தினகரன் விகடன்

ராமநாதபுரம் அருகே மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி!

குமரி: ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குழுவுடன் திருவாடனை போலீசார் கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாலைக்குடியில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு கிளை வங்கி அமைந்துள்ள பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், வங்கியின் வெளிப்புற மற்றும் உட்புற பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் திருப்பாலைக்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்தனர். வங்கியின் வெளிப்புற மற்றும் உட்புற கதவுகள் கடப்பாரையால் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து, திருவாடனை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்-க்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.  இதையடுத்து, தடயவியல் மற்றும் மோப்ப நாய் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வங்கியில் மர்மநபர்கள் திருடி சென்றனரா? என்பது குறித்த ..
                 

சேலத்தில் காலிமனைகளை சுத்தம் செய்யாவிடில் மாநகராட்சிக்கு வசமாக்கப்படும்

                 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்ததாக சர்ச்சை

                 

மேட்டூர் அணையின் நீர்வரத்து 17,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக குறைந்தது: பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் குறைப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 7ம் தேதி, அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து, காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படிப்பாக குறைந்தது. இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர், கடந்த 14ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 14,000 கன அடி ..
                 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு

                 

திருச்சி அருகே கழிப்பறையில் பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் சிசு மீட்பு

                 

திம்பம் மலைப்பாதையில் 6 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

                 

‘பி.வி.சிந்துவை காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணி வைங்க’: 75 வயது முதியவர் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம்:  இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து (24). உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சமீபத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதன் பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த ரசிகர் கூட்டத்தில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான மலைச்சாமியும் இணைந்துள்ளார். அது மட்டுமல்ல... அவரை காதலிப்பதாகவும், மணம் முடிக்க விரும்புவதாகவும் கூறி கலெக்டரிடம் நேற்று மனு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இவர் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் நேற்றுமுன்தினம்  நடந்த குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில், ‘‘விளையாட்டுத்துறையில் எனக்கு தீராத ஆர்வம் உள்ளது. பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருகிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். எப்படியும், எங்கிருந்தாலும் சிந்துவை மணம் முடித்தே தீருவேன். அவரை விடப்போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார். மனுவுடன் பி.வி.சிந்துவின் புகைப்படத்தையும் இணைத்து கொடுத்துள்ளார். இவரை அங்கிருந்த அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். இவர் ஒவ்வொரு குறைதீர்கூட்டத்தின் போதும், இதுபோல ..
                 

எய்ம்ஸ் கட்டுமான பணி தமிழக அரசு அனுமதி

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், தோப்பூரில் 1,264 கோடி மதிப்பீட்டில் சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ஆனால் கட்டிட பணிகள் துவங்கவில்லை. இந்நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முன் அனுமதி வழங்காததால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கவில்லை என ஆர்டிஐ மூலம் கடந்த ஜூலை மாதம் தகவல் வெளியானது. தற்போது எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிருக்கும் மத்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்திற்கு முன் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை கலெக்டர் ராஜசேகர் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்...
                 

தென்காசி மாவட்டம் பிரிப்பு விவகாரம் மக்கள் கருத்தை கேட்டே இறுதி முடிவு : அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டத்துடன் இணைக்கும் பகுதிகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகே இறுதி முடிவெடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னுத்துரை (எ) ராஜதுரை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 18ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அருண்சுந்தர் தயாளன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆக. 17ல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். குற்றாலத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பொதுமக்கள் பங்கேற்கவில்லை.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் போது, பொதுமக்களின் நலனைத்தான் முன்னிறுத்த வேண்டும். ஆலங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளின் கருத்துக்களையும், நலனையும் கருத்தில் கொள்ள வ..
                 

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிரடி பேச்சு தமிழகத்தில் எந்த கொம்பனாலும் இந்தியை திணிக்க முடியாது

நாகை: ‘‘இந்தி மொழியை எந்த கொம்பனாலும் தமிழகத்தில் திணிக்க முடியாது’’ என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் அதிரடியாக பேசினார்.அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்னதிம் இரவு நாகை அவுரித்திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்து பேசியதாவது: சென்னை ஆர்.கே. நகரில் அமமுகவிற்கு கிடைத்த வெற்றி அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. முதலில் ஒருவர் பெயரை சொல்லி அவருக்கு வாக்குகள் கேட்டோம். அப்பொழுது திடீரென தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அவர் பெயரை சொல்லி வாக்கு அளிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தோம். ஆனாலும் அவருக்கு வாக்களித்தனர். எனவே ஆர்.கே. நகரில் கிடைத்த வெற்றி அந்த கட்சிக்கோ அல்லது அந்த கட்சி தலைவருக்கோ கிடைத்த வெற்றி இல்லை. இன்று அந்த கட்சி, தலைவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் எந்த கொம்பனாலும் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ் மொழி தாய் மொழியாக இருக்கும் வரை யார் நினைத்தாலும் இந்தி திணிப்பை ஏற்கவே மாட்டோம். தமிழகத்தில் ஒருபோதும் இந்தி திணிப்பிற்கு சாத்தியம் இல்லை. இவ்வாறு பேசினார்...
                 

தஞ்சாவூர் அருகே சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டும் போது ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு

                 

இந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதில் தவறில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்தில் தவறில்லை என்றும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே இருக்கும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.மேலும் தமிழை மையமாக வைத்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழக அரசு செயல்படும் என்றும் கூறினார். மேலும் உள்ளாட்சிமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாகவும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியார்களிடம் தெரிவித்தார்...
                 

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வீக்எண்ட் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா?..பொது மேலாளர் வருகையால் அதிக எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக சென்னைக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறையில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு என்பதற்கு மந்த கதியில் நடக்கும் இரு வழிப்பாதை பணிகள், மின் மயமாக்கல் பணிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் இன்னும்  நிறைவேறாத கனவாகவே இருக்கின்றன. கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணிகள் 2020 ல் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில், பணிகள் முடிவடைய இன்னும் கூடுதல் வருடங்கள் ஆகும் என்று தெரிகிறது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு தான் அதிகளவு ரயில்கள் தேவை ஆகும். இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அவ்வப்போது அறிவித்து ரயில்வே இயக்குகிறது. இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பயணிகளால் வரவேற்பை பெற்றுள்ளன. ரயில்வே துறைக்கும் அதிக லாபம் கிடைத்துள்ளது. சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்படுவது என்பது அவ்வளவு எளிதாக நடக்க கூடிய காரியம் இல்லை. ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்திலிருந்து பல்வேறு ரயில்கள் ச..
                 

நெல்லையை சேர்ந்த அப்துல் சுஹுர் என்பவருக்கு ரூ.20,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

                 

திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: பொதுமக்களின் கருத்துக்களை பரிசீலித்து திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. உரிய முறையிலேயே திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்னுதுரை என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்துள்ளது...
                 

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ‘வதைக்கும்’ வட்டக்கானல் சாலை: சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் வட்டக்கானல் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது வட்டக்கானல். இங்கு 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கொடைக்கானலுக்கு 14 கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. இதில் வட்டக்காணலில் இருந்து பாம்பார்புரம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து படுமோசமாக உள்ளது. வட்டக்கானல் பகுதியில் ‘டால்பின்நோஸ்’ சுற்றுலா தளம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலை சேதமடைந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு, பள்ளம் தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
                 

கொடைக்கானலில் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் உயிரிழப்பு

                 

நல்லூர் டோல்பிளாசாவில் கவுன்டர்கள் இருந்தும் ஊழியர்கள் இல்லை: வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

புதுக்கோட்டை: காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் அமைத்துள்ள டோல்பிளாசாவில் போதிய பணியாளர்கள் நியமிக்காததால் கட்டணம் செலுத்த வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் டோல்பிளாசா அமைக்கப்பட்டு உள்ளது. டோல்பிளாசாவில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு செல்லும் திசையில் நான்கு கவுன்டர்களும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும்போது நான்கு கவுன்டர்கள் என மொத்தம் 8 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் அனைத்து கவுன்டர்களிலும் பணியாளர்கள் அமர்ந்து கட்டணங்கள் வசூல் செய்தனர். தற்போது சுமார் 4 அல்லது 5 கவுன்டர்களின் தான் ஊழியர்கள் கட்டணங்கள் வசூல் செய்கின்றனர். மேலும் பணியாளர் இல்லாத கவுன்டர்களை தடுப்பு கட்டை (பேரிகார்டு) வைத்து அடைத்து வைத்து விடுகின்றனர்.இதனால் அதிக வாகனங்கள் வரும்போது குறைந்த கவுன்டர்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அவ்வப்போ..
                 

தீபாவளி பண்டிகைக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு 2.45 கோடி ரூபாய்: 30 சதவீதம் தள்ளுபடி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.45 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து பேசியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பருத்தி, பட்டுச் சேலைகள், வெண்பட்டு சேலைகள், உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ரசாயன உரங்களின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவைகள், கண்டாங்கி சேலைகள், படுக்கை விடுப்புகள், நவீன ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சுடிதார், என அனைத்து வித ஆடைகள் விற்பனைக்கு உள்ளது.அரசு மற்றும் பொதுத்துதுறை நிறுவன ஊழியர்களுக்கு கடன் விற்பனை உண்டு. கோ-ஆப்டெக்ஸ் துணிகளை இணைய தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர் ஆகிய 5 வி..
                 

தாழ்வான பிளாட்பாரம், குடிநீர் வசதியில்லை பாளை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

நெல்லை: பாளை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளமான பிளாட்பாரம், பயணிகளுக்கு இருக்கை பற்றாக்குறை போன்ற குறைபாடுகளை போக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே தினமும் 7 முறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் இதே எண்ணிக்கையில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. செந்தூர் விரைவு ரயில் தவிற மற்ற ரயில்கள் அனைத்தும் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயிலில் பஸ்கட்டணத்தை விட பல மடங்கு குறைவாக இருக்கிறது. இதுபோல் சீசன் டிக்கெட் கட்டணம் மேலும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை- திருச்செந்தூர் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக உள்ளது.குறிப்பாக நெல்லை - திருச்செந்தூர் இடையே உள்ள முக்கிய ஊர்களான செய்துங்கநல்லூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், நாசரேத், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி செல்பவர்கள், பணிக்கு ச..
                 

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

                 

கூடலூர் அருகே யானை நடமாட்டம் அதிகரிப்பு: வனத்துறையினர் எச்சரிக்கை

கூடலூர்: கூடலூர் அடுத்த லாரஸ்டன் நம்பர்-4 செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூடலூர் சுற்றுவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பொதுமக்களும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிப்பதால், அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை விரட்டி வருகின்றனர். இதேபோல் கூடலூரில் இருந்து கோக்கால் வழியாக லாரஸ்டன் நம்பர்-4 பகுதிக்கு செல்லும் சாலையில் யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்கின்றன. தற்போது சாலையின் இருபுறமும் செடிகள், புதர்கள் வளர்ந்து காணப்படுவதால், யானைகள் இருப்பது தெரியாமல் அவ்வழியாக செல்பவர்கள் யானைகளிடம் மாட்டி கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்...
                 

பல மாதங்களாக இழுத்தடிக்கப்படும் ஆர்.ஓ பிளான்ட் பணி: விரைந்து முடிக்க கிராமத்தினர் கோரிக்கை

சாயல்குடி: கமுதி அருகே காத்தனேந்தலில் கட்டி முடிக்கப்பட்ட ஆர்.ஓ. பிளான்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி ஒன்றியம், காத்தனேந்தல் ஊராட்சியில் காத்தனேந்தல், குடியிருப்பு, பறையங்குளம், குமிலங்குளம் போன்ற கிராமங்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தொடர் வறட்சியால் இப்பகுதியிலுள்ள கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவை வறண்டு போனதால், அவை பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கிறது. காவிரி கூட்டு குடிநீர் முறையாக வராததால், குடிநீர் தொட்டிகள், தெருக்குழாய்கள் சேதமடைந்து கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடந்து வருகிறது. தெருக்குழாய்கள் உடைந்து தரைமட்டமாக கிடப்பதால் தண்ணீர் சுகாதாரமற்று இருக்கிறது.இத்தண்ணீர் சற்று சவறு தண்ணீராகவும் இருப்பதால் கிராமமக்கள் குளிப்பதற்கு, துணிகள் சலவை செய்தல் உள்ளிட்ட வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். குடிப்பதற்கு கோவிலாங்குளம் காவிரி குடிநீர் நீரேற்றும் அறையிலிருந்து..
                 

திருப்பாலைக்குடியில் காவு வாங்க காத்திருக்கும் மருத்துவமனை கட்டிடம்

ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடியில் உள்ள பழைய மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து பொதுமக்களை காவு வாங்கும் விதமாக உள்ளது. இதனை உடனே அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள திருப்பாலைக்குடியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மருத்துவமனையாக இயங்கி வந்த பழைய கட்டிடம் சேதமடைந்தது. இந்நிலையில் மருத்துவமனைக்காக புதிய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு, தற்போது புதிய கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. ஆனால் ஏற்கனவே மருத்துவமனையாக இயங்கி வந்த கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.அந்த கட்டிடம் இருக்க கூடிய பகுதி குழந்தைகளும், பொதுமக்களும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய முக்கிய வீதியாகும். அதன் அருகில் அங்கன்வாடி மற்றும் பள்ளிக்கூடம், வங்கி ஆகியவை உள்ளது. தற்போது இந்த கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து கீழே விழுந்து வருகின்றது. கட்டிடத்தின் மேற்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் முளைத்து பெரிதாகி வருகின்றது. இதனால் மேலும் கட்டிடம் விரிசலடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அடுத்து மழை காலம் என்பதால் மிகவும் ஆபத்த..
                 

தாமிரபரணி ஆற்றில் யாழி, அன்னம், மனிதவால் குரங்கு உள்ளிட்ட அரிய பொருட்கள்: கொற்கை மன்னனின் விலை உயர்ந்த பவளம், வைடூரிய புதையல் உள்ளதா?

செய்துங்கநல்லூர்: தாமிரபரணி ஆற்றில் தோண்ட, தோண்ட பல பொருட்கள் கிடை த்த வண்ணம் உள்ளன. இதில் யாழி, அன்னம், மனிதவால் குரங்கு உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். இங்கு கொற்கை மன்னனின் விலை உயர்ந்த பவளம், வைடூரியம் உள்ளிட்ட நகை குவியல்கள் இருக்க கூடும் என்று தெரிகிறது. நேற்று நேரில் பார்வையிட்ட தொல்லியல் குழுவினர் பல அரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-முக்காணி தாமிரபரணி ஆற்றின் மேற்கு பகுதியில் உமரிக்காடு பகுதியில் பாசனத்திற்காக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதுபோல் ஆத்தூருக்கு கிழக்கே புன்ைனக்காயலுக்கு முன்பாக ஒரு ஆண்டுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது ஆற்றில் நீர் வரத்து குறைந்ததாலும், புன்னைக்காயல் தடுப்பணையால் கடல் நீர் உமரிக்காடு வரை வர முடியாததால் இடைப்பட்ட ஆறு வறண்டு போய் கிடக்கிது. இங்கு மேற்கு பகுதியில் பழமையான கட்டிடங்கள் சிதைந்து கிடப்பது சில நாட்களுக்கு முன் தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 11ம்தேதி முதன் முறையாக அந்த கட்டிடங்கள் குறித்து படங்களுடன் `தமிழ்முரசு’ செய்தி வெளியிட்டது. அதன்பிறகுதான் இது வெளி உலகிற்கு தெரியவந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்..
                 

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

                 

கோவை அருகே சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்திருந்த 3 சிறுமிகள் மீட்பு

                 

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு

                 

டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர்: மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 19 ஆயிரம்  கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 17 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அதேபோல், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 16 ஆயிரம் கனஅடியாக  குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டிஎம்சி...
                 

பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் சென்னை, உள்பட 15 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை

கோவை: தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 15 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகியவற்றில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள், பெரியவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் வரை உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி  ஆகிய 15 மாவட்டங்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற..
                 

மேலூரில் 9 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

மேலூர்: மேலூர் நான்குவழிச்சாலையில் இருந்து நகரை இணைக்கும் வகையில் துவக்கப்பட்ட விரிவாக்க பணி கடந்த 9 மாதமாக இழுபறியில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலூர் நாவினிப்பட்டி நான்குவழிச்சாலையில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சாலையை விரிவுப்படுத்தும் பணி கடந்த ஜனவரி மாதத்தில் துவங்கியது. இதற்காக இந்த 1 கிலோமீட்டர் தூரத்திற்குள் 3 இடங்களில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளும் அத்துடன் சேர்ந்து நடைபெற்று வந்தது. சாலையை இரண்டாக பிரித்து ஒரு பக்கத்தில் முற்கட்டமாக பாலப்பணி நடைபெற்றது. அரசு பணிமனை எதிரில்  பாலப்பணிகள் 2 மாதங்களில் முடிவடைய பாதை திறக்கப்பட்டு, மறுபக்க பாதை பணி 2 மாதங்களில் நடந்து முடிந்தது. ஆனால் பெரியாற்று கால்வாயில் அமைக்கப்பட்ட பால பணி நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.அதே நேரத்தில் சாலையை விரிவுப்படுத்துவதற்காக ரோட்டோரமாக இருந்த பல வருட பழமையான சில மரங்களை நெடுஞ்சாலை வெட்டி அப்புறப்படுத்தியது. விரிவாக்கத்திற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு அதை பரப்பி விட்டனர். அதன்பிறகு அதில் தார் ஊற்றி சாலை பணியை முழுமையாக முடிக்காமல் அப்..
                 

பொங்கலூர் வட்டாரத்தில் காளிபிளவர் சாகுபடி செழிப்பு மகசூல் அதிகரிப்பதால் மகிழ்ச்சி

பொங்கலூர்: பொங்கலூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள காளிபிளவர் சாகுபடி சமீபத்தில் பெய்த மழையால் செழிப்படைந்துள்ளது. இதனால் மகசூல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்குகிறது. அந்த வகையில் தற்போது கழிவேரிபாளையம், கள்ளிப்பாளையம், வாவிபாளையம், கெங்கநாயக்கன்பாளையம், பொங்கலூர் போன்ற கிராம பகுதிகளில் தற்போது காளிபிளவர் விவசாயம் தீவிரமடைந்துள்ளது.சரியான  நேரத்தில் பருவமழை பெய்த காரணத்தால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது காளிபிளவர் விவசாயம் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது, இது பயிர்செய்த 70 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்,  கோவையிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு சுமார் பத்தாயிரம் பூ கிடைக்கிறது அதன் மூலம் ரூ.2 லட்சம் வருமானம் எங்களுக்கு கிடைக்கும், என்றார்...
                 

கோவை மாநகராட்சி சார்பாக ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றம்: தனிக்குழு நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சி சார்பாக ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஸ்கூட்டியில் சுபஸ்ரீ(23) என்ற  இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த  சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பல தரப்பினரும் இதற்கு தங்களது கண்டனத்தை பதிவு  செய்து வருகின்றனர். சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம்  ரூபாய் வழங்க உத்தரவிட்டது. மேலும், பேனர் வைத்தவர்களும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவு  முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின்  அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம், என்று உயர்நீ..
                 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கனஅடியில் இருந்து 17,000 கனஅடியாக குறைவு

                 

இரு மொழிக்கொள்கையே தமிழகத்தின் உயிர்நாடி: துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கருத்து

திருச்சி: இரு மொழிக்கொள்கையே தமிழகத்தின் உயிர்நாடி என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்தவே 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இடையே எந்தவித கருத்து மோதலும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். திருச்சி விமான நிலையத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்...
                 

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆஜர்

கரூர்: கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் சீதப்பட்டி பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் மீண்டும் முகிலனை 29ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்...
                 

திருப்பூர் அருகே வெண்ணெய் இல்லாமல் போலி நெய் தயாரித்த 7 வீடுகளுக்கு சீல்

திருப்பூர்: வெண்ணெய் இல்லாமல் போலி நெய் தயாரித்த 7 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து சுமார் 500 லிட்டர் போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.வி.இ லேஅவுட் பகுதியில் டால்டா, பாமாயில் கலந்து போலி நெய் தயாரித்த வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுக்காப்பு நியமன அலுவலர் விஜயலலித்தாம்பிகை நடவடிக்கை மேற்கொண்டார்...
                 

மது அருந்திவிட்டும்,ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வந்த வாகன ஓட்டிகள் 2 பேருக்கு தலா 15,000 அபராதம்

                 

பள்ளிகளின் காலாண்டு விடுமுறை ரத்து என வெளியான தகவல் உண்மையில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: பள்ளிகளின் காலாண்டு விடுமுறை ரத்து என வெளியான தகவல் உண்மையில்லை. காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகள் விருப்ப அடிப்படையிலானது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் நினைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்து வகைப் பள்ளிகளிலும் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் காந்திய சிந்தனைகளை மையமாக வைத்து 23.09.2019 முதல் 02.10.2019 வரை செயல் திட்டங்கள் வழங்கி பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகளின் காலாண்டு விடுமுறை ரத்து என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகள் விருப்ப அடிப்படையிலானது. எனவே விருப்பமுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம் இது கட்டாயமல்ல. இதனால் விடுமுறை நாட்கள் ரத்தாகாதுஎன கூறினர். காலாண்டு விடுமுறைக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்..
                 

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் மூன்று மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

                 

குச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி

சின்னமனூர்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் தொகுதியான குச்சனூரில் 5 மாதங்களாக தரைமட்டமாக கிடக்கும் துவக்கப்பள்ளியால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி உள்ளது. இங்கு போடி விலக்கில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 1972ம் ஆண்டு துவக்கப்பட்டு 47 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். வகுப்பறைகள் சேதமடைந்து கிடப்பதால் மழைக்காலங்களில் மழைநீரில் மாணவர்களும், ஆசிரியர்களும் நனையும் அவலம் தொடர்ந்தது. இதனால் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கு விரைவாக நிதி ஒதுக்கப்படுவதாக அரசு உறுதி அளித்தது.இதனைநம்பி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பழுதான கட்டிடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. வளாகத்திலுள்ள பயன்படுத்தாத பழமையான வகுப்பறைகளை திறந்து அதில் தற்போது ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் உள்ளதால் அச்சத்துடன் ஆசிரியர்கள் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். பீதியுடன் மாணவர்கள் பாடம் கற்று வருகின்றனர். அரசின் நிதி வந்து..
                 

சிவகங்கை அருகே பராமரிப்பில்லாமல் போன மாம்பட்டி காடு: 10 ஆயிரம் மூலிகை செடிகள் நாசம்

சிவகங்கை: சிவகங்கை அருகே மருந்துச்செடிகள் கொண்ட மாம்பட்டி காடு பராமரிப்பில்லாமல் அழிந்து வருகின்றது. சிவகங்கை அருகே மாம்பட்டியில் பட்டபிளான்காடு உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் கடந்த 1999ம் ஆண்டு மருந்துச்செடி உற்பத்தித்தோட்டம் அமைக்கப்பட்டது. சுமார் 200 எக்டேர் பரப்பளவில் கறிவேப்பிலை, மருதாணி, வேம்பு, இழுப்பை, தூதுவளை, நாவல், மாதுளை, ஆடாதொடை, கரிசாலை, வல்லாரை, சோற்றுக்கற்றாழை, அரைநெல்லி, ஓமவல்லி, பெரியநெல்லி, வெள்ளைக்குண்டுமணி, சிறியாநங்கை, சீமைஆத்தி, கொய்யா உட்பட 18 வகையான, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவச்செடிகள், மூலிகைகள் நடவு செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக காட்டை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டது. சில ஆண்டுகள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வந்த செடிகள் பின்னர் பராமரிப்பின்றி போனது. செடிகளை சுற்றிலும் காட்டுச்செடிகள், முட்புதர்கள் மண்டி மருத்துவச்செடிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. நுழைவு வாயிலில் இருந்த இரும்பு கேட்டை காணவில்லை. கால்நடைகள் மேய்ச்சல் நிலமாக இருப்பதால் எவ்வித செடிகளும் வளராமல் புதர் மண்டிக்கிடக்கி..
                 

தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பேட்மாநகர் பகுதியை சார்ந்த முகமது யூனிஸ் என்பவர் நெல்லை பாளையங்கோட்டையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் மற்றும் சகோதரிகள் குழந்தைகள் பேட்மா நகர் பகுதியில் உள்ள எம்.எம்.மெட்ரிக்லேசன் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குநர் ஆகியோரிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கல்வி அதிகாரி வசந்தா பள்ளிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த யூனிஸ் வசந்தா குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். பின்னர் தனது கடையில் யூனிஸ் இருந்தபோது அங்கு வந்த 3 பேர் கடையின் கதவை உடைத்ததோடு கல்வி அதிகாரி மீது புகார் தெரிவித்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரை பாளையங்கோட்டை போலீசார் ஏற்க மறுத்த நிலையில் இதுகுறித்தது நெல்லை மாவட்டம் குற்றவியல் நீதிமன்றம் என் 1ல் யூனிஸ் ..
                 

மூணாறு பகுதியில் தொடரும் உயிரிழப்பு: காட்டு யானைகளுக்கு வேட்டு வைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

மூணாறு: மூணாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் வீசியெறிந்து செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வதாலும், சக்தி வாய்ந்த மின்வேலி மற்றும் வெடிபொருட்களாலும் காட்டுயானைகள் உயிரிழப்பு தொடர்கதையாகி உள்ளது. தென்னகத்து காஷ்மீர்’ என்றழைக்கப்படும் மூணாறில் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு அதிக அளவில் விருந்து படைப்பது காட்டுயானை கூட்டங்களாகும். மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி, குண்டளை, சின்னக்கானல், சின்னார், மாங்குளம், எல்லப்பட்டி, காந்தளூர், மறையூர், வட்டவடை போன்ற பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுயானைகள் வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக மூணாறு மற்றும் சுற்றுவட்டாரங்களில் காட்டுயானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் உயிர் இழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 12 ஆகும். இந்த ஆண்டு மட்டும் மூணாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு கேடிஹெச்பி நிறுவனத்திற்கு சொந்தமான செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் 25 வயதுடைய `சில்லி கொம்பன்’ என்ற காட்டுயானை உயிரிழந்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை விரட்ட முயன்ற போது காயமேற்பட்..
                 

தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் குமரியில் ஒரே நாளில் 20 பேர் படுகாயம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பதால் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ளது ஐக்கியான்குளம். இந்த குளத்தின் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. எனவே வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க, இந்த பகுதியில் தடுப்பு சுவருடன் கூடிய சிறு பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை (நாகர்கோவில் மண்டலம், திருநெல்வேலி வட்டம்) சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்படி டெண்டர் விடப்பட்டு, ரூ.4 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 384 மதிப்பில் சாலையின் இருபுறமும் சிறு பாலம் அமைக்க பணிகள் தொடங்கினர். பணிகள் தொடங்கி 9 மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் முடிவடைய வில்லை. இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் சுங்கான்கடை பகுதியில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. அந்த பகுதியில் ஜல்லிகளும் குவித்து வைத்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிக்கி திணறுகிறார்கள். குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் அதிகம் பேர் தடுமாறி விழுந்து படுகாயம் அடைகிறார..
                 

பரமக்குடி பகுதியில் முதுமக்கள் தாழி, பல் கண்டெடுப்பு

பரமக்குடி: பரமக்குடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, மனித பல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கீழடியை போன்று இங்கும் அகழாய்வு பணிகளை செய்யவேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் ஊரணியை, ஊர் மக்கள் ஜேசிபி மூலம் தூர்வாரியுள்ளனர். அப்போது ஊரணியில் பழங்கால மக்களின் புதைவிடம் தெரிந்தது. மனிதர்கள் இறந்த பின் அடக்கம் செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித பல், எலும்புகள், பானை ஓடுகள் உடைந்த நிலையில் துண்டு துண்டாக சிதறிக் காணப்பட்டுள்ளது. அகன்ற வாய் கொண்ட சுடுமண் பானை, முதுமக்கள் தாழிகள் மேற்பகுதி உடைந்தும், கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட கூம்பு வடிவத்திலான பொருளும் இருந்தது. கலையூர் ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் ஐரோப்பிய நாட்டு மண்பாண்ட பொருள்கள் இருந்துள்ளது. இந்த கிராமம் வைகை ஆற்று கரையோரம் அமைந்திருப்பதால், தமிழர்களின் வைகை நாகரீகம் தெரிய வருகிறது. மேலும் அழகன்குளம் பகுதியில் 2 ஆயிரம் ஆண..
                 

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை

                 

மதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு

                 

திருவண்ணாமலையில் முப்பெரும் விழா இந்தியை திணிக்கும் முயற்சியை திமுக பார்த்து கொண்டிருக்காது: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

திருவண்ணாமலை: இந்தியை திணிக்கும் எந்த முயற்சியையும் திமுக பார்த்துக்கொண்டிருக்காது என்று முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரில் கலைஞர் திடலில், திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பேனர் வைக்கக்கூடாது என அன்பான வேண்டுகோளாக இல்லாமல் கட்டளையாக பிறப்பித்திருந்தேன். இந்த விழா மட்டுமல்ல, அடுத்து எந்த விழா நடத்தினாலும் இதை கடைப்பிடிக்க வேண்டும். இதை கண்டிப்போடு சொல்கிறேன். திமுக வைத்த பேனர் விழுந்து யாராவது இறந்திருந்தால், ஊரே இரண்டுபட்டிருக்கும். திட்டமிட்டு பிரசாரம் செய்திருப்பார்கள். அதிமுக பேனர் விழுந்து ஒரு மாணவி இறந்திருக்கிறார். பேனர்கள் விளம்பரத்துக்கு பயன்படவில்லை. மக்கள் வெறுப்பதற்குதான் பயன்படுகிறது. பேனர் வைக்க மாட்டோம் என இந்த விழாவில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வரும், அமைச்சர்களும் 14 நாட்கள் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வந்துள்ளனர். ரூ.8,335 கோடி முதலீடு கொண்டு வந்ததாக சொல்கிறார்கள். முதலீடு குறித்..
                 

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: அரசுக்கு குமரி அனந்தன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.  காந்தி பேரவை சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். மேலும், போராட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சேம.நாராயணன், பி.ஆர்.பாண்டியன், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து குமரி அனந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அண்ணா முதல்வராக இருந்த போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தில் மட்டும் இல்லாமல் எந்த ஒரு மாநிலத்திலும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்தாலும் அதற்கு ஆதரவாக தன..
                 

பரமக்குடி பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதா?

பரமக்குடி: பரமக்குடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் ஊரணியை, ஊர் மக்கள் பொக்லைன் மூலம் தூர்வாரியுள்ளனர். அப்போது ஊரணியில் பழங்கால மக்களின் புதைவிடம் தெரிந்தது. மனிதர்கள் இறந்த பின் அடக்கம் செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகள், எலும்புகள், பானை ஓடுகள் உடைந்த நிலையில் துண்டு துண்டாக சிதறிக் காணப்பட்டுள்ளது. அகன்ற வாய் கொண்ட சுடுமண் பானை, முதுமக்கள் தாழிகள் மேற்பகுதி உடைந்தும், கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட கூம்பு வடிவத்திலான பொருளும் இருந்தது. கலையூர் ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் ஐரோப்பிய நாட்டு மண்பாண்ட பொருள்கள் இருந்துள்ளது. இந்த கிராமம் வைகை ஆற்று கரையோரம் அமைந்திருப்பதால், தமிழர்களின் வைகை நாகரீகம் தெரிய வருகிறது. மேலும் அழகன்குளம் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகங்கள் இருந்துள்ளது. துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டினர் கலையூர் கிராமத்திற்கு வந்து, பண்டம..
                 

51 நாள் பரோல் முடிந்தது மகள் திருமணம் நடக்கும் முன்பே நளினி மீண்டும் சிறையிலடைப்பு

வேலூர்: மகள் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பரோலில் வந்த நளினி, திருமணம் நடப்பதற்கு முன்பே மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளுக்காக உயர்நீதிமன்ற அனுமதியுடன் ஜூலை 25ம் தேதி 1 மாத பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். பின்னர் அவருக்கு மேலும் 3 வாரம் பரோலை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி 51 நாள் பரோல் காலம் நேற்றுடன் முடிந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 4 மணியளவில் நளினியை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் மீண்டும் சிறைக்கு அழைத்துச்சென்றனர். மகள் திருமண ஏற்பாடுகளுக்காக சிறையில் இருந்து பரோலில் வந்த நளினி 51 நாட்கள் வெளியே தங்கியிருந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்த்து வந்த மகளின் திருமணம் நடைபெறாத சோகத்துடன் அவர் மீண்டும் சிறைக்கு சென்றார். முன்னதாக தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து நளினியின் உடமைகளான பக்கெட், பாத்திரங்கள், படுக்கை விரிப்பு, துணிமணிகள் வைக்கப்பட்டிருந்த பை ஆகியவற..
                 

டிசம்பருக்குள் 50 ஆயிரம் இலக்கு நிதி ஒதுக்கீடே செய்யாமல் மரக்கன்று நடுவது எப்படி? பேரூராட்சி நிர்வாகங்கள் புலம்பல்

தேனி: மரக்கன்றுகளை நடவு செய்ய நிதி வழங்காமல், ஒவ்வொரு பேரூராட்சியும் 50 ஆயிரம் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்ற இலக்கினை மட்டும் அரசு நிர்ணயித்துள்ளதால், மாநிலம் முழுவதும் பேரூராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. தமிழகம்  முழுவதும் 528 பேரூராட்சிகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு பேரூராட்சியும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்கவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மரக்கன்றுகளை நடவு செய்ய இதுவரை நிதி வழங்கவில்லை. இதனால், பேரூராட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேரூராட்சிகளில் பணமே இல்லை. பொதுநிதியில் இருப்பு இருந்தால் தானே செலவு செய்ய முடியும். தவிர, விலைக்கு வாங்கினால் ஒரு கன்றின் விலை மூன்று மடங்கு அதிகமாக சொல்கின்றனர். ஸ்பான்சர்களிடம் கேட்டால் மரக்கன்று 500 அல்லது ஆயிரம் மட்டுமே தருகின்றனர். ஒரு கன்று நடவு செய்து சுற்றிலும் வலை அடித்து பாதுகாப்பாக வளர்க்க 50 ரூபாய் செலவாகிறது. இப்போது அத்தனை பேரும் கன்று நடவு செய்வதால் மரக்கன்றுகளை விற்பவர்களும் விலையை உயர்..
                 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் கன்னத்தில் தையல் போட்ட டாக்டர்கள்: போலீசில் உறவினர்கள் புகார்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் கன்னத்தில் தையல் போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன், மெக்கானிக். இவரது மனைவி தணிகைஅரசி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தணிகைஅரசி மீண்டும் கர்ப்பமானார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அதிகாலை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. சிறிதுநேரத்தில் பிறந்த குழந்தையை செவிலியர்கள் இளவரசன் மற்றும் உறவினர்களிடம் காண்பித்தனர். அப்போது குழந்தையின் கன்னத்தில் இரண்டு தையல்கள் போடப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செவிலியரிடம் கேட்டபோது பிறக்கும்போதே குழந்தைக்கு காயம் இருந்ததால், ரத்தம் வராமல் இருக்க தையல் போட்டோம் என்று அலட்சியமாக தெரிவித்தார்களாம். இதையடுத்து உறவினர்கள் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்க..
                 

வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் என்னென்ன முதலீடுகள் வந்துள்ளது?.. என்பது பற்றி விரிவான விளக்கம் தேவை: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை: ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக உதயமான தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திமுக சார்பில் செப்டம்பர் 15ம் தேதி முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு முப்பெரும் விழா திருவண்ணாமலையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுவதாவது; முப்பெரும் விழாவை முப்பொழுது விழாவாக நடத்திக்காட்டிய ஏ.வ.வேலுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். திருவண்ணாமலையில் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன்; திமுக முப்பெரும் விழாவை பொறுத்தவரை பேனர் எதுவும் வைக்கப்படவில்லை. விளம்பரத்துக்காக கட்சியினர் கட்டும் பேனர்கள் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி முழுமையான  வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் என்னென்ன முதலீடுகள் வந்துள்ளது?, என்பது பற்றி விரிவான விளக்கம் தேவை. 41 நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டு..
                 

பொதுமக்களின் நலன்கருதி மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுமா?

மானாமதுரை: மானாமதுரை வழியாக செல்லும் மதுரை, ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் குறைவான பெட்டிகளுடன் இயங்குவதால் இடையில் உள்ள ஊர்களில் இருந்து மதுரை ராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என மானாமதுரை பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகழ் பெற்ற மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புனித தலங்களுக்கு ரயில்வே நிர்வாகம் மதுரை, ராமேஸ்வரம் இடையே காலை 5.30 மணிக்கும் மதியம் 12 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் இரு மார்க்கங்களிலும் பயணிகள் ரயில்கள் இயக்கி வருகிறது.அகலரயில் பாதை பணிகளுக்கு பின் பயணிகள் ரயில் முதலில் வெறும் ஆறுபெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் பஸ் கட்டண உயர்விற்குப்பின் 10 பெட்டிகளுடன் இயங்கியது. நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 13 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆனால் தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தி வருவதால் வழக்கமான நாட்களில் கூட கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மதுரை-ராமேஸ்வரம் இடையே உள்ள மானாமதுரை, திருப்புவனம் பகுதி..
                 

பரோல் நிறைவுபெற்றதை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி: 51 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது

வேலூர்: நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையில் தனது மகள் திருமணத்திற்க்காக பரோல் கேட்டு இருந்தார். இதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். 28 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு 30நாள் பரோலில் வெளியே வரும் மகளுக்கு தாய் பத்மா ஆரத்தி எடுத்து கண்ணீர் மல்க வரவேற்றார். நளினியும் தாயை பார்த்ததும் கண்கலங்கினார். பரோல் காலத்தில் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும். சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். துன்மார்க்கரென்று கெட்ட பெயர் பெற்றவர்களுடன் சேரக்கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கமோ, தனது உயிருக்கு பங்கமோ தேடிக்கொள்..
                 

கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் வறட்சியால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு: ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

கோவில்பட்டி: கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் கடும் வறட்சியால்  கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் கரிமூட்டம் தொழில் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி,  எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், தாப்பாத்தி போன்ற பல்வேறு  சுற்றுவட்டார கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகும். இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். மழையை நம்பி பருத்தி, வத்தல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். பருவமழை ஏமாற்றம் அளித்தால் கடந்த காலங்களில் வறட்சி ஏற்படும் போது,  பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல  மரங்களை வெட்டி, அதனை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம்  பெற்று வந்தனர். இதனால் விவசாயத்திற்கு அடுத்து கரிமூட்டம் போடும்  தொழிலை பிரதான தொழிலாக விவசாயிகள் செய்து வந்தனர். இப்பகுதியில்  கரிமூட்டம் தொழிலில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  கரிமூட்டம் தொழிலுக்கு தண்ணீர் முக்கிய ..
                 

நிலத்தடி நீருக்கு வேட்டு: அதிகாரிகள் உடந்தை கோவை புறநகரில் செம்மண் கடத்தல் ஜரூர்

கோவை: கோவை அருகே நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு அதல பாதாளத்துக்கு செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான கணுவாய், வடவள்ளி, தடாகம், சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கடந்த காலங்களில், செங்கல், கைகளால் வடிவமைக்கப்பட்டது. தற்போது செங்கலின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இயந்திரங்கள் மூலம் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. செங்கல் அறுக்கும் பணிகளில் அரியலுார், விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.  ஆனால், கட்டுமான தொழிலாளர்களின் சம்பளத்திற்கு இணையாக செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூலி கிடைக்கவில்லை. அதனால், பெரும்பகுதி தொழிலாளர்கள் இத்துறையை விட்டு வெளியேறி விட்டனர். அதனால், மாற்று ஏற்பாடாக தற்போது வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.&nbs..
                 

கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் - மலப்புரம் சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நெரிசல்

கூடலூர்: கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் - மலப்புரம் சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 40 நாட்களுக்கு பிறகு கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகன போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 8-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் கூடலூர் - மலப்புரம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...
                 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது; பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,000 ஆயிரம் கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 14,000-ல் இருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது...
                 

நீதிமன்றத்தில் வாதாடிய போது மயங்கி விழுந்து வக்கீல் சாவு

கொடைக்கானல்: திண்டுக்கல், சாலை ரோட்டை சேர்ந்த மூத்த வக்கீல் ரகுபதி (84). இவர் குற்றவியல் துறை வக்கீலாக திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் நீதிமன்றங்களில் பணியாற்றி வந்தார். இவர் அட்டுவம்பட்டியை சேர்ந்த ஜெயசீலனுக்காக, வழக்கு ஒன்றில் வாதாட கொடைக்கானல் ஜேஎம் நீதிமன்றத்துக்கு நேற்று வந்தார். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வாதாடிக் கொண்டிருந்தார்.கொடைக்கானல் நீதிபதி தினேஷ்குமார், விசாரணையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது வக்கீல் ரகுபதி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக மேல்சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ரகுபதி கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வக்கீல் ரகுபதி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்டது...
                 

இப்போது பழைய முறையே தொடரும் தமிழகத்தில் 5, 8ம் வகுப்புக்கு 3 ஆண்டுக்கு பிறகே பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தர்மபுரி: தமிழகத்தில் 5, 8ம் வகுப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பொதுத்தேர்வு 3 ஆண்டுக்கு பிறகே நடக்கும், தற்போது பழைய முறையே தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்தார். தர்மபுரி தனியார் பள்ளியில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு  தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் வெளிநாடு சென்றபோது, அங்குள்ள கல்வி முறையை ஆய்வு செய்து, முதல்வரிடம் கருத்து  பரிமாறப்பட்டுள்ளது. முதல்வர்  ஆய்வுக்கு பின்னர் துறை ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும். வெளிநாடுகளில்  உள்கட்டமைப்புகள் இருப்பது போல் நம் தமிழகத்திலும் ஏற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்படும். மலேசியாவில் உள்ளவர்கள் மூலம் 20 லட்சம் ‘டேப்லெட்’கள் தமிழக  மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.  எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள்  வழங்கப்பட்டு விட்டன.  மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் 6 பாடங்களை, 5 பாடங்களாக மாற்றுவதற்கான கோப்புகள்  முதல்வருக்கு ..
                 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,000 கனஅடி

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று  முன்தினம் மாலை 17,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும்  அதே அளவில் நீடிக்கிறது. அதேபோல், அணையிலிருந்து டெல்டா  பாசனத்திற்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய்  பாசனத்திற்கு 900 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 120  அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது...
                 

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்

சென்னை: தாராபுரத்தில் விவசாய நிலங்களில் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்வதோடு, இப்பணிகளுக்காக விவசாயிகளின் கருத்தை கேட்டு முன்அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்...
                 

மயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

                 

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் மைக் செட் அமைப்பாளர் கொலை வழக்கில் ஜெயராமன் என்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு மைக் செட் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கார்த்தியை கத்தியால் குத்தி கொன்றார் ஜெயராமன். கார்த்தி கொலை வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் கொலையாளி ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பத்துள்ளது...
                 

பொதுப்பணித்துறை வெளியிட்ட பேக்கேஜ் டெண்டர் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி வழக்கு

                 

புதுச்சேரியில் உப்பளம் , முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு , வில்லியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை

                 

டெல்டாவில் கனமழை வெளுத்து கட்டியது: பூதலூர், திருமானூரில் சதமடித்தது

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பூதலூரில் 126.8 மி.மீ, திருமானூரில் 115.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.திருவையாறில் 74 மி.மீ மழை பெய்துள்ளது. கனமழையால் டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகையில் நேற்றிரவு 9.30 மணி முதல் 10 மணி வரை இடி, மின்னல், காற்றுடன் பலத்..
                 

குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசினர் தந்தை

கும்பகோணம்  : கும்பகோணம் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசினர் தந்தை. ஆற்றில் வீசப்பட்ட லாவண்யா என்ற பெண் குழந்தை மீட்கப்பட்டது.ஸ்ரீமதி என்ற குழந்தையை மீட்கும் பணியில் தேடும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தை பாண்டியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்...
                 

சிதம்பரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக மண்ணெண்ணெய் திருடும் வீடியோ இணையதளத்தில் வைரல்

கடலூர்: சிதம்பரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக மண்ணெண்ணெய் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கொத்தங்குடி கிராமத்தில் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் உள்ளது. இங்கிருந்து தான் மானாசந்து, மன்னார்குடி தெரு, கனகசபை நகர், மாரியப்பா நகர் உள்ளிட்ட பத்து​க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளுக்கு மண்ணெண்ணெய் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ள மண்ணெண்ணெய் கிடங்கில் இருந்து, தனி நபர் சிலர் கேன்களில் மண்ணெண்ணெய் பிடிக்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஒருவர் கேன்களில் மண்ணெண்ணெய் பிடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கிடங்கில் இருந்து முறைகேடாக மண்ணெண்ணெய் திருடப்பட்டதா? அல்லது தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறதா? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் மண்ணெண்ணை திருடப்படுவத..
                 

50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒடிசா மாநில கொள்ளையர்கள் புதுச்சேரியில் கைது

                 

முதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக இல்லை: மனு அளித்து கதறல்

திண்டுக்கல்: முதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக வழங்கவில்லையென கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளோடு மூதாட்டிகள் மனு அளித்தனர். திண்டுக்கல் அடுத்த ஏ.வெள்ளோடு, செபஸ்தியார் தெருவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தி விட்டனர்.இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்து விட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. இந்த பணத்தை வைத்துதான் எங்களுக்கு உணவு, மருத்துவ செலவுகளை பார்க்க வேண்டியுள்ளது. எனவே முதியோர் உதவித்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்...
                 

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் தான் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளையம்: அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு  5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது என்று  கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது, மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்...
                 

கன்னியாகுமரி - காரைக்குடி கடற்கரை ரயில் பாதைக்கு வழி பிறக்குமா?

நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகின்ற ரயில்வே மேம்பாட்டு பணிகள் ஆலோசனை கூட்டத்தில் குமரி, நெல்லை உட்பட 39 எம்.பிக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும், விவாதிக்கவும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் பங்கேற்கின்ற கூட்டம் நாளை (18ம் தேதி) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி எம்.பி.க்கள் உட்பட கேரளாவில் உள்ளவர்கள், மங்களூரு என்று மொத்தம் 39 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு பின்னர் தற்போது திருவனந்தபுரத்தில் நடத்தப்படுகிறது. ரயில்வே வாரிய தேர்வு தமிழில் எழுதுவது தொடர்பான உத்தரவு சென்னையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னரே ரயில்வேயால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்ற கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து எம்.பி.க்கள் வசந்தகுமார், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.குமரி மாவட்டத்தில் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்..
                 

வேளாண் கூட்டுறவு வங்கியில் ஊழலுக்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்

நாகை: திருமருகல் அருகே சேஷமூலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கு துணை போகும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை கலெக்டர் அலுவலக சுற்றுசுவர் மற்றும் புதிய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் திருமருகல் ஒன்றியம் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இதில் திருமருகல் அருகே சேஷமூலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2017-18ம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட நெல் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையில் ரூ.2.17கோடி ஊழல் நடந்துள்ளது. எனவே ஊழல் செய்த சேஷமூலை சங்க நிர்வாகத்தை கலைக்க வேண்டும். ஊழலுக்கு துணை நின்ற சங்க தலைவர், செயலாளர் உட்பட அனைத்து பணியாளர்களையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் விசாரணை செய்யாமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் உள்ளது. இவ்வாறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர் நாகை பகுதி முழுவதும் ஒட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
                 

பெரணமல்லூர் அருகே பரபரப்பு- பால் வடியும் வேப்பமரம்: மஞ்சள் பூசி பொதுமக்கள் வழிபாடு

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து வழிபட்டனர். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து நேற்று காலை பால் வழிந்தோடியது. இதனை அப்போது அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். வேப்பமரத்தில் பால் வடிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர