்பட்டுஉள்ளதாகவும், முறைகேடுகள் ஏராளமாக நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் இங்கு பொறுப்பேற்று 1 வருடம் ஆகிறது. தகுதி இன்றி இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த நியமனத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு பாலசுப்பிரமணியன் தடை வாங்கி, தொடர்ந்து துணைவேந்தர் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக எம்ஜிஆரால் துவங்கப்பட்டது இந்த பல்கலைக்கழகம். ஆனால் இப்போது இங்கு அரசியல் தலையீடு, அலுவலர்களிடையே உட்பூசல் ஆகியவற்றால், பல்கலைக்கழகத்தின் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.இந்நிலையில் பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல துறை அலுவலகங்களில் நேற்று ஒரு துண்டு நோட்டீஸ் வீசப்பட்டிருந்தது. தமிழ் பல்கலைக்கழக யோக்கியவான்கள் என்ற தலைப்பில் அந்த துண்டு நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்கள் வரும..
                 

காலரை தூக்கிவிடும் ஜெயில் விஜிலென்ஸ்

19 minutes ago  
समाचार / தினகரன்/   
தமிழக ஜெயில் டிபார்ட்மென்ட்ல நடக்குற தில்லுமுல்லு, ஊழல், லஞ்சம், கைதிகளோட மனைவியுடன் ஆபீசருங்களுக்கு இருக்குற கள்ளத்தொடர்பு பற்றி, சமீபத்துல ஏடிஜிபி 3 பக்க அறிக்கைய வெளியிட்டாரு. இந்த அறிக்கை வந்ததுல இருந்து, மாநிலம் முழுசும் இருக்குற சிறைத்துறை ஆபீசருங்க அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டாங்களாம். ஆனா, மாங்கனி மாவட்டத்துல இருக்குற சிறை விஜிலென்ஸ் மட்டும், காலர தூக்கிவிட்டு பெருமைப்படுறாங்களாம். முக்கியமா, ஏடிஜிபி அறிக்கையில இருந்த லஞ்சம், கைதிகளோட மனைவிகளுடன் கள்ளத்தொடர்பு போன்ற மேட்டர் எல்லாம், நாங்க சொன்னது தான்னு, பெருமையா பேசிட்டு இருக்காங்களாம். இதனால, விஜிலென்ஸ் ஆளுங்கள பார்த்தாவே, சிறை அதிகாரிங்க தெறிச்சு ஓடுறாங்களாம்.காட்டிக்கொடுக்கும் காக்கி ‘இன்பார்மர்கள்’ வலையில் சிக்குவார்களா?தேனி அருகே உள்ள பூதிப்புரம், கோடாங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்கள், மாவட்டத்தின் கஞ்சா விற்பனை தலைமையிடமாகச் செயல்படுகின்றன. தேனியிலும், அல்லிநகரத்திலும் கஞ்சா விற்பனை களைகட்டி உள்ளது. இங்கு பெண்களே அதிகளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு கூட மிக மிக எளிதாக கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா வேட்..
                 

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ஆல், அரசன், புளிய மரங்கள் ‘பலி’: ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன் புளி உற்பத்தி சரிந்து வருவாயும் இழப்பு

19 minutes ago  
समाचार / தினகரன்/   
வேலூர்: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்தே பிரதான பங்கு வகிக்கிறது. நீர்வழி, நிலவழி, வான்வழி போக்குவரத்து என்ற மூன்றில் நிலவழி போக்குவரத்தில் ரயில் போக்குவரத்தை தவிர சாலை போக்குவரத்து பிரதான பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.தமிழகத்தில் 2,274 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 2,250 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளிலும், பல்லாயிரம் கி.மீ தூரம் ஊரக சாலைகளிலும் புளியமரங்கள், ஆல், அரசன், வேம்பு, இலுப்பை, நாவல், பனை, புங்கன் மரங்கள் நிறைந்துள்ளன. இதுபோக வனப்பகுதிகள், கிராமப்புறங்களிலும் தோப்புகளாகவும், தனித்த மரங்களாகவும் புளிய மரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில ெநடுஞ்சாலைகள், கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் என மொத்தம் 50 லட்சம் புளிய மரங்கள் இருந்தன. இதுபோக வனம், விவசாயம் மற்றும் பிற நிலங்களில் என மொத்தம் 20 லட்சம் மரங்கள் நிறைந்துள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை பனை மரத்துக்கு அடுத்த இடத்தை புளிய மரம் பெற்றிருந்தது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சம் புளிய மரங்கள் வெட்டி சாய..
                 

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடின்றி கைவிரிப்பால் தடம்புரளும் தமிழக ரயில்வே திட்டங்கள்

19 minutes ago  
समाचार / தினகரன்/   
* அகல ரயில்பாதை பணிகளும் அரைகுறை* தனியார்மயத்தால் பயணிகள் கடும் அவதிபட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஏற்கனவே துவங்கிய அகல ரயில்பாதை பணிகளும் அரைகுறையாகவே உள்ளன. ரயில்வேயின் பெரும்பாலான சேவைகளை தனியார்மயமாக்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மத்திய அரசு நேரடியாக நிர்வகிக்கும் மிகப்பெரிய பொது, போக்குவரத்து நிறுவனமாக  ரயில்வே வாரியம் உள்ளது. மக்கள் சேவையை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தது. ‘ஏழை மக்களின் சொர்க்க ரதம்’ என்றே ரயிலை குறிப்பிடுவார்கள். குறைந்த கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை உள்ளதால், அவரவர் தங்களது வசதிக்கேற்ற வகையில், ரயிலில் பயணம் செய்து வந்தனர். படுக்கை வசதி, சோர்வு தெரியாதது, பாத்ரூம் வசதி, நேரடி உணவு சேவை என இரவில் பயணிப்போர், ஒரு வீட்டில் கிடைக்கும் வசதிகளுடன் ரயிலில் பயணம் செய்தனர். ஆனால், ரயில்கள் மற்றும் ஒரு சில சேவைகளை தனியார்மயமாக்கியது உள்ளிட்ட மத்திய அரசின் சில அதிரடி நடவடிக்கைகளால் சேவை மனப்பான்மை மங்கி, வியாபார நோ..
                 

தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது

19 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: இந்தியாவில் தலைசிறந்த இளம் எம்.எல்.ஏ விருதை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பெற்றுள்ளார். புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சட்டமன்ற தரவுகளின் அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியை இந்தியாவின் இளம் எம்.எல்.ஏ விருதுக்கு தேர்வு செய்தது. அதன்படி, நேற்று தலைநகர் டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐவரிகோஸ்ட் நாட்டிலிருந்து வந்த ஐக்கிய நாட்டு சபையின் மக்கள் தொகை நிதியக்கத்தின் பூடான் இயக்குனர் அர்ஜென்டினா மடாவல் மற்றும் ஜெயின் மத அறிஞர் ஆச்சார்யா டாக்டர் லோகேஷ் ஆகியோர் இணைந்து இவ்விருதை அவருக்கு வழங்கினர். தமிழ்நாட்டில் இவ்விருதை பெரும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது...
                 

தருமபுரியில் போலீசார் சோதனை: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்... ஒருவர் கைது

19 minutes ago  
समाचार / தினகரன்/   
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே மாது என்பவர் வீட்டில் சோதனை நடத்தியபோது 2 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பாடி கிராமத்தில் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...
                 

சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 குற்றவாளிகள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை

19 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 குற்றவாளிகள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சசிகுமார், ஜனார்த்தனன், தீபன், பிரசாந்த், பாலு, சக்தி, வாசுதேவன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ், குமரன், கண்ணன், ஜாகீர், அண்ணாதுரை, கார்த்திக் உட்பட 18 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
                 

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன் நியமனம்

19 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு நியமித்த சிறப்பு அதிகாரி குழு தலைமையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஜூலைக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
                 

பிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

19 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

लायंस इंटरनेशनल मानवता की सेवा करने वाली दुनिया की सबसे बड़ी संस्था

23 minutes ago  
समाचार / जागरण/   
                 

Fear of family made Delhi woman keep marriage a well-guarded secret

27 minutes ago  
समाचार / Indian Express/   
                 

Rajnath Singh: I pray for early release of Abdullahs & Mehbooba from detention

37 minutes ago  
समाचार / Times Of India/   
                 

Uddhav Thackeray, Sharad Pawar launch book on A R Antulay, regale gathering with anecdotes

37 minutes ago  
समाचार / Times Of India/   
                 

Karnataka Minister Jarkiholi threatens to resign if injustice done to Kumathalli

37 minutes ago  
समाचार / Times Of India/   
                 

President Trump likely to be offered 'Trump platter' at Bukhara

37 minutes ago  
समाचार / Times Of India/   
                 

पटवाटोली पेहानी में भंडारे में श्रद्धालुओं ने चखा प्रसाद

39 minutes ago  
समाचार / जागरण/   
                 

खेती के गुर सीखने किसान हुए भागलपुर रवाना

an hour ago  
समाचार / जागरण/   
                 

Gujarat confidential: Inauguration Confusion

an hour ago  
समाचार / Indian Express/   
                 

भ्रष्टाचार पर व्यंग्य: भ्रष्टाचार से नाराजगी बस उसी को होती है जिसे खुद इसका मौका नहीं मिला

an hour ago  
समाचार / जागरण/   
                 

पटना जंक्शन के रिटायरिग रूम में मिलेगी स्टार होटल की सुविधा

an hour ago  
समाचार / जागरण/   
                 

1028 அரசு மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி வழக்கு: பதில் தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 1,028 அரசு மருத்துவர்கள் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும் என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அரக்கோணத்தை சேர்ந்த டாக்டர் வி.ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வி.வெடியப்பன் உள்ளிட்ட டாக்டர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். கடந்த 2018ல் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 1,884 அரசு மருத்துவர்கள் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். இந்த தேர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 30 என்றும் பிற  பிரிவினர்களுக்கு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தேர்வில் நாங்கள் அனைவரும் 48 முதல் 53 மதிப்பெண் வரை பெற்றுள்ளோம்.இந்நிலையில், ஒரு சிலர் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு கவுன்சலிங் மூலம் காலிப்பணியிட..
                 

தனித்தனி பாக்கெட்டுகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்வதை தடுக்க கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: குட்கா மற்றும் பான்மசாலாவை தனி பாக்கெட்களிலும், புகையிலையை தனி பாக்கெட்களிலும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் ஒழுங்குமுறை மற்றும் விளம்பர தடைச் சட்டத்தில் இருந்து மெல்லும் புகையிலை, பான்மசாலா, குட்கா ஆகியவற்றை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை உணவு பொருட்கள் எனக் கூறி, அவற்றுக்கு தடை விதித்து 2011ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில், தமிழக அரசு, 2013ம் ஆண்டு, பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் ஒழுங்குமுறை மற்றும் விளம்பர தடைச் சட்டத்தில் மெல்லும் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகிய புகையிலைப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை தனித்தனி பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுவதாககக் கூறி, சென்னை நிதிச் சந்தைகள் மற்றும் பொறுப்புடைமை அமைப்பின் தலைவர் மனோஜ் கே.சேத், சென்னை உயர் நீதிமன்றத்தில..
                 

தாய்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

an hour ago  
समाचार / தினகரன்/   
பெர்த்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தாய்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்தது. நன்னாபத் கொஞ்சரோயன்கி 33, நருமோல் சாய்வாய் 13 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஸ்டெபானி டெய்லர் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்து வென்றது. ஹேலி மேத்யூஸ் 16, லீ ஆன் கிர்பி 3, தியாந்த்ரா டோட்டின் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 26 ரன், ஷெமைன் கேம்ப்பெல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 2 புள்ளிகள் பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டெபானி டெய்லர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்...
                 

சில்லி பாயின்ட்...

an hour ago  
समाचार / தினகரன்/   
* தேசிய அளவில் முதல் முறையாக நடத்தப்படும் கேலோ இந்தியா பல்கலை. விளையாட்டு போட்டித் தொடரை ஒடிஷா மாநிலம் கட்டாக், நேரு உள்விளையாட்டரங்கில் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கிவைத்தார். இந்த தொடரில் நாடு முழுவதும் இருந்து 159 பல்கலை. அணிகளை சேர்ந்த 3400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.* வெஸ்ட் இண்டீசுடன் கொழும்புவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெ. இண்டீஸ் 50 ஓவரில் 289/7 (ஹோப் 115 ரன்). இலங்கை 49.1 ஓவரில் 290/9.* தென் ஆப்ரிக்க அணியுடன் ஜோகன்னஸ்பர்கில் நடந்த முதல் டி20ல் ஆஸ்திரேலியா 107 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி. 20 ஓவரில் 196/6 (பிஞ்ச் 42, ஸ்மித் 45); தென் ஆப்ரிக்கா 14.3 ஓவரில் 89 ரன் ஆல் அவுட். ஆஷ்டன் ஏகார் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்...
                 

தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை இருக்கக்கூடாது: நீதிமன்ற மாநாட்டில் மத்தியமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேச்சு

an hour ago  
समाचार / தினகரன்/   
தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை எதுவும் இருக்கக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி இருக்கிறார். டெல்லியில் இன்று சர்வதேச நீதிமன்ற மாநாடு 2020, உலக மாற்றத்தில் நீதிமன்றம் என்ற தலைப்பில் நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றார்கள். மாநாட்டில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது; இப்படிப்பட்ட பிரிவினர் நாட்டின் நீதி பரிபாலன துறையை தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க க்கூடாது என அவர் வேண்டிக் கொண்டார்.ஜனரஞ்சகம் சட்டத்தின் தீர்க்கப்பட்ட கொள்கைகளை மீறக்கூடாது. வெகுஜன விருப்பம், நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் கொள்கைகளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். எப்படி ஆட்சி செய்வது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கையில் இருப்பதைப் போல, நீதி வழங்குவது நீதிபதிகளின் கையில் தான் இருக்க வேண்டும், அதில் பிறர் தலையீடு கூடாது என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்...
                 

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 18 பேருக்கு குண்டாஸ்

an hour ago  
समाचार / தினகரன்/   
ெசன்னை: சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி மயிலாப்பூர் சாரதாபுரம் தெருவை சேர்ந்த சசிகுமார் (33), அயனாவரம் போர்ச்சுக்கீசியர் சாலையை சேர்ந்த ஜனார்த்தனன் (36), மயிலாப்பூர் பல்லக்குமா நகரை சேர்ந்த தீபன் (32), ராயப்பேட்டை ராமாராவ் கார்டன் 3வது தெருவை சேர்ந்த பாலு (30), அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23), வாசுதேவன் (32), திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பைபாஸ் சாலையை சேர்ந்த சக்தி (22), பம்மல் பகுதியை சேர்ந்த தமிழ் (23), ராயப்பேட்டையை சேர்ந்த குமரன் (42), ராயப்பேட்ைட கலிங்கராயன் தெருவை சேர்ந்த கண்ணன் (27), கண்ணகி நகரை சேர்ந்த அண்ணாதுரை (34), அருண்குமார் (23), துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜாகீர் (22), மாமல்லபுரத்தை சேர்ந்த கார்த்திக் (38), திருவொற்றியூரை சேர்ந்த அசோக் (22) அரும்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (23) வியாசர்பாடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (24), கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (44) ஆகியோர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இவர்கள் 18 பேரை போலீசார் குண்டர..
                 

கிராமங்களில் இணையதள வசதி வேண்டும்: மாணவிகள் கோரிக்கை

an hour ago  
समाचार / தினகரன்/   
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணையதள வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 10க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 497 பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இன்றை காலகட்டத்தில் இணையதளம் என்பது உணவு பொருட்களை போல அத்தியாவசிமாகிவிட்டது. படிப்பு பொது அறிவு என அனைத்தையும் இணையதள வசதியிருந்தால் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளாலம். இணைதள இணைப்புள்ள ஒரு கணிப்பொறியில் உள்ள தேடுதளத்தில் ஒரு புள்ளி வைத்தால் அந்த புள்ளி குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். இதனால் இணையம் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டது. இதனை வசதிக்கு ஏற்றார் போல் சிலர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இன்று வரை இணையதள வசதி இன்னும் எட்டா கனியாகத்தான் உள்ளது. இதனால் அவர்கள் படிப்பில் சந்தேகம் மற்றும் பொது அறிவு குறிந்து தெரிந்துகொள்ள இணையதளத்திற்கு செல்ல முடியவில்லை. பட..
                 

தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

an hour ago  
समाचार / தினகரன்/   
சென்னை: தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில்  கூறியிருப்பதாவது: அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து  சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆற்றினுள்ளேயே இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் செலவழிக்கப்படுவது இந்த லட்சணத்தில்தானா, பணிகள் நடக்கிறதா அல்லது பணிகள் நடப்பதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா, அனைத்து மாவட்ட கழகங்களும் இதனைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது...
                 

चोरी के मामलों का उद्भेदन करने में पटना पुलिस फिसड्डी

an hour ago  
समाचार / जागरण/   
                 

सरैया बैंक लूटकांड : पांच लुटेरा गिरफ्तार, लूट के 3.21 लाख बरामद

an hour ago  
समाचार / जागरण/   
                 

Don’t need a single story of nationhood

an hour ago  
समाचार / Indian Express/   
                 

भंडारों में श्रद्धालुओं ने ग्रहण किया प्रसाद

an hour ago  
समाचार / जागरण/   
महाशिवरात्रि के उपलक्ष्य में कस्बे के विभिन्न शिव मंदिरों में आयोजित भंडारे में श्रद्धालुओं ने प्रसाद ग्रहण किया। कस्बे के श्री महाकालेश्वर शिव मंदिर शिव मंदिर पतलाड़ी शिव मंदिर बड़ोग शिव गुफा कालाकोट आदि कई जगहों पर मंदिर कमेटियों के सदस्यों द्वारा भंडारे लगाए गए। इन भंडारों में सुबह से शाम तक श्रद्धालु भोजन करते रहे।..
                 

Dominic Thiem Loses Chance to Pass Roger Federer in ATP Rankings

15 minutes ago  
समाचार / IBNLive/   
                 

உலக, நபார்டு வங்கிகளில் கடன் தொகை அதிகமானதால் தர மறுப்பு; ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியை நாடிய தமிழக அரசு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: உலக, நபார்டு வங்கிகளில் கடன் தொகை அதிகமானதால் தர மறுத்து விட்டதால், ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியை தமிழக அரசு நாடி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இனி வருங்காலங்களில் இந்த வங்கிகளில் கடன் பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகள் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவியை பெறுவதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே தான் உலக வங்கி, நபார்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி பெற்று ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொதுப்பணித்துறையில் அணைகள், ஏரிகள் புனரமைப்பு திட்டம், நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு சாலைகளை தரம் உயர்த்தும் திட்டம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் கடன் வாங்கி தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வங்கிகளிடம் இருந்து இதுவரை 4 லட்சம் கோடி வரை கடன் நிலுவை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த வங்கிகள் சார்பில் தமிழகத்துக்கு தொடர்ந்து கடன் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ₹11 ஆயிரம் கோ..
                 

காவலர் பதவிக்கு போலி வேலைவாய்ப்பு விளம்பரம் ஆர்பிஎப் எச்சரிக்கை

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: ரயில்வே பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சில இணையதளங்களில் ‘ஆர்பிஎப்’ல் 19,952 கான்ஸ்டபிள்களை தேர்வு செய்வதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆர்பிஎப், ரயில்வே அமைச்சகம் தனது அலுவலக இணையதளத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. பத்திரிகை, டிவியிலும் தெரிவிக்கவில்லை. ஏதாவது விளம்பரம் இருந்தால், அது ஆர்பிஎப், ரயில்வே அமைச்சகத்தின் இணையதள முகவரியில் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே இதை நம்ப வேண்டாம். பொய்யான செய்திகளை நம்பி பாதிக்கப்பட்டால், அதற்கு ஆர்பிஎப், ரயில்வே பொறுப்பேற்காது...
                 

பணிபுரியும் இடத்தில் பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: பணிபுரியும் இடத்தில் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்பு  சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் துறையின் கீழ் செயல்படும் டிரேட் மார்க் துறையின் சென்னை அலுவலகத்தில் துணை பதிவாளராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் மீது அதே அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணியாற்றி வரும் பெண் அதிகாரி கடந்த 2013 டிசம்பரில் டிரேட் மார்க் பதிவாளரிடம் புகார் கொடுத்தார். புகாரில் நடராஜன் தன்னை இழிவாக நடத்துவதாகவும், ஒருசார்பு நிலை எடுப்பதாகவும் கூறியிருந்தார். பதிவாளர் அந்த புகாரை துறை ரீதியாக விசாரணை நடத்தும் குழுவுக்கு அனுப்பினார்.துறைரீதியான குழு விசாரணையில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று நினைத்த பெண் அதிகாரி, கடந்த 2016 ஜூன் 30ம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். அதில், தன்னை நடராஜன் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கினார் என்று பலமுறை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த புகார் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அந்த புகாரை விசாரித்த கமிட்டி, பு..
                 

ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டுக்கு முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் முன்ஜாமீன் கோரி, திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. இதேபோல ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் முன் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்ததால், தன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தரன் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் என்பது, அமர்வு நீதிமன்றமாக கருதப்படுவதால் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று வாத..
                 

கடற்கரையில் விதிமீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் அகற்றம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரை பகுதியை ஒட்டி கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை மண்டல சான்று இல்லாமல் சொகுசு பங்களாக்கள், பண்ணை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழுமம் ஆகிய அமைப்புகள் இந்த விதிமீறல் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. குறிப்பாக முட்டுக்காடு ஊராட்சியில் அனுமதியற்ற மனைப்பிரிவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் வரும் 25ம் தேதி இடிக்கப்படும் என சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், விதிகளை மீறி கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களின் உரிமையாளர்களே, அந்தந்த சொகுசு பங்களாக்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றி..
                 

சம்பளத்தை திருப்பி தர வேண்டும் நடிகை திரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: திருஞானம் இயக்கத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் திரிஷா பங்கேற்கவில்லை. அவர் துபாய் சென்றுள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, ‘‘தான் நடித்த  இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு திரிஷா வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு  கொடுக்காவிட்டால்,  சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டும்  என தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்’’ என்றார்...
                 

ஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: சர்வதேச அளவில் வசூல் செய்த ஹாலிவுட் படம் ‘’ஜூராசிக் பார்க்’’. இதை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். மேலும் ‘’ஹுக்’’, ‘’கேச் மீ இஃப் யூ கேன்’’, ‘’வார் ஆஃப் த வேர்ட்ஸ்’’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருதும் வாங்கியுள்ளார். அவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆபாச படத்தில் நடிப்பதாக அறிவித்து அதிர வைத்துள்ளார். ஏற்கனவே அதுபோன்ற படங்களை மைக்கேலா தயாரித்து வரும் நிலையில், இப்போது அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதையடுத்து ஆபாச படத்தில் நடிக்க லைசென்ஸ் பெற்ற பிறகு மைக்கேலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘’தினமும் பணி செய்து சோர்வடைந்ததுதான் மிச்சம். மனதுக்கு திருப்தி கிடைக்கவில்லை. எனவேஇதுபோன்ற வேலை செய்ய விரும்புகிறேன். இதன்மூலம் மற்றவர்களை திருப்திப்படுத்த முடியும்’’ என்றார்.மைக்கேலாவின் முடிவை பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா வரவேற்றுள்ளார். அவர் கூறும்போது, ‘’மகள் ஆபாச நடிகையாக மாற தந்தையே சம்மதித்துள்ளார். இதைவிட வேறெந்த ஒப்புதலும் தேவையில்லை’’ என்றார்...
                 

கொரோனா வைரஸ் பலி எதிரொலி: சிங்கப்பூர் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவுறுத்தல்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ்  25 நாடுகளில் பரவியிருக்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் இந்நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1109 ஆக அதிகரித்தது. அதேபோல் பலியானோர்  எண்ணிக்கை 118 ஆக இருந்தது. நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது. 75,567 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடாக தென்  கொரியா மாறியுள்ளது. இந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இங்கு வைரஸ் பாதிப்புள்ளோர் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியா மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா  வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே தென் கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், தாய்வான் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பலி ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலு..
                 

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி

18 minutes ago  
समाचार / தினகரன்/   
புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சோனியா மகளான பிரியங்கா அவரது டுவிட்டரில்; அதிபர் டிரம்பின் வருகைக்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக அறிகிறேன். இந்த பணம் ஒரு குழு மூலம் செலவிடப்படுகிறது. இந்த கமிட்டி உறுப்பினர்கள் யார் என்பதும் தெரியாது. அக்குழுவுக்கு எந்த அமைச்சகம் எவ்வளவு பணம் கொடுத்தது ? இது போன்ற விவரத்தை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? அரசாங்கம் ஏன் மறைக்கிறது? என தெரிவித்துள்ளார்...
                 

நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை: காந்தி ஆசிரம வருகை திடீர் ரத்து?....சபர்மதியில் விழா ஏற்பாடுகள் திடீரென நிறுத்தம்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
காந்திநகர்: நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும்நிலையில், அவர் காந்தி ஆசிரம வருகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், சபர்மதியில் விழா ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டது. இந்தியாவுக்கு நாளை மறுநாள் (பிப். 24) வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 12 மணிக்கு டிரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதியில் காந்தி  ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்ப் மற்றும்   பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்க அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து  சபர்மதியில் காந்தி ஆசிரமம் வரையிலும் மொடேரா மைதானத்திலும் 22 கி.மீ  நெடுகிலும் மொத்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்க ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. உலகின்  மிகப்பெரிய விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் மொடேரா ஸ்டேடியத்தை டிரம்ப்  திறந்து வைக்கிறார். தொடர்ந்து அ..
                 

காஷ்மீரில் இன்னும் 250 தீவிரவாதிகள்: டிஜிபி அதிர்ச்சி தகவல்

18 minutes ago  
समाचार / தினகரன்/   
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங், ஸ்ரீநகரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கு 250க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்தில் 3 தீவிரவாதிகள் மட்டுமே ஊடுருவி இருக்கின்றனர். அதில், ஒருவர் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி. டிரால் பகுதியில் அவன் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தாண்டு காஷ்மீரில் நடந்த 10 தேடுதல் வேட்டைகளும், ஜம்முவில் நடந்த 2 தேடுதல் வேட்டைகளும் வெற்றிகரமாக முடிந்தன. இதில், 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை இயக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்...
                 

சந்திரபாபு ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு: ஆந்திராவில் அதிரடி

18 minutes ago  
समाचार / தினகரன்/   
திருமலை: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவுக்கு அடுக்கடுக்காக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது, அவருடைய 5 ஆண்டு கால ஆட்சியில் அமராவதி தலைநகர் பெயரில் பினாமிகள் நிலம் வாங்கியது, அரசு ஒப்பந்தங்கள் அழைக்கப்பட்டதில் நிபந்தனைகளை மீறியது உட்பட, 50 துறைகளில் நடைபெற்ற ஊழல்களை விசாரிப்பதற்காக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரகுராம் தலைமையில், 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ‘சந்திரபாபுவை பழிவாங்கும் நடவடிக்கையில் ஜெகன் மோகன் அரசு ஈடுபடுகிறது,’ என தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது...
                 

தீவிரவாதிகளுக்கு கார் கடத்திய வழக்கு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

18 minutes ago  
समाचार / தினகரன்/   
திருவனந்தபுரம்: கேரளாவில்  கார்களை வாடகைக்கு எடுத்து தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்த  வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான முகமது ரபீக்கை கேரள  போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான காரை வாடகைக்கு விட  விரும்புவதாக பத்திரிகையில் 6 மாதங்களுக்கு முன் விளம்பரம்  செய்தார். அதை பார்த்து  திருச்சூர் வாடானப்பள்ளியை சேர்ந்த  இலியாஸ் (37) என்பவர் அவரை அணுகி, காரை வாடகைக்கு எடுத்து சென்றார். பின்னர், தலைமறைவாகி விட்டார். இதனால், கோட்டயம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் செய்தார்.  இலியாசை தந்திரமாக பிடிக்க திட்டமிட்ட போலீசார், பத்தனம்திட்டாவில் ஒரு கார் வாடகைக்கு இருப்பதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். இதைப் பார்த்து செல்போனில் தொடர்பு கொண்ட இலியாசை, ரயிலில் வந்தபோது போலீசார் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது முக்கிய கூட்டாளி நிஷாத்தை (37) கைது பிடித்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத  இயக்கத்தை சேர்ந்த இவர்கள், தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான மு..
                 

ஒரே தேசமாக சிந்தியுங்கள் காங்கிரசுக்கு பாஜ அழைப்பு

18 minutes ago  
समाचार / தினகரன்/   
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணம் அவருக்கான தேர்தல் பிரசாரமாக இருந்து விடாமல், இந்தியாவுக்கு பலன் அளிக்க வேண்டும்’ என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் விமர்சித்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், பாஜ செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா நேற்று அளித்த பேட்டியில், ``மோடி-டிரம்ப் சந்திப்பானது, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் தொன்மை வாய்ந்த இரு ஜனநாயக நாடுகளின் சந்திப்பாகும். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் மதிப்பு உயர்வது காங்கிரசுக்கு ஏன் பிடிக்கவில்லை. இது போன்ற நேரங்களில் ஒரே தேசமாக சிந்தியுங்கள்,’’ என்றார்...
                 

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

18 minutes ago  
समाचार / தினகரன்/   
சென்னை: கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியில் போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (20), நிஷாந்த் ராயல் (23), பாலச்சந்தர் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம்  மதிப்புள்ள 50 போதை மாத்திரைகள், 300 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 2.5 கிலோ கஞ்சா, 20 மேத்தன் பெட்டாமின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர்கள் கோவா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, சென்னையின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது. இதில் தொடர்புடைய ஒரு கல்லூரி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்...
                 

தேச விரோத போராட்டங்களை கண்டித்து பிப். 28-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும்: பாஜக

19 minutes ago  
समाचार / தினகரன்/   
                 

சீரடி எக்ஸ்பிரஸ் இன்ஜின் கழன்று பெட்டிகள் ஓடியது: பயணிகள் அலறல்

19 minutes ago  
समाचार / தினகரன்/   
திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், சீரடிக்கு நேற்று சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் விஜயவாடா அஜித்சிங் நகரில் மெதுவாக சென்றபோது திடீரென இன்ஜினை விட்டு ரயில் பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் சுதாரித்துக்கொண்ட இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதற்கிடையே ரயில்பெட்டிகள் மட்டும் தனியாக செல்வதை அறிந்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக கீழே இறங்கினர்.தகவலறிந்த விஜயவாடா ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணிநேரத்தில் இன்ஜினுடன் பெட்டிகளை இணைத்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ரயில் பெட்டிகள் கழன்றதாகவும் இனி அதுபோன்று நடைபெறாது எனவும் பக்தர்களிடம் அதிகாரிகள் தெரிவித்து சீரடிக்கு ரயிலை அனுப்பி வைத்தனர். ரயில் மெதுவாக சென்றதால் அதிகபட்சம் பெரிய அளவில் நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்...
                 

அரசுப் பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்; மாணவிகள் சோதனை குறித்து அச்சப்பட தேவையில்லை...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

19 minutes ago  
समाचार / தினகரன்/   
ஈரோடு: குஜராத் மாநிலம், பூஜ் நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாணவிகள் 68 பேருக்கு மாதவிடாய் இருக்கிறதா என அவர்களின் ஆடைகளை அவிழ்த்து சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இது நடந்த  அடுத்த சில தினங்களில் மீண்டும் சர்ச்சைக்குரிய சம்பவம் சூரத்தில் நடந்துள்ளது.சூரத் மாநகராட்சியில் 3 ஆண்டு பயிற்சி முடித்த கிளார்க்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். இந்த பரிசோதனை மாநகராட்சி  மருத்துவமனையிலேயே நடக்கும். இது போல், நேற்று முன்தினம் மாநகராட்சி பயிற்சி பெண் ஊழியர்கள் சிலர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பெண் டாக்டர்களால் வலுக்கட்டாயமாக முழு  நிர்வாணப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்களே பணியாற்றுவதால்  தேர்வு எழுதும் மாணவிகள் சோதனை குறித்து அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடங்களில் உள்ள கழிப்ப..