தினகரன்

பிப்-23: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32

                 

தொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறுமுகம் தங்கம் சவரனுக்கு ரூ168 அதிகரிப்பு

* 53 நாளில் ரூ2,696 உயர்ந்தது * விற்பனை 30 சதவீதம் சரிந்ததுசென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றும் சவரனுக்கு  ரூ168 உயர்ந்து, சவரன் ரூ32,576க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை  உயர்வால் நகைக்கடைகளில் 30 சதவீதம் அளவுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக  வியாபாரிகள் கூறினர். தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் முதல் உயர்ந்து  வருகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி  வந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் பிப்ரவரி மாதம் முதல் தங்கம் விலை  மேலும் உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து புதிய  உச்சத்தை ெதாட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, கடந்த  17ம் தேதி ஒரு சவரன் ரூ31,216க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி  ஒரு சவரன் ரூ31,408, 19ம் தேதி ரூ31,720, 20ம் தேதி ரூ31,824க்கும்  விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை  கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ71 அதிகரித்து ஒரு கிராம்  ரூ4,051க்கும், சவரனுக்கு ரூ584 அதிகரித்து சவரன் ரூ32,408க்கும்&nbs..
                 

பன்னாட்டு பானங்களுக்கு டாட்டா உள்ளூர் குளிர்பானங்களுக்கு மவுசு: கோககோலா, பெப்சி திணறல்

மும்பை: பன்னாட்டு குளிர்பானங்களுக்கு இருந்து வந்த மவுசு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. மாறாக, உள்ளூர் குளிர் பானங்களுக்கு மக்கள் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. குளிர்பானங்கள் என்றாலே, பெப்சி, கோககோலா என்றாகி விட்ட காலம் போய், சமீப காலமாக பன்னாட்டு பானங்களை குடிப்போர் எண்ணிக்கை சரிந்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்டுள்ள குளிர்பான வர்த்தகத்தில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களில் கோலா பங்கு 49 சதவீதம், பெப்சி பங்கு 19.6 சதவீதமாக இருந்தது. இதில் இப்போது உள்ளூர் குளிர்பானங்கள் பங்கு 24 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பன்னாட்டு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது. தமிழகத்தில் காளிமார்க் குரூப் தயாரித்து வெளியிடும் பவன்டோ குளிர்பானம், சிறிய நகரங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பன்னாட்டு பானங்கள் குடிக்க மக்கள் தயாரில்லை. ‘இதுவரை தமிழகத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த குளிர்பானம் இப்போது தென் மாநிலங்களில் விற்பனை செய்ய துவங்கியுள்ளது.காளிமார்க் குரூப் இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறுகையில்,..
                 

புதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்

சென்னை: ஹோண்டா நிறுவனம்,  125 சிசி மோட்டார் பைக்கை புதிய மேம்படுத்தப்பட்ட வாகனத்தை ஷைன் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.  அடுத்த தலைமுறை வாகனம் ஷைன் விலை ரூ67, 857.  புதிய அம்சங்கள் நிறைந்த ஹோண்டா ஷைன் பிஎஸ் -6 வாகனம் இப்போது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் 14 சதவீத கூடுதல் மைலேஜ் அம்சங்களுடன் வருகிறது. இதில் பொருத்தப்பட்ட 125 சிசி இன்ஜின், ஈஎஸ்பி (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) மூலம் இயக்கப்படுகிறது மேலும், பி.எஸ்.-6  ஷைன் வாகனம், புதிய தொழில்நுட்பத்துடன் 14 சதவீதம் அதிக மைலேஜ் தருகிறது. புதிய 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மென்மையான மற்றும் திறன் வாய்ந்த சவாரியை வழங்குகிறது. புதிய டிசி ஹெட்லேம்ப் வசதியானது, மெதுவான வேகத்தில் செல்லும்போதும் மற்றும் இரவு சவாரிக்கும் நீடித்த வெளிச்சத்தை வழங்குகிறது. புதிய இஞ்சின் ஸ்டார்ட் செய்ய, நிறுத்த ஒற்றை சுவிட்ச்; புதிய ஒருங்கிணைந்த ஹெட்லேம்ப் பீம் & பாஸிங் சுவிட்ச்  ஆகிய இரு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த ஒற்றை சுவிட்ச் வசதி உண்டு. சிறப்பு 6 ஆண்டு உத்தரவாத தொகுப்பு: ஷைன் பி.எஸ்.-6 வாகனங்கள், டிரம் & டிஸ்க் என இரண்டு வகைக..
                 

இனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஏடிஎம்.களில் பணம் எடுக்க மீண்டும் கட்டுப்பாடு வருகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கும் சலுகை பறிக்கப்படுகிறது. கட்டணமும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏடிஎம்.மில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடு இருந்தது. குறிப்பிட்ட தடவைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்.களில் பணம் நிரப்பும் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஏடிஎம்களில் அடிக்கடி பணம் நிரப்ப வேண்டியிருப்பதாலும், பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பதாலும் கட்டணத்உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இப்போது ஏடிஎம்.மில் ஒரு முறை பணம் எடுத்தால், ஏடிஎம் நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட வங்கி 15 ரூபாய் வீதம் கட்டணம் தர வேண்டும். இந்த கட்டணம் போதாது  என்று கூட்டமைப்பு கூறி வருகிறது. இது குறித்து ஆராய ரிசர்வ் வங்கி ஒரு உயர் கமிட்டியை அமைத்..
                 

ரொம்ப ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு தங்க விலை .. சவரன் ரூ.32,576க்கு வந்துருச்சு.. உயர்வுக்கு என்னதான் காரணம் ? : பரிதாபத்தில் நடுத்தர மக்கள்

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 168 உயர்ந்து ரூபாய் 32 ஆயிரத்து 576க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்க விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். நேற்று ரூ.4000ஐ தாண்டிய கிராமின் விலை, இன்று  ரூபாய் 21 உயர்ந்து, ரூபாய் 4,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கலக்கமடைய செய்துள்ளது. விலை உயர்வுக்கான 3 காரணங்கள் *கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பல  நாடுகளில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அதனால் உற்பத்தி துறையை சார்ந்த பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. *இரண்டாவதாக, இந்த ஆண்டு இறுதியில் அதாவது, நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.அதுவரை அமெரிக்காவில் பங்கு சந்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. அதனால், அங்குள்ள முதலீட்டாளர்களும், தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்திரு..
                 

இதுவரை இல்லாத அளவுக்கு கடும் உயர்வு தங்கம் கிராம் ரூ.4000 தாண்டியது

* சவரன் ₹32 ஆயிரத்தை எட்டியது * நடுத்தர மக்கள் கலக்கம்சென்னை: வரலாற்றில் முதல் முறையாக தங்கம் சவரன் நேற்று ₹32,408க்கு விற்பனையானது. கிராம் ₹4 ஆயிரத்தை கடந்தது. வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கலக்கமடைய செய்துள்ளது. தங்கம் விலையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது.புத்தாண்டு தினத்தன்று சவரன் ₹29,880க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி சவரனுக்கு ₹632 அதிகரித்து ஒரு சவரன் ₹30,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ₹31,216க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி ஒரு சவரன் ₹31,408, 19ம் தேதி ₹31,720க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹3,978க்கும், சவரன் ₹31,824க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ₹71 அதிகரித்து ஒரு கிராம் ₹4,051க்கும், சவரனுக்கு ₹584 அதிகர..
                 

இதுவரை 2 லட்சம் தாண்டியது இந்திய ஐடி நிறுவனங்களில் அமெரிக்கர்கள் அதிகரிப்பு

பெங்களூரு: பிரபல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களில் அமெரிக்க இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு அளிப்பது அதிகரித்து வருகிறது. நான்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டும் 2 லட்சம் பேர்  இதுவரை பணியில் உள்ளனர். இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் டிசிஎஸ், இன்போசிஸ், காக்னிசன்ட்,  எச்சிஎல் போன்றவற்றின் கிளைகள் அமெரிக்காவில் உள்ளன. இவற்றில் இதுவரை இந்திய  இளைஞர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து  அனுப்பப்படும்  எல்லாரும் எச்1பி உட்பட சில விசாக்கள் மூலம் தான் அமெரிக்காவில் பணியாற்ற முடியும். அந்த விசா காலம் முடிந்து விட்டால், அவர்கள் பணி நீடிக்க விசா காலமும் நீட்டிக்கப்பட வேண்டும். இதை  அமெரிக்க குடியேற்ற துறை அங்கீகரிக்க வேண்டும். அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், இந்தியர்களுக்கு சலுகை அளிக்கப்படும். எச்1பி மற்றும் கிரீன் கார்டு விஷயத்தில் தாராளமாக செயல்படுவோம் என்று சொன்னாலும், எல்லாம் காற்றோடு போய் விட்டது. அமெரிக்காவில் கிளைகளை கொண்டுள்ள பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்திய இளைஞர்களை அனுப்ப  முடியாமல் விசா பிரச்னைகளால் தவிக்கின்றன. இதனால், பிர..
                 

இரக்கமே இல்லாமல் அடிச்சு தூக்கிய தங்கத்தின் விலை : வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.32,096க்கு விற்பனை : கவலையில் பெண்கள்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. அங்குள்ள தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.  சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு 24 உயர்ந்து 3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று முன்தினம் கிராமுக்கு 39 உயர்ந்து 3,965க்கும், சவரனுக்கு 312 அதிகரித்த..
                 

ஏஜிஆர் கட்டண பாக்கியில் 1,000 கோடி செலுத்தியது வோடபோன்

புதுடெல்லி: ஏஜிஎஸ் கட்டண பாக்கியில் 2வது தவணையாக 1,000 கோடியை வோடபோன் - ஐடியா நிறுவனம் நேற்று செலுத்தியது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு மற்றும் அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 1.47 லட்சம் ஏஜிஆர் நிலுவை முழுவதையும் அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் செலுத்த உத்தரவிட்டது.ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி வோடபோன் ஐடியா 2,500 கோடி, ஏர்டெல் 10,000 கோடி, டாடா குழுமம் 2,190 கோடி செலுத்தின. இந்நிலையில், 2வது தவணையாக கட்டண பாக்கியில் 1,000 கோடியை வோடபோன் ஐடியா நிறுவனம் நேற்று செலுத்தியதாக, தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுவரை ஏஜிஆர் கட்டணமாக 16,000 கோடி செலுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் இன்னும் ஒரு வாரத்தில் செலுத்த உறுதி அளித்துள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச ..
                 

அடுத்த மாதம் காஸ் சிலிண்டர் விலை குறையுமா? : தர்மேந்திர பிரதான் பதில்

ராய்ப்பூர்: காஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையலாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து, தொடர்ந்து 6 மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்துள்ளது. இதில், அதிகபட்சமாக கடந்த 12ம் தேதி சென்னையில் மானியமற்ற சிலிண்டர் 147 அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக 14.2 கிலோ சிலிண்டரின் விலை நடப்பு மாதத்துக்கு டெல்லியில் 144.50 உயர்த்தப்பட்டு 858.50 ஆகவும், சென்னையில் 147 உயர்த்தப்பட்டு 881 ஆகவும், கொல்கத்தாவில் 149 உயர்த்தப்பட்டு 896 ஆகவும், மும்பையில் 145 உயர்த்தப்பட்டு 829.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர் 226.50 உயர்த்தப்பட்டு 1,589.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,466 ஆக உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது, ‘‘காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால்தான் இந்த மாதம் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், அடுத்த மாதம் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன’’ என்றார்...
                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கு விற்பனை

                 

பிப்ரவரி-20: பெட்ரோல் விலை 74.68, டீசல் விலை ரூ.68.27

                 

31,720க்கு விற்பனை தங்கம் சவரனுக்கு 312 அதிகரிப்பு: 2 நாட்களில் 514 எகிறியது

சென்னை: ஆபரண தங்கம் சென்னையில் நேற்று 2வது நாளாக உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு 312 உயர்ந்து, சவரன் 31,720 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு 514 அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  இதன் எதிரொலியாக சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு ₹24 உயர்ந்து ₹3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது. கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையால் சர்வதேச சந்தையி..
                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை

                 

பிப்ரவரி-19: பெட்ரோல் விலை 74.68, டீசல் விலை ரூ.68.27

                 

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி மருந்துகள் விலை 70% வரை உயர்வு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய தொழில்துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மருந்து துறையில் மூலப்பொருட்கள் தேவைக்கு 70 சதவீதம் சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதங்கள் வரை உள்ளது. ஆனால், சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வலி நிவாரணி, காய்ச்சல், தலைவலி, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் வரும் 20ம் தேதி வரைதான் இருப்பு உள்ளன. இதே நிலை நீடித்தால், இந்த மருந்துகளின் வலை உயரவும் வாய்ப்புகள் உள்ளன’ என இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) தெரிவித்திருந்தது.இந்நிலையில், கொரோனா வைரசால் இந்திய மருந்து துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு, கொரோனா வைரசால் இந்திய மருந்து துறையில் தட்டுப்பாடு ஏற்படும் நிமோனியா, நோ..
                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு: சவரன் ரூ.31,408-க்கு விற்பனை

                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனை

                 

கொரோனாவால் தட்டுப்பாடு ஏற்படும் அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்: பதுக்கலை கண்காணிக்க நிபுணர்கள் குழு பரிந்துரை

புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரசால் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தில் உள்ள 12 அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எந்தெந்த மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பட்டியலிட்டுள்ள நிபுணர்கள் குழு, பதுக்கலை தடுக்க கண்காணிப்பு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமாக பாதிக்கப்பட்ட துறைகளில் மருந்து துறையும் ஒன்று. கொரோனா வைரசால் தொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் மருந்து உற்பத்திக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் தேவைக்கு 70 சதவீதம் சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.  சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதங்கள் வரை உள்ளது. ஆனால், சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வலி நிவாரணியாக பயன்படும் புரூபன், வலி நிவாரணி மற்றும் காய்ச்சல், தலைவலி, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்த..
                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு: சவரன் ரூ.31,216-க்கும் விற்பனை

                 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.104 குறைவு

                 

வரவேற்பு இல்லை; செலவும் அதிகம் மலிவு ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்த திட்டம்

புதுடெல்லி: 5,000க்கு கீழ் உள்ள மலிவு விலை ஸ்மார்ட்போன் உற்பத்தியை கைவிட பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.சாதாரண போன் வைத்திருப்பவர்களை ஸ்மார்ட்போனுக்கு மாற ஈர்க்கும் வகையில் மலிவுவிலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றின் தொடக்க விலை 5,000க்கும் கீழ்தான் இருக்கும். முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்குவோர் பெரும்பாலும் இந்த மலிவு போன்களைத்தான் வாங்க துவங்கினர்.ஆனால், 4ஜி இலவச சேவை அறிமுகமான பிறகு, உயர்ரக ஸ்மார்ட்போன்களை நோக்கி மக்கள் நகர தொடங்கி விட்டனர். இதனால், மலிவு விலை போன்களின் தேவை குறைந்து விட்டது. இதுகுறித்து மொபைல் உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது;கடந்த 2018ல், 5,000க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் விற்பனை 25 சதவீதம் சரிந்து விட்டது. கடந்த ஆண்டில் இந்த சரிவு 45 சதவீதம் ஆகிவிட்டது. இந்த ஆண்டில் மேலும் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த மலிவு போன்கள் பங்களிப்பு கடந்த ஆண்டில் 4 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டில் 2 சதவீதமாக சரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 2018ல் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை ..
                 

பிப்-16: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.32

                 

பிப்-15: பெட்ரோல் விலை ரூ. 74.73, டீசல் விலை ரூ.68.40

                 

தொடர்ந்து 6வது மாதமாக ஏற்றுமதி கடும் சரிவு

புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 6வது மாதமாக கடந்த ஜனவரியிலும் சரிவை சந்தித்துள்ளது.  ஜனவரியில் ஏற்றுமதி, இறக்குமதி விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 1.66 சதவீதம் சரிந்து, 2,567 கோடி டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதாவது தொடர்ந்து 6வது மாதமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.  இதுபோல், இறக்குமதியும் குறைந்துள்ளது. கடந்த ஜனவரியில் இறக்குமதி 4,114 கோடி டாலராக உள்ளது. இது 0.75 சதவீதம் சரிவாகும். இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,505 கோடி டாலராக உள்ளது.   நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஏற்றுமதி 1.93 சதவீதம் சரிந்து 26,526 கோடி டாலராக உள்ளது. இறக்குமதி 8.12 சதவீதம் சரிந்து 39,853 கோடி டாலராக உள்ளது. வர்த்தக பற்றாக்குறை 13,327 கோடி டாலராக உள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது...
                 

3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு

சென்னை: தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை நேற்று மீண்டும் சவரனுக்கு 216 அதிகரித்தது. சவரன் 31,000ஐ தாண்டியது. அட்சய திருதியை  சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது.  கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் 29,880 ஆக இருந்தது. சில நாட்களிலேயே கிடுகிடுவென உயர்ந்து 31,000ஐ தாண்டியது. பின்னர் சற்று சரிந்து கடந்த 1ம் தேதி 31,376க்கு விற்கப்பட்டது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களில் 288 சரிந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் கிராமுக்கு 27 அதிகரித்து 3,889க்கும், சவரனுக்கு 216 உயர்ந்து 31,112க்கும் விற்பனையானது. சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் நேற்று 1,574 டாலராக அதிகரித்து விட்டது.  இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘சர்வத..
                 

ஆன்லைன் நிறுவனங்களுக்கு பியூஷ் கோயல் எச்சரிக்கை

புதுடெல்லி:  புதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் ₹5,000 கோடியாக உள்ளது. அந்த நிறுவனம் ₹6,000 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பது குறித்து தனது அமைச்சகம் உன்னிப்பாக ஆய்வு செய்யும். இந்தியாவில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்...
                 

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 106 புள்ளிகள் குறைந்து 41, 459-ல் வர்த்தகம் நிறைவு

                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 அதிகரித்து ரூ.3,888க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.49.60க்கு விற்பனை செய்யப்படுகிறது...
                 

15 நாட்களுக்கு பாஸ்டேக் இலவசம்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் 15 முதல் நாடு முழுவதும் 527 சுங்கச்சாவடிகளில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், பாஸ்டேக் பயன்படுத்தாத வாகனங்களுக்கு 2 மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய  அரசு எச்சரித்திருந்தது. சுங்கச்சாவடிகளில் 75 சதவீத பாதைகள் பாஸ்டேக் முறைக்கு மாற்றப்பட்டு விட்டன. 25 சதவீத பாதைகள் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில சுங்கச்சாவடிகளில்  பாஸ்டேக் முறைக்கு மக்கள் மாறவில்லை. இதை தொடர்ந்து, இந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடி  கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், வரும் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை பாஸ்டாக் கட்டணம் 100 தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே, வாகனம் வைத்திருப்போர் ஆர்சி புத்தகத்தை காண்பித்து, அந்த வாகனத்துக்கான  பாஸ்டேக்கை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்’’ என அறிவித்துள்ளது...
                 

ரொம்ப மூட்டை முடிச்சோட ரயிலில் பயணம் போகாதீங்க...அதிக லக்கேஜூக்கு கூடுதல் கட்டணம்

* தேஜஸில் விரைவில் அமலுக்கு வருகிறது* பிற ரயில்களுக்கும் கொண்டுவர திட்டம்?* ஏசி சேர் கார் பயணி ஒருவர் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.* ஆனால், டிரங்க், சூட்கேஸ் மற்றும் பெட்டிகளின் வெளிப்புற அளவு 100 செ.மீ. நீளம், 60 செ.மீ. அகலம், 25 செ.மீ. உயரத்துக்குள்தான் இருக்க வேண்டும். இவற்றை மட்டுமே பயணிகள் பெட்டியில் அனுமதிப்பார்கள்.* மேற்கண்ட அளவுக்கு மேல் இருந்தால் பிரேக் வேனுக்கு அந்த லக்கேஜ்கள் மாற்றப்படும். * கூடுதல் லக்கேஜ்களுக்கு ஒரு பயணிக்கு சுமார் 109 வசூலிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது.புதுடெல்லி: விமானங்களை போல ரயிலில் அதிக லக்கேஜூக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை - அகமதாபாத் தேஜஸ் ரயிலில் முதல் கட்டமாக இது நடைமுறைக்கு வர உள்ளது.  ரயில்வே துறை நஷ்டத்தில்  இயங்குவதாக கூறி வரும் மத்திய அரசு, வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதோடு தனியார் மயம் ஆக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட  உள்ளன.  இதுபோல், லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. மும்பை ..
                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.30,912க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.30,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.3,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது...
                 

தங்கம் 2 நாளில் ரூ.208 குறைந்தது

சென்னை: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக சரிந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.152 குறைந்து ரூ.30,976 க்கு விற்கப்பட்டது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர், ஈரான் தாக்குதல் போன்றவற்றால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கொரோனா வைரசால் சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டு விட்டன. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு அதிகரித்ததால் கடந்த வார இறுதியில் தொடர்ந்து 3 நாட்களில் ஒரு சவரன் ரூ.448 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.56 குறைந்தது. நேற்றும் ரூ.152 குறைந்து ஒரு சவரன் ரூ.30,976 க்கும், கிராம் ரூ.3,872க்கும் விற்பனையானது. தொடர்ந்து 2 நாளில்  ரூ.208 குறைந்துள்ளது...
                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

                 

ஆய்வில் தகவல் பண வீக்கம் மேலும் உயரும்

புதுடெல்லி: பண வீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கையும் தாண்டி விட்டது. இதற்கு முக்கிய காரணம் உணவு பொருட்கள் விலை உயர்வுதான். கடந்த 2014 டிசம்பரில் சில்லறை விலை பண வீக்கம் 7.35 சதவீதமாக இருந்தது. இதுவே அதிகபட்ச உயர்வாக கருதப்பட்டது.  இந்நிலையில் ஜனவரி மாத பண வீக்கம் தொடர்பான ஆய்வை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. இதில் பங்கேற்ற பொருளாதார நிபுணர்களில் பலர், ஜனவரி மாத சில்லறை விலை பண வீக்கம் கடுமையாக உயரும். 7.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளதால், பண வீக்கம் உயர்வது தவிர்க்க முடியாதது என அவர்கள் கூறியுள்ளனர். பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பண வீக்கம் 5 சதவீதத்துக்குள் வந்தால் மட்டுமே மீண்டும் கடன் வட்டி குறைப்பு சாத்தியமாகும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்...
                 

பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் பம்ப் செட் உற்பத்தி கடும் வீழ்ச்சி: சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி தர கோரிக்கை

கோவை: தொழில்நகரமான கோவையில் பம்ப் செட் மற்றும் அதுசார்ந்த இஞ்சினியரிங், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அதிகளவில் இயங்கிவருகின்றன. இந்திய அளவில் ஒட்டுமொத்த பம்ப் செட் உற்பத்தியில் சுமார் 70 சதவீத அளவிற்கான பங்களிப்பை கடந்த காலங்களில் கோவையை சேர்ந்த நிறுவனங்கள் வழங்கி வந்தன. கோவையை பொறுத்தவரை 50க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் பம்ப் செட் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்படும் பம்ப் செட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல பம்ப் செட் உற்பத்தியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சார்பு மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி வாய்ப்பை பெற்று வருகின்றனர். சிறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்ப் செட்கள் தமிழகத்திலும், குறு நிறுவன பம்ப் செட்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், நடுத்தர நிறுவன பம்ப் செட்கள் வடமாநிலங்களிலும் பெருமளவு சந்தைப்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்க..
                 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.31,080-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.31,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 குறைந்து ரூ.3,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் அதே விலையில் ரூ.49.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.49,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது...
                 

3 மாத இடைவெளியில் வரி சீரமைப்பு இருக்காது: இனி ஆண்டுக்கு ஒரு முறைதான் ஜிஎஸ்டி மாற்றம்: நிர்மலா சீதாராமன் பேட்டி

புதுடெல்லி,: ஜிஎஸ்டி வரி இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் அறிவிக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் மற்றும் திட்டங்கள் தொழில்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வர்த்தக அதிபர்கள், தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் துறையினர், பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த உள்கட்டமைப்பு திட்டம், எல்ஐசி பங்குகள் விற்பனை மற்றும் வேளாண் துறை தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை பிகர்ந்து கொண்டனர். அதோடு, டிடிஎஸ் உள்ளிட்ட வரி அறிவிப்புகள் தொடர்பாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தொழில்துறையினருடன் மத்திய அரசு எப்போதும் தொடர்பில் இருக்க விரும்புகிறது. வரி நிர்வாகத்தை பொறுத்தவரை புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வரி செலுத்துவோர் நேரில் வராமலேயே விளக்கம் அ..
                 

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்!

மும்பை: 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக 2,000. 500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதில் 2,000 ரூபாய் நோட்டுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதற்கு சில்லரை கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பி.டி.கிருஷ்ணன், ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டை கொண்டு வந்தது. ஆனால் அந்த நோட்டை மாற்றுவது என்பது பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ..
                 

மக்களை ஏமாற்றும் 600 பிராடு ‘ஆப்’களுக்கு திடீர் தடை: கூகுள் அதிரடி

நியூயார்க்: பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து வந்த 600 ‘ஆப்’களை தடை செய்து கூகுள் தன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி விட்டது. கூகுள் பிளே ஸ்டோரில் லட்சக்கணக்கான ‘ஆப்’கள் உள்ளன. ஆப்கள் எந்த வகையிலும் பாதிக்கும் வகையிலோ, மோசடித்தனமாகவோ இருக்க கூடாது. இதற்காக தான் நாங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமீபத்தில் எடுத்த கணக்கு படி, 600 ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து உடனே நீக்கப்பட்டன’ என்று கூகுள் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ‘கூகுள் பிளே ஸ்டோரில் போடப்படும் ஆப்களை கண்காணிக்க கூகுள் ஆட் மேனேஜர், கூகுள் ஆட்மாப் என்று இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன. அவ்வப்போது இந்த பிரிவுகள் ஆப்களை ஆராய்ந்து, அவை மக்களுக்கு பயன் உள்ளதா என்று உறுதி செய்யும்’ என்று கூகுள் அதிகாரி பெர்  ஜோர்க் கூறினார். தடை செய்யப்பட்ட சில ஆப்கள் சீனாவில் இருந்து வெளியானவை என்று தெரியவந்துள்ளது. சீடா மொபைல் கம்பெனி வெளியிட்ட ஆப் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்தது. அந்த ஆப் தான் இப்போது தடை செய்யப்பட்ட ஆப்களில் முக்கியமானது என்று கூறப்படுகிறது. ‘ஆப்’ வைக்கும் ஆப்கள்கவர்ச்சி விளம்பரங்களை தாங்கி வரும் ஆப்கள் தான் ..
                 

கொஞ்சம் ஓவராதான் போய்ட்டு இருக்கு... விண்ணை பிளந்த தங்கத்தின் விலை : சவரன் ரூ.32,408க்கு வந்துருச்சு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக உள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. அங்குள்ள தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.  சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது.ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு 24 உயர்ந்து 3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று முன்தினம் கிராமுக்கு 39 உயர்ந்து 3,965க்கும், சவரனுக்கு 312 அதிகரித்த..
                 

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,626 டாலரை தொட்டதை அடுத்து சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்க் ரூ.4,012க்கும், ஒரு சவரன் ரூ.32,096க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
                 

மீண்டும் புதிய உச்சம் ஒரு சவரன் தங்கம் 32,000ஐ நெருங்கியது : 3 நாளில் 608 உயர்ந்தது

புதுடெல்லி: சென்னையில் தங்கம் நேற்று சவரனுக்கு 104 அதிகரித்து 31,824 என்ற புதிய உச்சத்தை எட்டியது தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு 608 அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. அங்குள்ள தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.  சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு 24 உயர்ந்து 3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று முன்தினம் கிராமுக்கு 39 உ..
                 

விளைச்சல் குறைவால் ரோஸ் பூக்கள் விலை உயர்வு: கிலோ ரூ150க்கு விற்பனை

சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, ஊசிமல்லி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி, சம்பங்கி, காக்கட்டான், கனகாம்பரம், ரோஜா உள்பட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பனமரத்துப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி,  கம்மாளப்பட்டி, குரால்நத்தம், சாமகுட்டப்பட்டி, தும்பல்பட்டி ஆகிய  பகுதிகளில் பட்டு ரோஸ், பன்னீர் ரோஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வஉசி பூ மார்க்கெட், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ரோஸ் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ30 முதல் ரூ40க்கு விற்ற ரோஸ் பூக்களின் விலை  அதிகரித்து இன்று காலை நிலவரப்படி ரூ150 என உயர்ந்துள்ளது. மழை இல்லாததால் ரோஸ் விளைச்சல் குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்...
                 

கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு எதிரொலி : ரூ.32,000ஐ நெருங்குகிறது தங்கம் விலை; 3 நாட்களில் சவரன் 634 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.52.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதே இதற்கு காரணம். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  இதன் எதிரொலியாக சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,39..
                 

மிக குறைந்த சல்பர் அளவுடன் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1 முதல் விற்பனை: எண்ணெய் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: தரம் உயர்த்தப்பட்ட பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கேற்ப தரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் அன்றைய தினம் முதல் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.  வாகன மாசுவை குறைக்கும் வகையில் சர்வதேச தர நிலைக்கு ஏற்ப பிஎஸ் 6 தர வாகனங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  எனவே, பிஎஸ் 6 ரக எரிபொருட்கள் விற்பனையும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் துவக்க வேண்டும். இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) தலைவர் சஞ்சீவ் சிங் கூறியதாவது:   எரிபொருள் சந்தையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்களிப்பு ஏறக்குறைய 50 சதவீதமாக உள்ளது. பிஎஸ்6 தர நிலை இன்ஜின்களுக்கான பெட்ரோல், டீசலில் சல்பர் அளவு மிக மிக குறைந்த அளவுதான் இருக்கும். அனைத்து நிலையங்களுக்கும் அடுத்த சில வாரங்களில் இருந்து பிஎஸ் 6 தர பெட்ரோல், டீசல் அனுப்பும் பணி துவங்கும். எனவே, அனைத்து நிலையங்களிலும் முழுமையாக இந்த எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.  எரிபொருளில் சல்பர் அளவு ..
                 

நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டா கனியாகும் தங்க நகைகள் : சவரன் ரூ.31,720-க்கு வந்துருச்சு ; கவலையில் பெண்கள்

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.இந்நிலையில், கடந்தசில நாட்களாக சரிந்து வந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.51.80க்கு விற்பனை ..
                 

முன்னாடிலாம் பொன் கிடைத்தாலும் புதன் தான் கிடைக்காது...ஆனால் இனி பொன்னும் கிடைக்காது போல.. ஒரு சவரன் தங்கம் ரூ.31,624க்கு வந்துருச்சு

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.216 உயர்ந்து ரூ.31,624-க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.இந்நிலையில், கடந்தசில நாட்களாக சரிந்து வந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.28 உயர்ந்து ரூ.3,953-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.31,624-க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்குரூ.1 உயர்ந்து ரூ.51.60க்கு விற்பன..
                 

3 ஆண்டில் 35,000 ஊழியர்களுக்கு கல்தா : எச்எஸ்பிசி வங்கி அதிரடி

ஹாங்காங்/லண்டன்: சர்வதேச அளவில்  எச்எஸ்பிசி வங்கி ரூ.7 லட்சம் கோடி  முதலீட்டை முடிவு செய்துள்ளது. 3 ஆண்டுகளில் 35,000 பேரை பணி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எச்எஸ்பிசி வங்கி, ஆசிய நாடுகளில் உள்ள தனது கிளைகளை எல்லாம் ஹாங்காங்கில் உள்ள தலைமையகம் மூலம் இயக்கி வருகிறது. கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கிடியில் சிக்கி எச்எஸ்பிசி வங்கி தடுமாறியது. இதையடுத்து, தனது தனியார் வங்கி சேவை கிளைகள் மற்றும் முதலீடு தொழில்களை ஒன்றாக இணைத்து நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னர், அதுபோன்ற ஒரு நிலை வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் வங்கியின் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுபோல் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் இங்கிலாந்தின் முடிவால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற வங்கிகளுடன் போட்டி போட்டு தொழில் செய்வது பெரும் சவாலாக மாறியது. இதையடுத்து, தனது முதலீட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் (ரூ.7 லட்சம் கோடியை) திரும்பப் பெறவும், தனது மொத்த வங்கி ஊழியர்கள் 2,35,000 பேரில் சுமார் 2 லட்சம் ப..
                 

விலையேற்றத்தின் ஆட்டம் ஆரம்பம்.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.31,408-க்கு விற்பனை

சென்னை: கடந்த ஒருவாரமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.31,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக நிலையில்லாத தன்மை காணப்படுகிறது. மாதத்தில் சில நாட்கள் குறைந்தும்,  பல நாட்களில் விலை அதிகரித்த வண்ணமும் உள்ளது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி 22 காரட் தங்கம் கிராம் ரூ3,832க்கும், ஒரு சவரன்  தங்கம் 30,896க்கும் விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றம்கண்டு வந்தது. தங்கத்தின் விலை பிப்ரவரி 15ம் தேதி, அதிகபட்சமாக உயர்ந்து சவரன் 31,392 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று சற்றே விலை குறைந்து  ஒரு கிராம் ரூ3,902க்கும் சவரன் ரூ31,216க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை  சவரனுக்கு ரூ88 உயர்ந்து ரூ31,304க்கும் கிராம் ரூ3,913க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.31,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம்  ரூ.3,926-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.50.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த வ..
                 

விலையேற்றம் தொடங்கிருச்சு : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,913-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20காசுகள் உயர்ந்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கி..
                 

பிப்ரவரி-18: பெட்ரோல் விலை 74.68, டீசல் விலை ரூ.68.27

                 

மேக் இன் இந்தியா திட்டம் 30,000 கோடி மதிப்பு டெண்டர்கள் ரத்து

புதுடெல்லி: இந்திய நிறுவனங்கள் பங்கேற்ற இயலாத வகையில் வெளியிடப்பட்ட ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.இந்தியாவில் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் மேக் இன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் உற்பத்தியை ெசய்து வருகின்றன.  இந்நிலையில், இந்த திட்டத்தில் வந்த ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைப்பின் செயலாளர் குருபிரசாத் மகாபத்ரா கூறுகையில், ‘‘சில பாதகமான நடைமுறைகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஏறக்குறைய ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்துள்ளோம். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை லஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி துறை பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எளிய முறையில் தொழில் தொடங்குதல் மற்றும் அந்நிய நேரடி முதலீடு விதிகள் மாற்றம் செ..
                 

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்

                 

பிப்-17: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.32

                 

தனியார் திட்டங்களுக்கு வங்கிக்கடன் 10 ஆண்டுகளில் 57 சதவீதம் குறைந்தது

புதுடெல்லி: தனியார் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது கடந்த 10 ஆண்டுகளில் 57 சதவீதம் சரிந்துள்ளது ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டப்பணிகள் கிடப்பில் உள்ளன. அதோடு, பொருளாதார மந்தநிலை காரணமாக புதிய முதலீடுகளும் பெருகவில்லை. முதலீடுகள் மற்றும் திட்டங்களின் நிதி தேவைகளை வங்கிகள்தான் பெரும்பாலும் பூர்த்தி செய்கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகள் திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. கடந்த 2009-10 நிதியாண்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் சுமார் ₹4 லட்சம் கோடி. இது கடந்த 2018-19 நிதியாண்டில் 1.76 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. 2014-15 நிதியாண்டில் வங்கிகள் தனியார் நிறுவனங்களின் திட்ட முதலீடுகளுக்கு வழங்கிய கடன் ₹87,253 கோடி மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக குறைந்த பட்ச அளவாக கருதப்படுகிறது. கடந்த 2009-10 நிதியாண்டில் 729 திட்டங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் அனுமதி வழங்கியுள்ளன. இது 2018-19 நிதியாண்டில் 414 ஆக குறைந்து ..
                 

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று தா.பாண்டியன் ஆதரவு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று தா.பாண்டியன் ஆதரவு தெரிவித்துள்ளார். சிஏஏ-க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா இன்றுபட்டு இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்...
                 

அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மனு தள்ளுபடி: 1.47 லட்சம் கோடி செலுத்த கெடு: சாதாரண அதிகாரி நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிப்பதா என நீதிபதி கொந்தளிப்பு

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தீர்ப்பை தடை செய்யும் விதமாக உத்தரவு பிறப்பித்த அரசு அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டனர்.  புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. அதை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து கடந்த ஜனவரி 15ம் தேதி தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் 1.47 லட்சத்தை வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த உத்தரவிட்டது.  இதையடுத்து, கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரி வோடபோன், ஏர்டெல், டாடா டெலசர்வீசஸ் நிறுவனங்கள் மனு செய்தன. இது, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ..
                 

பிப்-14: பெட்ரோல் விலை ரூ. 74.73, டீசல் விலை ரூ.68.40

                 

ஜிஎஸ்டி செலுத்த தாமதம்: 46,000 கோடி அபராதம்: மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அதிரடி

‘‘அபராதம் ரொக்கமாக செலுத்துவதற்கு மட்டுமின்றி, முழு நிலுவை தொகைக்கும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்’’புதுடெல்லி: ஜிஎஸ்டி தாமதமாக செலுத்தியவர்களிடம் 18 சதவீத வட்டி மற்றும் தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, வட்டி 46,000 கோடி நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்க மத்திய மறைமுக வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள், ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.  தவறியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 அபராதமும், செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகைக்கு 18 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது. கடந்த 1ம் தேதிப்படி ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத, வரி செலுத்தாதவர்களிடம் வசூலிக்க வண்டிய வட்டி நிலுவை 46,000 கோடி என மத்திய மறைமுக வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.. இந்த தொகையை வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு இந்த ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு கள அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் எவ்வளவு வ..
                 

உலகின் பெரிய ஸ்டேடியம்: டிரம்ப் திறக்கிறார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகின் மிகப்ெபரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரிலான இந்த அரங்கில் மொத்தம் ஒரு லட்சத்து 10ஆயிரம் பேர் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம்.  இந்த அரங்கு முழுவதும் இரவை பகலாக்கும் ஒளிரும் மின்வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒளிரும் போது இந்த அரங்கில் எங்கும் நிழலையே பார்க்க முடியாதாம். சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில்,  இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்.24ம் தேதி திறந்து வைக்க உள்ளார்...
                 

நாமக்கல் மாவட்ட முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.10 ஆக விலை நிர்ணயம்

                 

சிண்டிகேட் வங்கி லாபம் 4 மடங்காக உயர்வு

சென்னை: சிண்டிகேட் வங்கியின் லாபம் 4 மடங்காக உயர்ந்துள்ளது.  பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி, டிசம்பருடன் முடிந்த 3வது காலாண்டில் 434.82 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. வங்கியின் வராக்கடன்  குறைந்ததால் இந்த லாபம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில்  இந்த வங்கியின் லாபம் 107.99 கோடியாக இருந்தது. தற்போது இந்த வங்கியின் வருவாய் 6,316 கோடி. இது முந்தைய ஆண்டில் ₹6,077 கோடியாக  இருந்தது. வங்கியின் வராக்கடன் விகிதம் 12.54 சதவீதத்தில் இருந்து 11.33 சதவீதமாக குறைந்துள்ளது. வராக்கடன் அளவு 25,330 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 26,184 கோடியாக இருந்தது. வராக்கடனுக்கு வங்கி ஒதுக்கிய  தொகை 1,286 கோடி. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒதுக்கீடு செய்த தொகை 909 கோடியாக இருந்தது என வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது...
                 

மும்பை பங்குசந்தை: சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயர்ந்து 41, 565-ல் வர்த்தகம் நிறைவு

                 

பிப்-12: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.50

                 

வராக்கடன் விவகாரம் பல வங்கிகளை முடக்கியுள்ளது: ஆக்சிஸ் வங்கி எம்டி தகவல்

மும்பை: ரியஸ் எஸ்டேட் துறையில் வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (டிஎச்எப்எல்0 நிறுவனத்தின் கடனால் பல வங்கிகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதனால், அரசு திட்டமிட்டுள்ள ரூ.100 லட்சம் கோடி அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை திரட்ட பெரும் சீர்திருத்தங்கள் தேவை என்று ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சவுத்ரி உரையாற்றினார். அப்போது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு முன்னேற்ற வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த லட்சியத்தை அடைய இந்தியாவில் சிரமங்களை சந்தித்து யார் முதலீடு செய்ய முன்வருவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 6 சதவீதமாக இருக்கும் என்று ஆக்சிஸ் வங்கியின் கணிப்பாக இருக்கிறது.திட்டங்களுக்கு தேவையான நிதி தொழில் முனைவோர், வங்கிகள், புதிய நிதி நிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்கள், இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய நிதி போன்றவற்றிடம் இருந்து வ..
                 

நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி!!.. இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை : சவரன் ரூ.176 குறைந்து ரூ.30,952க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.30,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.இந்நிலையில், இன்று விலையேற்றம் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.22 குறைந்து ரூ.3,869-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.30,952-க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.10 ரூபாயிலிருந்து 49.80 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, ஒரு கிலோ வ..
                 

பிப்-11: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.50

                 

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவு : ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அறிக்கை

புதுடெல்லி: கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு, பயணிகள் வாகன விற்பனை கடந்த ஜனவரியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. இதுபோல், பாதுகாப்பு விதிகள், பிஎஸ் 6 தர வாகனங்களுக்கு மாற வேண்டிய சூழ்நிலை போன்றவற்றால் மேலும் நிதிச்சிக்கலுக்கு இந்த துறை ஆளானது. அதிலும், பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வாகன டீலர் ஷோரூம்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதத்திலும் வாகன விற்பனை சரிந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகள் வாகனங்கள், வணிக பயன்பாட்டு வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டூவீலர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து கடந்த ஜனவரியில் 2,151,544 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜனவரியில் 2,405,883 ஆக இருந்தது.  வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் சரி..
                 

பிப்-10: பெட்ரோல் விலை ரூ.74.90, டீசல் விலை ரூ.68.72

                 

1,000 கோடி திரட்ட செயில் நிறுவனத்தில் 5% பங்கு விற்பனை

புதுடெல்லி: செயில் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை விற்று 1,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், செயில் நிறுவனத்தில் உள்ள அரசு பங்குகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலத்தில் செயில் நிறுவனம் இயங்குகிறது. பங்கு விற்பனை தொடர்பாக, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை நிறுவனம் மற்றும் ஸ்டீல் அமைச்சகங்களின் வட்டாரத்தில் கூறியதாவது: செயில் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளன. இதில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தற்போதைய சந்தை விலையின்படி கணக்கிட்டால், மத்திய அரசுக்கு 1,000 கோடி கிடைக்கும்.கடந்த வாரம் முடிவடைந்த பங்குச்சந்தை நிலவரங்களின்படி, செயில் நிறுவன பங்கு ஒன்றின் மதிப்பு 48.65 ஆக உள்ளது. இந்த பங்கு விற்பனையை நடப்பு மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கும் வகையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இதுபற்றி பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோன..
                 

Ad

பிப்-22: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.27

                 

இனி வங்கி ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காது

* வாங்கிக்கொள்ளப்படும்; தரப்பட மாட்டாது* 1ம் தேதி முதல் அமல்மும்பை: வங்கி ஏடிஎம்களில் இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காது என்று  இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இதுபோல, வங்கியில் ₹2 ஆயிரம் நோட்டுக்கள் பெறப்படும்; திரும்ப தரப்பட மாட்டாது; அதற்கு பதில், மற்ற ₹500, 200 மற்றும் 100 நோட்டுக்கள் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் இப்போதெல்லாம் ₹2000 நோட்டுக்கள் கிடைப்பதில்லை. அதனால் இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கி தடை செய்யப்போகிறதா என்று கூட பலரும் பேசி வருகின்றனர். உண்மையில், 2000 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் வைக்க வேண்டாம் என்றே வங்கிகள் அறிவுறுத்துவதாக தெரிகிறது.   இது தொடர்பாக இந்தியன் வங்கி  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏடிஎம்களில் ₹2000 நோட்டுக்களை பொதுமக்கள் விரும்பவில்லை. ஏடிஎம்களில் எடுத்தால், அவற்றை சாதாரணமாக கடைகளில் தந்து மாற்ற முடிவதில்லை. அவர்கள் பலரும்  வங்கி கிளைகளுக்கு சென்று மாற்றித்தருமாறு கேட்பது வாடிக்கையாகி  வருகிறது.இதை தடுக்கவே, படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் குறைத்து விடுவது..
                 

Ad

விழிபிதுங்க வைக்கும் தங்கத்தின் விலை: சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக உள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,051க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.52.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்...