தினமலர் சமயம் One India

அதெப்படி முடியும்.. செக்கிழுத்தவர் சாவர்க்கர்.. அவரது தேசபக்தியை சந்தேகப்படுவதா?.. அமித்ஷா காட்டம்

an hour ago  
செய்திகள் / One India/ News  
போர்ட்பிளேர்: ''சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எப்படி சந்தேகப்பட முடியும்? அவரது தேசபக்தியை எப்படி சந்தேகப்பட முடியும்? இந்த தேசத்துக்காக 2 ஆயுள் தண்டனைகளை சாவர்க்கர் அனுபவித்தார்... ஜெயிலில் மாட்டைப் போல் செக்கு இழுத்தார்... அவரைப் பற்றிப் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா..
                 

\"யூடர்ன்\".. 2 மணி நேரம் சமாதானம்.. ஃபார்முக்கு வந்த சித்து.. நிமிர்கிறது காங்கிரஸ்.. குழம்பும் பாஜக

3 hours ago  
செய்திகள் / One India/ News  
சண்டிகர்: கோபமாக இருந்த சித்துவை ஒருவழியாக சமாதானப்படுத்தி உள்ளனர்.. சித்து தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற்று கொண்டதாகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து பஞ்சாப் மாநில அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 4 வருடங்களாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பஞ்சாப் மாநில அரசியலில் புதுபுது திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன...
                 

ஆச்சரியம்.. ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம்.. ஊரெல்லாம் இதே பேச்சு.. என்ன காரணம்..?

4 hours ago  
செய்திகள் / One India/ News  
ரோம்: ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?.. நம்பித்தான் ஆக வேண்டும்.. இந்த செய்திதான் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. குடிக்கும் தண்ணீரை, விலை கொடுத்து வாங்குவோம் என்று உலக மக்கள் ஒருபோதும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.. திண்ணைகளிலும், தெருக்களிலும், இலவச தண்ணீர் பந்தல்களை வைத்த தமிழகம் இது.. முன்பின் தெரியாதவர்களுக்கும்..
                 

12 டூ 17 வயதினருக்கு சைபர் தடுப்பூசி.. அடுத்த வாரம் துவக்கம்.. தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு

6 hours ago  
செய்திகள் / One India/ News  
கேப்டவுன்: 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் 70 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றும் தென் ஆப்பிரிக்கா முடிவு எடுத்துள்ளது. உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.. டெல்டா வகை வைரஸ் பரவலால்..
                 

அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்த தாலிபான்கள்? ஆப்கனில் அரசில் ஏன் இந்த முக்கிய மாற்றம்.. பரபர தகவல்

7 hours ago  
செய்திகள் / One India/ News  
காபூல்: கடந்த 1996-2001 ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் பொது இடங்களில் வைத்த தண்டனைகள் நிறைவேற்றப்படாது என்றும் ஆப்கன் நீதிமன்றம் அறிவுறுத்தினால் மட்டுமே பொது இடங்களில் வைத்த தண்டனைகள் கொடுக்கப்படும் என்று தாலிபான் சார்பில் கூறப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானைத் தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள்,..
                 

திருப்பதி பிரம்மோற்சவம்: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

8 hours ago  
செய்திகள் / One India/ Astrology  
திருப்பதி: ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 7ஆம்தேதியன்று நவராத்தில் பிரம்மோற்சவம் தொடங்கியது.காலை மாலை என இருவேளையும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏழு கொண்டல வாடா..
                 

விஜயதசமி : குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் - குமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை

11 hours ago  
செய்திகள் / One India/ Astrology  
குலசேகரன்பட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு தன்னுடன் போரிட வந்த மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு வதம் செய்தார் முத்தாரம்மன். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும்..
                 

வீடியோ :சத்தீஸ்கரில் வேகமாக வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட மக்கள்..நிறுத்தாமல் கொடூரம் செய்த ஓட்டுநர்

22 hours ago  
செய்திகள் / One India/ News  
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் என்ற ஊரில் தசரா பண்டிகையை ஒட்டி ஊர்வலமாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தசரா பண்டிகை 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த 10 நாட்களுமே விடுமுறை அளித்து..
                 

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு... தொழுகைக்கு வந்தவர்களில் 32 பேர் பலி.. 53 பேர் படுகாயம்..!

yesterday  
செய்திகள் / One India/ News  
கந்தஹார்: ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் குண்டுவெடித்து 32 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் கந்தஹார் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், இன்று வழக்கம் போல் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகை நடத்தப்பட்டது. ஷியா பிரிவினர் மட்டுமே தொழுகை நடத்தக் கூடிய அந்த பள்ளிவாசலில் 3..
                 

ஆயுதபூஜை, விஜயதசமி கோலாகலம் : வீடுகளில் படையலிட்டு சரஸ்வதியை வழிபட்ட மக்கள்

yesterday  
செய்திகள் / One India/ Astrology  
மதுரை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடியில் தொழில் கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு காலையிலேயே குடும்பத்துடன் வந்து பூஜை செய்து படையலிட்டு வழிபட்டனர். வீடுகளிலும் ஏராளமானோர் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. வெற்றிநாளான விஜயதசமியை முன்னிட்டு பல கோவில்களில் வித்யாரம்பம் நடைபெற்றது. கொரொனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆயுதபூஜை கொண்டாட்டம் முடங்கியிருந்த நிலையில்..
                 

தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சம்மதம்.. ரஷ்யாவில் 20ம் தேதி மீட்டிங்!

yesterday  
செய்திகள் / One India/ News  
மாஸ்கோ: ரஷ்யாவின் அழைப்பை ஏற்று, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதி இரு தரப்பும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 2 மாதங்கள் முன்பாக மொத்த ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு நடைபெற்ற வரை இந்தியா..
                 

ரொம்ப ஸ்டைலான மனுஷன்.. நடிகர் அஜித் குறித்து புகழ்ந்து தள்ளிய வலிமை பட நடிகை!

yesterday  
செய்திகள் / One India/ News  
சென்னை: நடிகர் அஜித் ரொம்பவே ஸ்டைலான மனிதர் என வலிமை பட நடிகை ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் சூறாவளி - கேரளாவில் நீடிக்கும் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு..
                 

தைவானில் 13 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து .. தீயில் கருகி 46 பேர் பலி

yesterday  
செய்திகள் / One India/ News  
காஹ்சியுங்: தெற்கு தைவானில் உள்ள காஹ்சியுங் நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 பேர் பலியாகினர். ஏராளமான மக்கள் காயமடைந்தனர். தைவான் நாட்டில் உள்ள காஹ்சியுங் நகரில் இன்று அதிகாலை 3 மணியளவில் 13 மாடி கட்டிடம் ஒன்ற தீப்பிடித்து எரிவதாக தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனிடையே..
                 

சமூக வலைதளங்களில் பிரபலமான நாய்கள்: கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட பரிதாபம்

2 days ago  
செய்திகள் / One India/ News  
கோவிட் தொற்று பாதிக்கப்பட்டதால் வியட்நாமின் லாங் ஆன் மாகணத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 15 நாய்களுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். ஆனால் அந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களின் நாய்கள் தொற்று பரவல் அச்சத்தால் கொல்லப்பட்டுவிட்டன என்பதை தெரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். "நானும் எனது மனைவியும்..
                 

இலங்கையில் இந்திய மீனவர்கள் கைதுநீண்ட இடைவெளிக்கு பின்னர் கைது

2 days ago  
செய்திகள் / One India/ News  
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் வைத்து, இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது. வெற்றிலைகேணி கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23..
                 

தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம்.. கலெக்டர் அதிரடி.. மதுபிரியர்கள் அதிர்ச்சி!

2 days ago  
செய்திகள் / One India/ News  
மயிலாடுதுறை: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 12-ம் தேதி முதல் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதல் முகாமில் மொத்தம் 40 ஆயிரம்..
                 

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் பக்தர்கள் வழிபாடு - சரஸ்வதி ஆலயங்கள் எங்கெங்கு இருக்கு தெரியுமா

2 days ago  
செய்திகள் / One India/ Astrology  
திருவாரூர் : சரஸ்வதி பூஜையை முன்னிட்டு புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் இன்று ஏராளமானோர் வழிபட்டனர். குழந்தைகளை அழைத்து வந்து நோட்டு புத்தகங்கள், பேனாக்களை வழிபட்டு கல்வி சிறக்க வேண்டிக்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சரஸ்வதி பூஜை விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம்.அதன்படி..
                 

Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை அக்டோபர் 13, 2021

2 days ago  
செய்திகள் / One India/ Astrology  
                 

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: இஸ்ரேல் மாடல் பற்றி தெரியுமா?

3 days ago  
செய்திகள் / One India/ News  
பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவேக்சின்' தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இன்னும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஃபைசர், ஜான்சன் &..
                 

நாகபட்டினத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை இழுத்துச் சென்ற தந்தை

3 days ago  
செய்திகள் / One India/ News  
தலித் இளைஞர் ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண், அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் வந்திருந்தபோது, அப்பெண்ணின் தந்தையும் வேறு சிலரும் அடித்து இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து..
                 

வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி... கம்பருக்கு உதவி செய்த கதை தெரியுமா

3 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியர்களை போற்றும் பண்டிகை நவராத்திரி. பார்வதி,லட்சுமி மட்டும் வண்ண ஆடை உடுத்தியிருக்க சரஸ்வதி மட்டும் ஏன் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத்தாமரையில் வீற்றிருக்கிறாள் தெரியுமா. சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சரஸ்வதி என்ற பெயருக்கு அர்த்தத்தையும், சரஸ்வதிக்கு பிடித்த வெள்ளை நிறம் பற்றியும் அவர் கம்பருக்கு உதவி..
                 

குழந்தைகளை காக்கும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு.. உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்

3 days ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: நாடு முழுக்க 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு காப்பாற்றிட உங்களால் முடிந்த உதவிகளை சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பிற்கு செய்திடுங்கள்! ராஜஸ்தான் மாநிலம் ஸ்வாய் மாதோபூர் பகுதியை சேர்ந்தவர் நன்னி (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத்திற்கும் (32) திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகின்றன. இருவரும் தினக்கூலி..
                 

ஸ்ரீரங்கம் நவராத்திரி: குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி தரிசனம்

3 days ago  
செய்திகள் / One India/ Astrology  
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாச்சியார் திருவடி சேவை தரிசனம் நடைபெற்றது. உற்சவர் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். அலங்கார ரூபினியாக எழுந்தருளிய தாயாரை பக்தர்கள் பரவத்துடன் தரிசனம் செய்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் திருவடி தரிசனத்தைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குறியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். மகாவிஷ்ணுவின்..
                 

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: திமுக, அதிமுக வெற்றி நிலவரம்

4 days ago  
செய்திகள் / One India/ News  
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 2 இடங்களிலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 5 இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி,..
                 

அண்ணே உங்களுக்குத்தான் போட்டேன்.. வடிவேல் பட பாணியில் வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற வேட்பாளர்கள்

4 days ago  
செய்திகள் / One India/ News  
திருப்பத்தூர்: வடிவேல் பட பாணியில் உங்களுக்குத்தான் வாக்களித்தேன் என்பதை நிரூபிக்க வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நிலையில் 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைக்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல்..
                 

குரு பெயர்ச்சி பலன் 2021: கும்ப ராசிக்கு போகும் குருபகவானால் லாபத்தை அடையப்போவது யார் தெரியுமா

4 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 27ஆம் தேதியன்று நவம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குருபகவான்..
                 

இதுதான் ஆர்சிபி.. முக்கியமான போட்டியில் வழக்கம் போல சொதப்பல்! எங்கே நடந்தது தப்பு? ஈ சாலா கப் இல்லா

4 days ago  
செய்திகள் / One India/ News  
சார்ஜா: ஐபிஎல் தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மிக மோசமாக பேட்டிங் செய்து சொதப்பியது விராட் கோலி தலைமையிலானயது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதுதான் அந்த அணி தோல்விக்கு முக்கியக் காரணமாக மாறியது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3 நாட்களுக்கு நீடிக்கும் - வானிலை சொன்ன..
                 

பாம்பை விட்டு கடிக்க வைத்து.. மனைவி கொடூர கொலை.. கணவர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு!

4 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்லம்: கேரளாவில் பாம்பை ஏவிவிட்டு கடிக்க வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் 13-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- திமுகவின் வெற்றி தொடருமா? பாமக சாதிக்குமா? கேரள மாநிலத்தில் விஷப்பாம்புகளை கடிக்க விட்டு..
                 

\"ஓஹோய்!\".. அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும்.. இனி தேமுதிகவை நான் சுமக்கிறேன்.. விஜய பிரபாகரன் பகீர் பேச்சு!

5 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீவில்லிபுத்தூர்: எனது தந்தை விஜயகாந்த் எவ்வளவோ மக்கள் நல பணிகளை செய்துவிட்டார். அவர் இனி ஓய்வெடுக்கட்டும். அவர் பணியை இனி நான் செய்கிறேன் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.   7 மாதங்களில்..
                 

அமெரிக்க அணுசக்தி ரகசியத்தை சாண்ட்விச்,சூயிங் கம்மில் அணுசக்தி ரகசியத்தை விற்க முயன்றதாக தம்பதி கைது

5 days ago  
செய்திகள் / One India/ News  
சாண்ட்விச், சூயிங் கம் போன்றவற்றில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியத்தை மறைத்து வைத்து விற்க முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஜோனாதன் டேபே மற்றும் அவரது மனைவி டயானா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநில நீதித்துறை..
                 

வாக்கு எண்ணும் மையத்திற்கு திமுக எம்எல்ஏ திடீர் விசிட்.. பெட்டிகளை மாற்றியதாக அதிமுகவினர் போராட்டம்

5 days ago  
செய்திகள் / One India/ News  
திருப்பத்தூர்: ஆலங்காயம் ஒன்றியத்தின் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை திமுக எம்எல்ஏ தேவராஜ் இன்று ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைக் கண்டித்த அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என்று இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்..
                 

ஆப்கனில் இருந்து வெளியேறியபின் தாலிபன்களுடன் அமெரிக்கா நடத்திய முதல் சந்திப்பு

6 days ago  
செய்திகள் / One India/ News  
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்...
                 

ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சம் இழப்பு.. வட்டிக்கு மேல் வட்டி.. விபரீத முடிவு எடுத்த ஐ.டி ஊழியர்

6 days ago  
செய்திகள் / One India/ News  
திருப்பத்தூர்: ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் பணத்தை இழந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தன். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியாகும். 2 எம்பிக்கள்.. 1 அமைச்சர்.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த திடீர் தலைவலி....
                 

நிலவில் சீன விண்கலன் சாங்'இ எடுத்துவந்த சமீப கால எரிமலைப் பாறை

6 days ago  
செய்திகள் / One India/ News  
சீனாவின் சாங்'இ - 5 விண்வெளித் திட்டம் நிலவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்த பாறை மாதிரிகள், இதுவரை கிடைத்துள்ள எரிமலைப் பாறைகளிலேயே மிகவும் சமீப காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை பாறைகளை பகுப்பாய்வு செய்ததில், அவை வெறும் 200 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரியவந்துள்ளது. ஆறி இறுகிவிட்ட..
                 

தடுப்பூசி போட தயங்கிய விவசாயி..ஆடு, மாடுகளை மேய்க்க தயாரான மருத்துவர்..அடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்

7 days ago  
செய்திகள் / One India/ News  
திருப்பத்தூர்: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கிய விவசாயியிடம் கை, கால் வலி ஏற்பட்டால் தான் ஆடு மாடுகளை மேய்ப்பதாக மருத்துவர் உறுதி அளிக்கும் வீடியோ வைரலாகியிருந்தது. அந்த விவசாயி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், அதற்கு அந்த மருத்துவரே பதில் அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு 2ஆம் அலைக்கு..
                 

சனி பெயர்ச்சி : வக்ர நிவர்த்தியாகும் சனிபகவான் - எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

8 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: சனிபகவான் வக்ர நிலையில் இருந்து நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் 11 முதல் மகர ராசியில் நேர் கதியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் சனிபகவானின் பார்வை மீனம், கடகம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். சனிபகவான் நீதிமான். சனியைப்..
                 

அமைதிக்கான நோபல் பரிசு: கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய 2 பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிப்பு

8 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்டாக் ஹோம்: பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள்..
                 

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

8 days ago  
செய்திகள் / One India/ Astrology  
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு இரவு பெரிய சே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலிக்கிறது. நேற்று மாலை..
                 

தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

8 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்டாக்ஹோம்: தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக்..
                 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கநாச்சியார் கோவிலில் நவராத்திரி உற்சவம் - தாயார் திருவடி தரிசனம்

9 days ago  
செய்திகள் / One India/ Astrology  
திருச்சி: நவராத்திரி பண்டிகை தமிழகத்தில் இன்று தொடங்கியுள்ள நிலையில் பல கோவில்களில் நேற்றே தொடங்கி விட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 7ஆம் திருநாளான 12ஆம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமைத்..
                 

தசரா பண்டிகை திருவிழாக்கோலம் பூண்ட மைசூரு : கொரோனா பரிசோதனை அறிக்கை கட்டாயம் - வழிகாட்டு நெறிமுறை

9 days ago  
செய்திகள் / One India/ Astrology  
மைசூரு: மக்களை கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசூரனை சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளே தசரா விழாவாக மைசூரு மக்களால் கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் எளிமையாக நடந்தது. அது போல் நடப்பாண்டும் தசரா விழா எளிமையாக நடக்கிறது. அதன்படி தொடக்க விழாவில் 400 பேரும், ஜம்பு..
                 

அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக வழக்கு.. எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட்!

9 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கோயில்களை சிறப்பாக பராமரிப்பதில்லை என பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூரில் கடந்த..
                 

அராஜகம்.. திடீர்னு அரசு பள்ளியில் புகுந்து 2 ஆசிரியர்களை சுட்டுகொன்ற தீவிரவாதிகள்.. ஜம்மு காஷ்மீரில்

9 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை பள்ளி ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் 2 ஆசிரியர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. காஷ்மீரில் அண்மைக்காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 2 நாளைக்கு முன்பும் இப்படித்தான் ஒரு கொடூரம் நடந்தது. ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில்..
                 

சாதித்தேவிட்டார் பாக். ராணுவ தளபதி- தூக்கியடிக்கப்பட்டார் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபையஸ்!

9 days ago  
செய்திகள் / One India/ News  
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அதிகமாக மூக்கை நுழைத்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபையஸ் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள்ளார். பாகிஸ்தானில் மூன்று அதிகார மையங்கள் எப்போதும் செயல்படுகின்றன. பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆகியவைதான் இந்த மூன்று அதிகார மையங்கள். பேய்க்கும் பேய்க்கும்...ஆப்கன் விவகாரத்தில் பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்தது..
                 

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

9 days ago  
செய்திகள் / One India/ News  
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..
                 

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: சூரசம்ஹாரம் காண அனுமதியில்லை

9 days ago  
செய்திகள் / One India/ Astrology  
தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா தடை காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது. தசரா பண்டிகையின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதால் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும்..
                 

பண்டோரா பேப்பர்ஸில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள்

10 days ago  
செய்திகள் / One India/ News  
கசிந்துள்ள பண்டோரா பேப்பர்ஸ் குறித்து இந்திய அரசு பல-அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா பேப்பர்களில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் (சிபிடிடி) தலைவர் ஜேபி மொஹபத்ரா விசாரணைக் குழுவை வழிநடத்துவார். CBDT..
                 

இதய பாதிப்பால் போராடும் பிஞ்சு சிறுவன்.. உங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்திடுங்கள்

10 days ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் 12 வயது சிறுவனுக்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை உடனே செய்திடுங்கள். நெல்லூர் மாவட்டத்திற்கு கீழ் வரும் இருக்கம் தீவுப்பகுதியை சேர்ந்த தம்பதி எல்லியா மற்றும் கலா. இவர்களின் 12 வயது சிறுவன் திருமலாதான் தற்போது இதயம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். பிறந்து சில மாதங்களே ஆன போது திருமலாவிற்கு..
                 

வேலையை காட்டிய தாலிபான்: நடு வீதியில் கிரேன்களில் கொன்று தொங்க விடப்பட்ட 3 ஆண்கள்.. காரணம் தெரியுமா?

10 days ago  
செய்திகள் / One India/ News  
காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரேன்களில் 3 பேர் தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு புதிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த 3 ஆண்களும், கொள்ளையடிக்க முயன்றபோது சிக்கி, இப்படி தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு....
                 

திரிபுராவில் திரிசங்கு நிலையில் பாஜக அரசு? மமதா பானர்ஜி கட்சிக்கு தாவும் பாஜக எம்.எல்.ஏ.!

11 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தைத் தொடர்ந்து திரிபுராவிலும் பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர். இதனால் திரிபுராவில் ஆளும் பாஜக அரசு ஆட்டம் காண்பது உறுதியாகி உள்ளது. திரிபுராவில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத ஒரு கட்சியாகத்தான் பாஜக இருந்தது. திடீரென ஒட்டுமொத்தமாக திரிபுரா காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்தது பாஜக...
                 

லக்கிம்பூர் வன்முறை: பிரேத பரிசோதனை செய்யாமல் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம்- உறவினர்கள் திட்டவட்டம்

11 days ago  
செய்திகள் / One India/ News  
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட 3 விவசாயிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று அவர்களின் உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உ.பி. லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய..
                 

2 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. என்ன கண்டுபிடிப்புக்காக தெரியுமா?

11 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்டோக்ஹோம்: 2021ம் ஆண்டுக்கான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11ம்..
                 

டி23 புலி வேட்டை: \"காட்டுக்குள் ஜீவகாருண்யம் பார்க்கலாமா?\" - வலுக்கும் கேள்விகள்

12 days ago  
செய்திகள் / One India/ News  
கும்கி யானைகள், மோப்ப நாய்கள், 150 வனத்துறை ஊழியர்கள் எனக் களமிறங்கியும் பத்து நாள்களாக புலியைப் பிடிக்க முடியாமல் நீலகிரி வனத்துறை திணறி வருகிறது. புலியை சுடக் கூடாது என்ற எண்ணம் சரியானது. ஆனால், நகரத்தில் இருந்து பேசுகின்ற காட்டுயிர் பாதுகாப்புக்கும் காட்டையொட்டி வாழும் மக்களின் மனநிலைக்கும் இடையே ஏராளமான இடைவெளிகள் உள்ளன' என்கின்றனர்..
                 

விவசாயிகள் போராட்டம் : எனது டிரைவர் அடித்து கொலை.. நான் அந்த இடத்திலேயே இல்லை.. அமைச்சர் மகன்

12 days ago  
செய்திகள் / One India/ News  
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜ்ய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் காரை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தான் அந்த இடத்திலேயே இல்லை என ஆஷிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியில் தான் இருந்ததாகவும் அவர்..
                 

மமதா வென்ற பவானிப்பூர் தொகுதியில்... 5 மாதங்களில் 50% வாக்குகளை பறிகொடுத்து படுதோல்வி அடைந்த பா.ஜ.க.

12 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் 50% வாக்குகளை இடைத்தேர்தலில் பறிகொடுத்து பாஜக படுதோல்வி அடைந்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது மாஜி தளபதியான சுவேந்து அதிகாரி,..
                 

'ஹாய் டிரைவர் .. ஹவ் ஆர் யூ'.. பேருந்து கண்ணாடியை உரசியபடி நின்ற யானைகள்.. பீதியில் உறைந்த பயணிகள்!

12 days ago  
செய்திகள் / One India/ News  
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் பெண் யானை ஒன்று, தனது குட்டியுடன் அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம். ஊரக வேலை..
                 

அதிமுகவைப் போலவே.. துரதிர்ஷ்டவசமாக அந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலைமை.. ஜோதிமணி பொளேர்

13 days ago  
செய்திகள் / One India/ News  
காரைக்கால் : தமிழகத்தில் அதிமுக அரசு எப்படி பாஜகவுக்கு அடிமையாக இருந்து, தேர்தலில் தோல்வியடைந்து, தற்போது கட்சியே கரையும் நிலைமையில் உள்ளதோ, அதேபோல துரதிர்ஷ்டவசமாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுக்கு அடிமையாக உள்ளது என கரூர் லோக்சபா தொகுதி எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச உள்ளாட்சித் தேர்தலுக்கான, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களுள் ஒருவரான கரூர்..
                 

மே வங்கத்தில் 3 தொகுதிகளை.. அப்படியே தட்டி தூக்கிய திரிணாமுல்.. மிக பெரிய தோல்வியை எதிர்நோக்கி பாஜக

13 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூர் தொகுதியில் மம்தா முன்னிலையில் உள்ள நிலையில், சாம்சர்கஞ்ச் மற்றும் ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமுல் வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது...
                 

'தேசபக்தியை வளர்க்க.. காஷ்மீரில் ஒவ்வொரு மூலையிலும் ஆஎஸ்எஸ் ஷாகாக்கள்..' மோகன் பகவத் சர்ச்சை பேச்சு

13 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஒவ்வொரு மூலையிலும் ஆர்எஸ்எஸ் ஷாக்காக்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காஷ்மீர் மக்களிடையே தேசபக்தியை வளர்த்து அமைதியான சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆஎஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாகக் காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2..
                 

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

13 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த மே மாதம் அமோக வெற்றிபெற்றது. 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடித்தது. பாஜக 77 இடங்களில் வென்று பிரதான..
                 

சமந்தா விவாகரத்து: 'நாக சைதன்யாவும் நானும் இனி கணவன் - மனைவி இல்லை'

13 days ago  
செய்திகள் / One India/ News  
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும்,..
                 

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் புனித நீராடவும் திதி தர்ப்பணம் தரவும் பக்தர்களுக்குத் தடை

14 days ago  
செய்திகள் / One India/ Astrology  
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், வரும் 5 மற்றும் 6ஆம் தேதி திதி தர்ப்பணம் அளிக்கவும் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார். பெற்ற தந்தையாக மகனான..
                 

அக்டோபர் மாத ராசி பலன் 2021: கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும்

15 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் 15 நாட்களும் துலாம் ராசியில் 15 நாட்களும் பயணம் செய்யப்போகிறார். சூரியனுடன் செவ்வாயும், புதனும் இணைந்தே பயணிக்கப் போகின்றனர். நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் அக்டோபர் மாதத்தில் கும்பம் மற்றும் மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. அதே நேரத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவைப்படும் மாதமாக..
                 

மகாளய அமாவாசை 2021: அன்னதானத்தின் மகிமையை உணர்ந்த கர்ணன் - சுவாரஸ்ய புராண கதை

16 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரப்படைப்பு மிகச்சிறந்த படைப்பு. கேட்டதைக் கொடுக்கும் கொடையாளி. மரணிக்கும் நேரத்தில் கூட தான் செய்த தானங்களின் பலனை தானமாக கொடுத்த பின்னரே உயிர் விட்டார். அவர் செய்யாத தானம் அன்னதானம். அந்த அன்னதானம் செய்யாமல் விட்டதால் பல தானங்களை செய்த கர்ணனையே பசிக்கொடுமை வாட்டியது. மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று..
                 

அக்டோபர் மாத ராசி பலன்2021:துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த மாதம்

17 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: அக்டோபர் மாதத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி பெறப்போகிறீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதிக்கப்போகிறீர்கள். இந்த மாதத்தில் கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம். அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில்..
                 

குலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிய குவியும் பக்தர்கள் - கொடியேற்றம், சூரசம்ஹாரம் காணத் தடை

18 days ago  
செய்திகள் / One India/ Astrology  
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபார் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் நாளான 15ஆம் தேதி இரவில் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்..
                 

மகாளய அமாவாசை 2021 : புரட்டாசி அமாவாசையில் திதி கொடுப்பதால் என்னென்ன பலன்கள்

19 days ago  
செய்திகள் / One India/ Astrology  
ராமேஸ்வரம்: புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பிருந்தே மகாளய பட்ச காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து வந்து நம்முடனே தங்கியிருந்து நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வாதம் செய்து செல்கின்றனர். இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 6ஆம் தேதி..
                 

புதன் பெயர்ச்சி 2021: துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி வக்ரமடையும் புதனால் யாருக்கு என்ன பாதிப்பு

28 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: நவ கிரகங்களில் புதன் கிரகம் மாதம் ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதன் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் தனது நண்பரின் வீடான துலாமில் சில நாட்கள் சஞ்சரிக்கப்போகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும்..
                 

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: துலாம், விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும்

29 days ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதம் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோகங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் செய்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. நவகிரகங்களின்..
                 

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தகால் முகூர்த்தம் விழா

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச..
                 

வாழ்க்கை வாழத்தான்... சூரிய நமஸ்காரம் பண்ணுங்க...தற்கொலை எண்ணமே தலைதூக்காது

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: ஒவ்வொரு நாற்பது செகண்டிற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்கொலைகளை தடுக்கவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 10ஆம் தேதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் அனைத்திற்கும் காரணம் உள்ளது தற்கொலை செய்ய எந்த கிரகங்கள் தூண்டுகின்றன என்று பார்க்கலாம். சென்னை: வாழ்க்கை என்பது..
                 

மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்கள் - திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள்

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: மகாளய பட்சம் புரட்டாசி 4ஆம் தேதி செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது. பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். முன்னோர்களுக்கு திதி..
                 

சாதம் பிரசாதமாவது எப்போது - எந்த கோவிலில் என்ன பிரசாதம் ஸ்பெஷல் தெரியுமா

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: மனிதர்களாகிய நாம் சமைக்கும் உணவை திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் சுவாமியின் முன்னால் இலைபோட்டு நைவேத்தியம் செய்கிறோம். நாம் சாதாரணமாக சமைக்கும் சாதமும் உணவுப்பொருட்களும் இறைவனுக்குப் படைக்கப்படும் போது மீண்டும் பிரசாதமாகிறது. நாம் வயிராற சாப்பிட உணவு கொடுக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். இறை நம்பிக்கை உள்ள..
                 

புரட்டாசி மாதத்தில் திருமணம், வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? - குழந்தை பிறந்தால் என்ன பலன்

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு மட்டுமே உரியது. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா? வளைகாப்பு நடத்தலாமா? வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட நல்ல காரியங்கள் செய்யலாமா என்று பலரும் கேட்கின்றனர். தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. அதே போல புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறந்தால் எதுவும் பிரச்சினை வருமா..
                 

மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகை : புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்களும் பலன்களும்

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கிறது. புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது. சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு..
                 

புரட்டாசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை செப்.16 ல் திறப்பு

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
                 

வைத்தீஸ்வரன் கோயிலில் 5 கிலோ தங்கத்தில் புதிய கொடிமரம் - பக்தர்கள் இன்றி நடந்த கும்பாபிஷேகம்!

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கத்தால் செய்யப்பட்ட புதிய கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால்..
                 

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் : நினைத்த காரியம் நிறைவேற்றும் பிள்ளையார் விரதம்

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். பெரும்பாலானவர்களுக்கு இஷ்ட தெய்வமாக இருப்பவர் 'விக்னங்களை தீர்க்கும் விநாயகர்', என்று கூட சொல்லலாம். வெறும் கைகளோடு, இரு கை கூப்பி வணங்கி மூன்று தோப்புக்கரணம் போட்டு, தலையில் கொட்டு வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வேண்டினாலே கேட்ட வரங்களை வாரி வழங்குபவர் விநாயகர். தும்பிக்கையான் விநாயகருக்கு விரதம் இருந்து..
                 

விநாயகர் சதுர்த்தி: கஜமுகாசூரன் வதமும் மூஞ்சூறு வாகனமும் - பிள்ளையார் அவதரித்த கதை

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி ஏன் வந்தது என்பது பற்றியும் அவரது படைப்பு பற்றியும் புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும் பிள்ளையார்பட்டியில் நடைபெறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அங்கு கஜமுகாசூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி..
                 

சிவராஜயோகம், குருச்சந்திர யோகம் - அரசாளும் யோகங்கள் யாருக்கு இருக்கும்

one month ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: சிவராஜயோகம் அமையப்பெற்றவர்கள் அதிகாரம் செய்யும் பதவியில் அமரக்கூடிய வாய்ப்பு தேடி வரும். அரசாங்கத்தில் உயர் பதவி தேடி வரும். அரசியலில் சிறப்பான பதவியைத் தரும். அமைச்சர் முதல் பிரதமர் வரை பதவி வகிக்கும் வாய்ப்பையும் பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதகத்தில் குரு சந்திர யோகம் உள்ளவர்களுக்கு புகழும் செல்வாக்கும் தேடி வரும். ஒருவரின்..