தினமலர் தினகரன் விகடன் சமயம் One India

காங்கிரசை கழற்றி விட்டு சட்டீஸ்கரில் அஜித் ஜோகியுடன் கைகோர்த்தார் மாயாவதி

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார்.சட்டீஸ்கரில் பாஜ ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. நாடு முழுவதும் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் நிலையில், இம்மாநிலத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு, அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன் கூட்டணி சேரப்போவதாக அறிவித்துள்ளார். அஜித் ேஜாகி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாயாவதி, தங்கள் கூட்டணி வெற்றிப்பெற்றால் அஜித் ஜோகிதான் முதல்வர் என்றும் தெரிவித்தார். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் 35 தொகுதிகளிலும், ஜனதா காங்கிரஸ் 55 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அவர் கூறினார்...
                 

மக்களவை தேர்தல் சீட் பேரம் ஆரம்பம் : பீகாரில் 17 தொகுதி கேட்கிறார் முதல்வர் நிதிஷ் குமார்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
புதுடெல்லி:  மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தே.ஜ கூட்டணியில் சீட் பேரம் பேச்சுவார்த்தை இப்போதே தொடங்கிவிட்டது. பீகாரில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ 21 இடங்களில் வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 38 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றது. தற்போது 20 இடங்களை வைத்துக்கொள்ள முடிவு செய்த பாஜ, 12 இடங்களை ஐக்கிய ஜனதா தளத்துக்கும், 6 இடங்களை லோக் ஜனசக்தி கட்சிக்கும், 2 இடங்களை ஆர்.எல்எஸ்.பி கட்சிக்கும் வழங்க முடிவு செய்திருந்தது. ஆனால் 12 சீட்கள், நியாயமான ஒதுக்கீடு அல்ல, தங்களுக்கு கவுரமான முறையில் சீட் ஒதுக்க வேண்டும். அதாவது 17 இடங்களுக்கு குறையாமல் ஒதுக்க வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் கூறி வருகிறார். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பிரசாந் கிஷோர், அமித்ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். ஐக்கிய ஜனதா தளம் தனது கோரிக்கையில் உறுதியாக உள்ளது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவர். இதனால், அமித்ஷா, நேற்று அருண்ஜெட்லியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினார். நிதிஷ் குமாரை சந்தித்தபின், லோக் ஜனசக்தி கட்சியின் ராம..
                 

திமுக தொடங்கிய காலம் முதல் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருவதை அறியாமல் பேசுவதா? தமிழிசைக்கு திமுக கண்டனம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: ஈழத்தமிழர்களுக்காக  திமுக தொடங்கப்பட்ட காலம் முதல் குரல் கொடுத்து வருகிறது. இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்று அறியாமல் தன்னை ஒரு தலைவராக கருதிக் கொண்டு அரசியல் பேசி வருகிறார். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி உதவியதாகவும் அதற்கு திமுக துணை போனதாகவும் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. நீங்கள் பிறப்பதற்கு முன்பே கருணாநிதி ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.  தி.மு.க துவக்கப்பட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தீர்மானத்தை முன்மொழிந்தவர்.தங்களின் தகப்பனார் குமரிஅனந்தனை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி நடத்திய போராட்டங்கள், எழுதிய கடிதங்கள், அறிக்கைகள் எண்ணிலடங்காது.  1983-84ல் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டிக்கும்..
                 

வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இபிஎஸ்.சும், ஓபிஎஸ்.சும் கட்சியை அழிக்கின்றனர்: அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் ஆவேசம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
தூத்துக்குடி: ‘‘எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விட்டனர்’’ என்று முன்னாள் அமைச்சரும், வைகுண்டம் தொகுதி  எம்எல்ஏ.வுமான சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, மேலூர் கூட்டுறவு வங்கி  தேர்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டு நேற்று முன்தினம் நடந்தது. இதில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும், முன்னாள் அமைச்சர்  எஸ்பி சண்முகநாதன்  ஆதரவாளர்கள் மற்றொரு தரப்பாகவும் போட்டியிட்டனர். 5  பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 6 இடங்களுக்கு மட்டுமே தேர்தல்  நடந்தது. பின்னர் சண்முகநாதன் எம்எல்ஏ, தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவிற்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.  கூட்டுறவு தேர்தல் அறிவித்தபோது தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர், தலைவர்கள் யாராக இருந்தாலும் தொந்தரவு செய்யக் கூடாது. மற்றவர்கள் இருக்கும் இடங்களில் போட்டி ப..
                 

இது நமக்கு தொழில் அல்ல முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம்: தொண்டர்களுக்கு கமல்ஹாசன் திடீர் அறிவுரை

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
காங்கயம்: ‘‘அரசியல் நமக்கு தொழில் அல்ல, மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம்’’ என கமல்ஹாசன் அறிவுறுத்தினார்.  திருப்பூர் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: விவசாயம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதி போன்றவை உங்களுக்கு இருக்கிறதா? அவை இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும் உங்கள் கிராம சபைகள், அவைகளில் உங்கள் பங்கீடு பலமாக இருக்க வேண்டும்.  மக்கள் நீதி மய்யத்தின் பங்கீடு மட்டும் மல்ல, மக்களின் பங்கீடும் தேவை. திருவிழா போல கிராம சபைகளை நடத்த வேண்டும். அங்கே எழுப்பப்படும் கேள்வி எந்த கோர்ட்டையும் அதிரவைக்கும். நீங்க அரசியலில்  முழுநேரமாக ஈடுபட வேண்டியதுதானே, ஏன் நடுவுல டிவி நிகழ்ச்சி பண்றீங்க எனக் கேட்கிறார்கள். அவரவருக்கு தொழில் வேண்டும், அரசியல் தொழிலாக இருக்கக்கூடாது. அரசியல் தொழிலாக ஆனதால்  தான் பலபேர் அதையே வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அரசியல் தொழில் அல்ல, நாட்டுக்கு நாம் செய்யப்போகும் கடமை. நான் இந்த மேடையில் இருப்பவர்களிடமும் சொல்லிக் கொள்..
                 

கருணாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய நடிகர் கருணாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்: சேர, சோழ, பாண்டியன் வம்சா வழி வந்த நாடாண்ட நாடார் சமுதாயம் பற்றி இழிவாக பேசிய நடிகர் கருணாசை முதலில் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பொது  இடங்களில் வாய்க்கு வந்ததை தனது சுய விளம்பரத்திற்காக பேசினால் அதனுடைய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். சாதி சண்டைகள் மட்டுமே இல்லாமல் இருந்து வரும் தமிழகத்தில் சாதி  கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ச்சியாக பேசி வரும் நடிகர் கருணாசை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்: எம்எல்ஏ கருணாஸ் பேசிய பேச்சுக்கள் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஒரு எம்எல்ஏ சாதி பெயரை குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தனிப்பட்ட  விளம்பரம் தேடி கொள்வதற்காக இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு முதல் தகுதி மற்றவர்கள் புண்படாம..
                 

திருநாவுக்கரசரை மாற்ற கோரி டெல்லியில் தமிழக தலைவர்கள் போர்க்கொடி: காங்கிரசில் பரபரப்பு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றக் கோரி டெல்லியில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் தமிழக காங்கிரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே ஈவிகேஎஸ்.இளங்கோவன் தரப்பு காங்கிரஸ்  மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இவர்களின் கோஷ்டி பூசல் விவகாரம் சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் அடிதடி மோதலாக மாறியது. அப்போது, ஈவிகேஎஸ்.இளங்கோவன் தரப்பை சேர்ந்த 7 பேரை கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் அதிரடியாக நீக்கினார். அன்று முதல் கோஷ்டி பூசல் பிரச்னை தீவிரமடைந்து வந்தது. இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் தரப்பு மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரி வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் திருநாவுக்கரசர் மீது அதிருப்தியில் இருந்ததால் அவர்களும்  தற்போது திருநாவுக்கரசருக்கு எதிராக களம் இறங்கியுள்ளது தமிழக காங்கிரசில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அவரை மாற்றக் கோரி ஈவிகேஎஸ்.இளங்கோவன், பீட்டர் அல..
                 

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

சட்டத்தை மீறி யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: சட்டத்தை மீறி யார் பேசியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கருணாஸ் பேசிய பேச்சுக்கள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தான் பேசிய பேச்சுக்கான விளைவுகளை கருணாஸ் சந்தித்தே ஆக வேண்டும் என சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயக்குமார் கூறியுள்ளார்...
                 

18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வரும் : ராமதாஸ் பேட்டி

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
திண்டிவனம்: 18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு இருக்கும் எனவே இம்மாத இறுதிக்குள் அதிமுக அரசு கவிழும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பினாமி அரசு தோற்றுவிட்டது. எடப்பாடி அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை கூட செய்யவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று முக்கிய துறையிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. 3 ஆயிரம் பள்ளிகளை மூடப்போவதாக கூறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பாமக மிகப்பெரிய போராட்டம் நடத்தும். உயர்கல்வி துறையில் 4247 பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. 18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் கூறும் தீர்ப்பு, எடப்பாடி அரசுக்கு எதிராக இருக்கும். இம்மாத இறுதிக்குள் அதிமுக அரசு கவிழும். தீர்ப்பு வந்தவுடன் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அரசின் மீது தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நெல் கொள்முதல் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் அரசு நிர்ணயத்துள்ள விலையை விட கூடுதலாக, உயர்த்தி ₹2500 வழங்கவ..
                 

சென்னையில் 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

yesterday  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: சென்னையில் வருகிற 30ம் தேதி 7 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்ேபட்டையில் உள்ள அந்த கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த  தலைவர்கள் மதுசூதனன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்த பின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிப்படையாக மத்திய அரசிடம், தான் செய்த நிலைப்பாட்டுக்கு அந்த போர் குற்றத்துக்கு திறந்த வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். அதை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை போருக்கு காரணமாக இருந்தவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்த ரகசியங்களை ராஜபக்சே தற்போது வெளியிட்டுள்ளார். இலங்கை படுகொலையை சர்வதேச குற்றமாக கர..
                 

ரயில்வே ஊழியர்கள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வாசன் கோரிக்கை

yesterday  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: ரயில்வே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நம் நாட்டில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, அவுட் சோர்சிங் முறையை கைவிடுவது, சென்னை, பெரம்பூரில் உள்ள எலக்ட்ரிக்கல் ஒர்க் ஷாப்பை மூடும் முயற்சியை கைவிடுவது, குறைந்த பட்ச சம்பளம் ரூ.28,000 வழங்குவது, சேப்டி கேட்டகிரியில் உள்ள 2.5 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் தொழிலாளிகளின் சிசிஎல் விடுமுறைக்கு நிபந்தனை விதிக்கக்கூடாது. 530 சப்ஸ்டிடியூட்டுகளை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் போராடி வருகிறார்கள். இதனை மத்திய பாஜ அரசு மிக முக்கிய பிரச்னையாக கவனத்தில் கொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசும் ரயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும். இவ..
                 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை: கமல்ஹாசன் பேட்டி

yesterday  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
கோயம்புத்தூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் சட்டப்படி எது நியாயமோ அது செய்யப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...
                 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சி கவிழப் போவது உறுதி : திருநாவுக்கரசர் பேச்சு

2 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: ‘‘18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக ஆட்சி கவிழப் போவது உறுதி’’ என திருநாவுக்கரசர் பேசியுள்ளார். சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் கூட்டம் திருமங்கலம் தந்தை பெரியார் சமூக நலக்கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பிக்கள் விஸ்வநாதன், ஜெ.எம்.ஆரூண், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் தணிகாசலம், வழக்கறிஞர் சாந்தி, தாமோதரன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது: இந்தியா முழுவதும், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்நது வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய,மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மத்தியில் காவி ஆட்சியும், மாநிலத்தில் ஆவி ஆட்சியும் நடக்கிறது. இந்த மக்கள் விரோத ஆட்சிகளை அகற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக..
                 

முதியோர் உதவித்தொகை வாங்கும் காலத்தில் பரட்டையும், சப்பாணியும் கூட கட்சி தொடங்கி விட்டனர்: முன்னாள் அமைச்சர் கிண்டல்

2 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் நகர அதிமுக சார்பில் அண்ணா 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கம்பம் வஉசி திடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன் பேசியதாவது: தமிழ்நாட்டில் புதிதாக எவன் எவனோ கட்சி நடத்த பார்க்கிறான். பரட்டையும், சப்பாணியும் கூட கட்சி தொடங்கி விட்டனர். முதியோர் உதவித்தொகை வாங்கும் காலத்தில் கட்சி தொடங்கினால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா?   தினகரன் கூட அமமுக என்று ஒரு கட்சி தொடங்கி உள்ளார். தலைவராகும் தகுதி அவருக்கு உள்ளதா? அந்த கட்சிக்கு ஆள் இல்லை. அன்று குடும்ப கட்டுப்பாடுக்கு ஆள் பிடித்ததுபோல் அமமுகவுக்கு இப்போது ஆள்  பிடிக்கின்றனர். நாங்களும்தான் தியாகத்தலைவி சின்னம்மா என்று சொன்னோம். அவர்கள் என்ன தியாகம் செய்தார்கள் என்று மக்கள் கேட்டார்கள். அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். எப்படியும் விரைவில்  கண்டுபிடித்து விடுவோம் என்றேன். கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.  தினகரனின் கட்சி ஒரு பிராய்லர்கோழி. தின்று கொழுகொழுவென்று வளருமே தவிர முட்டைபோடாது. குஞ..
                 

அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டுகொள்ளவில்லை மத்திய அரசுக்கு பங்கு போகிறது

2 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
* சேலம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு* தமிழக அரசை நீக்க மாநிலம் முழுவதும் போராட்டம்சேலம்: ‘தமிழக அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவீதம் டெல்லிக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், மோடி வாய் திறக்காமல் உள்ளார். இதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்’ என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.அதிமுக ஆட்சியில் அரசு பணிகளுக்காக விடப்படும் டெண்டரில் முறைகேடு, விதிமுறைகளை மீறி அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒப்பந்தங்கள், எந்த துறையை எடுத்தாலும் ஊழல் என எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல, வருமான வரி சோதனை, சிபிஐ சோதனை நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 18ம் தேதி மாவட்ட தலைநகர்களில் திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நே..
                 

தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான்: கனிமொழி எம்.பி

2 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அதிமுக ஆட்சி அகற்றப்படும்: ஸ்டாலின் பேச்சு

3 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சேலம்: ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி எதற்கும் பயனற்றதாக உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறினார். அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்...
                 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை: தலைவர்கள் வலியுறுத்தல்

3 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தில் நடந்த வன்முறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள், தமிழகத்தில் தொடர்ந்து வெறுப்பு பேச்சுகளை உமிழ்ந்து வரும் பாஜவின் எச்.ராஜா, கருப்பு முருகானந்தம்  உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத்தலைவர்  தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வேணுகோபால், பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், தமிழ்தேச மக்கள் இயக்கத்தின் தமிழ்நேசன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில..
                 

மதவாத பாஜ அரசை வீழ்த்த வேண்டும்: திருநாவுக்கரசர் பேட்டி

3 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  நீதிமன்றத்தையும் காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது சட்டப்படி உரிய நடவடிக்கையை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.  ராஜிவ் காந்தி, போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என 14 பேரை கொலை செய்தவர்களை விடுவிக்கக்கூடாது என்பதுதான் எங்களது நிலை. ஆனாலும், இப்பிரச்னையால் எங்களது கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது. எங்களுடைய முக்கிய கொள்கை, மதசார்பற்ற இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். ஊழல், மதவாத கட்சியான பாஜ அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான்.  இவ்வாறு அவர் கூறினார்...
                 

எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் நோட்டோவுடன் போட்டியிட்ட பாஜ இன்னும் பாதாளத்துக்கு செல்லும்: டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு

3 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நோட்டோவுடன் போட்டியிட்ட பாஜ இன்னும் பாதாளத்துக்கு செல்லும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டிபாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருக்கிறார். பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார். இவர் தான் இந்து மாதிரியும்,  இந்து மதத்தை காக்க வந்த பகவான் கிருஷ்ணர் மாதிரியும் பேசுகிறார். அவர் படித்தவர், ஆடிட்டர் என்று கேள்விப்பட்டேன். ஆனால் உயர் நீதிமன்றத்தை இவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார். இந்த மனநிலையில் உள்ளவர் எப்படி தனது மதத்தை பாதுகாக்கிறேன் என்று சொல்ல முடியும்.  பாஜவினர் ஏற்கனவே நோட்டோவுடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பாதாளத்துக்கு தான் போவார்கள். மதவெறியை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடம் இல்லை. தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசாங்கம் டெல்லியோட அடிமை அரசாங்கம். எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். காவல்துறை சுதந்திரமாக விட்டது. எச்.ராஜா மீது இந்த அரசு எந்த  நடவடிக்க..
                 

தந்தை பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சித்திவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

3 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் நாளில், அவரது சிலையை அவமானப்படுத்த முயற்சித்திருக்கும் மூடர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திராவிட இயக்கத்தால் தமிழ்நாடு கண்டுள்ள சமுதாயப் புரட்சியை செரிமானம் செய்ய முடியாத மனநலன் பிறழ்ந்தவர்கள், அண்மைக்காலமாக இதுபோன்ற இழிவான, மலிவான, தரங்கெட்ட செயல்களை மதவெறி சக்திகளின் பின்னணியுடன் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நபர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களைத் தூண்டும் அமைப்புகளை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்றும் தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மேலும்பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை அடுத்துச் சென்னையில் உள்ள பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்புக்காகக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலையின் மீது காலணிகளை வைத்து அவமரியாதை செய்யப்பட்டது. இதே போல் சென்னையிலும் பெரியார் சிலை மீது கல் வீசப்பட்டது. இந்நில..
                 

ஹெச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்: டி.டி.வி.தினகரன் சாடல்

4 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: ஹெச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஹெச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். இந்துமதம், தானே தன்னை பாதுகாத்து கொள்ளும்; யாரும் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. தாம் சார்ந்த இயக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஹெச்.ராஜா செயல்படுகிறார். மத வெறியை தூண்டுவோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தமிழகத்தில் பெரியார் பிறந்தநாள் அன்று பெரியார் சிலை அவமதிக்கப்படுவது கண்டனத்திற்குரிய செயல் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சதியை முறியடிக்க வேண்டும். பெரியார் சிலையை அவமதித்தவர் மீது போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்...
                 

முப்பெரும் விழா வெற்றிக்கு நன்றி : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

4 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டது: தம்பிதுரை குற்றச்சாட்டு

4 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
வேடசந்தூர்:  மாநில அரசின் உரிமைகளை முழுமையாக மத்திய அரசு பறித்து விட்டது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார். கரூர் தொகுதி அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை நேற்று தனது தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே மாரம்பாடி பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்க வந்தார். அப்போது அவர்  நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசு தான் டீசல், பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும். மாநில அரசு அதிகளவில் குறைக்க முடியாது. மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் அதிகளவு  பயனடைய வழி செய்து விட்டது. மாநில அரசின் அதிகாரங்களையும், உரிமைகளையும் முழுமையாக மத்திய அரசு பறித்து வருகிறது’’ என்றார். பேட்டியின்போது இடைமறித்த மாரம்பாடி வசந்தா நகர் பொதுமக்கள், ‘‘எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை’’ என பேச துவங்கியதும், தம்பிதுரை அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டார். பின்னர் கலெக்டர்  வினய் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சென்றனர்...
                 

கைதிகள் ஜெயிலில் டி.வி. வச்சிக்கலாம் ரூமுக்கு பெயிண்ட் அடிச்சிக்கலாம்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

4 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 101வது பிறந்தாநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதன்பின் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார். குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்க வேண்டும் என எந்த சட்டத்திலும் இல்லை ஆகையால் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்ல முடிவு எடுப்பார். புழல் சிறையில் கைதிகளுக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக தவறான தகவல் வந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்த கைதிக்கு நீதிமன்ற ஆணையின் படி முதல்வகுப்பினருக்கு வழங்க வேண்டிய வசதிகள் தான்  வழங்கப்பட்டுள்ளது. சிறை கைதிகள் அவர்களுடைய அறைகளுக்கு வண்ணங்களை அடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி அனைத்து சிறைகளிலும் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் முதல் வகுப்பில்  இருப்பவர்கள் அவர்களே வாங்கி வைத்துக் கொள்ளலாம். ச..
                 

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று 3 ஆண்டு ஆவதால் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்: குமரிஅனந்தன் பங்கேற்பு

4 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்று 3வது ஆண்டு தொடங்குவதையொட்டி காங்கிரசார் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது. மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டியும், பட்டாசுகள்  வெடித்தும் இனிப்பு வழங்கியும் நேற்று கொண்டாடாடப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தாமோதரன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, முன்னாள் எம்பிக்கள் ஜே.எம்.ஹாருண், ராணி, அணி தலைவர்கள் கனகராஜ், எம்.கஜநாதன், மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம்,  வீரபாண்டியன், சிவராஜசேகரன், ஜி.தமிழ்செல்வன், கராத்தே ரவி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதே போல, தமிழகம் முழுவதும் மாநில தலைவராக திருநாவுக்கரசர் 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையடுத்து  காங்கிரசார் சார்பில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது. பல இடங..
                 

நாட்டில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; ஜனநாயக படுகொலை நடக்கிறது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

4 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

அதிமுக மாஜி அமைச்சர் டிடிவி கட்சியில் இணைந்தார்

5 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
திருச்சி: அதிமுக மாஜி அமைச்சர் செ.தாமோதரன் நேற்று டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தார். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை அணிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன். அதிமுகவை சேர்ந்த இவருக்கு விவசாய பிரிவு இணை செயலாளர் பதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருச்சி வந்த தாமோதரன் சங்கம் ஓட்டலுக்கு சென்று, டிடிவி.தினகரனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார். பின்னர் அண்ணா சிலைக்கு சென்ற ஊர்வலத்திலும் தாமோதரன் கலந்து கொண்டார்...
                 

பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டும் இடமானது சிறைகளை சொகுசு விடுதியாக்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

5 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
நாகர்கோவில்: தமிழக சிறைகளை சொகுசு விடுதிகளாக மாற்றிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் சொர்க்கபுரியாக மாறி உள்ளது நிரூபணமாகி இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலூரில் டாக்டர் ரெட்டி கொலை சம்பவம் நடந்த போது அதற்கான சதி திட்டம் சிறையில் தான் தீட்டப்பட்டது என்று கூறப்பட்டது. தற்போது பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.  வெளியில் இருப்பதைவிட சிறைக்குள் சென்றால் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு சிறைகள் சொகுசு விடுதிகளாக மாறி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை இடமாற்றம் செய்வதுடன் கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக கவர்னர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தனிப்பட்ட ராஜிவ்காந்..
                 

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாட்டு துவக்க பொதுக்கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

5 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருச்சியில் “அரசியல் அதிகாரங்களில் ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் பலம் பெறவேண்டும் என்ற நோக்கில் ‘’அரசியலாய் அணிதிரள்வோம்! அதிகாரத்தை மீட்டெடுப்போம்!’’ என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் துவக்கப் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நேற்று நடந்தது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.  மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் வரவேற்றார். பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது துவக்க உரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், பாப்புலர் ஃப்ரண்ட்  பொதுச் செயலாளர் காலித் முகம்மது, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மன்சூர் காஷிபி, எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் முஹம்மது பாரூக், வர்த்தகர் அணி மாநில பொதுச்செயலாளர் அஜ்மல் கான், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது ஆகியோர் மாநாட்டின் நோக்கம் ம..
                 

அண்ணா வழியில் அரசியல் பயணம் தொடருவோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

5 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: மொழிக்கு முதலானவர். இனத்துக்கு ஒளியானவர். நம் நாட்டுக்கே பெயர் சூட்டியவர்.திமுக நிறுவனர் அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் என்ற பொறுப்புடன் முதன்முறையாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நன்னாளில் அண்ணாவும், கலைஞரும் காட்டிய வழியில் திமுகவை கட்டிக் காக்கும் பணியில் உங்களில் ஒருவனாக ஓயாத உழைத்திடும் ஊக்கத்தைப் பெறுகிறேன். தமிழர்களின் அண்ணன் பிறந்த நாளில் அவரை வணங்கி நம் அரசியல் பயணம் தொடர்வோம்.ஜனநாயக உரிமை காப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டர் பதிவு: சர்வதேச ஜனநாயக உரிமை நாளான இன்று (நேற்று) அரசியலமைப்புச் சட்டம் நமக்களித்த சுதந்திரத்தையும், உரிமையையும் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். சமூக ஆர்வலர்களை அடக்குவதற்கும், ஜனநாயக உரிமைகளை நீர்த்துப் போக செய்வதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கருத்து சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை சர்வதேச ஜனநாயக உரிமை நாளான இன்..
                 

மு.க.ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம் என சபதம் ஏற்போம் : துரைமுருகன்

5 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
விழுப்புரம்: திமுகவை கட்டுக்கோப்பாக மு.க.ஸ்டாலின் வழிநடத்துவதாக துரைமுருகன் பெருமிதம் தெரிவித்தார். ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அனைத்து அமைச்சர்களும் அச்சத்தில் உள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார். மு.க.ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம் என சபதம் ஏற்போம் என்று துரைமுருகன் தெரிவித்தார்...
                 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழுப்புரத்தில் முப்பெரும் விழா தொடங்கியது

5 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

5 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

மருத்துவ சிகிச்சையின்றி தவிக்கும் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பிக்கு மனைவியால் ஆபத்து: சகோதரிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பியை, கொடுமை செய்யும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க சகோதிரிகள் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். சென்னை, அண்ணா நகர் மேற்கு, தங்கம் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர், ஷிலா எபிநேசர், மலர்கொடி கிரி சாமுவேல், அமலா ரேரிக்ஸ் ஆகியோர் சென்னை, காவல்த்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:  எங்களது சகோதரர் சாம் பிரியா குமார். இவர் தமிழக காவல்த்துறையில் ஏடிஎஸ்பியாக பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் அவரது உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கேன்சர் என்று கூறிவிட்டனர். இதனையடுத்து அமெரிக்காவில் மருத்துவராக உள்ள எங்களது மூத்த அண்ணன், இவரை வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உதவி செய்தார். ஆனால் அவரின் மனைவி ஜெயா எங்கள் சகோதரரை யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து அழைத்து வந்துவிட்டார்.பின்னர் நாங்கள் சென்னையில் சில மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்தோம். இருந்தும் அவரது மனைவி எங்களது சக..
                 

மீண்டும் ஒரு வெள்ளத்தை சென்னை தாங்காது ... கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: மீண்டும் ஒரு வெள்ளத்தை சென்னை தாங்காது, கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோாிக்கை விடுத்துள்ளார்இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்களுக்கும் குறைவான கால அவகாசமே  இருக்கும் நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இன்னும் பாதியளவு கூட முடிவடையவில்லை. 2015ம் ஆண்டு மழை - வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மாநகராட்சி என்ற அமைப்பு இருக்கிறதா? என்று சந்தேகிக்கும் நிலையில்தான் அதன் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2015ம் ஆண்டு மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளின் சுவடுகள் அகலாத நிலையில், இம்முறை முன்கூட்டியே வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசு மற்றும் மாநகராட்சியின் கடமையாகும்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1850 கி.மீ நீளத்தி..
                 

தேமுதிக 14வது ஆண்டு தொடக்கம் : விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றினார்

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தேமுதிக 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தேமுதிக ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தேமுதிக கொடியை கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா கட்சி கொடி ஏற்றினார்.  நிகழ்ச்சியில் தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, பேராசிரியர் சந்திரா, அக்பர், பொருளாளர் டாக்டர் இளங்கோவன், அவைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளையும், நல திட்ட உதவிகளையும் வழங்கினர்...
                 

புழல் சிறையில் வசதிகள் செய்து தந்தது அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை : துரைமுருகன்

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை : புழல் சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தந்தது அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த மீஞ்சூரில் பேட்டி அளித்த அவர், சிறைத்துறை அமைச்சர் நேரடியாக சிறைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுத்ததால்தான் தமிழகத்தின் மற்ற சிறைகளில் பரவாமல் தடுக்க முடியும் என்றும் கூறினார்...
                 

அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் : செல்லூர் ராஜு

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
மதுரை: தேர்தல் வரும் போது டிடிவி தினகரனிடம் இருக்கும் தொண்டர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக அ.ம.மு.க. கட்சியை ஒரு அமைப்பாக கூட கருத முடியவில்லை என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை இருக்கும் பக்கமே இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செல்லூர் ராஜு அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
                 

அதிமுகவில் சேருவதற்கு தங்கதமிழ்செல்வன் தூது: கடம்பூர் ராஜூ பதிலடி

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
கோவில்பட்டி: அதிமுகவில் சேர தங்கதமிழ்செல்வன் தூது விட்டு கொண்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.இதுகுறித்து அவர், கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஊழல் பற்றி ஆதாரம் இருந்தால். டிடிவி தினகரன் சட்டமன்றத்தில் பேசலாம். தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. ஜனநாயக ரீதியாக கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்கள் நடத்தவும் இந்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. தமிழகம் அமைதி  பூங்காவாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது.  ஜிஎஸ்டி கொண்டு வந்தபோது எந்த மாநில அரசையும் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. எந்த பொருளையும்  ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது மத்திய அரசிடம்தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிர்ப்பினை சமாளிக்க முடியாமல் மாநில அரசுகள் மீது மத்திய அரசு பழி போடுகிறது.   தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேருவதற்கு தூது விட்டு கொண்டு இருக்கிறார். இங்கிருந்து சரியான பதில் இல்லை. எனவே அதிமுகவில் சேருவதற்கான காரணத்தை அவர் தேடுகிறார்.  அதனால்தான் தேர்தல் குறித்து சவால் விடுத்து அதில் தோற்கும்போது தானாகவே அதிமுகவில் சேர வழி தேடுகிறா..
                 

முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: முதல்வர் எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது.சந்திப்புக்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்ஜிஆர் விழாவில் முதல்வர் பங்கேற்கும்போதும் அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தேவையான திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விவாதித்தேன்.ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பிரச்னை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரச்னை. கவர்னர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியாது. முதல..
                 

7 பேர் விடுதலை விவகாரம் கவர்னர் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன் அறிக்கை

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: விசிக தலைவர் திருமாளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பேரறிவாளன் 2015 ம் ஆண்டு தமிழக ஆளுநரிடம் சமர்பித்த கருணை மனு மீது முடிவெடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  தமிழக அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு  161ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் கவர்னர் விடுவிப்பார் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் கடிதம் எழுதியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 161ன் கீழ் கவர்னர் முடிவெடுக்கும் போது உள்துறை அமைச்சகத்தையோ  மத்திய அரசையோ கலந்தாலோசிக்குமாறு அந்த சட்டத்திலோ நீதிமன்ற தீர்ப்புகளிலோ  குறிப்பிடப்படவில்லை. எனவே, கவர்னரின்  இந்த நடவடிக்கையை காலம்தாழ்த்தும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.  இந்த ஏழு பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் அளித்துவிட்டது. அப்படியிருக்க கவர்னர் உள..
                 

அதிமுக ஆட்சிக்கு எதிராக 8 எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி: தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் ரகசிய ஆலோசனை

6 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: அதிமுக ஆட்சிக்கு எதிராக 8 எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக பலத்த சரிவுகளை சந்தித்து வருகிறது. சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியை  உடைத்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் சசிகலா, டிடிவி  தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் புதிய கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அவருக்கு 20  எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு தலைவர்களை புறக்கணிப்பதாக கூறப்பட்டு வந்தது. கட்சியிலும்  அவரது ஆதரவாளர்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால் கட்சியில் தொடர..
                 

மோசடி மன்னன் மல்லையா ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் விளக்கிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

7 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை : வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும் என்று முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  முன்னதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தன்னை சந்தித்ததை நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவிக்காதது ஏன்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் மல்லையாவுடன் ஓரிரு வார்த்தைகள் தான் பேசியதாக ஜேட்லி கூறுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்தார். மேலும் ஒரு குற்றவாளி நாட்டைவிட்டு ஓட அமைச்சர் உடந்தையாக இருந்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசு பொய் கூறுவதாக தெரிவித்த ராகுல், நாட்டுக்கு விளக்கமளித்து அமைச்சர் பதவியை ஜேட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்...
                 

ஏழை மருத்துவ மாணவிக்கு நடிகர் கமல் நிதியுதவி

8 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: பெரம்பலூரைச் சேர்ந்த ஏழை மருத்துவ மாணவி கனிமொழியின் கல்விச்செலவுகள் அனைத்தும் சந்திரஹாசன் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் என்று மக்கள் நீதிமய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவி கனிமொழி. இவர் தனது கல்விக்கட்டணத்திற்காக கூலிவேலை பார்ப்பதாக மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியவந்தது. அதன்படி மாணவி கனிமொழியின் கல்விச்செலவு முழுவதையும் சந்திரஹாசன் அறக்கட்டளை மூலமாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருப்பகாவும், வருகின்ற பிப்ரவரி மாதம் தனது மருத்துவ படிப்பினை முடிக்கவுள்ள நிலையில் அவரது கல்விச்செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அவரதுதிறன் மேம்பாட்டு மேற்கல்விக்கான அனைத்து உதவிகளையும் அறக்கட்டளையே ஏற்கும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்...
                 

யாருடன் தேர்தல் கூட்டணி : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

8 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் வருகிற 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. இதையொட்டி, கால்கோள் நாட்டு விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கால்கோள் நாட்டினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சரோஜா, ஜெயக்குமார், துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்பி, மாவட்ட கலெக்டர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்,  நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மட்டும் அல்ல, இனி வரும் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என அனைத்திலும் அதிமுகவே வெற்றி பெறும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். கடைசி நேரத்தில் டோக்கன் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டனர். தேர்தல்  கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்யப்படும். அதற்கு இது சரியான தருணமல்ல. தேர்தல் அறிவித்த பின்னர் தான் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் போன்றவை அரசியலில் நடைபெறும். ஆளுநருக்கு   அறிவுரை ..
                 

விநாயகர் சதுர்த்தி விழா .... அரசியல் தலைவர்கள் வாழ்த்து

8 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய் கொண்ட விநாயகப் பெருமானின் திருஅவதார தினமான இந்நன்னாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.‘‘வேழ முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும்’’ என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.பொன். ராதாகிருஷ்ணண் (மத்திய இணை அமைச்சர்): 125  ஆண்டுகளுக்கு முன்பாக மத வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த  விநாயகர் சதுர்த்தி விழாவை, 1893ம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பால  கங்காதர திலகர் தேச பக்தியை உருவாக்கும் ஒரு தேசிய விழாவாக விநாயகர்  பெருமானை வீ..
                 

இதுவரை 1.97 கோடி பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் காமராஜ்

8 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

8 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் 30ம்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் தேச தலைவர்களை அழைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும். ராஜிவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் இந்த 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, அதில் அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர் நிச்சயமாக தமிழக மக்களின் ஒட்டு மொத்த உணர்வை மதித்து, அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு, ஆளுநருக்கு ‘டைம்’ எல்லாம் கொடுக்க முடியாது.  பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏற்றிக்கொண்டே போவதை ஏற்க முடியாது. மத்திய அரசு கலால் வரியை 50 சதவீதம் அளவுக்கு குறைத்தால் எல்லா மாந..
                 

மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்: துரைமுருகன்

9 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: 55 ஆண்டுகள் கருணாநிதி அவர்களை நிழல் கூட பிரிந்திருக்கலாம், நான் பிரிந்ததில்லை என்றும்  குடும்பத்தை விட அவரின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டியுள்ளோம். மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்று அவர் கூறியுள்ளார்...
                 

ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார்: அமைச்சர் வேலுமணிக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்

9 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை : பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், பெட்ரோல் மீதான வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு சிந்திக்கும் என்று கூறிய அவர், மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது என்றும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும் அவர் கூறினார்.மேலும் குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி இவ்வாறு பதில் அளித்துள்ளார்...
                 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில் திமுக சார்பில் கிரிராஜன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் துணை தலைவர் தாமோதரன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், அரும்பாக்கம் க.வீரபாண்டியன், சிவ.ராஜசேகரன், ஊடக துறை தலைவர் கோபண்ணா, பொது செயலாளர் சீரஞ்சிவி, மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 7 மணி வரை நடந்தது. போராட்டத்திற்கு பிறகு திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: உலக அளவில் கச்சா எண்ெணய் விலை குறைந்த போது அதன் பலன்களை மக்களுக்கு தர மத்திய அரசு மறுத்து விட்டது. இதனால் கடந்த நான்கரை ஆண்டில் ரூ.11 லட்சம் கோடியை மோடி அரசும், எண்ணெய் நிறுவனங்களும் மக்களிடம் இருந..
                 

ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை விவகாரம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு கவர்னர் முடிவு எடுக்கட்டும்: தமிழிசை பேட்டி

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு கவர்னர் முடிவெடுக்கட்டும் என தமிழிசை கூறினார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு சென்னை வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்த பிரச்னை குடியரசு தலைவரால் கையாளப்பட்ட வழக்குதான். தற்போது மீண்டும் மாநில அரசு ஒரு தீர்மானத்தை  நிறைவேற்றி இருக்கிறது. சட்ட விதிகளுக்குட்பட்டு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை தமிழக கவர்னர் எடுப்பார். ஆனால் இதில் ஒன்று வியப்பாக இருக்கிறது. காங்கிரசை சேர்ந்த பலர், இந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறத்  தொடங்கியிருக்கின்றனர்.இந்த வழக்கு சாதாரண வழக்கு அல்ல. காங்கிரஸ் கட்சியின் தலைவர். நம் நாட்டின் முன்னாள் பிரதமர் கொலையுண்ட ஒரு வழக்கு. எனவே இதில், சட்ட விதிகளுக்குட்பட்டு, கவர்னர், என்ன முடிவு எடுப்பாரோ, அதை  எடுக்கட்டும்.தமிழகத்தில் நடந்த சிபிஐ சோதனை உள்நோக்கம் கொண்டது என்று தம்பிதுரை கூறியிருப்பது சரியல்ல. சட்ட வித..
                 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரி அண்ணா சாலையில் அனைத்து தொழிற்சங்கம் மறியல்: முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்பட 1000க்கும்  மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பாதுகாப்பு பணியில் இணை கமிஷனர் அன்பு தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.போராட்டத்தில், பெட்ரோல், டீசல் மீதான 52 சதவீத வரிகளை மத்திய, மாநில அரசு குறைக்க கோரி கோஷமிட்டனர். இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறனர். எனவே பெட்ரோல், டீசல் மீதான  வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர் போராட்..
                 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை, கொள்ளையாட்சித் துறையாக  உருக்குலைத்திருப்பது, பேரதிர்ச்சியளிக்கிறது.அ.தி.மு.க அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி ஊழலின் மணியான கதாநாயகனாக இருந்து, அரசு கஜனாவை, தனது சொந்தங்களின் நிறுவனங்கள் மூலம், அப்படியே ஹைஜாக் செய்து, கொள்ளையடித்து வருவது பற்றிய புகாரை, இன்றைய தினம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் அளித்துள்ளார். இந்த பகல் கொள்ளை பற்றிய பகீர் தகவல்களை, தனியார் ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டதற்காக, தனியார் ஆங்கில நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் ..
                 

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

தமிழக அரசியல் மோசமான நிலையில் உள்ளது: யோகேந்திர யாதவ்

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

மக்களுக்கு விரோதமாக மோடி அரசு செயல்படுகிறது: டி.ராஜா குற்றச்சாட்டு

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

குட்கா ஊழலின் சூத்ரதாரி சசிகலாதான்: அன்புமணி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர்

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் குட்கா தடை செய்யப்பட்ட பிறகும் கூட, தமிழகத்தில் குட்காவுக்கு தடை விதிக்கப்படவில்லை. 2011 முதல் 2013 வரை ஜெயலலிதாவுக்கு நான் 3 முறை கடிதம் எழுதினேன்.   உச்ச நீதிமன்றமும் குட்கா தடையை வலியுறுத்தியது. அதன் விளைவாகத் தான் 2013 ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டது. இந்தியாவில் குட்காவை தடை செய்த கடைசி பெரிய மாநிலம் தமிழகம் தான்.  குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் தான் முக்கியக் குற்றவாளிகளாக முன்னிறுத்தப்படுகின்றனர். ஆனால், இவர்களைத் தாண்டிய குற்றவாளிகள் இதில்  சம்பந்தப்பட்டுள்ளனர். குட்கா ஊழல் வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் யார் என்றால், அவர்கள் ஜெயலலிதாவும், சசிகலாவும் தான். அவர்களின் ஏவளாளிகள் தான் இவர்கள். 2013ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டதே தவிர, அதை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடக்கத்தில் குட்கா விற்பனைக்கு எதிராக நேர்மையான அதிகாரிகள் சிலர்  நடவடிக்கை எடுத்தனர். அதற்காக அந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதுடன், குட்கா விற்ப..
                 

மத்திய, மாநில அரசுகளை ஜனநாயக வழியில் விரட்டிட வீழ்த்திட ஆயத்தமாவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: மக்கள் நலனைப் புறக்கணித்து மாநிலத்தை ஆளுகிற அதிமுகவையும்,  அதற்கு துணை நிற்கும் மதவாத எண்ணம் கொண்ட மத்திய பாஜ அரசையும் ஜனநாயக  வழியில் விரட்டிட-வீழ்த்திட ஆயத்தமாவோம் என்று திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுகவின் தலைமைப் பொறுப்பை மிகுந்த பணிவன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு, மாவட்ட செயலாளர்களையும், கட்சியின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து, கழகத்தின் வளர்ச்சி மற்றும் நாட்டு நடப்பு தொடர்பான கருத்துகளைக் கேட்டறியும் வகையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று முன்தினம் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் மிகமுக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் வழியே, செயல்பட வேண்டிய களங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.தமிழகம் மீதான பாஜவின் தாக்குதலையும், நாடு முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் அதன் மதவெறிச் செயல்பாட்டையும் எதிர்கொண்டு வீழ்த்திட, பெரியார்- அண்ணா-தலைவ..
                 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய நீர் ஆய்வு அறிக்கைக்கு எதிராக கோர்ட்டில் தடை உத்தரவு பெற வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

10 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய நீர் ஆய்வு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு தடை உத்தரவு பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் நேற்றுவிடுத்த அறிக்கை: ‘‘தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை என்று மத்திய நீர்வளத்துறை, ஒரு நிலத்தடி நீர் ஆய்வினை,  வெளியிட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, அது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கும்போது தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, அந்த  ஆலையை திறப்பதற்கு துணை போகும் வகையில், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டிருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒரு தனியார் கார்ப்பரேட் ஆலைக்காக, ஏழரைக்கோடி மக்களின் நலனை, மத்திய பாஜ  அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினை ஆய்வு செய்யும் போது, உளவுத்துறை மூலமாக அறிந்திருந்தும், அதை வேடிக்கை பார்த்து..
                 

அமைச்சரவையில் முடிவுக்கு கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

11 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

தமிழக மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதைதான் பாஜகவும் எதிர்பார்க்கிறது : விக்டோரியா கெளரி

11 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

அதிமுகவினர் அமமுகவில் இணைய தயாரா? தங்க.தமிழ்ச்செல்வன் கேள்வி

12 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
                 

மத்திய அரசின் மிரட்டலுக்கு எப்போதும் பயப்படமாட்டேன் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

12 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
திருமலை: ‘‘சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மூலமாக வரும் மத்திய அரசின் மிரட்டலுக்கு எப்போதும் பயப்படமாட்டேன்’’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொலிட்பீரோ  கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கலந்துகொண்டார். இதில்  தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் நடந்த கட்சி மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:உலக அளவில் ஐதராபாத் நகரை கொண்டு சேர்த்த பெருமை தெலுங்கு தேசம் கட்சிக்கு உள்ளது. மத்திய அரசு மாநில பிரிவினையின் போது கொண்டு வரப்பட்ட தீர்மானங்களையும், உறுதிமொழியையும் நிறைவேற்றாமல் அலைக்கழிப்பு செய்து வருகிறது. அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்பதற்காக சிபிஐ மூலமாகவும், வருமான வரித்துறை மூலமாக மிரட்டல் விடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு எக்காரணத்தை கொண்டும் பயப்படமாட்டேன். ஆட்சியும் அதிகாரமும் எப்போதும் நிரந்தரம் அல்ல என்பதை..
                 

பாஜ கட்சியுடனான நெருக்கத்தை கைவிடுங்கள்: முதல்வர், துணை முதல்வருக்கு அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கடி

12 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: பாஜவுடனான நெருக்கத்தை கைவிடும்படி முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மத்திய பாஜ அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து வந்தார். குறிப்பாக உதய் மின் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், மருத்துவ கல்லூரியில் சேர தேசிய அளவிலான நுழைவு  தேர்வு (நீட்) உள்ளிட்ட பல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த திட்டங்களுக்கு எப்படியாவது தமிழக அரசின் அனுமதியை பெற்றுவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு படையெடுத்து வந்து,  ஜெயலலிதாவை பார்க்க தலைமை செயலகத்தில் காத்துக்கிடந்த நிலை இருந்தது. ஆனால், அவர் மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜெயலலிதா எதிர்த்த மத்திய திட்டங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு  தனது ஆதரவை தெரிவித்தது. இதன்மூலம் அந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டது.குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தனி அணியாக செயல்பட்ட பிறகு தமிழகத்தின் நிலைமை தலைகீழாக மாற தொடங்கியது. அதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி தலைமையில் செயல்பட்ட அமைச்சர்களும்  எந்த நிப..
                 

பேட்டரி பஸ் குறித்த கண்காட்சியில் பங்கேற்க போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமெரிக்கா செல்கிறார்

12 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: பேட்டரி பஸ் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று லண்டன் செல்கிறார். தமிழகத்தில் மின்சார பேருந்துகளை இயக்க இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சி-40 என்ற அமைப்புடன் அரசு போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் மின்சார பஸ்கள்  இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் அனைத்து நாடுகளிலும் மின்சார பஸ்களை இயக்க சி-40 அமைப்பு வலியுறுத்தி வருகிறது.மின்சார பஸ்கள் இயக்குவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் சாத்தியக்கூறுகளை சி-40 அதிகாரிகள் ஆய்வு செய்து கொடுப்பார்கள். அந்த வகையில், சி-40 அமைப்பினர் கடந்த மாதம் சென்னைக்கு வந்து ஆய்வு  நடத்தினார்கள். அடையாறு பணிமனையில் நேரடி ஆய்வு நடந்தது. அப்போது முதல்கட்டமாக எந்தெந்த வழித்தடங்களில் மின்சார பஸ்கள் இயக்கலாம், சார்ஜர் அமைப்பது, தூய்மையான புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பெறுவது  உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.பின்னர் அவர்கள் தலைமை செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து ஆலோசனை நட..
                 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாரத் பந்த்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு

12 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் பாரத் பந்த்துக்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் கடந்த 16 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ரூ.2.40 காசுகள் ஆகவும் உயர்த்தப்பட்டு, பெட்ரோல் விலை ரூ.84.62 காசுகள் ஆகவும், டீசல் விலை ரூ.75.48 காசுகள் ஆகவும் உச்சத்தை தொட்டு இருக்கின்றது. பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கிறது. தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு ரூ.34 டீசலுக்கு ரூ.25 என்று உயர்த்திவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 10ம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொதுவேலை நிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10ம் ஆண்டு நடைபெற உ..
                 

விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு தொடர் நடவடிக்கை மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

12 days ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு தொடர் நடவடிக்கை மூலம் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் திருட்டு, கொள்ளை அதிகரித்திருக்கிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும், காலனிகள், முக்கிய பிரபலமான தெருக்கள், பஜார்கள் போன்ற பகுதிகளிலும் குற்றச்செயல்கள் நடைபெறுகிறது என்றால் அதற்கு காரணம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பயமும் இல்லை, அச்சமும் இல்லை. மிக முக்கியமாக பெண்கள், முதியவர்கள் பட்டப்பகலில் சுதந்திரமாக நடமாட முடியாமல் ஒரு அச்சம் கலந்த மனநிலையில் வெளியில் சென்று வருகிறார்கள் என்பது வேதனைக்குரியது. மேலும் வீட்டு வாசலில், தெருக்களில் பெண்களிடம் செயின் பறிப்பதும், அதனால் பாதிக்கப்படும் பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுவதும் மிகப்பெரிய கொடுமை.அதே போல குழந்தை கடத்தலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இர..
                 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

one month ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 பேர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் ப..
                 

பாஜ தேசிய செயற்குழு கூட்டம் இன்று துவக்கம்

one month ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
புதுடெல்லி: பாஜ.வின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு பிறகு முதல் முறையாக பாஜ தேசிய செயற்குழு கூட்டம் டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இது கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் ஹுசைன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். சமீபத்தில் நாட்டில் கவனம் பெற்றுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.மக்களவை, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள எஸ்சி., எஸ்டி. சட்ட திருத்தத்தை எதிர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர் பிரிவினர்  நடத்திய நாடு தழுவிய போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதார நிர்வாகம் உள்ளிட்டவை குறித்தும் இதில் விவாதிக்கப்படு..
                 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கூட்டுறவு சங்க தேர்தலில் திமுக வெற்றி: மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்

one month ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுக அமோக வெற்றி பெற்றது. சங்க தலைவராக மயிலை சண்முகசுந்தரம், துணை தலைவராக கோகுல்ராஜ், இயக்குனர்களாக பிரபாகரன், வெ. தாஸ், நடராசன், சித்ராஇ ரஷ்யா, சாவித்திரி ஆகியோர் வெற்றி பெவற்றனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்...
                 

குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

2 months ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக ஆளுநரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும் அதனை ஆளுனர் கண்டுகொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். டிஜிபி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகும் தமிழக அரசும், ஆளுநரும் அமைதி காப்பது அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட செயல் அல்ல என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் மற்றும் டிஜிபியை வீட்டுக்காவலில் வைத்து சிபிஐ சோதனை நடத்தி உள்ளது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். டிஜிபி இல்லாமல் தமிழக காவல் துறை இயங்கியது வரலாற்று அசிங்கம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சருக்கும், டிஜிபிக்கும் லஞ்சம் கொடுத்தவர், இடைத்தரகர், மத்திய அரசு அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. ஆனால் லஞ்சம் பெற்ற அமைச்சர், டிஜிபியை கைது செய்யாத மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே விஜயபாஸ்கரையும் , டிஜிபி ராஜேந்திரனையும் டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுப்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்த..
                 

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ,டிஜிபியை கைது செய்ய தயக்கம் ஏன் ? : ஸ்டாலின் கேள்வி

2 months ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை :குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை கைது செய்ய தயக்கம் ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். குட்கா வியாபாரியிடம் லஞ்சம் பெற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நிலையில், லஞ்சம் கொடுத்த வியாபாரி கைது என்றும்  லஞ்சத்தை கொண்டு போய் சேர்ந்த இடைத்தரகர் கைது என்றும் கூறினார். இதையடுத்து டி.ஜி.பி. மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகு அரசும் ஆளுநரும் அமைதியாக உள்ளதாகவும் முன்னாள் காவல் ஆணையருக்கு குட்கா வியாபாரி ரூ. 60 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் என்றும் ஸ்டாலின் கூறினார்...
                 

குமரி அனந்தன் சந்திப்பு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை: திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த குமரி அனந்தன், வாழ்த்து தெரிவித்ததுடன் 2ம் தேதி தான் நடத்தும் மதுவிலக்கு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டார். மூத்த காங். தலைவர் குமரிஅனந்தன் நேற்று பகல் 11.50 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் குமரி அனந்தன் நிருபர்களிடம்  கூறுகையில், திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலி னுக்கு வாழ்த்து தெரிவித்தேன். வரும் 2ம் தேதி பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரத  பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இதை அவருக்கு தெரிவித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்...
                 

அமைச்சர் மீது அவதூறு வீடியோ டிடிவி கட்சி பிரமுகர் கைது

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
விழுப்புரம்: விழுப்புரம் குப்புசாமிதெரு கிழக்கு பாண்டிரோட்டை சேர்ந்தவர் அலாவுதீன்(35). டிடிவி தினகரனின் அ.ம.மு.க. பாசறை மாநில இணைச்செயலாளராக உள்ளார். இவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குறித்து அவதூறாக பேசிய வீடீயோ காட்சி முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றில் ைவரலாகின. அதில் அமைச்சர் சண்முகம் மீண்டும் விழுப்புரத்தில் போட்டியிட்டு வெற்றிபெறட்டும் என சவால்விட்டு அவதூறாக பேசிய வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து அதிமுகவினர் புகாரின்படி விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து நேற்று அலாவுதீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே வீடியோவில் பேசிய விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த ஜெகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்...