Times Of India Indian Express Mid-Day Rediff IBNLive DNA ZeeNews The Hindu Career India NDTV FilmiBeat Business Standard

Bundesliga: Teenager Erling Haaland Scores 40th Goal of Season as Borussia Dortmund Go 2nd

a minute ago  
News / IBNLive/   
                 

La Liga 2019-20: Lionel Messi Scores Four as FC Barcelona Run Riot Against Eibar

a minute ago  
News / IBNLive/   
                 

Asian Wrestling Championship: Ravi Dahiya Wins Gold But Bajrang Punia Settles for Silver

a minute ago  
News / IBNLive/   
                 

ISL 2019-20: Late Goals Help ATK Get a Draw Against Bengaluru FC

a minute ago  
News / IBNLive/   
                 

Barcelona Spain Masters: Ajay Jayaram Crashes Out in Semi-final as Indian Challenge Gets Over

a minute ago  
News / IBNLive/   
                 

Dominic Thiem Loses Chance to Pass Roger Federer in ATP Rankings

a minute ago  
News / IBNLive/   
                 

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் குறித்து பொய் பிரசாரத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் நோக்கி வரும் 28ம் தேதி பேரணி: தமிழக பாஜ அறிவிப்பு

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: தமிழக பாஜ பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிக்கை: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஏஏ), தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) என்ற மூன்று திட்டங்களை பற்றியும் பொய்யான செய்திகளை பரப்புவதோடு, சிறுபான்மை மக்களிடம் பீதியை உருவாக்கி அவர்களை கொண்டு சட்டவிரோத போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். சிறுபான்மை மக்களிடமும், இளைஞர்களிடமும், மாணவர்களிடமும், குழந்தைகளிடமும் நஞ்சை விதைக்கிறார்கள். இதைக் கண்டு தமிழக மக்கள் வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களும் இந்திய குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த ஒரு இஸ்லாமியருக்கு கூட எந்தவித பாதிப்பும் இல்லை என்று மீண்டும், மீண்டும் தெரிவித்தும், திட்டமிட்டே இஸ்லாமிய மக்களை குழப்புகிறார்கள். எனவே, பொய்யான தகவல்களை பரப்பி, போலியான போராட்டங்களை உருவாக்கி, தமிழகத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் போராட்டங்களை தடை செய்ய வேண்டும். இந்து மதத்தை அவமதிக்கும் செயல்பாடுகளை கண்டித்தும், சட்டத்தை மீறுவோர் மீது ..
                 

விரைவில் கோடைகாலம் தமிழகத்தில் மின்தேவை அதிகரிக்க வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா அரசு?

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: விரைவில் கோடைகாலம் துவங்க உள்ளதால் மின்தேவை உயர்வதற்கான வாய்ப்புள்ளது. எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் மின்தேவையின் அளவு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2018ம் ஆண்டில் உச்சபட்ச மின்தேவையின் அளவு 15,440 மெகாவாட் அளவிற்கு இருந்தது. இது 2019ம் ஆண்டில் கோடைகாலம் துவங்குவதற்கு முன்னதாகவே உயர்ந்தது. அப்போது  16,000 மெகாவாட் என்ற அளவை தொட்டது. பிறகு 3.4.2019ம் ஆண்டு 16,151 மெகாவாட் என்ற உச்சபட்ச மின்தேவை ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டில் பலஇடங்களில் மின்தடை ேபான்ற பிரச்னை ஏற்பட்டது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் குறைவான அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் டிவி, குளிர்சாதனபெட்டி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக சாதனங்கள் பழுதடைந்தன. இதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் தினமும் 6 மணி நேரம் தொழிற்சாலைகளை ஜெனரேட்டர்  மூலம் இயக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியதாக தகவல் வௌியானது. இதுபோன்ற பிரச்னைகளால் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பை சந்தித்தனர். இந்நிலையில் நட..
                 

டாஸ்மாக் ஊழியர்கள் 27ம்தேதி ஆர்ப்பாட்டம்: 5 மண்டலங்களில் நடக்கிறது

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: பணி விதிகளை உருவாக்க வேண்டும், ஆய்வு நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி 5 மண்டலங்களில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, சங்கத்தின் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பார் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ம்தேதி வியாழக்கிழமை அன்று 5 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். 5 மண்டலங்களில் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது...
                 

உயர் நீதிமன்றம் அருகே பிரீ பெய்ட் கார் வசதி: வக்கீல்கள் கோரிக்கை

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரீ பெய்ட் கார் வசதி செய்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வக்கீல்களும், பொதுமக்களும், அதிகாரிகளும் வந்து செல்கிறார்கள். இவர்களுக்கு போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. எனவே, விமான நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ளதுபோல் பிரீ பெய்ட் கார் வசதி செய்து தர வேண்டும் என்று வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். பிரீ பெய்ட் கார் வசதிக்காக உயர் நீதிமன்றம் அருகே போதுமான இடவசதி உள்ளது என்றும் வக்கீல்கள் தெரிவித்து அமைச்சரிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். அவர்களிடம் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததாக வக்கீல்கள் தெரிவித்தனர்...
                 

மின்சார ரயில்கள் ரத்து

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி இடையே, வரும் 25ம் தேதி மற்றும் மார்ச் 6ம் தேதிகளில் இரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் எண்ணூர்- கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் இடையே, வரும் 25 மற்றும் மார்ச் 6ம் தேதி காலை 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி- எண்ணூர் இடையே ரத்து செய்யப்பட்டு, எண்ணூரில் இருந்து காலை 3.27 மணிக்கு புறப்படும். ஹஸ்ரத் நிஜாமுதீன்- பால்வால் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி காத்ரா- அந்தமான் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது...
                 

படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் நேர்மையான, விரிவான விசாரணை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவத்தில் நேர்மையான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சினிமா பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2  திரைப்படம் கமல் நடிக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.  இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. கடந்த 19ம் தேதி பாரம் தாங்காமல் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டிருந்த கிரேன் எதிர்பாராத விதமாக அறுந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படக் குழுவைச் சேர்ந்த மான்சிங், வாசு, ரம்ஜான், அருண்பிரசாத், குமார், கலைசித்ரா, குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை..
                 

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெப் தொடர்

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்க்கை, விளையாட்டு அனுபவங்களை விவரிக்கும் இணைய தொடரை கிரிக்பஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘ஸ்பைசி பிட்ச்’ என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த தொடரில் ஆர்.அஸ்வின், பூம்ரா, புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ் உட்பட முன்னணி கிரிக்கெட் நட்சரத்திரங்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள், சிறந்த வீரர்களாக மாறக் காரணமான உண்மைச் சம்பவங்களை விளக்குகிறார்கள். வீரர்களின் பயிற்சியாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் குறித்த காட்சிகளுடன், விறுவிறுப்பான விளையாட்டு காட்சிகளும் இடம் பெறும்.இந்த இணைய தொடரில் இதுவரை 20 பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் பார்க்க வசதியாக  முதல் பாகம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் புதிய பாகங்கள் வெளியிடப்படும் என்று கிரிக்பஸ் தெரிவித்துள்ளது...
                 

பிப்.24 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் 3000 கலைஞர்களை ஆக்ராவுக்கு அனுப்பியது உ.பி. அரசு

4 minutes ago  
News / தினகரன்/   
டெல்லி: பிப்ரவரி 24 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் 3000 கலைஞர்களை உ.பி. அரசு ஆக்ராவுக்கு அனுப்பியுள்ளது.  கெரியா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இடங்களை அழகுபடுத்தும் பணியில் 3000 கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் செல்லும் வழியில் 21 இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
                 

பன்முக திறமைக் கொண்ட அறிவாளி; சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலை நோக்கு சிந்தனையாளர்: பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி புகழாரம்

4 minutes ago  
News / தினகரன்/   
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் சிந்திக்கிறார், அதனை தேசிய அளவில் செயல்படுத்துகிறார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாடு மற்றும்  நீதித்துறையும் மாறும் உலகமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் எஸ்.ஏ.பாப்டே, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கள் பிரசாத், உச்சநீதிமன்ற  நீதிபதி அருண் மிஷ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில் உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், ஓர் உன்னத மனிதர் நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் ஒரு பல்துறை வித்தகர், பன்முக திறமைக் கொண்ட  அறிவாளி. சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலை நோக்கு சிந்தனையாளர்; அவரால் உலகளவில் சிந்தித்து தேசியளவில் அதனை நடைமுறைப்படுத்துகிறார். இத்தகைய கருத்தரங்கம் நடைபெறுவதற்கும், அதில் எவ்வாறான தலைப்புகள்  இடம்பெற வேண்டும் என கூறியவர் பிரதமர் மோடி. அதற்காக அவருக்கு என்னுடைய நன்றிகள்; காலாவதியான 1,500 சட்டங்களை நீக்கியதற்காக..
                 

இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை வருகை: சிஏஏ குறித்து மோடியுடன் பேச திட்டம்

4 minutes ago  
News / தினகரன்/   
புதுடெல்லி: இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை வருகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயணத்தில் பிரதமர் மோடியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உட்பட மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச  டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு, ஜனவரி 2்0ம் தேதி பதவியேற்றார். விரைவில் அவருடைய பதவிக்காலம் முடிகிறது. இருப்பினும், வரும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக 2வது முறையாக அவர் போட்டியிட உள்ளார். இதற்கான தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை வருகிறார். அவருடன் மனைவி மெலானியாவும் வருகிறார். ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நாளை பகல் 12.30 மணிக்கு வரும் அவரை, பிரதமர் மோடியே நேரில் சென்று வரவேற்கிறார். டிரம்ப்பை வரவேற்க அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்..
                 

உடைந்து போன எங்கள் நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா? அவர் வருவாரா?... ராகுல் மீண்டும் தலைவராக காங். நிர்வாகிகள் விருப்பம்

4 minutes ago  
News / தினகரன்/   
புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் தேசிய தலைவராக மீண்டும் ராகுலே பொறுப்பேற்க வேண்டுமென்பதே கட்சியில் பெரும்பாலானோரின் விருப்பம்’’ அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறி உள்ளார். மக்களவை தேர்தலில் 2வது முறையாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இதற்கிடையே, ராகுலே மீண்டும் தலைவராக வேண்டுமென கட்சியில் ஒரு தரப்பினரும், உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்ய வேண்டுமென மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதனால், கட்சியில் குழப்பநிலை நீடிக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் நேற்று அளித்த பேட்டி வருமாறு: காங்கிரஸ் ஓர் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சோனியா காந்தி தலைமையில் இருப்பதால், கட்சிக்கு தலைமைத்துவ நெருக்கடி எதுவும் இல்லை. இதற்கு முன் கட்சி தலைமையை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அது தேவையில்லை என கருதுபவர்களும் கட்சியில் இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை மீடியாக்களில் பேசுவது கட்சிக்கு உதவாது. காங்கிரசை தலைம..
                 

உபி.யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் டன் தங்கத்தின் மதிப்பு ரூ12 லட்சம் கோடி: உலக கையிருப்பில் 2வது இடத்தை இந்தியா பிடிக்கும்

4 minutes ago  
News / தினகரன்/   
சோன்பத்ரா: உத்தர பிரேதச மாநிலத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. இது, தற்போது இந்தியாவின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாகும். உ.பி.யின் சோன்பத்ரா மாவட்டத்தில் தங்கம் அதிகளவில் இருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் இதற்கான ஆய்வுப் பணிகளை தொடங்கினர். அதன் பிறகு, அது கிடப்பில் கிடந்தது. பின்னர், 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய புவியியல் ஆய்வுத் துறை மீண்டும் இந்த ஆய்வை தொடங்கியது. இந்நிலையில், சோன்பத்ரா மாவட்டத்தின் சோன் பகாதி, ஹர்தி பகுதிகளில் 3 ஆயிரம் டன் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட சுரங்க அதிகாரி கே.கே. ராய் கூறுகையில், ``கடந்த 1992-93ம் ஆண்டில் இந்திய புவியியல் ஆய்வுத் துறை இதற்கான பணியைத் தொடங்கியது. தற்போது சோன்பத்ரா மாவட்டத்தின் சோன் பகாதியில் 2,943.26 டன், ஹர்டி பகுதியில் 646.16 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த சர்வதேச மதிப்பு 12 லட்சம் கோடி. இந்த தங்க பாளங்களைத் தோண்டி எடுக்கும் பணிக்கான ஒப்பந்த புள்ளி விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் தற்போதைய தங்க கையி..
                 

மனநிலை பாதிப்பு சிகிச்சை கேட்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி: சிறை அதிகாரி கருத்தை ஏற்று நீதிபதி உத்தரவு

4 minutes ago  
News / தினகரன்/   
புதுடெல்லி: தனக்கு மனநிலை பாதித்துள்ளதால் அதற்கான சிகிச்சை அளிக்க உத்தரவிடும்படி கோரிய நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 2 முறை தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. ஆனால், இவர்கள் மறுசீராய்வு மனு, கருணை மனு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு வகைகளில் தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி தண்டனையை நிறைவேற்ற மீண்டும் தேதி குறிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தூக்கு கைதிகளில் ஒருவனான வினய் சர்மா, சிறையில் உள்ள சுவற்றில் தனது தலையை வேண்டும் என்றே மோதி காயத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளான். இந்திய தண்டனை சட்டப்படி, காயமடைந்த குற்றவாளியை தூக்கில் போட முடியாது. அதற்காக, இவன் இதை செய்துள்ளான். இதைத் தொடர்ந்து, இவனுடைய மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு விரிவான சிகிச்சை அளிக்கும்படியும் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் இவன் சார்பில் கடந்த 20ம் ேததி வழக்கு தொடரப்பட்டது.  இந்..
                 

துரைப்பாக்கத்தில் வாலிபர் அடித்து கொலை

4 minutes ago  
News / தினகரன்/   
துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன்(23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து காவல் நிலையத்தில கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு காரப்பாக்கம், ஓடையில் எலும்பு கூடாக ஒரு சடலம்  கிடப்பதாக, தகவல் வந்தது. இதனையடுத்து கண்ணகிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அவர் துரைப்பாக்கத்தில் மாயமான தேவநாதன் என்பது உறுதியானது. மேலும், பணப் பிரச்னை காரணமாக நான்கு பேர் கொண்ட கும்பல் அவருக்கு மது வாங்கி கொடுத்து, அடித்து கொலை செய்து ஓடையில் வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்...
                 

சென்னை கிரைம்

4 minutes ago  
News / தினகரன்/   
* விருகம்பாக்கம் காந்தி நகர் பெரியார் தெருவில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்ற சாலிகிராமம் தேவர் தெருவை சேர்ந்த அஜித்ராஜ் (21), ஆனந்தபாலன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.* அரும்பாக்கம் 100 அடி சாலை சந்திப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (21), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பிருந்தாவனம் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.* ஐசிஎப் காந்தி நகரை சேர்ந்த ஆழ்வாரம்மாள் (75), நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் 3வது மாடியில் நடந்து சென்றபோது, திடீரென தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இறந்தார். * ராமாபுரம் பூத்தப்பேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கட் ரெட்டி (25), நேற்று அதிகாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.5 ஆயிரம் மற்றும் 2 ஏடிஎம் கார்டுகளை பறித்து சென்றனர்...
                 

மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா

4 minutes ago  
News / தினகரன்/   
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே மகா சிவராத்திரியையொட்டி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா நேற்று நடந்தது. பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் குரும்பகவுண்டர் இனத்தின் குலதெய்வமான தொட்டம்மா சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று பக்தர்கள் தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், கோவிந்தபாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் கிராமங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நேற்று மாலை 5 மணிக்கு மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி கோயில்களில் அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க 3 ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்ட தேங்காய..
                 

ராமேஸ்வரம் கோயிலில் மாசி தேரோட்டம்

4 minutes ago  
News / தினகரன்/   
ராமேஸ்வரம்: மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று காலை சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று சுவாமி சன்னதியில் காலபூஜை முடிந்து காலை 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோயில் கிழக்கு நுழைவு வாயில் தேரடிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டதை தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேரோட்டம் துவங்கியது. கோயில் தக்கார் குமரன்சேதுபதி, இணை கமிஷனர் கல்யாணி ஆகியோர்  வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சிவ சிவா கோஷத்துடன் சுவாமி, அம்பாள் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் எழுந்தருளிய தேர் செல்ல தொடர்ந்து முருகன், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தேரில் ரதவீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோயில் உதவி கமிஷனர் ஜெ..
                 

காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: கதவணையில் மின் உற்பத்தி பாதிப்பு

4 minutes ago  
News / தினகரன்/   
ஈரோடு: காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கதவணையில் உள்ள அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி ஆற்று நீரை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதற்காக காவிரிகிராஸ், நெரிஞ்சிபேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, பெரியஅக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் உள்ளிட்ட இடங்களில் மின் உற்பத்தி  நிலையங்கள் உள்ளது. ஈரோடு அருகே வெண்டிபாளையத்தில் கடந்த 2011ம் ஆண்டு இந்த கதவணை கட்டப்பட்டு இங்கு 2 மெகா யூனிட்டுகளை கொண்டு தலா 15 மெகாவாட் வீதம் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 9  அடிக்கு மேல் தண்ணீரை தேக்கினால் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். வறட்சியான காலக்கட்டங்களில் கதவணைகளில் உள்ள ஷட்டர்கள் பழுது சீரமைக்கப்படும். ஆனால், தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளதால் வெண்டிபாளையம் கதவணையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் காவிரி ஆற்றில் தேவையான அளவு தண்ணீர் திறக்கப்பட்ட பிறகே மின் உற்பத்தி செய்யப்படும் என மின்வாரிய..
                 

பயமூட்டும் பாஸ்ட் புட் கடைகளால் அதிகரிக்கும் இயற்கை உணவகங்கள்: முன்னோர் வழியை நாடும் மனித குலம், விழிப்புணர்வும் அவசியம்

4 minutes ago  
News / தினகரன்/   
* குழந்தைகளுக்கு மந்த புத்தியை ஏற்படுத்தும் ‘ஜங்க் புட்’ * மலிவு விலை டேஸ்ட் மேக்கர்கள் கேன்சரை உருவாக்கும்ஆதிமனிதன் இயற்கையாக விளைந்த காய்,  கனிகளை பச்சையாக உண்டு வாழ்ந்தான். ஒரு கட்டத்தில் கற்களின் உரசலில் பறந்த  நெருப்பு பொறிகள் அதன் மீது பட்டதும் சுவையை உணர்ந்து சுவைக்க ஆரம்பித்தது மனிதகுலம். தொடர்ந்து விறகுகளை கூட்டி, தீமூட்டி காய்கறிகளை உண்ண ஆரம்பித்த  போதே, மனித வாழ்வின் இயல்பான வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இயற்கையாக விளைந்த காய்கறிகளும், கம்பு, சாமை, கேழ்வரகு, சோளம், கோதுமை, சாமை, குதிரைவாலி, திணை போன்ற உணவு ரகங்களும்  மண்பாண்டங்கள் மற்றும் விதம் விதமான பண்டம்,  பாத்திரங்களில் தயாரித்து உண்பது வழக்கமானது. இப்படிப்பட்ட சூழலில் நாகரீகம் என்ற பெயரில், தமிழகத்தில் கடந்த 1990ம் ஆண்டு வாக்கில் உணவு முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.  காலையில் இட்லி, தோசை, மதியம் சாம்பார், ரசம், மோர், பொரியலுடன் அரிசி  சாதம், இரவில் தோசை, சப்பாத்தி என்று உண்பதை வழக்கமாக்கினர் மக்கள். ஆனால் இந்த  உணவுமுறையும் 2000ம் ஆண்டு வரை மட்டுமே இருந்தது. 2..
                 

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்கு கடத்தப்படுகிறது கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் ஒட்டுக்கறை ஊழல்: உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படுமா?

4 minutes ago  
News / தினகரன்/   
நாகர்கோவில்: குமரி மாவட்டம் மட்டுமே தமிழகத்தில் ரப்பர் சாகுபடி மேற்கொள்ளும் மாவட்டமாக இருந்து வருகிறது. மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் ரப்பரை ஒட்டியே இருந்து வருகிறது. ரப்பர் ஷீட் விலை உயரும் போது இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரமும் உயரும். பணப்புழக்கமும் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது.  இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகத்தரம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இதில் அரசு ரப்பர் கழகம் வாயிலாக சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு ரப்பர் கழக கீரிப்பாறை தொழிற்கூடத்தில் ஒட்டுக்கறை இருப்பு வைத்து கடத்தி விற்பனை செய்வதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் ஜனவரி மாத கணக்கின்படி 16 டன் ஒட்டுக்கறை ஸ்டாக் கணக்கு காட்டிய ரப்பர் தொழிற்சாலை அதிகாரி, 28 டன் இருப்பு வைத்துள்ளார். 12 டன் அதிகமாக இருப்பதை தொழிலாளர்கள் தெரிந்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரப்பர் பால் வடித்த..
                 

சேலம், மதுரை கோட்டங்களில் ஓரங்கட்டப்பட்ட பஸ்கள் ஏலம்: தமிழக போக்குவரத்துத்துறை திட்டம்

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான சேலம், மதுரை கோட்டங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை ஏலம் விடுவதற்கு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறுள்ள பஸ்களில் பல நீண்ட நாள் பயன்பாட்டில் இருந்த காரணத்தால், அவற்றை உபயோகிக்க முடியாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை ஓரம்கட்டிவிட்டு புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓரம்கட்டப்பட்ட பஸ்கள் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலத்தில் இயக்க முடியாத நிலையில் உள்ள 17 பஸ்கள் ஏலம் விடப்படுகிறது. இதேபோல் மதுரை அரசு போக்குவரத்துக்கழத்தில் 11 பஸ்களும் ஏலம் விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றன..
                 

சொல்லிட்டாங்க...

4 minutes ago  
News / தினகரன்/   
பாலின சமநீதி இல்லாமல் உலகில் எந்த நாடும், எந்த சமூகமும் வளர்ச்சியை எட்ட முடியாது.-பிரதமர் நரேந்திர மோடிஅனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை வழங்கி, தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். - முதல்வர் எடப்பாடி பழனிசாமிடிரம்ப் வருகைக்காக ஏழைகளின் குடிசை இடிக்கப்படுவது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்க்க வேண்டுமானால் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்.- சமூக ஆர்வலர் மேதா பட்கர்தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகை தமிழில்தான் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயலாக்கப்படவில்லை.- பாமக நிறுவனர் ராமதாஸ்..
                 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு பெருமாள் கோயில் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

5 minutes ago  
News / தினகரன்/   
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கீழ்புத்துப்பட்டு பெருமாள் கோயில் சாலையை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ரூபாய் 11 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாக சன் - செய்தியில் ஒளிபரப்பானது. சன் - செய்தியை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்...
                 

கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு

5 minutes ago  
News / தினகரன்/   
டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியாட்நாமில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது...
                 

பள்ளிகளில் கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி ஏற்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

5 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: பள்ளிகளில் கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி ஏற்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்களே உள்ளதால் தேர்வெழுதும் மாணவிகள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்...
                 

Mumbai: Fire brigade’s budget slashed by 50 pc to Rs 104.45 crore; despite shortage of fire stations, manpower

13 minutes ago  
News / Indian Express/   
                 

Rajnath Singh: I pray for early release of Abdullahs & Mehbooba from detention

23 minutes ago  
News / Times Of India/   
                 

Uddhav Thackeray, Sharad Pawar launch book on A R Antulay, regale gathering with anecdotes

23 minutes ago  
News / Times Of India/   
                 

Karnataka Minister Jarkiholi threatens to resign if injustice done to Kumathalli

23 minutes ago  
News / Times Of India/   
                 

President Trump likely to be offered 'Trump platter' at Bukhara

23 minutes ago  
News / Times Of India/   
                 

Gujarat confidential: Inauguration Confusion

35 minutes ago  
News / Indian Express/   
                 

CMS COP 13: GIB, mainland Asian elephant and Bengal florican get global protection

42 minutes ago  
News / Indian Express/   
                 

FIH Hockey Pro League 2020: India Beat Australia Via Shoot-out in Second Match

an hour ago  
News / IBNLive/   
                 

1028 அரசு மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி வழக்கு: பதில் தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

an hour ago  
News / தினகரன்/   
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 1,028 அரசு மருத்துவர்கள் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும் என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அரக்கோணத்தை சேர்ந்த டாக்டர் வி.ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வி.வெடியப்பன் உள்ளிட்ட டாக்டர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். கடந்த 2018ல் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 1,884 அரசு மருத்துவர்கள் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். இந்த தேர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 30 என்றும் பிற  பிரிவினர்களுக்கு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தேர்வில் நாங்கள் அனைவரும் 48 முதல் 53 மதிப்பெண் வரை பெற்றுள்ளோம்.இந்நிலையில், ஒரு சிலர் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு கவுன்சலிங் மூலம் காலிப்பணியிட..
                 

தனித்தனி பாக்கெட்டுகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்வதை தடுக்க கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

an hour ago  
News / தினகரன்/   
சென்னை: குட்கா மற்றும் பான்மசாலாவை தனி பாக்கெட்களிலும், புகையிலையை தனி பாக்கெட்களிலும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் ஒழுங்குமுறை மற்றும் விளம்பர தடைச் சட்டத்தில் இருந்து மெல்லும் புகையிலை, பான்மசாலா, குட்கா ஆகியவற்றை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை உணவு பொருட்கள் எனக் கூறி, அவற்றுக்கு தடை விதித்து 2011ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில், தமிழக அரசு, 2013ம் ஆண்டு, பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் ஒழுங்குமுறை மற்றும் விளம்பர தடைச் சட்டத்தில் மெல்லும் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகிய புகையிலைப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை தனித்தனி பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுவதாககக் கூறி, சென்னை நிதிச் சந்தைகள் மற்றும் பொறுப்புடைமை அமைப்பின் தலைவர் மனோஜ் கே.சேத், சென்னை உயர் நீதிமன்றத்தில..
                 

தாய்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

an hour ago  
News / தினகரன்/   
பெர்த்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தாய்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்தது. நன்னாபத் கொஞ்சரோயன்கி 33, நருமோல் சாய்வாய் 13 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஸ்டெபானி டெய்லர் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்து வென்றது. ஹேலி மேத்யூஸ் 16, லீ ஆன் கிர்பி 3, தியாந்த்ரா டோட்டின் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 26 ரன், ஷெமைன் கேம்ப்பெல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 2 புள்ளிகள் பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டெபானி டெய்லர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்...
                 

சில்லி பாயின்ட்...

an hour ago  
News / தினகரன்/   
* தேசிய அளவில் முதல் முறையாக நடத்தப்படும் கேலோ இந்தியா பல்கலை. விளையாட்டு போட்டித் தொடரை ஒடிஷா மாநிலம் கட்டாக், நேரு உள்விளையாட்டரங்கில் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கிவைத்தார். இந்த தொடரில் நாடு முழுவதும் இருந்து 159 பல்கலை. அணிகளை சேர்ந்த 3400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.* வெஸ்ட் இண்டீசுடன் கொழும்புவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெ. இண்டீஸ் 50 ஓவரில் 289/7 (ஹோப் 115 ரன்). இலங்கை 49.1 ஓவரில் 290/9.* தென் ஆப்ரிக்க அணியுடன் ஜோகன்னஸ்பர்கில் நடந்த முதல் டி20ல் ஆஸ்திரேலியா 107 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி. 20 ஓவரில் 196/6 (பிஞ்ச் 42, ஸ்மித் 45); தென் ஆப்ரிக்கா 14.3 ஓவரில் 89 ரன் ஆல் அவுட். ஆஷ்டன் ஏகார் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்...
                 

தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை இருக்கக்கூடாது: நீதிமன்ற மாநாட்டில் மத்தியமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேச்சு

an hour ago  
News / தினகரன்/   
தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை எதுவும் இருக்கக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி இருக்கிறார். டெல்லியில் இன்று சர்வதேச நீதிமன்ற மாநாடு 2020, உலக மாற்றத்தில் நீதிமன்றம் என்ற தலைப்பில் நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றார்கள். மாநாட்டில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது; இப்படிப்பட்ட பிரிவினர் நாட்டின் நீதி பரிபாலன துறையை தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க க்கூடாது என அவர் வேண்டிக் கொண்டார்.ஜனரஞ்சகம் சட்டத்தின் தீர்க்கப்பட்ட கொள்கைகளை மீறக்கூடாது. வெகுஜன விருப்பம், நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் கொள்கைகளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். எப்படி ஆட்சி செய்வது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கையில் இருப்பதைப் போல, நீதி வழங்குவது நீதிபதிகளின் கையில் தான் இருக்க வேண்டும், அதில் பிறர் தலையீடு கூடாது என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்...
                 

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 18 பேருக்கு குண்டாஸ்

an hour ago  
News / தினகரன்/   
ெசன்னை: சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி மயிலாப்பூர் சாரதாபுரம் தெருவை சேர்ந்த சசிகுமார் (33), அயனாவரம் போர்ச்சுக்கீசியர் சாலையை சேர்ந்த ஜனார்த்தனன் (36), மயிலாப்பூர் பல்லக்குமா நகரை சேர்ந்த தீபன் (32), ராயப்பேட்டை ராமாராவ் கார்டன் 3வது தெருவை சேர்ந்த பாலு (30), அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23), வாசுதேவன் (32), திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பைபாஸ் சாலையை சேர்ந்த சக்தி (22), பம்மல் பகுதியை சேர்ந்த தமிழ் (23), ராயப்பேட்டையை சேர்ந்த குமரன் (42), ராயப்பேட்ைட கலிங்கராயன் தெருவை சேர்ந்த கண்ணன் (27), கண்ணகி நகரை சேர்ந்த அண்ணாதுரை (34), அருண்குமார் (23), துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜாகீர் (22), மாமல்லபுரத்தை சேர்ந்த கார்த்திக் (38), திருவொற்றியூரை சேர்ந்த அசோக் (22) அரும்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (23) வியாசர்பாடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (24), கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (44) ஆகியோர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இவர்கள் 18 பேரை போலீசார் குண்டர..
                 

கிராமங்களில் இணையதள வசதி வேண்டும்: மாணவிகள் கோரிக்கை

an hour ago  
News / தினகரன்/   
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணையதள வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 10க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 497 பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இன்றை காலகட்டத்தில் இணையதளம் என்பது உணவு பொருட்களை போல அத்தியாவசிமாகிவிட்டது. படிப்பு பொது அறிவு என அனைத்தையும் இணையதள வசதியிருந்தால் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளாலம். இணைதள இணைப்புள்ள ஒரு கணிப்பொறியில் உள்ள தேடுதளத்தில் ஒரு புள்ளி வைத்தால் அந்த புள்ளி குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். இதனால் இணையம் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டது. இதனை வசதிக்கு ஏற்றார் போல் சிலர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இன்று வரை இணையதள வசதி இன்னும் எட்டா கனியாகத்தான் உள்ளது. இதனால் அவர்கள் படிப்பில் சந்தேகம் மற்றும் பொது அறிவு குறிந்து தெரிந்துகொள்ள இணையதளத்திற்கு செல்ல முடியவில்லை. பட..
                 

தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

an hour ago  
News / தினகரன்/   
சென்னை: தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில்  கூறியிருப்பதாவது: அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து  சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆற்றினுள்ளேயே இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் செலவழிக்கப்படுவது இந்த லட்சணத்தில்தானா, பணிகள் நடக்கிறதா அல்லது பணிகள் நடப்பதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா, அனைத்து மாவட்ட கழகங்களும் இதனைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது...
                 

चोरी के मामलों का उद्भेदन करने में पटना पुलिस फिसड्डी

an hour ago  
News / जागरण/   
                 

सरैया बैंक लूटकांड : पांच लुटेरा गिरफ्तार, लूट के 3.21 लाख बरामद

an hour ago  
News / जागरण/   
                 

Don’t need a single story of nationhood

an hour ago  
News / Indian Express/   
                 

भंडारों में श्रद्धालुओं ने ग्रहण किया प्रसाद

an hour ago  
News / जागरण/   
महाशिवरात्रि के उपलक्ष्य में कस्बे के विभिन्न शिव मंदिरों में आयोजित भंडारे में श्रद्धालुओं ने प्रसाद ग्रहण किया। कस्बे के श्री महाकालेश्वर शिव मंदिर शिव मंदिर पतलाड़ी शिव मंदिर बड़ोग शिव गुफा कालाकोट आदि कई जगहों पर मंदिर कमेटियों के सदस्यों द्वारा भंडारे लगाए गए। इन भंडारों में सुबह से शाम तक श्रद्धालु भोजन करते रहे।..
                 

मोकामा में चालक को बचाने गए पुलिसकर्मियों पर पथराव, आधा दर्जन जख्मी

an hour ago  
News / जागरण/   
                 

Over 1,000 women gather at Delhi's Jaffrabad to protest against CAA

an hour ago  
Business / Business Standard/   
                 

Vigilance on a sticky wicket in Sivakumar case

an hour ago  
News / Times Of India/   
                 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடரும்: ஜவாஹிருல்லா பேட்டி

4 minutes ago  
News / தினகரன்/   
தாம்பரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் என்பிஆர் தொடங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தாம்பரத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கிறிஸ்தவ, இந்து சமய பிரமுகர்கள், ஜமாத் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஜவாஹிருல்லா பேசியதாவது: அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கு தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் சில கேள்விகளை மாற்றும்படி கடிதம் எழுதியிருப்பதாகவும் என்சிஆர் அசாம் போன்ற மாநிலத்திற்கு மட்டும்தான் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நீட் தேர்வு, 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசு எந்த மதிப்பும் கொடுக்காமல் இருந்ததோ, அதுபோல்தான் இந்த கடிதமும் குப்பையில் போடப்படும். கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, என்பிஆர் ஆகியவற்றை செயல்படுத்தமாட்டோம் என அறிவிப்பு ..
                 

பூந்தமல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்தது கன்டெய்னர் லாரி: உடலில் பற்றிய நெருப்புடன் டிரைவர் ஓடியதால் பரபரப்பு

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: பூந்தமல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் திடீரென தீப்பற்றியது. டிரைவரின் மீது தீப்பிடித்து அவர் எரிந்தபடி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் கேராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் சிங் (33). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கன்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக வந்தார்.  பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சுரேஷ் கன்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பினார். அப்போது டீசல் நிரப்பும் பைப்பை ராஜேஷ்குமார் சிங்கிடம் கொடுத்துவிட்டு சென்றதை தொடர்ந்து, அவர் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக திடீரென டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. மேலும், தீ மளமளவென ராஜேஷ்குமார் சிங் மீது பரவியது. இதனால் பீதியடைந்த அவர் அங்கும், இங்கும் அலறியபடி ஓடினார்.இதையடுத்து அவர் தீப்பிடித்தபடி ஓடிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர் மீது எர..
                 

பத்திரப்பதிவு துறை வருவாய் குறையும் நிலையில் கம்பெனிகளின் மறு சீரமைப்பை பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம்: பதிவுத்துறை செயலாளர் உத்தரவு

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: கம்பெனிகளின் மறு சீரமைப்பை பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம் செய்ய பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்திய கம்பெனி பதிவு சட்டம் 1956ன்படி எல்லா நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சட்டத்தின்படி கம்பெனி சரியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பது அதன் வேலை. அந்த நிறுவனங்களின் பங்குதாரர்கள் பங்குகளின் அளவை பொறுத்து அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்கள் தீர்மானிக்கப்படுகிறது. இந்த  கம்பெனியின் சொத்தை, இன்னொரு கம்பெனி உடன் அந்த சொத்தை இணைக்கும் போதோ மற்றும்  கம்பெனியை மறுசீரமைப்பு செய்யும் போது கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் கம்பெனிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பெனி சொத்தை மாற்றி பத்திரம் பதிவு செய்யும் போது, அசையா சொத்துக்களின் சந்தை மதிப்பில் 2 சதவீதம் முத்திரை தீர்வையோ அல்லது கம்பெனியின் பங்கு (ஷேர்) மதிப்பில் 0.6 சதவீதத்திலோ இதில், எதன் மதிப்பு அதிகமோ, அதனடிப்படையில் கட்டணமாக பதிவுக்கு வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில்..
                 

சட்டவிரோதமாக பயிற்சி வகுப்புகள் ஓமியோபதி பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ்: கமிஷனருக்கு கவுன்சில் பதிவாளர் கடிதம்

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: சட்டவிரோதமாக பயிற்சி வகுப்புகள் நடத்தி ஓமியோபதி சிகிச்சை அளிப்பதற்கு போலி சான்றிதழ்கள் வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில்  பதிவாளர் ஆவுடையப்பன் மற்றும் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போலியான நிறுவனங்களால் சட்டவிரோதமாக ஓமியோபதி வகுப்புகள் ரகசியமாக நடத்தப்படுவதாகவும், அதில் ஓமியோபதி சிகிச்சை அளிப்பதற்கான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. தகுதி வாய்ந்த டாக்டர்கள் மட்டுமே ஓமியோபதி சிகிச்சை அளிக்க முடியும். இது போன்ற வகுப்புகளை அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் நடத்துவது சட்டவிரோதமானது ஆகும்.மேலும், ஒரு ஓமியோபதி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 9 தனியார் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகள் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஓமியோபதி பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளை வெற்றிக்கரமாக நிற..
                 

பாட்டி சாவில் சந்தேகம் பேரன் போலீசில் புகார்

4 minutes ago  
News / தினகரன்/   
பெரம்பூர்: வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் இறந்து விட்டதால், மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். நேற்று அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது வள்ளியம்மாள் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வள்ளியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், வள்ளியம்மாவின் பேரன்  சுரேஷ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எங்களது வீட்டில் தனியாக இருந்த பாட்டி திடீரென இறந்துள்ளார். வீட்டில் இருந்த 7 சவரன்  நகை மற்றும் ரூ.5 லட்சம் மாயமாகி உள்ளது. எனவே, அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். போலீசார் இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...
                 

கார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி?... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்

4 minutes ago  
News / தினகரன்/   
* 300 கேள்வியில் 30க்கு மட்டுமே பதில் * 5 நிமிடத்தில் எழுத்து அழியும் மேஜிக் மைசென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்த விசாரணையில், கைதான புரோக்கர் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கார் டிரைவரை கையில் போட்டுக்கொண்டு 2 மணி நேரத்தில் விடைத்தாள் திருத்தி மோசடி செய்ததாகவும், தேர்வில் 300 கேள்விகளுக்கு 30க்கு மட்டுமே பதில் எழுதியும், 5 நிமிடத்தில் அழியும் மை பேனாவை பயன்டுத்தி முறைகேடு செய்ததாகவும் அவர் புட்டு புட்டு வைத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. குறிப்பாக,  ராமேஸ்வரத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 44க்கும்  மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பத்தில்  ராமேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள்  மல்லிகா, விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர்  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய குற்ற..
                 

வாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை

4 minutes ago  
News / தினகரன்/   
சென்னை: தயாரிப்பாளருடன் தகராறு ஏற்பட்டதால், வாடகை தராமல் ஓட்டலில் இருந்து நடிகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மெஹரின் பிர்ஸடா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அஸ்வத்தாமா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா ஹீரோ. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சக நட்சத்திரங்களுடன் மெஹரின் கலந்துகொண்டார். கடைசிநாளில் மற்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த மெஹரினை இதில் பங்கேற்க தயாரிப்பாளர் அழைத்தார். ஆனால், தனக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டிருப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளருக்கும், மெஹரினுக்கும் தகராறு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு வராவிட்டால் ஓட்டல் வாடகை தர முடியாது என்று தயாரிப்பாளர் கறாராக சொல்லிவிட்டார். இதில் கடும் கோபமடைந்த மெஹரின், மறுநாள் காலை யாரிடமும் சொல்லாமல், வாடகையும் தராமல் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறினார். இதையறிந்த ஓட்டல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. மெஹரின் தங்கியிருந்த அறைக்கு வாடகை தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டது. ஆனால்..
                 

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

4 minutes ago  
News / தினகரன்/   
டெல்லி: நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம்  தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால்,  தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது...
                 

எந்த சாலைகளில் எந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்; வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்தது மத்திய அரசு

4 minutes ago  
News / தினகரன்/   
டெல்லி: இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான வேகக்கட்டுப்பாடு அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் எந்த எந்த சாலையில் எந்த எந்த வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்து 2018-ம் ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலின்படி, வாகனங்கள் சாலையில் செல்ல வேண்டிய  வேகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது. கார்கள் விரைவுச்சாலையில் 120 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 100 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 70 கி.மீட்டர் வேகம் வரை கார்களை இயக்கலாம். பேருந்துகள் உள்ளிட்ட  பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைவுச்சாலையில் 100 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 90 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை பேருந்துகளை  இயக்கலாம். லாரி உள்ளிட்ட சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள், விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம்..
                 

2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் முதல்ல வன்முறை, கொலையை நிறுத்துங்கப்பா...மேற்குவங்க மாநில ஆளுநர் ஆதங்கம்

4 minutes ago  
News / தினகரன்/   
கொல்கத்தா: 2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், அரசியல் வன்முறை, கொலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று, மேற்குவங்க மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும், ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் மம்தா, மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இந்நிலையில் வடக்கு வங்காளத்தின் சிலிகுரில் நடந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆளுநர் ஜகதீப் தங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்குவங்க மாநில அரசியலை பொறுத்தவரை வன்முறை மற்றும் கொலைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு அரசியல் வன்முறை மற்றும் கொலைகள் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தற்போது நடக்கும் வன்முறை மற்றும் கொலைகள் தேர்தல்களுடன் தொடர்புடையதாக உள்ளது. அனைவரும் இதை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த 15 முதல் 20 நாட்களில் மாநில அரசாங்கத்துடனான எனது உறவு நன..
                 

மாணவி அமுல்யாவை ஜாமீனில் விட்டால் சுட்டுத் தள்ளுவோம்: ஸ்ரீராமசேனா அமைப்பினர் ஆவேசம்

4 minutes ago  
News / தினகரன்/   
பல்லாரி: ‘தேச துரோக கோஷங்கள் எழுப்பியவர்களுக்கு  ஜாமீன் வழங்க கூடாது.  அப்படி வழங்கினால் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும்போது நாங்களே  சுட்டு தள்ளுவோம்,’ என்று ஸ்ரீராமசேனா எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது, அமுல்யா என்ற மாணவி, ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டார். அதேபோல், நேற்று முன்தினம் ஆராத்ரா என்ற மாணவி, ‘காஷ்மீர் விடுதலை’ பதாகையை காட்டியதால் கைது செய்யப்பட்டார். இவர்களை கண்டித்து, பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டையில் ஸ்ரீராமசேனா சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அமைப்பின்  பிரமுகர் சஞ்சீவமரடி பேசுகையில், ‘‘பெங்களூருபோராட்டத்தில் அமுல்யா என்ற மாணவி, ‘பாகிஸ்தான் வாழ்க’  என்று கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளா்ர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.  ஜாமீன் வழங்கினால், அவர்கள்சிறையில் இருந்து வெளியே வரும் போது சுட்டு தள்ளுவோம் அல்லது சுட்டு தள்ளுபவர்களுக்கு ரூ.10  லட்சம் பரிசு தரப்படும்,’’ என்றார்...
                 

குஜராத்தில் நடந்தது நினைவில் இருக்கட்டும்: பாஜ எம்எல்சி மிரட்டல் பேச்சு

4 minutes ago  
News / தினகரன்/   
நாக்பூர்: `குஜராத்தில் என்ன நடந்தது என்பது நினைவில் இருக்கட்டும்’ என்று வாரிஸ் பதானை பாஜ எம்எல்சி கிரிஸ் வியாஸ் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கலபுர்கியில் கடந்த 16ம் தேதி நடந்த தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் வாரிஸ் பதான் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், `முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். நாம் 15 கோடியாக இருக்கலாம். ஆனால்,100 கோடி மீது நடத்தும் தாக்குதல் நடத்தும் பலம் நமக்கு இருக்கிறது,’ என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மகாராஷ்டிரா வில் டிவி சேனலுக்கு பாஜ எம்எல்சி கிரிஷ் வியாஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் இளைஞர்களும், பாஜ தொண்டர்களும் வாரிஸ் பதானுக்கு அவர் பேசிய அதே மொழியில் பதிலடி கொடுப்பார்கள். நாங்கள் பொறுமையுடன் இருக்கிறோம் என்றால், உங்களுடன் மோத முடியாது என அர்த்தமில்லை. குஜராத்தில் என்ன நடந்தது என்பது நினைவில் இருக்கட்டும். அதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், இன்று பொங்கி எழுவதற்கு தைரியம் இருக்காது. உங்களுடன் மோத தயாராகவே இருக்கிறோம்..
                 

உலகமே அஞ்சிய விவகாரங்களில் 130 கோடி இந்திய மக்களும் தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்: பிரதமர் மோடி பாராட்டு

4 minutes ago  
News / தினகரன்/   
புதுடெல்லி: ‘‘உலகமே விவாதித்த, அச்சம் கொண்டிருந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களில், சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை 130 கோடி இந்தியர்களும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்,’’ என பிரதமர் மோடி பாராட்டினார். டெல்லியில் ‘மாறிவரும் உலகமும் நீதித்துறையும்’ என்ற தலைப்பில் சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியது. 20 நாடுகளைச் சேர்ந்த நீதித்துறையினர் பங்கேற்ற இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி  வைத்து பேசியதாவது: பாலின சமநீதி இல்லாமல் உலகில் எந்த நாடும், எந்த சமூகமும் வளர்ச்சியை எட்ட முடியாது. அந்த வகையில், சமத்துவ உரிமையின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பாலின சமநீதியை உறுதிப்படுத்தி வருகிறது. சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு, ராணுவ சேவையில் பெண்கள் நியமனம், பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசு திட்டங்கள் மற்றும் சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுப்பு, முத்தலாக் தடை, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை, திருநங்கைகளுக்கான உரிமை போன்றவற்றை வழங்கிட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாத..
                 

‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வரி பிரச்னைக்கு தீர்வு காணலாம்: புதிய வாய்ப்பு தருகிறது வருமான வரித்துறை

4 minutes ago  
News / தினகரன்/   
புதுடெல்லி: ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வரி வழக்கு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம்,’ என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வரி வழக்குகளை சமூகமாக தீர்த்துக் கொள்ள ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இத்திட்டம் தொடர்பான விளம்பரத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதில், ‘உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருமான வரி வழக்கு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பொன்னான வாய்ப்பு,’ என கூறப்பட்டுள்ளது. * இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 31ம் தேதிக்கு முன்பு வரை நிலுவையில் உள்ள வருமான வரித்துறை தொடர்பான வழக்குகள், மேல்முறையீட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம். * மேல்முறையீடு செய்ய கடந்த ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள வரி வழக்கு பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளலாம். * வருமான வரி, அபராதம், வட்டி, வரி பிடித்தம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் இத்திட்டத்தில் தீர்த்துக் கொள்ள முடியும். * இத்திட்டத்தின் கீழ் மார்ச் 31ம் தேதிக்குள் வரி செலுத்தினால், பிரச்னை தீர்ப்பு வரியை 100 சதவீதம் செலுத..
                 

தாயிடம் ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை: நண்பன் கைது

4 minutes ago  
News / தினகரன்/   
அண்ணாநகர்: கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் ஜெய்குமார் (24). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் (44). இருவரும் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா அடிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெய்குமார் தனது தாய் செல்போன் எண்ணை சேகரிடம் கொடுத்து, ‘‘உனக்கு கஞ்சா வேண்டுமென்றால், இந்த எண்ணில் கூப்பிடு. கொண்டு வந்து தருகிறேன்,’’ என கூறியுள்ளார். அந்த எண்ணில் தொடர்புகொண்ட சேகர், ஜெயக்குமாரின் தாயாரிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஜெய்குமார், சேகரை கண்டித்துள்ளார். பின்னர், ஜெய்குமார், தனது மற்ெறாரு நண்பர் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ், கூவம் நதி அருகே கஞ்சா அடித்துள்ளார்.அப்போது, சேகரை செல்போனில் தொடர்புகொண்டு அங்கு வரவழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த சேகர், இவர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்துள்ளார். போதையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெய்குமார், கார்த்திக்குடன் சேர்ந்து, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து, சேகர் தலையில் சரமாரியாக தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தப்பியுள்ளனர். நேற்று காலை க..
                 

ஏலகிரி மலை பள்ளக்கனியூர் ஆற்றில் தனியார் விடுதிகளில் பயன்படுத்தப்படும் துணிகளை துவைப்பதால் தண்ணீர் மாசுபாடு

4 minutes ago  
News / தினகரன்/   
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வசதிக்காக அரசு தங்கும் விடுதி ஒன்றும், 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. இந்நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளிலிருந்து அழுக்குத் துணிகளை ஆட்டோக்கள் மூலம் கொண்டுவந்து பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள ஆற்றில் துவைப்பதால் தண்ணீர் மாசுபட்டுள்ளது. மேலும் இந்த தண்ணீரை, காட்டுப் பகுதிக்குள் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் குடிப்பதால் நோய்த்தொற்று ஏற்படுவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுமட்டுமின்றி இந்தத் தண்ணீர் காட்டுப்பகுதியில் ஆறாக ஓடி ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கலப்பதால் அதில் குளிக்கும்  பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு துணிகளை துவைக்கும் நபர்களை அங்குள்ள பொதுமக்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இல்லாத நேரத்தில் ஆட்டோக்கள் மூலம் துணிகளை ரகசியமாக எடுத்து..
                 

மகாசிவராத்திரி விழா: திருச்சியில் அகோரிகள் நள்ளிரவு யாகம்

4 minutes ago  
News / தினகரன்/   
திருச்சி: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த தம்பதி ராஜகோபால் - மேரி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது மகன் மணிகண்டன்(38). சிறு வயதிலேயே காசிக்கு சென்று அகோரியாக மாறி விட்டார். (ஆண் அகோரிகள் பூஜையின்போது சிவப்பு நிற லங்கோடு மட்டும் அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசி இருப்பார்கள். பெண் அகோரிகள் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருப்பார்கள்) நள்ளிரவில் பூஜை செய்வது, சுடுகாட்டில் எரியும் சடலத்தின் மாமிசத்தை சாப்பிடுவது ஆகிய செயல்பாடுகளில் அகோரிகள் ஈடுபடுவதாக கூறப்படுகறது. திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இதை அகோரி மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் கடந்த ஆண்டு அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ காலங்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் அகோரி கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. திருச்சி மற்றும் பிற மாவட்டம் பிற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அகோரிகள்..
                 

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் கோடிக்கணக்கில் பணம் விரயம்: துண்டு நோட்டீஸ் வீச்சால் பரபரப்பு

4 minutes ago  
News / தினகரன்/   
தஞ்சை: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் துண்டு நோட்டீஸ் வீசப்பட்டது. அதில், பல்கலையில், கோடிக்கணக்கில் பணம் விரயம் செய்யப்பட்டுஉள்ளதாகவும், முறைகேடுகள் ஏராளமாக நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் இங்கு பொறுப்பேற்று 1 வருடம் ஆகிறது. தகுதி இன்றி இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த நியமனத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு பாலசுப்பிரமணியன் தடை வாங்கி, தொடர்ந்து துணைவேந்தர் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக எம்ஜிஆரால் துவங்கப்பட்டது இந்த பல்கலைக்கழகம். ஆனால் இப்போது இங்கு அரசியல் தலையீடு, அலுவலர்களிடையே உட்பூசல் ஆகியவற்றால், பல்கலைக்கழகத்தின் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.இந்நிலையில் பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல துறை அலுவலகங்களில் நேற்று ஒரு துண்டு நோட்டீஸ் வீசப்பட்டிருந்தது. தமிழ் பல்கலைக்கழக யோக்கியவான்கள் என்ற தலைப்பில் அந்த துண்டு நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்கள் வரும..
                 

காலரை தூக்கிவிடும் ஜெயில் விஜிலென்ஸ்

4 minutes ago  
News / தினகரன்/   
தமிழக ஜெயில் டிபார்ட்மென்ட்ல நடக்குற தில்லுமுல்லு, ஊழல், லஞ்சம், கைதிகளோட மனைவியுடன் ஆபீசருங்களுக்கு இருக்குற கள்ளத்தொடர்பு பற்றி, சமீபத்துல ஏடிஜிபி 3 பக்க அறிக்கைய வெளியிட்டாரு. இந்த அறிக்கை வந்ததுல இருந்து, மாநிலம் முழுசும் இருக்குற சிறைத்துறை ஆபீசருங்க அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டாங்களாம். ஆனா, மாங்கனி மாவட்டத்துல இருக்குற சிறை விஜிலென்ஸ் மட்டும், காலர தூக்கிவிட்டு பெருமைப்படுறாங்களாம். முக்கியமா, ஏடிஜிபி அறிக்கையில இருந்த லஞ்சம், கைதிகளோட மனைவிகளுடன் கள்ளத்தொடர்பு போன்ற மேட்டர் எல்லாம், நாங்க சொன்னது தான்னு, பெருமையா பேசிட்டு இருக்காங்களாம். இதனால, விஜிலென்ஸ் ஆளுங்கள பார்த்தாவே, சிறை அதிகாரிங்க தெறிச்சு ஓடுறாங்களாம்.காட்டிக்கொடுக்கும் காக்கி ‘இன்பார்மர்கள்’ வலையில் சிக்குவார்களா?தேனி அருகே உள்ள பூதிப்புரம், கோடாங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்கள், மாவட்டத்தின் கஞ்சா விற்பனை தலைமையிடமாகச் செயல்படுகின்றன. தேனியிலும், அல்லிநகரத்திலும் கஞ்சா விற்பனை களைகட்டி உள்ளது. இங்கு பெண்களே அதிகளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு கூட மிக மிக எளிதாக கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா வேட்..
                 

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ஆல், அரசன், புளிய மரங்கள் ‘பலி’: ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன் புளி உற்பத்தி சரிந்து வருவாயும் இழப்பு

4 minutes ago  
News / தினகரன்/   
வேலூர்: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்தே பிரதான பங்கு வகிக்கிறது. நீர்வழி, நிலவழி, வான்வழி போக்குவரத்து என்ற மூன்றில் நிலவழி போக்குவரத்தில் ரயில் போக்குவரத்தை தவிர சாலை போக்குவரத்து பிரதான பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.தமிழகத்தில் 2,274 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 2,250 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளிலும், பல்லாயிரம் கி.மீ தூரம் ஊரக சாலைகளிலும் புளியமரங்கள், ஆல், அரசன், வேம்பு, இலுப்பை, நாவல், பனை, புங்கன் மரங்கள் நிறைந்துள்ளன. இதுபோக வனப்பகுதிகள், கிராமப்புறங்களிலும் தோப்புகளாகவும், தனித்த மரங்களாகவும் புளிய மரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில ெநடுஞ்சாலைகள், கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் என மொத்தம் 50 லட்சம் புளிய மரங்கள் இருந்தன. இதுபோக வனம், விவசாயம் மற்றும் பிற நிலங்களில் என மொத்தம் 20 லட்சம் மரங்கள் நிறைந்துள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை பனை மரத்துக்கு அடுத்த இடத்தை புளிய மரம் பெற்றிருந்தது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சம் புளிய மரங்கள் வெட்டி சாய..