தினமலர் தினகரன் சமயம் One India

ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணிமாறுதல் ரத்து: ஐகோர்ட் அதிரடி!

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணிமாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பணிமாறுதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் 5 நாட்கள் அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஊதிய உயர்வு மற்றும் பணியிடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்போராட்டத்தில் அரசின் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் இறுதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று, மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை சம்மன் அனுப்பி சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் பாலசுப்பிரமணியன..
                 

பணியில் அலட்சியமாக இருந்ததால் காசிமேடு காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை : சென்னை காசிமேட்டில் மீன் வியாபாரி திவாகர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காசிமேடு காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பணியில் அலட்சியமாக இருந்ததால் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.மீன் வியாபாரி திவாகரன் வெட்டிக் கொல்லப்படலாம் என்று உளவுத் துறை தகவலை ஆய்வாளர் அலட்சியப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது...
                 

கார் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
திருவள்ளூர் : கார் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவள்ளூர் அருகே அதிகத்தூரில் முத்தரசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே பணி வழங்கப்பட்டவர்களை புதிய நிர்வாகம் பணிநீக்கம் செய்ததால் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை, பிரான்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதால் பழைய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்...
                 

சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை : சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத நிலையில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்பு தளத்தின் ஒருதளம் தீயில் கருகியது.2 தீயணைப்பு வாகனம், ஒரு மெட்ரோ லாரி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்த நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது...
                 

கோயம்பேடு சந்தையில் டன் கணக்கில் குப்பையாக குவிக்கப்படும் வெளிநாட்டு வெங்காயம்: வாங்க ஆளில்லாததால் அழுகி வீணாவதாக வியாபாரிகள் கவலை!

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: உள்நாட்டு வெங்காய உற்பத்தி சீரடைந்துவிட்டதால் சென்னை கோயம்பேடு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்கள் வாங்க ஆளின்றி குப்பையில் வீசப்பட்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டதால் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்து, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, எகிப்து, துருக்கி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்தது. அதேபோல தனியார் நிறுவனங்களும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது உள்நாட்டில் வெங்காய உற்பத்தி வழக்கமான அளவுக்கு திரும்பி விட்டாலும், வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதி செய்வது தொடர்கிறது. ஆனால் உள்நாட்டு வெங்காயத்தை போல சுவை இல்லாததால் அதை வாங்குவதில்லை என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு வெங்காயத்தை விட கூடுதல் விலையுடனும், வெளிநாட்டு வெங்காயம் விற்கப்படுவதால் வாங்க ஆளில்லை. இதனால் முளைவிட்ட வெங்காய மூட்டைகள் கோயம்பேடு வெங்காய சந்தையில் கேட்பாரற்று கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வெங்காய இறக்குமதியை ..
                 

திமுகவிற்கு அசைக்க முடியாத தூணாக விளங்கிய எம்.எல்.ஏ. காத்தவராயனை பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு : ஸ்டாலின் இரங்கல்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை : குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். காத்தவராயனை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,' திமுகவிற்கு அசைக்க முடியாத தூணாக குடியாத்தம் பகுதியில் விளங்கியவர். என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்டமன்ற உறுப்பினர்களில் நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு,' என்று தெரிவித்துள்ளார்...
                 

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை:  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனுக்கு(98) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வந்த அன்பழகனுக்கு கடந்த 24-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்றும் மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் உடன் சென்றனர்..
                 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு; தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவுக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்குள் சிபிஐயும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில், மனித நேய அறக்கட்டளை மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் படித்த 74 பேரில் 62 பேர் தேர்வாகி இருந்தனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என சுவப்னா என்ற திருநங்கை வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் குற்றச்சாட்டிற்கு உள்ளான பயிற்சி மையங்கள், ஆளுங்கட்சியை சார்ந்த செல்வாக்கு மிக்க நபரால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படும் வினாத்தாள்களை பெற்று, தங்களுடைய பயிற்சி மையங்களில் படிப்பவர்கள் தேர்வுகளில் முறைகேடாக வெற்றி பெற உதவுகிறார்கள். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆ..
                 

ஈரானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் ஈரானில் வேகமாக பரவி வருவதால் தமிழர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் நாடு திரும்ப உதவுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது ஈரானையும் வாட்டி வதைக்கிறது. நேற்று வரை ஈரானில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஈரானில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் அங்கேய தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை சொந்த நாட்டிற்கு திரும்ப சென்று விடுமாறு படகுகளின் உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போதிய அளவில் விமானங்கள் இயக்கப்படாததால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முட..
                 

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்காக நிலத்தை வழங்க நுங்கம்பாக்கம் தனியார் பள்ளி ஒப்புதல்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்காக நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளி 17,495 சதுர அடி நிலத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நிலத்துக்கான தொகை பள்ளிக்கு வழங்கப்பட்டது. நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளி அருகில் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. ..
                 

கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை..டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்: ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச் உறுதி

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/ உலகம்  
பெய்ஜிங்: கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதி அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு தடை ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகின. முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்கள் சிலரும் ஒலிம்பிக் போட்டியை விட வீரர்களின் உடல்நலமே முக்கியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அயன் தோர்ப் தெரிவித்ததாவது, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்க மறுத்துள்ளது. டோக்கியோவில் இதுகுறித்து விளக்கம் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச், கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல..
                 

கேரள மாநிலம் இடுக்கியில் 2 முறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
                 

டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் தொடர்பு: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்குப் பதிவு...கட்சியில் இருந்து நீக்கம்!

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை மற்றும் உளவுத்துறை அதிகாரி இறப்பு தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசேன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் வெடித்தது. இதில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசேன் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். மேலும், தாஹீர் உசேன் வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் இருந்து உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மாவின் சடலமும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, தாஹீர் உசேன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தாஹீர் உசேனுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த கலவரத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் இரட்டை தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்..
                 

டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசைன் வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி : டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசைன் வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.தாஹீர் உசைன் வீட்டு மாடியில் கற்குவியலும் பெட்ரோல் குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆய்வு நடைபெறுகிறது.டெல்லி உளவு பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொலை தொடர்பாக தாஹீர் உசைன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது டெல்லி போலீஸ்...
                 

வடகிழக்கு டெல்லி கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை அமைத்தது காங்கிரஸ்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி : வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது.5 பேர் அடங்கிய குழுவினர் டெல்லியில் நடந்த கலவரம் பற்றி நேரில் கண்டறிந்து சோனியாவிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.டெல்லியில் 4 நாட்கள் நடந்த கலவரத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்...
                 

டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் மனு : வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க வலியுறுத்தல்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி : டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் ,வன்முறையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும்,சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வன்முறை பாதித்த பகுதிகளில் அனைத்து மத அமைதி கூட்டங்கள் கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த மனுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்...
                 

கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
காரைக்கால் : கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காரைக்காலில் தேசிய தொழில்நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ரூ. 60,000 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்...
                 

நல்லம்பள்ளி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சாமிசெட்டிப்பட்டி, இண்டூர், லளிகம், தொப்பூர், நல்லம்பள்ளி, நாகவதிஅணை, வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் பதப்படுத்தப்பட்டு, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, நாகை உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். வெங்காயம் தட்டுப்பாட்டால், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150வரை விற்பனை செய்யப்பட்டது.பின்னர், விலை படிப்படியாக குறைந்து, தற்போது கிலோ ₹32 முதல் ₹34வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நள்ளம்பள்ளி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளிடம் நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள், கிலோ ₹20க்கும் குறைவாக வாங்குகின்றனர்..
                 

நெல்லை மாவட்டம் காவல் கிணறு கிராமத்தில் உள்ள பேக்கிரியில் வருமானவரித்துறை சோதனை

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது காவு வாங்கும் தேசிய நெடுஞ்சாலை

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சாத்தூர்: சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே அடிக்கடி உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. அதன் அருகில் அரசு மருத்துவமனையும் உள்ளது. அதனை சுற்றி நான்கு நகர்கள் உள்ளன. மருத்துவமனை செல்லும் கிராம, நகர பொதுமக்கள் பனிமனை அருகில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே கடந்து தான் செல்லவேண்டியுள்ளது. அதைபோல இந்த சாலையை கடந்து தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு கடக்கும் போது பாலத்தில் இருந்து வேகமாக இறங்கும் வாகனங்கள் மோதி உயிர்பலி ஏற்படுகிறது. இந்த இருவழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன. இதனை கண்டுகொள்ளாமல் நெடுஞ்சாலை துறையினர் உள்ளனர். எனவ சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுக..
                 

பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலை: பணி நியமன உத்தரவை வழங்கினார் ஆட்சியர்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கன்னியாகுமரி: பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) கடந்த ஜனவரி 8ம் தேதி இரவு 9.30 மணியளவில் களியக்காவிளை அருகேயுள்ள சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இதுதொடர்பாக தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், மாலிக்தினார் நகரை சேர்ந்த தவுபிக் ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது, தீவிரவாதிகள் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்களின் வெளிநாட்டு தீவிரவாதிகள் தொடர்பு, தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு போன்றவையும் வெளிச்சத்திற்கு வந்திருந்தன. எனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ)க்கு மாற்றப்பட்டு, விசாரணை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் ரிநிஜாவுக்கு அர..
                 

மீனாட்சியம்மன் கோயிலின் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
மதுரை:  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 2ஆயிரம்  ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனை தனி அதிகாரிகள் குழு அமைத்து மீட்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மதுரையின் மகத்தான பழம் பெருமை மிக்க ஆன்மிகத் தலமாக மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு முன்னோர்கள் தானமாக கொடுத்த இடங்கள் மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம், சொத்துகள் இருக்கின்றன. இந்த இடங்களில் ஒரு பகுதியில் பலர் குத்தகை மற்றும் வாடகை அடிப்படையிலும் வசித்து வருகின்றனர். பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களில் சிக்கி இருக்கிறது. இந்த இடங்கள் ரூ.பல கோடி மதிப்பு உள்ளதாகும். சில மாதங்கள் முன்பு மதுரை தெற்குவாசல் பகுதியில் மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தியேட்டர்கள், வீடுகள் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டன. இதேபோல் மதுரையில் எல்லீஸ் நகர், பொன்மேனி, சிம்மக்கல் போன்ற இடங்களில் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. இதுமட்டுமல்லாது பல்வேறு பகுதி..
                 

கோழிக்கறி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருப்பூர் : கோழிக்கறி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவிய நிலையில், அமைச்சர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து நிரூபர்களிடம் பேசிய அவர், கால்நடைத் துறை சார்பில் நோய் தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்...
                 

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி மார்ச் 1ம் தேதி முதல் இயங்கும் என்று அறிவிப்பு

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி மார்ச் 1ம் தேதி முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 26ம் தேதி அரசு பேருந்து ஓட்டுனரை சுங்கச்சாவடி ஊழியர் தாக்கியதால் பரனூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. மோதலால் இரு மாதமாக பரனூர் சுங்கச்சாவடி இயங்காமல் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று கொண்டிருந்தனர்...
                 

தமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம்  உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேரின்  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது...
                 

ஜாலியன் வாலாபாக் முக்கிய சாட்சியாக இருந்த 123 வயது தியாகி சுதாகர் சதுர்வேதி காலமானார்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
பெங்களூரு: ஜாலியன் வாலாபாக் போராட்டத்தின் முக்கிய சாட்சியாக இருந்தவரும்,  நாட்டின் மூத்த சுதந்திர போராட்ட தியாகியும் மகாத்மாகாந்தியின் நெருங்கிய நண்பருமான சுதாகர்  சதுர்வேதி (123) முதுமையின் காரணமாக  பெங்களூருவில் நேற்று  காலமானார்.பெங்களூரு பலேபேட்டையில் கடந்த 1897 ஏப்ரல் 20ம் தேதி  பிறந்தவர் சுதாகர்.  கடந்த 1919ம் ஆண்டு நடந்த  ஜாலியன் வாலாபாக்  போராட்டத்தில் சுதாகர் சதுர்வேதியும் கலந்து கொண்டார். போராட்டத்தின் முழு விவரம்  தெரிந்த ஒரே நபராக  சதுர்வேதி இருந்தார். அந்த போராட்டத்தில் பல ஆயிரம் பேர்  படுகொலை செய்யப்பட்டிருந்தும் பிரிட்டீஷ் அரசு 670 பேர் மட்டுமே  உயிரிழந்ததாக தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு லண்டனில் நடந்தபோது, சாட்சி  கூறியவர்களில் சதுர்வேதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சுதந்திர  போராட்டத்தில் பங்கேற்று 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். காந்தியின்  நண்பர், ஆலோசகராக  மட்டுமில்லாமல் அவரின் ஸ்டெனோ கிராபராகவும்  இருந்துள்ளார்.இப்படி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய ..
                 

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான தண்ணீர் திறப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஜனவரி மற்றும் பிப்ரவரி  மாதங்களுக்கு திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து  விட்டுள்ளது.கர்நாடகா-தமிழக விவசாயிகளின் ஜீவநாடியாக இருக்கும்  காவிரி நதியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை பங்கிட்டு கொள்ளும் விஷயத்தில்  இரு மாநிலங்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. நதிநீர் பங்கீடு  பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007ம்  ஆண்டு வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 191.50 டிஎம்சி தண்ணீர்  ஆண்டுதோறும் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தது. நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு  மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணை முடிந்து கடந்த 2018  பிப்ரவரி 16ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்க  உத்தரவிட்டிருந்த தண்ணீரில் 14.75 டிஎம்சி குறைத்து ஆண்டுதோறும் 176.75  டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.  இதில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு  தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டத..
                 

சாலை முழுமையாக அமைக்கப்படும் முன் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
மதுரை : சாலை முழுமையாக அமைக்கப்படும் முன் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.பரமக்குடி - ராமநாதபுரம் சாலையில் உள்ள போகலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை கோரி வழக்கறிஞர் முகமது ரஃபி மனு தாக்கல் செய்திருந்தார்.சாலைப்பணி முழுமையாக முடியாமலேயே சுங்கக்கட்டணம் வசூலிப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த மனு தொடர்பாக மத்திய அரசும், சுங்கச் சாவடியில் பணம் வசூல் செய்து வரும் கே.என்.ஆர். நிறுவனமும் பதில் தர உத்தரவிட்டு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ..
                 

அம்பத்தூர் பகுதி சிடிஎச் சாலையில் தடையை மீறும் கன்டெய்னர் லாரிகளால் விபத்து: போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
அம்பத்தூர்: ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள சிடிஎச் சாலையில் தடையை மீறி கன்டெய்னர் லாரிகள் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக செல்லும் சிடிஎச் சாலையை ஆவடி பகுதியில் உள்ள ராணுவ துறை நிறுவனங்கள், மத்திய போலீஸ் பாதுகாப்பு படை, இந்திய விமான படை,  தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவு கிடங்கு ஆகியவற்றில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  மேலும் இச்சாலை வழியாக சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் உள்ள பொறியியல், கலை கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இவ்வாறு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சிடிஎச் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.  இந்நிலையில் சிடிஎச் சாலையில் கடந்த சில ஆண்டாக ..
                 

குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார் : 2 திமுக எம்.எல்.ஏக்கள் உயிரிழப்பால் பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைவு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை ; வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். 2019 மே மாதம் நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் காத்தவராயன்.சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காத்தவராயன் உயிர் பிரிந்தது. கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் உயிரிழந்ததால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைந்துள்ளது. திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி இறந்த மறுநாளிலேயே காத்தவராயனும் காலமாகி உள்ளார்...
                 

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி துபாய் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை மீட்டு வந்தது சிபிஐ : தாய்-தந்தை மோதலில் தவிக்கும் பரிதாபம்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: டெல்லியைச் ேசர்ந்த தம்பதி அமன் லோகியா-கிரன் கவுர். இவர்களுக்கு ரெய்னா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. துபாயில் பணியாற்றிய லோகியாவும், கவுருக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். குழந்தை தாய்  பராமரிப்பில் இருக்க வேண்டும் எனவும், வாரத்துக்கு 3 நாட்கள்ரெய்னாவை லோகியா பார்க்கலாம் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால்,கடந்த ஆண்டு குழந்தையை பார்க்கச் சென்ற லோகியா,  துபாய்க்கு அழைத்துச் சென்று விட்டார். இந்த வழக்கு சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையை சிபிஐ அதிகாரிகள் துபாய் சென்று மீட்டு வந்துள்ளனர். இந்த  குழந்தை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது...
                 

ஆபத்து நிறைந்த ஆழ்குழாய் குடிநீர்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரையே குடிக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் குளத்து நீர் மற்றும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் குளங்களில் நீர் வரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஆழ்குழாய் மூலம் வரும் நீரை குடிக்க வேண்டிய நிலை ஏராளமான கிராமங்களுக்கு ஏற்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்களிலும் ஆழ்குழாய் (போர்வெல்) சிறு மின்விசை பம்பு அமைக்கப்படுகிறது. குளத்து நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் மூலம் வரும் நீர் கிடைக்காத ஊர்களில் இந்த ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரையே குடிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகள் உள்ள ஊர்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீரை பள்ளி ஆசிரியர்கள் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆசிரியர்களின் பரிசோதனையில் குளோரைடு, புளோரைடு, அமிலத்தன்மை, காரத்தன்மை, இரும்புச்சத்..
                 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் வரத்தை தடுக்க வேண்டும்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல் வரத்தை தடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) சிற்றரசு, கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயராமன், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது: சேதுராமன் : கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுபாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒருசில கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்கள் கொள்முதலுக்கு வந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆண்டிற்கான தூர்வாரும் பணியை அடுத்த மாதமே துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தம்புசாமி: பாதுகாக்கப்ப..
                 

ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும்! : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : வெறுப்பு பேச்சுகளால் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். எனவே வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டப்பிரிவுகள்  ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று தெரிவித்த அவர், நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மக்கள் நல்லிணக்கமாக வாழ முடியுமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் கருவிகளாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  ..
                 

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்: மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
துரைப்பாக்கம்: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்குட்பட்ட துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர், 8வது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் பட்டு வருகிறது.  இந்நிலையில், பைப்லைன் உடைப்பு காரணமாக இப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று 15 மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களது புகார் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ..
                 

சேலம் அருகே நடந்த கொலையில் திருப்பம் கேரள பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் தாக்கி கொன்றனர்

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  குற்றம்  
இளம்பிள்ளை: இளம்பிள்ளை அருகே கல்லால் தாக்கி கேரள இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் கற்பழித்து கொலை செய்யபட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமானது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்த விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை கிராமம் பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (44). ஆட்டோ டிரைவர். இவர் கேரளாவை சேர்ந்த பீனா (31) என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆட்டோ டிரைவ ராக இருந்த ஞானசுந்தரம், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் பீனா வசித்து வந்தார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பீனா அவரது வீட்டிற்கு அருகே உள்ள ஏரி பகுதி விவசாய நிலத்தில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சங்ககி..
                 

கடலாடியில் ஜெயலலிதா அறிவித்த 500 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை ரத்து செய்த மத்திய எரிசக்தி துறை

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
புதுடெல்லி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 500 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 1,500 ஏக்கரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 3 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள மின்சார வாரியம் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. 1,500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளதால் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் மீண்டும் விண்ணப்பிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஏற்கனவே அமையவிருந்த 4,000 மெகாவாட் அனல்மின்நிலைய திட்டமும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது...
                 

காஞ்சிபுரம் சரவண பவன் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை: விசாரணை நடத்த வேண்டுமென ஊழியர்கள் போராட்டம்

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தில் சரவண பவன் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரவண பவன் உணவகத்தின் 3 கிளைகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, ஊழியர்களுக்கு சரவண பவன் நிர்வாகம் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை. இதையடுத்து, பழனியப்பன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசியுள்ளார். தற்போது நிர்வாகத்தில் சில பிரச்னைகள் இருப்பதால், சம்பளம் கொடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என நிர்வாகத்தினர் பழனியப்பனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதை ஊழியர்களிடம் பழனியப்பன் தெரிவித்திருக்கிறார். ஊழியர்கள், பழனியப்பன் சொல்வதை ஏற்காமல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். போராட்டத்தைத் தடுப்பதற்காக,  600 ஊழியர்களுக்கும் கொடுக்கவேண்டிய சம்பளத்தொகையில் முன்பணமாக 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார். முன்பணம் கொடுத்ததையடுத்து, சென்னை வடபழனியில் இருக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து பழனியப்பனை நேரில் அழைத்திருக்கிறார்கள். இது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் இ..
                 

கடலூர் சிப்காட்டில் அதிக அளவு நீர் மாசு கண்டுபிடிப்பு: மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கடலூர்: கடலூர் சிப்காட்டில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் மாசடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய அளவில் 1982ம் ஆண்டில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இங்கு மருந்து பொருட்கள், பெயிண்ட் ரசாயனங்கள், பூச்சி மருந்துகள், என பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் நிலத்தடியிலும், உப்பனாற்றிலும் அப்படியே விடப்படுவதால் நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்து நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதனால், இதனால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக, பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு கடலூர் சிப்காட்டில் மத்திய மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பான ஆய்வறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் யாரும் எதிர்பார்க்காத அளவில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, கடலூர் சிப்காட் பகுதியில..
                 

அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்றனர் தெலங்கானா கவர்னர் தமிழிசை திருவக்கரையில் சாமி தரிசனம்

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
வானூர்: வானூர் தாலுகா திருவக்கரையில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் வக்கிரகாளியம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தார்.  அவரை விழுப்புரம் பயிற்சி ஆட்சியர் ஸ்ரேயா பீ சிங், கோட்டாட்சியர் ராஜேந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் தேவி, எஸ்பி ஜெயக்குமார், தாசில்தார் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தலைமை அர்ச்சகர் சேகர் தலைமையில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சாமிதரிசனம் செய்த அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது இந்த கோயிலுக்கு அவ்வப்போது வந்து செல்வது உண்டு.  ஆனால் ஆளுநராக பதவியேற்றபின் முதன்முதலாக நேற்று அவர் இக்கோயிலுக்குவந்து சாமிதரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.விக்கிரவாண்டி: மயிலம் முருகன் கோயிலுக்கு வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், மயிலம் திருமட நிர்வாகிகள் விஸ்வநாதன், ராஜீவ்குமார், ராஜேந்திரன் ஆகியோர..
                 

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி தூத்துக்குடி துறைமுகம் வந்த ஹாங்காங் கப்பல் நிறுத்தி வைப்பு

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ஹாங்காங் ஆயில் டேங்கர் கப்பல் எம்டி ஹன்னா கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் சுகாதார துறையினர் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தினர். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் வரும் அனைத்து கப்பல்களின் ஊழியர்களுக்கும் சுகாதார துறையினர் பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே கப்பல்கள் சரக்கு தளத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட எம்டி ஹன்னா என்ற ஆயில் டேங்கர் கப்பல் வந்துள்ளது. இந்தோனேசிய தீவான பாடம் துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 21 பேர் இருந்துள்ளனர்.இந்த கப்பல் நேற்று துறைமுகத்தின் 2வது தளத்திற்கு வருவதற்காக கடந்த 26ம்தேதி இரவு முதலே வெளித் துறைமுகத்தில் காத்திருந்தது. இதையடுத்து நேற்று துறைமுக மருத்துவகுழு  மாலை வரை கப்பலில் ஆய்வு மேற்கொண்டனர்.மருத்துவ அதிகாரிகளின் சான்று அளித்த பின்னரே அந்த கப்பல் துறைமுகத்தின் 2வது தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா தொ..
                 

சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
திருச்சி : குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்று கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். நிரூபர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என்றார். மேலும் மாநிலங்களவை எம்பி பதவி குறித்து ஏற்கனவே பேசப்பட்டது போல் நல்ல முடிவு வரும் என்றும் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்...
                 

மானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.பொதுப்பணித்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசித்து வருகிறார். மானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். ..
                 

விபத்தில் 2 பேர் பலியானதை கண்டித்து கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: விபத்தில் 2 பேர் இறந்ததை கண்டித்து பொதுமக்கள் கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்பாக்கம் அருகே கூவத்தூரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி நேற்று முன்தினம் மதியம் ஒரு ஷேர் ஆட்டோ புறப்பட்டது. டிரைவர் செல்வம் (28) ஆட்டோவை ஓட்டினார். அதில், ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த தணிகைவேல் (33) உள்பட 5 பேர் பயணம் செய்தனர்.  கிழக்கு கடற்கரை சாலை கண்டிகை அருகே சென்றபோது, எதிரே கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஒரு லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் செல்வம், பயணி தணிகைவேல் ஆகியோர் பலியாகினர். இதை பார்த்ததும், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பினார். புகாரின்பேரில், அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூவத்தூர் - பவுஞ்சூர் நெடுஞ்சாலை, நெல்வாய்பாளையம் கூட்ரோட்டில் திரண்டு, அவ்வழியே வந்த கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர். அப்போது, லாரி மோதி 2 பேர் இறந்ததை கண்டித்தும், பவுஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகளை மூட வலியு..
                 

டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிக்கிறது: ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் பேச்சு!

4 hours ago  
செய்திகள் / தினகரன்/ உலகம்  
ஜெனீவா: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் கூறியுள்ளார். ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் 43வது ஆலோசனை கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் மிச்சேல் பேச்லட், டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது போன்றவை மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த வருடம் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்களும், பெருமளவில் அமைதியான முறையிலேயே இச்சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். மேலும், இந்தியாவில் நீண்டகாலமாக இருந்து வந்த மதசார்பற்ற கலாசாரத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லி கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரிவி..
                 

கோவையில் ஓ.பி.எஸ்சுக்கு ஆயுர்வேத சிகிச்சை

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கோவை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்று இரவில் தங்கினார். அங்கு  அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உடல் புத்துணர்வு பெறுவதற்காக கோவையில் அவர் சில நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை பெற இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு 3 முறை வந்துள்ளார். தற்போது 4வது  முறையாக ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது...
                 

விவசாயியை கொன்ற 16 பேருக்கு ஆயுள்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த சிலர், 2010ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ஆவாரங்காட்டில் தங்கி, விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை போட்டு வந்தனர். அவர்கள்  ஆவாரங்காட்டை சேர்ந்த முனியாண்டி என்பவரின் வீட்டில் தங்கியிருந்தனர். அருகேயுள்ள கிராமமான கச்சநத்தத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவர், தனது நிலத்தில் ஆட்டுக்கிடை அமைக்க கேட்டுள்ளார். இதற்கு முனியாண்டி எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 10.08.2010 அன்று ஆவாரங்காடு ரேசன் கடை முன்பு சந்திரக்குமார், அவரது உறவினரான விவசாயி அல்லிமுத்து உள்ளிட்டோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது  அங்கு வந்த முனியாண்டி தரப்பினர் தாக்கியதில் அல்லிமுத்து இறந்தார். இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிந்து முனியாண்டி உட்பட 18 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது 2 பேர் இறந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி  கார்த்திகேயன், மீதி 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்...
                 

3 நாள் குறைந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.56 உயர்வு; ஒரு கிராம் ரூ.4,4071-க்கும், சவரன் ரூ.32,568-க்கும் விற்பனை

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தமிழகம்  
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,4071-க்கும், சவரன் ரூ.32,568-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்க முதலே அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது. கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் “ஜெட்” வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.94 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4166க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.752 அதிகரித்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 328க்கு விற்றது. தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ..
                 

ஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

திரும்ப பெற முடியாது மத்திய அமைச்சர் உறுதி

5 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால்,  இச்சட்டத்தை எதிர்க்கும் மக்களை சமாதானப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கும். தூங்கி கொண்டு இருப்பவர்களை மட்டும்தான் எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அனைத்திற்கும் மேலாக பாகிஸ்தான்,  வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில்  இருந்து வரும் மதரீதியாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட சிறுபான்மையினருக்கு இந்தியாவில் ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது? அனைத்து மத மக்களும் ஒன்றாக, அமைதியாக வாழ்வதுதான்  இந்திய பண்பாட்டின் பெருமை,” என்றார்...
                 

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

5 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

5 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
மும்பை : மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் சரிந்து 38,712 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 313 புள்ளிகள் சரிந்து 11,319 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது. ..
                 

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சைபர் குற்றங்களை தடுக்க போதுமான சட்டங்கள் இல்லை: ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கருத்து

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை:  தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சைபர் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான போதுமான சட்டங்கள் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்திருக்கிறார். சென்னை பல்கலைக்கழக குற்றவியல் சார்பில், அதிகரித்து வரும் பழிவாங்கும் படலம் என்பது தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கானது ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்களில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதாவது தற்போது இருக்கக்கூடிய நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சாதகமாக இருந்தாலும், அதில் பலவிதமான போதகங்களும் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதாவது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியை கண்டாலும் கூட அதன் மூலமாக பல்வேறு நிலைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த சைபர் குற்றங்கள் அதிகரிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல சைபர் குற்றங்கள் அதிகரித்திருப்பதன் காரணமாக அது தொடர்பான சட்டங்கள் போதுமானதாக நம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். சைபர் குற்றங்களை பொறுத்தவரைய..
                 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை : உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு தங்களது வாதத்தில்,'டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான புலன் விசாரணை முடிந்து 6 அறிக்கையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி  தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் 'உள்ளிட்டவற்றை முன்வைத்தனர். ..
                 

பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலை

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
கன்னியாகுமரி  : பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் மகள் ஆன்றீஸ் ரிநிஜாவிற்கு இளநிலை உதவியாளர் பணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்...
                 

தமிழகத்தில் கள் இறக்கவும் விற்கவும் அனுமதி கோரிய வழக்கு : உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
மதுரை : தமிழகத்தில் கள் இறக்கவும் விற்கவும் அனுமதி கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது...
                 

வெளியுறவுத்துறை மூலம் ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை : ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நிரூபர்களிடம் பேசிய அவர், வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கொரோனா தாக்குதலால் ஈரானில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதுஎன்றும் தெரிவித்தார்...
                 

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகளுக்கு இந்தியா வர தற்காலிக தடை

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
                 

கொரோனா வைரஸ் அபாயம்: ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், சீனாவை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,858 ஆக உயர்ந்துள்ளது. 78,000க்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் சிக்கி உள்ள ஈரான், இத்தாலி, தென்கொரியாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,022 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஜப்பானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 189 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இத்தாலியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டவர்கள் இந்தியா வர தற்காலிக தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட..
                 

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி : டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் வன்முறை பரவிய நிலையில் அமுல்யா பட்நாயக்கிற்கு பதில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.மார்ச் 1ம் தேதி டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்க உள்ளார். டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டு இருந்தார்...
                 

டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் வன்முறை பரவிய நிலையில் அமுல்யா பட்நாயக்கிற்கு பதில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 1-ம் தேதி டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்க உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக கலவரப்பகுதிகளில் மட்டுமின்றி பிற இடங்களிலும் டிரோன்கள் மூலம் போலீசார் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். நகரில் குவிக்கப்பட்டுள்ள  போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் மரண ஓலம்தான் கேட்கிறது. பலர் தங்கள் உறவுகளின் உடல்களை பெறுவதற்காக சவக்கிடங்கு முன்பாக காத்து கிடக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது. இந்த கலவரத்தில் பலர..
                 

மராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் : அமைச்சர் நவாப் மாலிக்

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
மும்பை  : மராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து நிரூபர்களிடம் பேசிய அவர், 'அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. கடந்த அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஐகோர்ட்டின் உத்தரவை விரைவில் சட்ட வடிவில் செயல்படுத்த உள்ளோம்' என்று தெரிவித்தார்...
                 

வடகிழக்கு டெல்லி கலவரம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு அந்த பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. சில இடங்களில் கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்த 2 நாட்களும் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை) கலவரம் நீடித்தது. கலவரத்தில் 210க்கும் மேற்பட்டவர்கள் காயம்டைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம் பேர் குண்டு காயம் அடைந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி நேற்றும், இன்று ..
                 

கலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்வு!

17 minutes ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: கலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு அந்த பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. சில இடங்களில் கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்த 2 நாட்களும் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை) கலவரம் நீடித்தது. கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று வரை 38 ஆக இருந்த நிலையில் இன்று 42 ஆக உயர்ந்துள்ளது. ஜிடிபி மருத்துவமனையில் 38 பேர் இறந..
                 

காரிமங்கலம், பாலக்கோட்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
தர்மபுரி: காரிமங்கலம், பாலக்கோட்டில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையை உடனே போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை செய்த தின பணியாளர்கள், கடந்த 4 மாதங்களாக தின சம்பளம் கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர். எனவே தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உடனே தின சம்பளம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காரிமங்கலம், பாலக்கோடு வட்டத்தில் கடும் பற்றாக்குறையை உடனே போக்க வேண்டும். கடந்த 3 வருடங்களாக, தர்மபுரி மாவட்டத்தில் வறட்சின் காரணமாக தென்னை உள்ளிட்ட பல் வகை மரங்கள் முழுமையாக காய்ந்துவிட்டன. இதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. எனவே காய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா..
                 

உத்தமபாளையம் அருகே போதிய பஸ் வசதியின்றி மாணவ, மாணவியர் அவதி

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டியில் படிக்கும் மாணவ, மாணவியரின் நலன்கருதி, கம்பம் மற்றும் உத்தமபாளையத்திலிருந்து ராயப்பன்பட்டி வழியாக அதிக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையம் அருகே, ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அதிகமாக படிக்கின்றனர். இந்நிலையில், உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி வழியாக கம்பத்திற்கும், கம்பத்திலிருந்து கே.கே.பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் வழியாக உத்தமபாளையத்திற்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், ராயப்பன்பட்டி  வழியாக போதிய பஸ் வசதி இல்லாததால், அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் வெளியூர் மாணவ, மாணவியர் காலை நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லவும், மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பவும் அவதிப்படுகின்றனர். மேலும், ராயப்பன்பட்டி மார்க்கத்தில் உள்ள கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாணவ, ம..
                 

திருவில்லிபுத்தூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி கருநாகம்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருவில்லிபுத்தூர்:  திருவில்லிபுத்தூர் அருகே வீட்டிற்குள் 5 அடி நீள கருநாகம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது ராஜீவ் காந்தி நகர். இங்கு இரண்டாவது தெருவில் உள்ள சாராள் என்பவரது வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கருநாகம் ஒன்று நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி ராஜமாணிக்கம் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் புகுந்த கருநாகத்தை பிடிக்க முற்பட்டனர். அப்போது அங்குமிங்கும் ஓடி வீட்டில் இருந்த மோட்டார் அறைக்குள் சென்று மறைந்துகொண்டது. சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பின்னர் கருநாகத்தை பிடித்த தீயணைப்புத் துறையினர் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கண்மாய் பகுதியில்  விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது...
                 

ராஜபாளையத்தில் உழவர் கடன் அட்டை விவசாயிகள் பெறலாம்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
ராஜபாளையம்:  ராஜபாளையம் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற்று பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: பிரதமரின் விவசாயிகள் கவுரவ திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மற்றும்  தகுதியுள்ள அனைத்து  விவசாயிகளும் உழவர் கடன் அட்டை பெற  விண்ணப்பிக்கலாம்.விவசாய கடன் அட்டை மூலம்  ரூ.1.60 லட்சம் வரை கடன் தொகையை எந்தவித பிணையம் இல்லாமல் பெற்றுக்கொள்வதுடன், தங்கள் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் வாங்க தேவையான தொகையை வங்கியில் உடனடி கடனாக பெற்றுக் கொள்ள முடியும். இதை பெற தேவையான ஆவணங்கள் சிட்டா(10 (1)), ஆதார், புகைப்படம், பேங்க் பாஸ் புக் ஆகியவற்றின் நகல்கள் ஆகும். தற்போது கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  விவசாயிகள் அனைவரும் அந்தந்த உதவி வேளாண்மை  அலுவலர்களை சந்தித்து விண்ணப்பங்கள் கேட்டு பெறலாம். இதுவரை பெறாதவர்கள் தங்களது  விண்ணப்பங்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று, நாளை இரு தினங்களுக்குள்  காலை 10 மணி முதல் ..
                 

புதுக்கோட்டை நகரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும்

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியே பேருந்து நிலையத்து நிலையம், பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்கள் நிறுத்துவத தனியே இடவசதியை ஏற்படுத்தி தரவேண்டும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த 1981ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பெருகி வரும் சாலை போக்குவரத்தால் தனியார், அரசு பேருந்துகளின் இயக்கம் அதிகரித்தது. இதனால் இந்த பகுதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பேருந்து நிலையத்துக்குள் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளே நுழையும் பேருந்துகள் மிகவும் தாமதமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், பேருந்து நிலையத்தின் தரைப்பகுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவை சிதிலமடைந்தன. அதில், கான்கிரீட் தரைத்தளம் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பல காலகட்டங்களில் கோடிக்காணக்கான ரூபாய் செயலவு செய்து புதிய பேருந்து நிலையம் புதிப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. சில நேரங்கள் மராமத்து பணிகளும் ந..
                 

மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
மதுரை : மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு அளித்துள்ளது. கீழமை நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007ம் ஆண்டு திமுக பிரமுகர் முருகன் என்பவரின் மகன் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்...
                 

தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: 2 நாள் பணியாக வனத்துறையினருடன் மாணவர்களும் பங்கேற்பு

18 minutes ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கன்னியாகுமரி:  தமிழகம் முழுவதும் சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகள் நிறைந்திருக்கும்போது ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தமிழகத்திற்கு வந்து இனப்பெருக்கம் செய்யும். பின்னர் தனது குஞ்சிகளுடன் நாடு திரும்புவது வழக்கம். இப்படி வந்துசெல்லும் பறவைகளுக்கான கணக்கெடுக்கும் பணியானது தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. 2 நாட்கள் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் பறவைகளின் வகைகள், எண்ணிக்கை போன்றவற்றை கண்டறியப்படுகின்றன. இதில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், வனச்சரகர் கருப்பையா, கால்நடை மருத்துவர் மனோகரன், ராணி அண்ணா அரசு கல்லூரி மாணவியர், இயற்கை ஆர்வலர்கள் ஆகிய 50 பேர் 10 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியை துவக்கினர்.கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரியில் சுசீந்திரம், தேரூர், மாடிக்குச் தேரி, ராஜாக்கமங்கலம், சாமித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இவற்றில் இதுவரை அரியவகை பறவைகளான கோழிக்கரா, பூ நாரை, வர்ணநாரை உள்ளிட்ட 80 வகையான பறவைகள் காணப்பட்டது. விழுப்புரம் மாவட்டம்: மரக்..
                 

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன்(60) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று எம்.எல்.ஏ. எஸ்.காத்தவராயன் உயிர் பிரிந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறைசென்ற, காத்தவராயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர்மன்ற தலைவராக இருந்தார். திருமணம் செய்து கொள்ளாத காத்தவராயன் தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் போதிய பலன் அளிக்காததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து கடந்த மாதம் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தார். இதனைத் தொடர்ந்து காத்தவராயன் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமானதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. 2 நாட்களில் 2 எம்.எல்.ஏ..
                 

தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை? கேரளாவில் ஆயுதப்படை எஸ்ஐ கைது

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
திருவனந்தபுரம்: கேரள  மாநில போலீஸ் ஆயுதப்படை முகாம்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  துப்பாக்கி தோட்டாக்கள்,  25 அதிநவீன துப்பாக்கிகள் மாயமானது மத்திய  கணக்கு தணிக்கை துறை நடத்திய ஆய்வில்  கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான  தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் தீவிரவாதிகளுக்கு சப்ளை  செய்யப்பட்டு  இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி  எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க  குற்றப்பிரிவு போலீசுக்கு அரசு உத்தரவிட்டது. குற்றப்பிரிவு ஏடிஜிபி  டோமின்தச்சங்கரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி   வருகின்றனர்.  விசாரணையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் பேரூர்கடை ஆயுதப்படை முகாமில்  ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 350 போலி துப்பாக்கி தோட்டாக்கள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல்போன தோட்டாக்களுக்கு பதிலாக போலி  தோட்டாக்கள் வைத்தது  தெரியவந்தது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் போலி  தோட்டாக்கள் வைத்தது  அங்கு பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ரிஜி (52)..
                 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பட்டிமன்றம் நடத்தி நூதன போராட்டம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து, குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி கடந்த 15ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். இதில் 13வது நாளான நேற்று நடந்த போராட்டத்திற்கு குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தலைமை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பா சித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக், சம்சுதீன் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர்கள் சிறுவர்கள், பெண்கள் தனித்தனியாக பங்கேற்ற எதிர்ப்பு கோசங்கள், பெண்கள் பங்கேற்ற சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றிரவு பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பட்டிமன்றம் நடத்தி நூதனப்போராட்டம் நடத்தினர். இதற்கு நடுவராக பேராசிரியர் இபுராஹீம் அன்சாரி கலந்துக்கொண்டு பேசினார்...
                 

மேட்டூரில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உட்பட இருவர் கைது

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

சென்னை மாவட்டத்தில் இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: கலெக்டர் அறிவிப்பு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:  கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூல..
                 

சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  ஸ்பெஷல்  
சந்திரசேகர வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் சந்திரசேகர ஐயர்-பார்வதி அம்மையாருக்கு இரண்டாவது குழந்தையாக 1888ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தார். இவரது தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் தன்னுடைய பி.ஏ பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907ம் ஆண்டு ஜனவரியில் எம்.ஏ பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சி.வி.ராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், 1907ம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதலிடம் பெற்று ஜூன் மாதம் கொல்கத்தாவில் உள்ள கணக்கு துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையை துவங்கினார். பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி..