தினமலர் தினகரன் சமயம் One India

போக்குவரத்து ஆணையரிடம் புதிய வாகன மாடல்களுக்கு ஒப்புதல் வாங்கும் உத்தரவை எதிர்த்து வழக்கு: மத்திய அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சகர்ஸ்தமானி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தொழிற்சாலைகள் புதிய மாடல் வாகனங்களை (இருசக்கரம், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள்) உற்பத்தி செய்யும்போது அந்த வாகனம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ‘வாகன் நிக்’ என்ற மத்திய அரசின் இணைய தளத்தில்  பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் தேசிய சோதனை முகமை அந்த வாகனத்தை ஆய்வு செய்து ஒப்புதல் தந்து வாகன் நிக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். இந்த தகவல்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாகனங்களை வாங்குபவர்களுக்கு உடனுக்குடன் வாகனப் பதிவு செய்யப்படுகிறது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இதற்கு நேர் எதிரான நிலை உள்ளது. புதிய மாடல் வாகனங்களை உற்பத்தி செய்யும்போது  அந்த மாடல் வாகனங்களுக்கு போக்குவரத்து ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கட்டணமாக ₹10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ..
                 

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் உள்ள சோலார் பேனல் மூலம் ஒரு நாளைக்கு 2400 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வேசென்னை கோட்டத்தில் தண்ணீர் மறுசுழற்சி, சோலார் மின்சார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு சமீபத்தில் பசுமை தொழிற்கட்டிட கூட்டமைப்பின் சான்றிதழைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் மேலும் பல பசுமைத் திட்டங்களை கொண்டு வந்து தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதைப்போன்று ரயில்நிலையங்களையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், பயணிகளுக்கு அடிப்படை  வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை அமைப்பது, சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்நிலையங்களில் காலி இடங்களில் மரக்கன்றுகள் நடுதல்,  புதிய எல்இடி விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள், ரயில் நிலையங்களில் உள்ள அலுவலகங்கள், லிப்டு, எக்ஸ்லேட்டர்..
                 

சாலையோர காலணி தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்: மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தகவல்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: சாலையோரம் காலணி தைக்கும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக புதிய திட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்  மகேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார். தோல்துறை திறன் கழகம் சார்பில் முறைசாரா பணியாளர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி பெற கொண்டுவரப்பட்ட ‘முன் கற்றலுக்கு அங்கீகாரம்’ என்ற திட்டத்தில் பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் திட்டத்தில் பயிற்சி  நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே வழங்கினார்.  பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சாலையோரங்களில் காலணி தைக்கும் தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டுவர உள்ளது. குறிப்பாக, இந்த திட்டம் இன்னும் உத்வேகமாக பணியை செய்ய அவர்க..
                 

முதல்வர், 15 அமைச்சர்களை தொடர்ந்து சபாநாயகர் தனபால் உகாண்டா செல்கிறார்: அமைச்சர்கள் காமராஜ், ஓஎஸ்.மணியன் வெளிநாடு பயணம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: சர்வதேச பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் இந்த வாரம் உகாண்டா நாட்டிற்கு செல்கிறார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28ம் தேதி பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 10ம் தேதி தான் சென்னை திரும்பினார். அதே போன்று,  எட்டு அமைச்சர்களும் சென்றனர். இந்த நிலையில்,  அமைச்சர்களை போன்றே பேரவை தலைவர் தனபால் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் சர்வதேச அளவிலான பேரவைத் தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கி வரும் 29ம்  தேதி வரை நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலும் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் வரும் 25ம் தேதி புதன்கிழமை உகாண்டா நாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் சட்டப்பேரவை அலுவலக  உயர் அதிகாரிகள் குழுவும் செல்கிறது. இந்த மாநாட்டில் என்ன தலைப்பின் கீழ் தனபால் உரை நிகழ்த்தப்போகிறார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.சட்டப்பேரவை விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், உறுப்பினர்களை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு தலை..
                 

வெளிநாடுகளில் உள்ளது போல மாணவர்களுக்கு படிப்புடன் தொழில் பயிற்சி: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ளதுபோல படிப்புடன் தொழிற்பயிற்சியும் பெறவேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:வெளிநாடுகளில் இருப்பதைப்போல், நம் நாட்டிலும் மாணவர்களை விடுமுறை நாட்களில் அருகில் இருக்கும் தொழிற்சாலைகள், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு தொழில்களில் முறையான பயிற்சி  அளிக்க முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுபற்றி தமிழக முதல்வர் முழுமையாக ஆலோசித்து முடிவு செய்தவுடன், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் நமது  மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்பை முடித்ததும் ஏதோவொரு தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும்.மேலும், தமிழகம் சார்பில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் வீரர், வீராங்கனைகள் வெற்றிபெற்று சாதனையாளராக திரும்பினால், அவர்களுக்கு தமிழக அரசு ஆக்கமும் ஊக்கமும்  தருவதற்கு தயாராக உள்ளது...
                 

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
* மக்களவை தேர்தல் மூலம் அதிமுக செல்வாக்கு சரிவு * அரசியல் விமர்சகர்கள் கருத்துசென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய  தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றிப்பெற்றதால், அந்த தொகுதியை மீண்டும்  காங்கிரஸ் கட்சிக்கே திமுக விட்டுக் கொடுத்துள்ளது.ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு செய்து உள்ளது. ஆனால் நாங்குநேரி தொகுதியில் பாஜ போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜ சார்பில், அதிமுக தரப்புக்கு  அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப..
                 

பெரியபாளையம் அருகே சோகம் இடி தாக்கி பெண் பரிதாப பலி: 6 பேர் படுகாயம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: பெரியபாளையம் அருகே இடி, மின்னல் தாக்கியதில் நடவு வேலைக்குச் சென்ற பெண் பரிதாபமாக பலியானார். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். பெரியபாளையம் அருகே வெள்ளியூர் அடுத்த பேரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லையப்பன். இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த அன்னபூரணி (45), முருகன் (31), உஷா (36), கலா (38), அற்புதம் (34), நாகம்மாள் (36),  சின்னபொண்ணு (45) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தில் நடவு நடும் பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் நடவு செய்து கொண்டிருந்த நேரமான பிற்பகல் 2 மணி  வரை வெயில் வாட்டி எடுத்தது. பின்னர் 3 மணியளவில் திடீரென வானத்தில் மேக மூட்டம் ஏற்பட்டு  இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திறந்த  வெளியில் நிலத்தில் நடவு நடும் பணியில் இருந்த பெண்கள் மீது எதிர்பாராத விதமாக இடி மின்னல் தாக்கியது. இதில் நடவு பணியில் இருந்த அன்னபூரணி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அன்னபூரணி..
                 

மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் காயம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
துரைப்பாக்கம்: பெருங்குடி வெங்கடேஷ்வரா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று முன்தினம் திடீரென மின் தடை ஏற்பட்டதாக, பெருங்குடி மின் வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், லைன் ஆய்வாளர் ஏழுமலை (52), வயர்மேன் ஆறுமுகம் (48) ஆகியோர், டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு, மேற்கண்ட நிறுவனத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரை யாரோ ஆன் செய்துள்ளனர். இதனால் மின்சாரம் பாய்ந்து இருவரும்  படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...
                 

வங்கக் கடலில் காற்றழுத்தம் நீடிப்பதால் 17 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை,: வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில்  மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகி அது புயலாக மாறியது. அதுதற்போது குஜராத் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடல்  பகுதியில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. அதனால், குமரிக் கடல், வங்கக் கடல் பகுதியில் உள்ள ஈரப்பதம் உள்ள காற்று வட மேற்கு திசையில் பயணிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. அத்துடன் வெப்ப சலனம்  காரணமாகவும் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாகவும் மழை பெய்கிறது. அதிகபட்சமாக திண்டிவனத்தில் நேற்று 70மிமீ மழை பதிவாகியுள்ளது. பள்ளிப்பட்டு 60மிமீ, ஆண்டிப்பட்டி, போச்சம்பள்ளி, பென்னாகரம்  50மிமீ, உளுந்தூர்பேட்டை 40மிமீ, அரவக்குறிச்சி, போடிநாயக்கனூர், வெச்சந்தூர், மேட்டூர், கோத்தகிரி, பூந்தமல்லி 30மிமீ, பெரும்புதூர், செம்பரம்பாக்கம், திண்டுக்கல் 20மிமீ மழை பெய்துள்ளது. சென்னை, சென்னை புறநகரில் நேற்று காலையி..
                 

எம்பிபிஎஸ் சேர்க்கையில் இரட்டை இருப்பிட சான்று விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?: பரபரப்பு தகவல்கள்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் இரட்டை இருப்பிட சான்று விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலர் போலி ஆவணங்களை கொடுத்து அட்மிஷன் பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்களில் கடும் விதிமுறைகள், உடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் விதிமுறையில் கடுமை இல்லை. பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில்  மாணவர்கள் காப்பி அடிப்பதை மாநில கல்வித்துறை கண்டுகொள்வதில்லை. பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு ஒரு பள்ளியில் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் பிட் போட்ட சம்பவம் வெளியாகி இந்திய கல்வித்துறையை ஆட்டி படைத்தது. ஆனால் தமிழகத்தில் காப்பி அடித்து பிடிபட்டால் மாணவர்கள் தேர்வு எழுத  சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். உதாரணமாக 2016ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி ரூபி ராய், முதலிடம் பெற்றது தொடர்பாக பேட்டி அளித்த போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை.  இந்நிலையில் பீகார் உயர் நீதிமன்றம் அந்த மாணவிக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. மறுதேர்வில் குறி..
                 

நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்புள்ள அரிய குரங்குகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
கொல்கத்தா: மனித குரங்குகள் உட்பட அரிய வகை குரங்குகளை, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வந்த கொல்கத்தா நபரிடம் ₹81 லட்சம் மதிப்புள்ள 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுப்ரதிப் குஹா. இவரிடம் 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகள் இருந்தன. இவர் மீது மேற்கு வங்க வனத்துறை, அமலாக்கத்துறையிடம் புகார் கொடுத்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் சுப்ரதிப் குஹா வன விலங்குகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டது கண்டறிப்பட்டது. இதற்காக இவர் வனத்துறையின் போலி அனுமதி கடிதங்களை சுங்க அதிகாரிகளிடம் வழங்கி ஏமாற்றியுள்ளார். மனித குரங்குகள் மூன்றும் இந்தியாவில் பிறந்தவை எனவும் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இவர் மீது நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த அமலாக்கத் துறை, 3 மனித குரங்குகள், 4 தென் அமெரிக்க குரங்குகளை பறிமுதல் செய்தது. இவற்றின் மதிப்பு ₹81 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட குரங்குகள் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  ..
                 

வெள்ளத்தில் டிக்டாக் வாலிபர் பரிதாப சாவு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
திருமலை: தெலங்கானா அருகே கோப்புல தடுப்பணையில் நின்று கொண்டு ‘டிக்டாக்’ வீடியோ பதிவு செய்த வாலிபர் நீரில் அடித்து செல்லப்பட்டார். 2 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டது. தெலங்கானாவின் பிணகல்  மண்டலம் கோனு கோப்பு என்ற இடத்தில் கோப்புல தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் கடந்த 20ம் தேதி நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(28) மற்றும் அவரது நண்பர் இருவரும் நீரில் நின்றுக்கொண்டு ஆடி பாடியபடி ‘டிக்டாக்’ வீடியோ எடுத்துக்கொண்டனர். அப்போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் கால் தவறி கீழே விழுந்த தினேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனிருந்த அவரது நண்பர் உடனடியாக உறவினர்கள் மற்றும் நிஜாமாபாத் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடந்த 2 நாட்களாக நீரில் அடித்து செல்லப்பட்ட தினேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை சடலமாக மீட்டனர்...
                 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக கல்யாண் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சர்ச்சைக்குரிய இந்த இடம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ கடந்த 9ம் தேதி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேச முதல்வராக கல்யாண் சிங் இருந்தார். இந்த வழக்கில் அவர் மீது கடந்த 1993ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு அவரிடம் விசாரணை நடத்தவும் முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் மாநில ஆளுநராக இருந்ததால், அரசியலமைப்பு சட்டத்தின்படி அவருக்கு விலக்கு அளிக்க சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது. தற்போது, அவரது பதவிக்காலம் இந்த மாதம் முதல் வாரத்துடன் முடிந்து விட்டது. எனவே, அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நேற்று முன்தினம் சிறப்பு நீதிபதி எஸ்கே.யாதவ் முன்னிலையில் விசா..
                 

கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை குறைப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
பெங்களூரு: புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்தந்த மாநில அரசே அபராத தொகையை குறைத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.  அதன்படி  கர்நாடக மாநிலத்தில்  வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், அபராத தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான  அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதில் லைசென்ஸ் இல்லாமல் பயணித்தால் பழைய  கட்டணம் ₹5,000 என்று இருந்தது. அது தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதாவது  பைக் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1000, இலகு ரக வாகனங்களுக்கு  ₹2 ஆயிரம், பிற வாகனங்களுக்கு ₹5 ஆயிரம் என்று நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அதிவேகமாக வாகனத்தை ஓட்டினால் ₹2 ஆயிரம்  என்று இருந்த அபராதம், பைக் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1000,  இலகுரக வாகனங்களுக்கு ₹2 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால், ₹5 ஆயிரம் மற்றும் ₹10 ஆயிரம்  என்று இருந்த அ..
                 

மேற்குவங்கத்தில் ருசிகரம்: மணப்பெண்ணை 'அலாக்காக’ தூக்கி 'மல்லாக்க’ விழுந்த மாப்பிள்ளை... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மணப்பெண்ணை அலாக்காக தூக்கி மல்லாக்க விழுந்த மாப்பிள்ளையின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. திருமணம் ஆண், பெண் இருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான மறக்க முடியாத ஒன்று திருமணம். சந்தோஷம், மட்டற்ற மகிழ்ச்சி, நண்பர்களின் கலாட்டா என திருமணம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்போதுள்ள இளஞ்ஜோடிகள் தங்கள் திருமணத்தை மிகவும் வித்தியாசமான முறையில் நடத்துவதையே விரும்புகின்றனர். குறிப்பாக கடலுக்கு அடியில் திருமணம், ஆகாயத்தில் பறந்தபடியே திருமணம் என வித்தியாசங்களை கையாண்டு பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்புகின்றனர். அப்படியொரு திருமணம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-மேற்குவங்கத்தில் இளஞ்ஜோடிகள் இருவர் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். பொதுவாக அங்கு திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகன் பின்னால் சென்று தூக்கவேண்டும் என்பது ஐதீகம். அதன்படி திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மாப்பிள்ளை தூக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி நின்றனர். அப்போது மாப்பிள்ளை மணப்பெண்ணி..
                 

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கக்கூடாது: பார் உரிமையாளர்களால் பரபரப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பேனர்களை சென்னை, திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார் உரிமையாளர்கள் நிறுவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டியவாறு 1,300க்கும் மேற்பட்ட பார்கள் இயங்கி வருகிறது. பெரும்பாலான கடைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதில்லை. அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க கடும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டாலும் அது பலனில்லாமல் போகிறது. இதேபோல், மதுபானங்களை பார்களில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. உணவு பொருள், திண்பண்டங்களை மட்டுமே பார்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிகளை மீறி பல மாவட்டங்களில் பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் வசூல் வேட்டை மட்டுமே நடத்திவிட்டு வருவதால் இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட..
                 

மருதாநதி அணையில் ஆபத்தான குளியல்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையத்தில் உள்ள மருநாநதி அணையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு, அணை பகுதியில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்த அணையின் 72 அடி உயரமாகும். அணைக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் சுமார் 10 அடிக்கு தண்ணீரும், 20 அடிக்கு சேறும், சகதியுமாகவும் உள்ளது. இந்நிலையில் அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி,  தேவரப்பன்பட்டி, காந்திபுரம், வாடிபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இங்கு வந்து குளிக்கின்றனர். இவர்கள் ஆபத்து அறியாமல் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் குதித்து விளையாடுகின்றனர். இதனால் மாணவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. விபரீதத்தை தடுக்க அணை பகுதியில் காவலர்களை நியமிக்க பொதுப்பணித்துறையினர் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
                 

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரே ரசீதில் இருவர் பெயரிட்டு தனித்தனியே அபராதம் வசூல்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் போலீசார் மோட்டார் வாகன சோதனையின்போது ஒரே ரசீதில் 2 பேருக்கு அபராதத் தொகை எழுதிக்கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் 15.வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டியிலிருந்து செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  ஹெல்மெட் அணியாமல் ரகுபிரசாத் என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவரை காவலர் நண்பர்கள் குழு ஒன்று மடக்கி பிடித்தனர். பின்னர் அங்கிருந்த காவலர் ஒருவர் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளார். பின்னர் அதே ரோட்டில்  ஹெல்மெட் அணியாமல் வந்த கருப்புசாமி என்பவரையும் பிடித்தனர். இந்நிலையில், ரசீதுகள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறி, ரகுபிரசாத்தின் அபராத ரசீதை வாங்கி கருப்புசாமிக்கும் அதே ரசீதில் அபராதத் தொகையை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த ரசீதின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.    இதுகுறித்து ரகுபிரசாத்திடம் கேட்டபோது, ‘ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை பிடித்து அபராதம் விதித்தார்கள். எனக்கு ராமு என்னும் ..
                 

நீர்வரத்து 7,812 கனஅடி சரிகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை  9  ஆயிரம் கனஅடியாக சரிந்தது. எனினும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் 9 ஆயிரம் கனஅடியாக  இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 7,812 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி  திறக்கப்படுகிறது. வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களுக்கு பின், 120 அடியில் இருந்து குறைந்து நேற்று 119.94 அடியானது. நீர் இருப்பு 93.37 டிஎம்சி..
                 

நீலகிரியில் களைகட்டும் 2வது சீசன்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் களைகட்ட துவங்கியுள்ள  நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.  நீலகிரி  மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன்  காலமாகும். கடந்த மாதம் ேகரளாவில் பெய்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வர ஆர்வம்  காட்டாததால் இம்மாத துவக்கத்தில் ஊட்டியில் சுற்றுலா  பயணிகள் கூட்டமின்றி  வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது இரண்டாவது சீசன் களைகட்ட துவங்கியுள்ள  நிலையில் விடுமுறை தினமான நேற்று அதிகளவில்  சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு  வருகை தந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள  முக்கிய சுற்றுலா தளங்களில் மக்கள்  கூட்டம் காணப்பட்டது.  அதற்கேற்றார் போல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான  காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை மகிழ்ச்சியுடன்  பார்த்து ரசித்தனர். ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக  ஆர்வம்  காட்டினார்கள். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது...
                 

ஏழை மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும்: எஸ்டிகே.ராஜன், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பள்ளிகள் மேலாளர்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
தமிழகத்தில் கல்விக்கண் திறந்தவர் என்று அனைவராலும் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரால் 17 ஆயிரம் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. அப்படி தான் கல்விக்கு வித்திடப்பட்டது; வளர்க்கப்பட்டது; இது போதாதென்று, கல்வி கற்க  ஈர்க்க வேண்டும் என்பதால் மக்களின் வறுமை கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்று நினைத்தார்; அதன் பலன் தான்  மாணவர்கள் பசியாற மதிய உணவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால், அன்று ஏழை மாணவர்கள் பள்ளிக்கூடம்  செல்ல ஆரம்பித்தனர். இந்த கல்வித்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக டாக்டர் எம்ஜிஆர் உலகத்திற்கே முன்னோடியாக சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார். டாக்டர் கலைஞர் சத்துணவுத்திட்டம் சத்தான திட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக  சத்துணவோடு முட்டையினை வழங்க திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் அதை செயல்படுத்தி கல்வித்துறைக்கு பெருமை சேர்த்தார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தினம்தோறும் முட்டையுடன் ஊட்டசத்து நிறைந்த பயிர்வகைகளையும் மதிய உணவில் சேர்த்தார். இவைகள் எல்லாம் ஏழை மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும்  ஏற்படுத்தப்பட்டவை. பள்ளிக்க..
                 

கமல் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை,:   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  அமைச்சர்  கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: நாங்குநேரி தொகுதி வேட்பாளரை தலைமை அறிவிக்கும்.  ஊழலை பற்றி பேசுவதற்கு கமல்ஹாசனுக்கு என்ன தகுதி  இருக்கிறது. அரசியலில் ஆழம் தெரியாமல் இறங்கி விட்டார். இதில் இருந்து எப்படி வெளியேற வேண்டும் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என்றார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டியில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது அந்த கட்சிகளின் பயத்தை  காட்டுகிறது என்றார்...
                 

மோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்: டிரம்ப் புகழாரம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
அமெரிக்கா: மோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர் என ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் டிரம்ப் புகழாரம் செய்துள்ளார். இந்திய அமெரிக்க மருத்துவர்கள் அமெரிக்காவின் வனர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் டிரம்ப் தெரிவித்தார். விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். இரு நாடுகளும் அளப்பரிய வளர்ச்சியைப் பெற மோடியுடன் இணைந்து செயல்படுவேன் என்றார். ..
                 

பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

செங்கல்பட்டு-பரனுர் சுங்கச்சாவடியில் மூன்று கார்களில் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்ணாடியை உடைத்தனர்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: ரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கமல் தற்போது வெளியேற தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூதெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும், தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார்...
                 

திருப்பதி மலைப்பாதையில் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பெருமாளுக்கு ஒரு டன் பூமாலை: அந்தரத்தில் தொங்கியபடி பாலாபிசேகம் செய்து தரிசனம் செய்த இளைஞர்கள்

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பெருமாளுக்கு இளைஞர்கள் அந்தரத்தில் தொங்கியபடி பாலாபிசேகம் செய்து ஒரு டன் எடையுள்ள மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏழு மலைகள் மீது அமைந்துள்ளது. ஏழுலையானை தரிசனம் செய்ய பக்தர்களின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்படுகிறது. இதை தவிர இருசக்கர வாகனங்கள், கார்கள், ஜீப், வேன்களிலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதை தவிர நடைபாதையாகவும் பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில், மலைப்பாதையின் கடைசி வளைவில் நாராயணகிரி மலை உள்ளது. இம்மலையின் மீது இயற்கையாகவே பெருமாளின் உருவம் காணப்படுகிறது. இங்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று திருமலை பாலாஜி நகரை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் அமைந்துள்ள இயற்கை பெருமாள் சிலைக்கு அபிசேகம், மாலை அணிவித்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று குடங்களில் பால், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர், குடத்தால் தயார் செய்யப்பட்ட மாலை, 1000 கிலோ பூக்களால் ஆன மாலையை அணிவித்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அப்ப..
                 

சென்னை நங்கநல்லூர் தொழிலதிபரிடம் 120 சவரன் கொள்ளையடித்த பஹ்ரியா கும்பல் மும்பையில் சிக்கியது: தமிழகம் அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்தனர்

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  குற்றம்  
சென்னை: நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த பஹ்ரியா கும்பலை சேர்ந்த 9 பேரை மும்பை போலீசார் சுற்றி வளைத்து மும்பையில் கைது செய்தனர். சென்னை நங்கநல்லூர், ஸ்டேட் பாங்க் காலனி விரிவு 2வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ரமேஷ் (52). இவர் கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு சென்றார். இதனால் அவரது  மனைவி மற்றும் குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், 20ம் தேதி மாலை அவர்கள் வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்றது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 தனிபடைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வந்தனர். அந்த வீட்டின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த வீட்டில் கொள்ளையடித்தது,  கதவுகள் உட..
                 

குன்றத்தூர் பகுதி குடோனில் பதுக்கிய 6 டன் போதை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  குற்றம்  
பல்லாவரம்: குன்றத்தூர் பகுதியில் குடோனில் பதுக்கிய 6 டன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்தனர். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை அருகே குன்றத்தூர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர்.அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த அலிபாபா (52) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஊரப்பாக்கத்தில் உள்ள குடோனில்  மொத்தமாக பதுக்கி வைத்து, குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அந்த குடோனில் போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 6 டன் எடை கொண்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், குட்கா கடத்தி வந்து கடைகளுக்கு விற்பதற்கு உதவிய அலிபாபாவின் நண்பர்  சரவணன் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தன..
                 

அதிமுகவுக்கு தமாகா ஆதரவு

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா ஆதரவு அளித்து, வாக்கு சேகரித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் காலியாகவுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவின் வேட்பாளர்களை தமாகா ஆதரிக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் தமாகாவின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுக வெற்றியை உறுதி செய்யக்கூடிய  வகையிலே களப்பணியாற்றுவார்கள். எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா முழு அதரவு அளிக்கிறோம்...
                 

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.தமிழகத்தில்  காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கு அக்டோபர் 21ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை  புறக்கணித்தது. எனவே, அந்த கட்சி சார்பில் 2 தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடுமா, இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன்  அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின்  எண்ணப்படி 2021ல் ஆட்சி பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி  மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக  முன்னேறி வருகிறது. நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள்  தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கிற  எண்ணத்துடன் ஆள்பவர் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில்  மக்கள் நீதி  மய்யம் பங்கெடுக்காது...
                 

30 அடி உறை கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: விருகம்பாக்கம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது வீட்டில் மாங்காட்டை சேர்ந்த வசந்தா (59) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த வீட்டில் 30 அடி உறை கிணறு உள்ளது. இதன் மூடி சற்று உடைந்து இருந்ததால் அதை துணியால் மறைத்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இதை கவனிக்காத மூதாட்டி வசந்தா உறை கிணற்றின் மூடி மீது கால் வைத்தபோது, கிணற்றிக்குள் விழுந்து உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மகேஷ்குமார் ஓடி வந்து கயிறை கிணற்றிக்குள் விட்டு காப்பாற்ற முயன்றார். ஆனால் குறுகிய கிணறு என்பதால் முடியவில்லை. இதையடுத்து மகேஷ்குமார் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்படி தீயணைப்பு அதிகாரி ஆரிபா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி வசந்தாவை கயிறு உதவியுடன் லேசான காயங்களுடன் மீட்டனர்...
                 

சீன ஓபன் பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  விளையாட்டு  
பெய்ஜிங்: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார். சாங்ஸூ நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தைவானின் டாய் ட்ஸூ யிங்குடன் மோதிய கரோலினா 14-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 21-17, 21-18 என அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி சீன ஓபன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா, கடந்த ஜனவரியில் நடந்த இந்தோனேசிய ஓபன் தொடரின் பைனலில் விளையாடியபோது வலது காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வாரம் வியட்நாம் ஓபனில் களமிறங்கிய அவர் முதல் சுற்றுடன் வெளியேறினார். இந்த நிலையில், சீன ஓபனில் அபாரமாக விளையாடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்...
                 

பாலைவனமும் இனி விவசாய பூமியாகும் வளர்ச்சியடையும் புதிய தொழில்நுட்பம்

6 hours ago  
செய்திகள் / தினகரன்/ உலகம்  
துபாய்: எதிர்க்காலத்தில் உணவு உற்பத்தி என்பது தற்போதைய நிலையை விட இரட்டிப்பாக இருந்தால் மட்டுமே அனைவருக்குமான உணவு தேவையை சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.ஆனால் இயற்கை சுரண்டப்பட்டு புவி வெப்பமயமாதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் உணவு உற்பத்தியை அதிகரிப்பது என்பது எதிர்கால சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்நிலையை மாற்ற‌ விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மண் மற்றும் சூரிய ஒளி இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை வளர்க்கும் ஹைட்ரோபோனிக்ஸ் முறை விவசாயம், பசுமை குடில்கள் எனப்படும் மேற்கூரை அமைத்து தேவையான தட்பவெட்ப சூழல் உருவாக்கி விவசாயம், வெர்டிக்கல் விவசாயம் என இன்னும் பல்வேறு முறைகளில் விவசாயம் நடைபெறுகிறது.இதில் தற்போது புதிய‌ வகையாக‌ பாலைவனபகுதியை செழிப்பான வளமான பகுதியாக மாற்றி விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது. எல்என்சி லிகுட் நானோ கிளே என்றழைக்கப்படும் இந்த  தொழில் நுட்பத்தில், களிமண்ணையும் நீரையும் இணைப்பதன் மூலம் திரவ நானோக்ளே தயாரிக்கப்படுகிறது. இந்த திரவம் பாலைவனத்தில் ..
                 

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை

6 hours ago  
செய்திகள் / தினகரன்/ உலகம்  
ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'மோடி நலமா' என்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் ஆவலுடன் வந்துள்ளதாக அரங்கில் திரண்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார். ஹூஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்காக அதிகளவிலான மக்கள் குவிந்து வருகின்றனர். 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரைஅமெரிக்கா: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சிறந்த மனிதர் என்று மோடி புகழாரம் செய்து வருகிறார். வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியவர் டிரம்ப் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப் எனவும் தெரிவித்தார். உற்சாகத்துடனும், துடிப்புடனும், ஆளுமையுடனும் செயல் படக்கூடியவர் டிரம்ப் என பிரதமர் மோடி கூறினார். அமெரிக்கா நாட்டிற்காகவும்..
                 

ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28.5 லட்சம் தங்கம் ஐபோன்கள் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  குற்றம்  
சென்னை: ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹28.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், இ-சிகரெட், ஐபோன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஹாங்காங்கில் இருந்து தாய்லாந்து வழியாக தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராகிம் (43), முகமது ரிபாய் (41) ஆகிய 2 பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் ஹாங்காங்கிற்கு சென்று, சென்னைக்கு திரும்பி வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களை நிறுத்தி  விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.  இதையடுத்து இவர்களது உடமைகளை திறந்து பார்த்து சோதித்தனர். அப்போது,  சூட்கேசில்  தடை செய்யப்பட்ட இ-சிகரெட் 89 பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு ரூ.1.1 லட்சம். அதேபோல்  ஏராளமான ஐபோன்கள் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.21.2 லட்சம..
                 

காலாவதியான பாலிசியை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  தமிழகம்  
புதுடெல்லி: காலாவதியான பாலிசியை புதுப்பிக்க சிறப்பு முகாமை எல்ஐசி அறிவித்துள்ளது. பாலிசி எடுத்தவர்கள் பலர், பாதியிலேயே கட்டாமல் விட்டு விடுகின்றனர். இவ்வாறு பாலிசியை கட்ட தவறியிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அபராதத்துடன் கட்டவும், காலாவதி ஆகியிருந்தால் அவற்றை புதுப்பிக்கவும் சில காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.அந்த வகையில், காலாவதியான பாலிசிக்களை புதுப்பிக்க எல்ஐசி சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த முகாம் அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. இதில், பாக்கி பிரீமியம் தொகையை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். காலதாமத கட்டண தொகையில் தள்ளுபடிகளும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள எல்ஐசி அலுவலகங்கள் அல்லது வாடிக்கையாளர் மையத்தை அணுகலாம் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது...
                 

பிஸ்கெட் விற்பனை மந்தமானதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: பிஸ்கெட் விற்பனை மந்தமானதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம் என கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்குநேரியில் இடைத்தேர்தலில் எங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கலந்து பேசி, தகுதியான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம். கிராம மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருந்தால்தான், அவர்கள் பொருட்களை  அதிகமாக வாங்குவதுடன் வியாபாரமும் வளர்ச்சியடையும். அதனால் உற்பத்தியும் பெருகும். ஆனால், தற்போது பணப்புழக்கம் இல்லாமல் ஒரு பிஸ்கெட்கூட வாங்க முடியவில்லை. இதனால் பிஸ்கெட் வியாபாரம் இல்லாமல், அதுசம்பந்தமான  கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சியை பிஸ்கெட் விற்பனை மந்தமானதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். இதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் சிதம்பரம் கைது, காஷ்மீர் பிரச்னை, மொழி பிரச்னை என மத்திய அரசு மக்களின் கவனத்தை  திசைதிருப்பி கொண்டிருக்கின்றன. நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற..
                 

கீழடி அகழாய்வுப் பகுதியில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை:  கீழடி அகழாய்வுப் பகுதியில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடி அகழாய்வில் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை மிக மூத்தது முதன்மையானது என்பது தொல்லியல் துறை ஆதாரப்பூர்வமாக உறுதிபடுத்தி உள்ளது. கொடுமணல், அழகன்குளம்  உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆதாரங்களை விடத் தொன்மையான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளது. கி.மு.6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கற்றறியும் நிலையில் வாழ்ந்தற்கான ஆதாரங்கள்  கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.முதல் கட்ட ஆய்வுகளை தொகுத்து, அதில் கிடைத்த ஆதாரப் பொருட்களுடன் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை நூல் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது.கீழடி அகழாய்வுப் பணி பல்வேறு தடைகளை தாண்டியும், அதனை முழுமைப்படாமல் முடக்கி விடும் முயற்சிகளையும், மத்திய அரசின் அதிகார அழுத்தங்களையும் எதிர் கொண்டும் சாதனை படைத்து முன்னேறுகிறது.கீழடி அகழாய்வுப் பணிகள் சர்வதேச தரத்தில் ஆய்வு செய்ய வேண்டிய முக்க..
                 

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி விடுதிகளுக்கு நிபந்தனை

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி விடுதிகளுக்கு நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஏஎஸ்பி தலைமையில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்து தங்கினால் உடனடியாக தெரிவிக்க காவல்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது...
                 

கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது: பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால் இன்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: சென்னையில் கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது. அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்; கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 21 சங்கங்கள் பங்கேற்றன.தற்போது,20 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ2,500 வாடகையை 3,800 ஆகவும் 40 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ3,500ஐ 4,800 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலி  கன்டெய்னர் லாரிகளுக்கு வழங்கப்படும் 2,000 வாடகையை, 3,300 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இதை நிறைவேற்றினால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள்  அறிவித்தனர். இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. அரசுக்கு பல கோடி  ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறக்கோரி, தண்டையார்பேட்டை தாசில்தார் லட..
                 

சென்னையில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் மீண்டும் தொடக்கம்

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: லாரி வாடகையை ரூ.1,950- ஆக உயர்த்தகோரிய நிலையில் ரூ.1000 மட்டுமே உயர்த்துவதாக துறைமுகம் நிர்வாகம் அறிவித்தது. ரூ.1000 வாடகை உயர்வுக்கு சம்மதித்த லாரி உரிமையாளர்கள் நேற்று ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர். இன்று மீண்டும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர்...
                 

தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம்: அமைச்சர் பாண்டியராஜன்

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
                 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தால் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்...
                 

இந்திய மொழிகளில் முதலில் அச்சடிக்கப்பட்ட நூல் தமிழ்தான்: சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
                 

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது: காவல் ஆணையர் அதிரடி

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
பெங்களூரு: கர்நாடகாவில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அதிக அபராத தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கர்நாடகாவின் கலபுராகி பகுதி காவல் ஆணையர் ஒருவர் புதிய முயற்சியை கையாண்டுள்ளார்.அதன்படி, கலபுராகியில் இயங்கும் சுமார் 50 பெட்ரோல் பங்கின் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், இருசக்கர வாகனம் வைத்திருந்தும், ஹெல்மெட் இன்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது முதல் ஒருவாரத்துக்கு வாடிக்கையாளர்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதன் பிந்தைய வாரங்களில் ஹெல்மெட் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்...
                 

கடந்த 3 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் தீவிரவாதத் தடுப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த அல்கொய்தா தீவிரவாதி கைது

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
ராஞ்சி: கடந்த 3 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் தீவிரவாதத் தடுப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த அல்கொய்தா தீவிரவாதி முகமது காலிமுத்தின் முஜாஹிரி இன்று கைது செய்யப்பட்டார். டாட்டா நகர் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் வந்தவரை போலீஸார் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தபோது காலிமுத்தின் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தீவிரவாதத் தடுப்பு சிறப்புப் படையின் கூடுதல் இயக்குநர் போலீஸ் டிஜிபி எம்.எல் மீனா நிருபர்களிடம் இன்று கூறுகையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தீவிரவாதி முகமது காலிமுதின் முஜாஹிரி கடந்த 3 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று தீவிரவாதப் பயிற்சி அளித்து வந்தார். ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காலிமுதின் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரின் உதவியாளர்கள் முகமது அப்துல் ரஹ்மான், அப்துல் சமி என்கிற உஜ்ஜிர் ..
                 

10 ஆயிரத்து 500 பேருக்கு பணி வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படை: 50 சதவீதம் பெண்கள் தேர்வு

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
மும்பை: ரயில்வே துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பாக, ரயில்வே பாதுகாப்புப் படையில் சமீபத்தில் 10 ஆயிரத்து 500 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதம் கான்ஸ்டபிள் பணியிடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 537 ஜவான்களுக்கான இடம் காலியாக இருந்தது. இதில் 1,120 துணை ஆய்வாளர்கள், 8 ஆயிரத்து 619 போலீஸ் கான்ஸ்டபிள்கள், 798 உதவி ஊழியர்கள் பணி காலியாக இருந்தது.இதற்கான காலியிடங்களை நிரப்பும் பணி கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பணி அமர்த்தல் மூலம் 10 ஆயிரத்து 537 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் கான்ஸ்டபிள் பிரிவில் மட்டும் 50 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண் கான்ஸ்டபிள்கள் 2.25 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். அதிகமான பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்க..
                 

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் 98% நிறைவு

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புவனேஸ்வர்: சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் 98 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். நிலவை  ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ சமீபத்தில் அனுப்பியது.  இதில், ஆர்ப்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற 3 முக்கிய பாகங்கள் இருந்தன.  நிலவின் சுற்றுவட்டபாதையில் ஆர்பிட்டர் வெற்றிகரமாக சுற்றிக்   கொண்டிருக்கிறது. நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய விக்ரம்  லேண்டருடன் கடைசி நேரத்தில் தகவல் தொடர்பு துண்டானது. தரையிறங்க நிர்ணயம்  செய்யப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விழுந்து கிடந்த   லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவும், நாசாவும் செய்த முயற்சிகள் தோல்வி  அடைந்தன. லேண்டரின் ஆயுட்காலம் மொத்தமே 14 நாட்கள்தான். நேற்று காலையுடன்  அந்த கெடு முடிந்தது.இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர்  ஐஐடி.யில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் சிவன்  நேற்று சென்றார். அங்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:சந்திரயான்-2ல்  அனுப்பப்பட்ட ஆர்பிட்டர், நிலவை சுற்றி வந்து அறிவியல் சோதனை..
                 

அனுமதியின்றி வீட்டில் யானை தந்தங்கள் நடிகர் மோகன்லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
திருவனந்தபுரம்: யானை  தந்தங்களை வீட்டில் அனுமதியில்லாமல் வைத்திருந்தது தொடர்பாக பிரபல மலையாள  நடிகர் மோகன்லாலுக்கு எதிராக வனத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்துள்ளது .கடந்த 2011ம்  ஆண்டு ஜூலை 22ம் தேதி பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி  மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான  வரித்துறையினர் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை  நடத்தினர். இதில் கொச்சியில்  உள்ள அவரது வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் லைசென்ஸ் இல்லாததால், மோகன்லாலுக்கு எதிராக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையே  கடந்த காங்கிரஸ் அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த திருவஞ்சூர்  ராதாகிருஷ்ணன் யானை தந்தங்களை வைத்திருக்க மோகன்லாலுக்கு சிறப்பு அனுமதி  வழங்கினார். இதையடுத்து கேரள முதன்மை வனத்துறை  அதிகாரி மோகன்லாலுக்கு யானை  தந்தங்களை வைத்திருப்பதற்கான உரிமையாளர் சான்றிதழை வழங்கினார். இதையடுத்து  மோகன்லாலுக்கு எதிரான வனத்துறை பதிவுசெய்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.  இதை ..
                 

ஆப் சீசன் துவங்கியதால் கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆப் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசி, தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்கள் சீசன் மாதங்களாகும். இந்த கோடை சீசனில் இதமான சூழ்நிலை நிலவும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் வாட்டி வதைக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சீசன் இரண்டாவது சீசன் எனப்படும் ஆப் சீசன். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த சீசன் இருக்கும். இரண்டாம் சீசன் காலத்தில் கொடைக்கானலில் இதமான சூழ்நிலை நிலவும். தற்போது இரண்டாம் ஆப் சீசன் துவங்கியுள்ளது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குணா குகை, பிரையண்ட் பூஙாக், மோயர் பாயின்ட், வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரின் மைய பகுதியிலுள்ள ஏரியில் படகு சவாரி..
                 

மொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி  சிலையை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.திமுக., தலைவராக இருந்த கருணாநிதி மறைவிற்கு பிறகு சென்னை அண்ணா  அறிவாலயத்தில் கருணாநிதிக்கு முதன்முறையாக சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து  ஈரோடு முனிசிபல் காலனியில் சிலை திறக்கப்பட்டது. தற்போது  ஈரோட்டில் 2வது  சிலையாக பன்னீர்செல்வம் பார்க்கில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்து கொள்ளும் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் கலைஞரின் சிலையை பன்னீர்செல்வம் பூங்காவில் திறந்துள்ளோம். நீதிமன்ற அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருண..
                 

குலசேகரன்பட்டினத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
உடன்குடி: குலசேகரப்பட்டினத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நெல்லை ஆதீன மட விஸ்வகர்ம ஜெகத்குரு. ஸ்ரீல ஸ்ரீபுத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். குலசேகரப்பட்டினம் விஸ்வகர்ம தொழிலாளர்கள் சங்க தலைவர் லோகநாதன், செயலாளர் முருகன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் மாரியப்பன் வரவேற்றார். இதில் கொடியேற்றப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் சட்ட ஆலோசகர் ராமச்சந்திரன், தூத்துக்குடி விஸ்வகர்ம கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிட்டு, ஸ்ரீஹரிஓம் இந்து சேவா சங்க மாவட்டத் தலைவர் வசந்தகுமார், சுந்தர், சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள், சங்க இளைஞரணியினர், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்...
                 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் ஜவஹருல்லா பேட்டி

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

திருவனந்தபுரம் அருகே சொத்துக்காக உணவு, தண்ணீரின்றி தாயை பூட்டி வைத்த மகன்

10 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே சொத்துக்காக 75 வயது தாயை உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.திருவனந்தபுரம்   அருகே பாலராமபுரம் ரசல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா(75). இவருக்கு ஜெயகுமார்(45) என்பவர் உட்பட 4 பிள்ளைகள் உள்ளனர். மற்ற 3 பேரும்   திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஜெயகுமாருடன் தாய்  லலிதா  வசித்து  வருகிறார். லலிதாவின் பெயரில் 30 சென்ட் நிலமும், வீடும்,  வங்கியில் 14  லட்சம் பணமும் உள்ளது. ஜெயகுமார் தாயை மிரட்டி இவற்றை தனது  பெயருக்கு எழுதி  வாங்கி உள்ளார். இது சகோதரர்களுக்கு ெதரியாமல்  இருக்க  அவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.இந்த  நிலையில்  கடந்த சில மாதங்களாக ஜெயகுமார் தாய்க்கு சரியாக உணவு கொடுக்காமலும்,  பராமரிக்காமலும் அவரை வீட்டில் பூட்டி  வைத்திருந்தார். இதனால் அவரது  உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. மேலும்  உடலில் புண்களும்  ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தியது. இதனால் வலி பொறுக்..
                 

திருப்பூர் அருகே பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொல்லை கொடுத்த பள்ளி நிறுவனர் தலைமறைவு

10 hours ago  
செய்திகள் / தினகரன்/  குற்றம்  
திருப்பூர்: திருப்பூர் அருகே பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொல்லை கொடுத்த பள்ளி நிறுவனர் தலைமறைவானார். திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்த குருப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிறுவனர் ராஜசேகர்(50) விடுதியில் தங்கி படித்து வரும் ஏழை மாணவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் நலத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நலத்துறையினர் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜசேகர் மீதான புகார் உண்மை என தகவல் தெரிவித்துள்ளனர்...
                 

கீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

10 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சென்னை: தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி' என்ற பழமொழியை நிரூபித்துக்காட்டியுள்ளது கீழடி அகழாய்வு. கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண்டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க காலத்திற்கும் பழைமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து, 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருப்பதாகவும், ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருப்பதாக மாநில தொல்லியல் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் தகவல் தெரிவ..
                 

குலசேகரன்பட்டினம் களைகட்டுகிறது: முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

10 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கொண்டாடப்படும். இந்தாண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 28ம் தேதி காலை 11 மணிக்கு காளிபூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம  அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு பக்தி இசை நடக்கிறது. 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.45 மணிக்கு கொடியேற்றம், தொடர்ந்து  விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்காப்பு அணிதல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பரதநாட்டியம், சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.6ம் நாளான 4ம் தேதி இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 10ம் நாளான 8ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி முதல் அதிகா..
                 

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்

13 hours ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
                 

ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி: 27ம் தேதி ஐநாவில் உரை

13 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: ‘ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு டெல்லியில் இருந்து, பிரதமர் மோடி, அமெரிக்கா புறப்பட்டு சென்றார். வரும் 27ம் தேதி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் அவர்  உரையாற்ற உள்ளார்.டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, தனது 7 நாள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஹூஸ்டனில் நடைபெறும் ‘ஹவ்டி’ -  மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னுடன் முதல்முறையாக பங்கேற்பது மிகுந்த பெருமைக்குரியது; இரு நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து, இருவரும் சந்தித்து பேசவுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று பிரதமர் மோடி சென்றடைந்தார். இன்று டெக்சாஸில் நடைபெறும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரை ஆற்றுகிறார். இந்த  நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து, 23ம் தேதி, ஐநா பொதுச்சபை கூட..
                 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

13 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

ஆத்தூர் அருகே தாமிரபரணியில் புதைந்து கிடக்கும் கட்டிடங்கள்: கீழடியை போன்று அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா?

13 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
ஆறுமுகநேரி:  ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆறு வறண்டதால் மண்ணில் புதைந்து கிடந்த கொற்கை மன்னன் காலத்து  கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. கீழடியை போன்று இங்கும் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது. நெல்லை  மாவட்டம், பொதிகை மலையில் உற்பத்தியாகி இரு மாவட்டங்கள் வழியாக  பாய்ந்தோடி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வளம் சேர்ப்பது தாமிரபரணி  ஆறு. பொருநை நதி என்ற பெயரும் இதற்கு உண்டு. வற்றாத ஜீவநதி எனப்  பெயர் பெற்ற  தாமிரபரணி, கடுமையான கோடை காலங்களில் மட்டுமே சில இடங்களில் வற்றுமே  தவிர எப்போதும் ஆற்றின் நீர் போக்குவரத்து இருந்துகொண்டே  இருக்கும். தாமிரபரணிக்கு  சிறப்பு சேர்க்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு  மாதத்திற்கு மேலாக புஷ்கர விழா  மிகச் சிறப்பாக நடந்தது. தாமிரபரணியில் மழைக் காலங்களில் கடலுக்கு தண்ணீர் வீணாகச் செல்வதால் பல  இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு நிலத்தடிநீர் சேமிக்கப்பட்டு வருகிறது.   இது மிகவும் பயனுள்ளதாக இருந்த போதிலும் ஒரு சில இடத்தில் தடுப்பணை  கட்டியதால் ஆறு வற்றும் நிலைக்கு..
                 

மதுரை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும்: முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: மதுரை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும் என்று முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். பாசனத்தில் விவசாயிகளை பங்கேற்க செய்யும் வகையில் கடந்த 2001ல் தமிழ்நாடு  விவசாயிகள் பாசனம் மற்றும் நீர் பங்கீட்டு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி விவசாயிகளை கொண்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள்  உருவாக்கப்பட்டன. இதன் மூலம் நீரினை பகிர்வது, கால்வாய்களை பாதுகாப்பது, உடைப்பை சரி செயதல், விவசாயம் சார்ந்த திட்டங்களை தீட்டுவது, நீர் திறப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளில் இச்சங்கத்தினர் ஈடுபடுவார்கள். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு  நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், விவசாயம் மற்றும் நீர்பங்கீடு சம்பந்தமான பணிகள் கடுமையாக பாதித்துள்ளன. மேலும், தற்போது நடந்து வரும் குடிமராமத்து பணிகளில் இந்த சங்கத்தினரின் பங்கு இல்லாமல் போனது. மாறாக, அரசியல் வாதிகளை கொண்டு இந்த  குடிமராமத்து பணியில் நடத்தப்படுவதால் முறைகேடு புகார்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன. இந்த நிலையில்..
                 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிடிவாதம் காரணமாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி நிறுத்தம்? : பேக்கேஜ் டெண்டர் வழக்கில் தடை உத்தரவால் சிக்கல்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாறு படுகைகள் மற்றும்  கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது, தான் மழை காலங்களில் கால்வாய் வழியாக எளிதில் மழை நீர் கடலுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாருவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த  சில நாட்களுக்கு ரூ.7.65 கோடி நிதி கேட்டு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 51 பணிக்கு ₹7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டது. இந்த ெடண்டர் வழக்கத்திற்கு மாறாக பேக்ேகஜ் அடிப்படையில் விட தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு  சிறிய கான்ட்ராக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ம..
                 

பெற்றோர்களை இயந்திரமயமாக்கி விடும்: அபிலாஷா, சைக்காலஜிஸ்ட் டாக்டர்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது அவசியம் இல்லை இது தேவையில்லாமல் மனஅழுத்தம் தான். அந்த வயதில் அவர்கள் அனைத்திலும் டெவலப் பண்ண வேண்டும்.  படிப்பில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது.  ஓட்ட பந்தயத்தில் ஓடவிட்டால்  முதலில் நான் ஓட வேண்டும் என்ற எண்ணம் வரும்.  இப்போது 10,12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியும். அதை மாதிரி 5,8 ம் வகுப்பு அப்படியே பெற்றோர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களின் வாழ்க்கையே இயந்திரமயமாகி விடும். படிப்பு எல்லாம்  கொஞ்சம் தாமதமாக தான் வரும். அதாவது, நிறைய பேருக்கு 9,10ம் வகுப்புகளில் தான் படிக்கணும் என்ற எண்ணம் வரும். அது வரை விளையாட்டுத்தனமாக இருப்பார்கள் அதற்கு அப்புறம் படிப்பார்கள். ஆனால் 5,8ம் வகுப்புகளில் நன்றாக  படிக்க மாட்டார்கள் என்று முத்திரை குத்திவிட்டால் அவர்களை மாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் போய்விடும். மாணவர்கள் தன்னம்பிக்கை போய்விடும். இது மாணவர்களுக்கு எந்த வகையில் வாழ்க்கைக்கு மாற்றம் கொடுக்கும் என்று தெரியவில்லை. ெசயல்முறை அறிவு வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்களுக..
                 

வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் விலை கடும் உயர்வு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சென்னை  
* தமிழகத்தில் கிலோ 70 ரூபாயாக அதிகரிப்பு* கையிருப்பு, ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு வருமா?சென்னை: சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால், வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் கிலோ 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் இந்த திடீர் உயர்வு கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதனால், இருப்பு வைக்கவும், ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்த பகுதிகளில் பலத்த மழையால் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே மார்க்கெட்களுக்கு சப்ளை ஆகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள லாசல்கான் மார்க்கெட்தான் நாட்டின்  மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தை. இங்கு கடந்த வாரமே வெங்காயம் கிலோ 45ஐ எட்டி விட்டது. நேற்று முன்தினம் கிலோ 33 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இங்கு வெங்காயம் கிலோ..
                 

திருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்னைகள் குறித்த  இருமாநில முதல்வர்களுக்கு இடையேயான  பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி திருவனந்தபுரத்தில்  நடக்கிறது. தமிழகம், கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு,  நெய்யாறு உள்பட நதிநீர் பிரச்னைகள் இருந்து  வருகின்றன. இது தொடர்பாக  பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன,  பொதுப்பணித்துறை அமைச்சர்கள்,  அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை  நடத்தியும் இதுவரை எந்த சுமூகத்  தீர்வும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நதிநீர்  பிரச்னைகளில் தீர்வு  ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில்  பேச்சுவார்த்தை நடத்த  கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டது. இதை கேரள அரசு  ஏற்றுக்கொண்டது. இதையடுத்து  இரு மாநில முதல்வர்களுக்கு இடையேயான  பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில்  வரும் 25ம் தேதி நடக்கிறது. இதில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் உள்பட  4 அமைச்சர்கள், கேரள மு..
                 

15 கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை: மாநில அரசியலில் பரபரப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
பெங்களூரு: கர்நாடகாவின் 15 எம்.எல்.ஏ.க்களின் எதிர்க்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இந்த ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்த ரமேஷ்குமார் முதல்கட்டமாக 3 பேரை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இரு தினங்கள் கழித்து மீதமுள்ள 14 எம்.எல்.ஏ.க்களை அப்பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதாக ரமேஷ்குமார் அறிவித்தார். இந்நிலையில், மேற்கண்ட 17 பேரின் தொகுதிகளில் ஆர்.ஆர்.நகர் மற்றும் மஸ்கி தொகுதிகள் நீங்கலாக மற்ற 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தங்களை பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 17 மாஜி எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு உடனடியாக விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அடுத்தடுத்து வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்..
                 

பிரியங்காவை பார்த்து பாஜ தலைவர்கள் பீதி: உபி காங். தலைவர் பெருமிதம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
லக்னோ: ‘‘பிரியங்கா காந்தியை பார்த்து பாஜ தலைவர்கள் பயப்படுகிறார்கள்’’ என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அடித்தட்டு மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறார். அவர் கட்சி நிர்வாகிகள், தலைவர்களை பார்ப்பதில்லை. இது நல்ல அறிகுறி. பாஜ தலைவர்கள் யாருக்காவது பயப்படுகிறார்கள் என்றால் அது பிரியங்கா காந்தியை பார்த்துதான். அவர் எழுப்பும் பிரச்னைக்கு, பாஜ தலைவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. பிரியங்கா தெரிவிக்கும் கருத்துக்கள் டிவிட்டருடன் முடிந்து போகும் என அவர்கள் கருதினர். ஆனால், அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்கள் மனதுடன் ஒத்துபோகிறது. அதை பா.ஜ.வால் உணர முடியவில்லை. அதிகாரத்தில் இருப்பதால் பாஜ.வினர் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர். உ.பி.யில் பிரியங்கா முழுப் பொறுப்பு எடுத்துக் கொண்டுள்ளதால், எல்லோரும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். உ.பி ஹமிர்பூர் இடைத்தேர்தலில், பாஜ.வை எதிர்த்து போரிடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். மற்றவர்கள் பயப்படுகின்றனர். முழு தீவிரத்துடன் காங்கிரஸ் போராடி வருகிறத..
                 

வெளிநாட்டில் இருக்கும்போது பிரதமருக்கு மதிப்பு தர வேண்டும்: சசிதரூர் கருத்து

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புனே: புனேயில் ‘அகில இந்திய புரொபசனல் காங்கிரஸ்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சசிதரூர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:பிரதமர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர் நமது நாட்டின் பிரதிநிதியாக அங்கு இருப்பதால் அவருக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். ஆனால் அவர் இந்தியாவில் இருக்கும்போது அவரை கேள்வி கேட்க நமக்கு உரிமை உள்ளது. இந்தி, இந்துயிசம் மற்றும் இந்துஸ்தான் ஆகிய பாஜ.வின் கொள்கைகள் நமது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவை. நாட்டில் மும்மொழி கொள்கைதான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டின் சில பகுதிகளில் மக்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவை இந்துயிசம் மற்றும் ராமரை அவமதிப்பது போலாகும். கேரளாவில்  (பல்வேறு வகுப்பினரிடையே) எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் மகாராஷ்டிராவில் மட்டும் ஏன் அப்படி நடக்கிறது? மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜ் மகாராஜ் ஆட்சியிலும்கூட பல்வேறு வகுப்பினர் இருந்தனர். ஆனால் மற்றவர்களை மதிக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அவர் அறிவுரை வழங்கினார். பாஜ.வின் இந்துயிசம் ஒரு “அரசியல் கொள்கை” ஆகும். அதற்கும் உண்மையான இந்த..
                 

19 ஆண்டுக்கு பிறகு நதிநீர் பிரச்னை குறித்து தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: திருவனந்தபுரத்தில் நடக்கிறது

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா இடையே முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு மற்றும் நெய்யாறு உள்பட நதிநீர் பிரச்னைகள் குறித்த இருமாநில முதல்வர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. தமிழகம், கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதிநீர் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்தவித சுமூக தீர்வும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கேரள அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இரு மாநில முதல்வர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 அமைச்சர்கள், கேரள முதல்வர் பினராயி விஜயன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, 2..
                 

நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின்படி ஊழலில் தமிழகம் முதலிடம்: புள்ளி விவரத்தில் ‘பகீர்’ தகவல்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
காந்திநகர்: நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின்படி ஊழலில் தமிழகம் முதலிடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஊழல், லஞ்சம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. எஸ்டிஜி - 2018 தரவுகளை ெகாண்டு, நிதி ஆயோக் புள்ளி விவரங்களின்படி, பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் லஞ்சம், ஊழல் முறைகேட்டில் மூன்றாமிடம் இடத்தில் உள்ளது. இம்மாநிலம் 1,677.34 குறியீடுகள் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஒடிசாவும், அடுத்தடுத்த இடங்களில் சட்டீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களும் உள்ளன. தமிழகத்தின் ஊழல் குறியீடு ஒரு கோடி மக்கள் என்ற அடிப்படையில், 2,492.45 ஆகவும், ஒடிசாவின் குறியீடு 2,489.83 ஆகவும், சட்டீஸ்கரின் குறியீடு 452.2 ஆகவும், சண்டிகரின் குறியீடு 342 ஆகவும் உள்ளது. குஜராத் விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் மட்டும் ஊழல் தொடர்பான 40,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து ஆண்டுகளில் ஊழல் தொடர்பான வழக்குகளில் 800 ஊழியர..
                 

தண்ணீர் செல்வதில் சிக்கல்: அனந்தனாறு கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்.. நீர்நிலை பாதுகாப்பில் தொடரும் அலட்சியம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
நாகர்கோவில்: அனந்தனாறு கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி கிடப்பதால், நீர் நிலைகள் பெரும் மாசுக்குள்ளாகி உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன கால்வாய் அனந்தனாறு கால்வாய் ஆகும். அனந்தனாறு கால்வாய் மூலம் காரவிளை, பெருவிளை, அனந்தன்நகர், ஆசாரிப்பள்ளம், பறக்கை, தெங்கம்புதூர் என பல்வேறு ஆயக்கட்டுகளுக்கு தனித்தனியாக தண்ணீர் பிரிந்து செல்கிறது.  பாசனம் மட்டுமின்றி வழியோர கிராமங்களின் குடிநீர் தேவைகளையும் கூட அனந்தனாறு கால்வாய் பூர்த்தி செய்கிறது. உரிய பராமரிப்பு இல்லாமல்,  நாகர்கோவில் மாநகரில் கழிவு நீர் கால்வாய்களாக இதன் கிளை கால்வாய்கள் மாறி உள்ளன. வீட்டு கழிவுகள், பல்வேறு தொழிற்சாலை கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அனந்தனாறு  கால்வாயில் குவிந்து கிடக்கின்றன. உள்ளாட்சி நிர்வாகங்களே பல இடங்களில் இந்த கால்வாயில், கழிவு நீரை விடுகின்றன. இதனால் நன்னீர் மிகவும் அபாயகரமான கழிவு நீராக மாறி விட்டது. அதன் ஆபத்து தெரியாமல் இதில் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர். நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம் வரும்போது, இந்த அவல நிலை மாறும் எனக்கூறினர். ஆனால், முதல்கட்ட பாதாள சாக..
                 

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கீழப்பாவூர் தமிழர்த்தெரு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் சுவாமி கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகளும், கருட சேவையையொட்டி நேற்று காலை காலை 7.30 மணிக்கு கும்ப ஜெபம், 8 மணிக்கு விசேஷ அபிஷேகம், 8.30க்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6.30க்கு சாயரக்க்ஷை, தீபாராதனை, 7 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை, 8 மணிக்கு தீபாராதனை,  9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதில் கீழப்பாவூர் வட்டாரத்தை சேர்ந்த ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியாருடன் பொதுமக்கள் செய்திருந்தனர்...
                 

காட்டு யானை தாக்கி ஆதிவாசி பெண் பலி

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சலிவயல் மில்லிகுன்னு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் மாதன் மனைவி காளி(70). இவர் நேற்று முன்தினம் மாலை மாயமானார். அவரை தேடியபோது எல்லமலை அருகில் உள்ள காப்பி  தோட்டத்தில் காளியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் காளி யானை தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிந்தது...
                 

போலீஸ்காரரின் உறவினருடன் முன்விரோதத்தால் பழிவாங்க ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக ஆட்டோ டிரைவர் மீது வழக்கு: ஆதாரமில்லாததால் நீதிபதி விடுவித்தார்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்