தினமலர் தினகரன் விகடன் சமயம் One India

விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்தேன் : மு.க. ஸ்டாலின்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தை  அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அரசியல் கட்சி தலைவர்களும் , திரையுலக பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடிகர் ரஜினிகாந்த சந்தித்தது குறிப்பிடத்தக்கது.  மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்தார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
                 

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

ஐசிஐசிஐ வங்கி மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் ராகுல்காந்தி நடைபயணம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-விசிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், சிகிச்சைக்கு பின் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னை வந்து சந்தித்த முதல் நபர் விஜயகாந்த், அவர் எப்போதும் நலமுடன் இருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்...
                 

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
விருதுநகர் : சாத்தூர் அருகே வரகனூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்த விபத்து நடைபெற்ற இடத்தில் பட்டாசுகள் வெடித்து வருவதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்...
                 

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

சென்னையில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கம் பறிமுதல்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : சென்னை மண்ணடியில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பதுக்கி வைத்திருந்த மின்னணு பொருட்களையும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து தங்கத்தை பதுக்கி வைத்திருந்த ஹாஜா மாலிக் மற்றும் கடத்தலுக்கு உதவிய 2 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது...
                 

சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

சிவகாசியில் குடிக்க பணம் தர மறுத்த தாயை கொலை செய்த மகன் கைது

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை : இந்தியா - தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சியோல்: தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்புத்துறை முக்கிய இடம்பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கொரிய தொழில்நுட்பத்தில் உருவான கே-9 வஜ்ரா பீரங்கி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு சான்று என்று மோடி தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா - தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தென்கொரிய அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்...
                 

காஞ்சிபுரம் அருகே கார் ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல் ; மடக்கி பிடித்த போலீசார்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

பிப்ரவரி 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.02; டீசல் ரூ.70.25

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

முன்னாள் எம்எல்ஏ சுந்தரதாஸ் மரணம்

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1984 முதல் 1997 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ்  எம்எல்ஏவாக இருந்தவர் வக்கீல் சுந்தரதாஸ் (71). இவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் அடக்கம் இன்று காலை 10 மணிக்கு  நித்திரவிளை குடும்ப கல்லறை தோட்டத்தில் நடைபெறுகிறது. இவரது மனைவி டாடா சுலோச்சனா ஓய்வு பெற்ற பேராசிரியை. இவருக்கு ஒரு மகனும், ஒரு  மகளும் உள்ளனர்...
                 

நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது... கமல்ஹாசன் பேச்சு

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
திருவாரூர்: வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும் என்று திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது. மேலும் நான் இனி உங்கள் சொத்து; என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்...
                 

திமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி

7 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மேலும் இன்னும் 2 நாளில் இறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்...
                 

சேரன்மகாதேவியில் ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் கல்லூரி வாகனங்கள் பறிமுதல்

7 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

அதிமுக அலுவலகத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்...
                 

சென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

ராமதாஸின் தைலாபுர தோட்ட வீட்டில் நாளை இரவு விருந்து: இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

12 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் தோட்ட வீட்டில் நாளை இரவு விருந்து நடைபெற உள்ளது. ராமதாஸ் அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி, ஓபிஎஸ் பங்கேற்க உள்ளனர். மேலும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் முதலமைச்சரை வரவேற்க ராமதாஸ் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். ..
                 

சென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர், மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்

16 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதம் 0.1 சதவீதம் உயர்வு

20 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது... செங்கோட்டையன் பேட்டி

20 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
ஈரோடு: 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். மத்திய அரசின் அறிவுறுத்தல் படி தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ..
                 

சத்துணவு முட்டை டெண்டர் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணை ரத்து: ஐகோர்ட்

21 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: சத்துணவு முட்டை டெண்டர் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய டெண்டருக்கான அறிவிப்பாணையை அரசு வெளியிடலாம் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. புதிய டெண்டர் வெறியாகும் வரை ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர் முட்டை வினியோகம் செய்யலாம் என அறிவித்துள்ளது. மேலும் ரூ.220 கோடிக்கு சத்துணவு திட்ட்ததிற்கு முட்டை வாங்க டெண்டர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது...
                 

தமிழகத்தில் தடுப்பணை கட்ட ஏன் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை?: மதுரை கிளை

23 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம்

23 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

அமைச்சர் கே.சி வீரமணியின் மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியது

23 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: அமைச்சர் கே.சி வீரமணியின் மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியது. மேலும் கே.கே.சி திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் சத்தியமூர்த்தி என்பவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சத்தியமூர்த்தி வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு முக்கிய கைப்பை ஒன்று சிக்கியது குறிப்பிடத்தக்கது...
                 

69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு மார்ச் 14 -ஆம் தேதி ஒத்திவைப்பு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

சட்ட கல்வி பயிற்சி மையம் வழக்கு தள்ளுபடி

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : சட்ட கல்வி பயிற்சி மையங்களை தடை செய்து குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள விளம்பரம் சட்ட கல்வி பயிற்சி மையம் மட்டுமே என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பல பயிற்சி மையங்கள் இருப்பதாக கூறி திலீபனின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது...
                 

நாடாளுமன்ற தேர்தல் : நாளை சென்னையில் அனைத்து கட்சி கூட்டம்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

வந்தவாசி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் பல ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
வந்தவாசி: வந்தவாசி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் பல ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தரப்படும் ரூ.2000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 61 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குவிந்ததால் சமாளிக்கமுடியாமல் அரசு அதிகாரிகள் தவிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்...
                 

மராட்டிய மாநிலத்தில் விவசாய கடனை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் பேரணி

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

திருமலா பால் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் ஐ.டி ரெய்டு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி : முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வருடன் அமைச்சர்கள்  சந்தித்து பேசினார். முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் இல்லத்தில் தேமுதிக சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது...
                 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து 7 தமிழர்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து 7 தமிழர்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளன் , நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயல், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக 7 பேரும் சிறையில் உள்ளனர் எனவும் கூறினார். ..
                 

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்பு: திமுக தலைவர் ஸ்டாலின்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தமிழகத்தில் 7 டிஎஸ்பி-கள் பணியிடமாற்றம்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

வேலூரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரெய்டு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
வேலூர் : வேலூரில் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷுக்கு சொந்தமான ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமமூர்த்திக்கு சொந்தமாக மேலும் சில நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகிறது. அதிக மதிப்புடைய நிலம் ஒன்றை கைப்பற்ற முயன்றதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 1000 கோடி நிலத்தை கைப்பற்றும் தகராறில் ஏற்கனவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
                 

கச்சத்தீவு அருகே 13 மீனவர்கள் கைது : இலங்கை கடற்படை அட்டூழியம்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

டிரைவர் தற்கொலை மிரட்டல்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

ஹிமாச்சலில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

புல்வாமா தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
காஷ்மீர்: காஷ்மீரில் பிப்.14-ல் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்புதலைவர் யோகேஷ் சந்திரமோடி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்.  தீவிரவாத தாக்குதல்சம்பவம் குறித்து உளவுத்துறை அமைப்புகளும் ரகசிய விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது...
                 

சேலம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சேலம் : சேலம் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி சுந்தர்ராஜன், கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதால் தற்கொலைக்கு முயன்றதாக கைதி சுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்...
                 

முகிலனை கண்டுபிடிக்க கோரிய வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தனி விமானத்தில் மதுரை வந்தார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம் : அமித்ஷா பேச்சு

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
ராமநாதபுரம் : மோடி தலைமையிலான அரசு, தீவிரவாதத்திற்கு எள்முனை கூட இடம் அளிக்காது என்றும், புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களான சுப்பிரமணியன், சிவசந்திரன் தாக்குதலில் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்றும், கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுவத்துவதாகவும் கூறினார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்றும், பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
                 

கூட்டணி தொடர்பாக அதிமுக, பாஜகவினரை சந்திக்கவில்லை : ஜி.கே.வாசன்

an hour ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : மதுரையில் அதிமுக, பாஜகவினருடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக, பாஜகவினரை சந்திக்கவில்லை என ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் தமாகா இணைவது குறித்து கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது...
                 

திமுக கூட்டணி தொடர்பாக மதிமுகவுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

திருப்பதி கோயிலில் பியூஸ் கோயல், தம்பிதுரை சாமி தரிசனம்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்பு

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்., 24ம் தேதி விருப்பமனு விநியோகம் என அறிவிப்பு

3 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்., 24ம் தேதிமுதல் விருப்பமனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விருப்ப மனு கட்டணம் பொது தொகுதிக்கு ரூ.20,000 தனித்தொகுதிக்கு ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...
                 

மக்கள் நீதி மய்யத்தின் பலம் மக்கள்தான் : கமல்ஹாசன்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்தது ஒலிம்பிக் கமிட்டி

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
புதுடெல்லி: இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து  டெல்லியில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியா உடனான அனைத்து கலந்துரையாடல்களையும் ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தரவிட்டுள்ளது...
                 

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
ராமநாதபுரம்: எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள்  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று 13 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கைதான மீனவர்களை மன்னார் முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டுள்ளது...
                 

கயத்தாறு வீரர் குடும்பத்துக்கு நீதிபதிகள் 3.15 லட்சம் நிதி

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
கயத்தாறு: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில்  பலியான கயத்தாறு அடுத்த சவலாப்பேரி சுப்பிரமணியன் வீட்டுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தலைமையில்  நீதிபதிகள், ஆணைகள் குழு உறுப்பினர்கள் நேற்று சென்றனர். அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் குழு சார்பில் ரூ.3.15 லட்சம் நிதியை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் வழங்கினார். பின்னர் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்...
                 

ரூ.3000 லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சிவகங்கை:  ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடந்த 2004ம் ஆண்டு தாசில்தாராக பணியாற்றியவர் சவுந்திரராஜன் (62). இவரும் தலையாரி  நாகரெத்தினமும் (70), வெளிச்சம் கிராமத்தை சேர்ந்த கருப்பையாவிடம் மீன் கொட்டம் அமைக்க  18.09.2014 அன்று ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச  ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிவகங்கை லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிரேகா விசாரித்து, சவுந்திரராஜன்,  நாகரெத்தினத்துக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து  தீர்ப்பளித்தார்...
                 

அதிமுகவுடனான கூட்டணியில் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை ... ரங்கசாமி பேட்டி

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

குமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி

7 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
தூத்துக்குடி: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன் என்று தூத்துக்குடியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக-7, பாஜக-5 மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
                 

நாடாளுமன்ற தேர்தல்...அதிமுக- என்.ஆர்.காங். கூட்டணி பேச்சுவார்த்தை

7 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் கூட்டணி குறித்து ரங்கசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியை ஒதுக்க ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
                 

நாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு

8 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

ஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ஆடம்பர விழாக்களை தவிர்த்து ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுகவினர் தங்களின் சக்திக்கேற்ப ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். மேலும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ.சிலைக்கு ஓபிஎஸ்-ஈபிஸ் மரியாதை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
                 

சமூக செயல்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு

13 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி: ராம்நாத் கோவிந்த்

19 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை: எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிகழ்ச்சியில் பேசினார். மேலும் தமிழ்நாடு மிக அழகிய மொழி, செம்மையான கலாச்சாரம், திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது எனவும் ராம்நாத் கோவிந்த் கூறினார்...
                 

சென்னை ரயில்வே காவல்துறை டிஐஜியாக வி.பாலகிருஷ்ணன் நியமனம்

20 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம்

21 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

21 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
டெல்லி: பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை ஐகோர்ட் நியமித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது...
                 

கோவையில் மாதவி என்பவரது வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை

23 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

ஜோலார்பேட்டை அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் ஐ.டி.ரெய்டு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் புகார்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
புதுவை : புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். அரசியல் ரீதியான தொல்லை அளிப்பதாக விஜயவேணி, தீப்பாய்ந்தன் ஆகியோர்  சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சியினர் பணம் தருவதாக கூறி அழைப்பு விடுப்பதாக புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர்...
                 

மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
ஸ்ரீநகர்: மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு வாரத்தில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த தொலைபேசி பேச்சை குறுக்கிட்டு கேட்ட போது சதி அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது...
                 

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் சேர்வதில் சிக்கல் நீடிப்பதால் காங்கிரசுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது...
                 

திமுக உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது: பாலகிருஷ்ணன்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகத்தில் வருமானவரித்துறை ரெய்டு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாக்- இந்தியா விளையாட ஹர்பஜன் எதிர்ப்பு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கரிக்கெட் வீரர் ஹர்பஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக் கூடாது என்பதில் நியாயம் உள்ளது எனவும் கூறினார். மேலும் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாட கிரிக்கெட் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...
                 

தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் அணியை புறக்கணிக்க காரணம்: பிசிசிஐ

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
டெல்லி: காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. மேலும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பாகிஸ்தானில் செயல்படுகிறது என கூறப்படுகிறது.  ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் அணியை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...
                 

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே. பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்...
                 

தமிழக மீனவர்களை கைது செய்தது ஆந்திரா போலீஸ்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு : கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்

yesterday  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
சென்னை : மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கமல்ஹாசன் கட்சி கொடியேற்றினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் கொடியேற்றினார். மேலும் நாகை, வேதாரண்யம் தொகுதி வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு இன்று மீன்பிடி வலைகளை வழங்கவுள்ளார்...