தினமலர் தினகரன் விகடன் சமயம் One India

புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்

13 hours ago  
செய்திகள் / One India/ News  
புல்வாமா ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தினரைக் குறி வைத்து தாக்கியுள்ளனர். இதில் 5 படையினர் படுகாயமடைந்தனர். 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ கவச வானம் இந்தத் தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்தது. அரிஹால் என்ற கிராமத்தில் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் வெடிகுண்டு மூலம் தாக்குதல்..
                 

பாஜகவில் ஐக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, கவுன்சிலர்கள்... மம்தாவுக்கு அடி மேல் அடி... !!

15 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். மேற்குவங்கத்தில் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தேர்தல் முடிவுகள் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் பாஜகவின் கை ஓங்கி இருப்பதை பார்த்தவுடன், மம்தாவுக்கு..
                 

வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை பகலில் வெளியே நடமாட வேண்டாம்.. மத்திய அரசு அறிவுறுத்தல்

23 hours ago  
செய்திகள் / One India/ News  
பாட்னா: நாடு முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத வெப்பத்தால் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும், பல மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் வெயிலால், பீகார் மாநிலத்தில் மட்டும் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்...
                 

கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதல்.. தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது

yesterday  
செய்திகள் / One India/ News  
சென்னை: கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது. மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவரை..
                 

2 ஹெல்மெட் இருக்கா... இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படும்.. போக்குவரத்துத் துறை அதிரடி

yesterday  
செய்திகள் / One India/ News  
போபால்: இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய முடியும் என மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே,..
                 

மே.வங்கத்தில் 6-வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நீடிப்பு- அரசுடன் பேச்சு நடத்த தயார் என அறிவிப்பு

yesterday  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பணி பாதுகாப்பு கோரி 6-வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் 2 பேரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நோயாளி ஒருவரது உறவினர்கள் கொடூரமாகத் தாக்கினர். இதனால் பயிற்சி மருத்துவர்கள்..
                 

குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை.! என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்

yesterday  
செய்திகள் / One India/ News  
குவைத்: இந்தியாவில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக தற்போது குவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர வைத்துள்ளது. தற்போதைய நிலரவப்படி வளைகுடா நாடுகளான குவைத் மற்றும் சவுதி அரேபியாவில்..
                 

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை.. மக்கள் நிம்மதி

2 days ago  
செய்திகள் / One India/ News  
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. கெர்மடெக் தீவு என்பது மக்கள் அதிகம் வசிக்காத பகுதியாகும். இந்த தீவுகளுக்கு வடக்கே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. இதனால் நியூசிலாந்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ..
                 

கையைத் தூக்குங்க.. அப்படியே நில்லுங்க.. சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படை!

2 days ago  
செய்திகள் / One India/ News  
விசாகப்பட்டனம்: சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படையினரால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபர்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று முறை முதல்வர், மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவர், இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள..
                 

ஏன் சோபியா இப்படி செஞ்சீங்க.. தெரியாமதான் செஞ்சுட்டேன்.. ஒரு கலகல சம்பவம்

2 days ago  
செய்திகள் / One India/ News  
கோலாலம்பூர்: "ராத்திரி நேரம்.. ரோட்டோரம் ஒரு குட்டி இருந்தது... பாவம் அதுக்கு அடிபட்டு இருந்தது.. இரக்கப்பட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. அது நாய்க்குட்டின்னு தான் நினைச்சேன்.. கடைசியில பார்த்தால் இப்படி ஆயிடுச்சே.. " என்று போலீசில் புலம்பி தள்ளினார் சோபியா. மலேசியாவின் பிரபல பாடகிதான் ஸரித் சோபியா யாசின். வயசு 27 ஆகிறது. இப்போது இவர் ஒரு..
                 

ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் வெறியாட்டம்.. மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு.. 5 போலீஸ்காரர்கள் பலி

3 days ago  
செய்திகள் / One India/ News  
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாஷெட்பூர் அருகே மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 போலீசார் கொல்லப்பட்டனர். தலைநகர், ஜாம்ஷெட்பூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில், சரைகெலா மாவட்டத்தில் ஒரு உள்ளூர் சந்தையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது திடீரென மாவோயிஸ்டுகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். மாவோயிஸ்டுகள், இரண்டு பேர்..
                 

மே.வங்கத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும்: மமதா அதிரடி

3 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்தி மொழியை திணிப்பதையும் வட இந்தியர்கள் குடியேற்றத்துக்கும் எதிராகவும் மேற்கு வங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது...
                 

மே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு

3 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா/ டெல்லி; மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைத் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவரை நோயாளியின் உறவினர் தாக்கினார். இதனையடுத்து மருத்துவர்களுக்கு..
                 

பாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி

4 days ago  
செய்திகள் / One India/ News  
பிஷ்கேக்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் கைவிட்டால்தான், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு, அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு தலைநகர், பிஷ்கேக் சென்றுள்ளார். அங்கு என்று சீன..
                 

ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போக இவர்தான் காரணமாமே!

4 days ago  
செய்திகள் / One India/ News  
அமராவதி: நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளதான் எறு ஆந்திர அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் அமோகவெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரது அமைச்சரவையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜாவுக்கு முக்கிய..
                 

துப்பாக்கி முனையில் அக்காள் தங்கை பலாத்காரம் - குற்றவாளிகளை பிடிக்க உபி முதல்வர் உத்தரவு

4 days ago  
செய்திகள் / One India/ News  
முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக கூட்டு பலாத்காரம் அதிகாரித்து வருகிறது. நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு சிறுமிகளை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். காசர்வா கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்து..
                 

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்... இன்னொரு 'தியான்மென்' ஆக விஸ்வரூபம்?

4 days ago  
செய்திகள் / One India/ News  
ஹாங்காங்: குற்றவாளிகளை சீனா, தைவானிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் உச்சகட்ட போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க ஹாங்காங் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997-ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் சீனாவின் ஒரு மாகாணமாக இல்லாமல் சுதந்திரமான ஒரு அரசாங்கமாக ஹாங்காங் செயல்பட்டு வருகிறது...
                 

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் - தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்.. மூன்று வீரர்கள் வீரமரணம்

5 days ago  
செய்திகள் / One India/ News  
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அனந்த்நாக்கில் அமைந்துள்ள சிஆர்பிஎப் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கு சிஆர்பிஎப் வீரர்களும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். அனந்த்நாக் மாவட்டம் கே.பி. சாலை பகுதியில் சிஆர்பிஎப்..
                 

விபத்தில் சிக்கி நொறுங்கி கிடக்கும் ஏ.என்.32 விமானம்.. கடினமான மலையில் களமிறங்கிய மீட்புக் குழு

5 days ago  
செய்திகள் / One India/ News  
இடாநகர்: கடந்த 10 நாட்களுக்கு முன் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமான பாகங்கள் சிதறியுள்ள கடினமான மலைபகுதியில், விமானப்படை குழு ஒன்றை களமிறக்கியுள்ளது. சுமார் 8 முதல் 10 பேர் கொண்ட இக்குழுவானது, விமான பாகங்களின் சிதறல்களுக்கிடையே யாரேனும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்களா என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்..
                 

நாளை குஜராத்தை தாக்கப்போகும் வாயு புயல்.. 3லட்சம் மக்கள் வெளியேற்றம்.. 'மிக கனமழை' எச்சரிக்கை

5 days ago  
செய்திகள் / One India/ News  
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நாளை வாயு புயல் கரையை கடக்கிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக கண்ட்லா துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் யாரும் வரும் ஜுன் 15ம் தேதி வரை கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
                 

விமான கழிவறை டிஷ்யூ பேப்பரில் ஒரே ஒரு வாசகம்.. மும்பை தொழிலதிபருக்கு ஆயுள் சிறை.. நீதிமன்றம் அதிரடி

6 days ago  
செய்திகள் / One India/ News  
அகமதாபாத்; ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டிய வழக்கில், மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, அகமதாபாத் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நீதிபதி, கே.எம்.தாவே இன்று தீர்ப்பு வழங்கினார்...
                 

பீகாரில் சட்டென மாறிய அரசியல் வானிலை.. நிதிஷ்குமாருடன் கை கோர்க்க லாலு கட்சி ரெடி!

6 days ago  
செய்திகள் / One India/ News  
பாட்னா: பாஜகவால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் மெகா கூட்டணியை மீண்டும் அமைக்க லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள் விருப்பம் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது ராஷ்டிரிய ஜனதா தள். இன்னொருபுறம் பாஜக- ஐக்கிய ஜனதா..
                 

பலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்!

6 days ago  
செய்திகள் / One India/ News  
அகார்தலா: திரிபுராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ தன்மீது பலாத்கார புகார் கூறிய பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுரா மக்கள் முன்னணி கட்சியும் கூட்டணியில் உள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள திரிபுரா மக்கள் முன்னணி கட்சியின் ரைமா பள்ளத்தாக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தனஞ்ஜய். 28..
                 

ஆங்கில டிவி சேனலில் இந்தியில் பேசுவீங்களோ? வங்க மொழியில் பேசி தெறிக்கவிட்ட கார்கா சட்டர்ஜி!

6 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: ஆங்கில டிவி சேனலில் இந்தியில் விவாதித்துக் கொண்டிருந்தவர்களை வங்க மொழியில் பேசி அலறவிட்டார் மேற்கு வங்கத்தின் பேராசிரியர் கார்கா சட்டர்ஜி. அவரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு விவகாரமானது, இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளது. சி.என்.என். நியூஸ் 18..
                 

சாக்கடை பிரச்சினை... தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் - போலீஸ் குவிப்பு

6 days ago  
செய்திகள் / One India/ News  
கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பக்கத்து வீட்டு சண்டை படுபாதக செயலில் முடிந்துள்ளது. சாக்கடை பிரச்சினைக்காக தலித் சிறுமியை ஆறுபேர் கொண்ட கும்பல் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே சீரழித்துள்ளனர். கோரக்பூரில் இந்த அதிரவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஷி நகர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் உள்ள சிறுமியின் குடும்பத்தினருக்கும், கடந்த வெள்ளிக்கிழமையன்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக..
                 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு... போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

6 days ago  
செய்திகள் / One India/ News  
சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனையொட்டி, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்..
                 

அரபிக்கடலில் உருவானது \"வாயு\" புயல்.. குஜராத் பக்கம் நகர்கிறது.. தமிழகத்துக்கு மழை இல்லை

7 days ago  
செய்திகள் / One India/ News  
மும்பை: அரபிக்கடலில் புயல் உருவாகிவிட்டது. நேற்றெல்லாம் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வாயு தற்போது புயலாக மாறி உள்ளது. தென்மேற்கு பருவமழை முதலில் கேரளாவில் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கிவிட்டது. இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக வானிலை..
                 

பழங்குடியின பெண்ணுக்கு விஷம் கொடுத்து பலாத்காரம் - கொடூரர்களைத் தேடும் போலீஸ்

7 days ago  
செய்திகள் / One India/ News  
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மத்தியபிரதேசத்திற்கு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பழங்குடியினப் பெண்களை விஷம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா என்ற ஊரில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பழங்குடியின பெண்கள் வந்தனர். நிகழ்ச்சி..
                 

மும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ்

7 days ago  
செய்திகள் / One India/ News  
மும்பை: முகம் முழுவதும் சிதைந்த நிலையில் யாரென்றே தெரியாத நிலையில் ஒரு சடலத்தை கடந்த மாதம் முதல் வாரத்தில் மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சடலத்தில் இருந்த பி கே என்ற அடையாள டாட்டூவையும், விரலில் இருந்த ஓட்டுப்போட அடையாளமான அழியாத மையை வைத்தும் யாருடைய சடலம், எதற்காக கொலை நடந்தது என்று துப்புத்துலக்கி கண்டு பிடித்துள்ளனர்...
                 

தமிழ்நாட்டின் இந்த பாடத்திட்டம் சூப்பர்.. எங்க மாநிலத்தில் பின்பற்றுவோம்.. உ.பி. துணை முதல்வர்

7 days ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்விமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் க்யூ.அர் குறியீடு முறை தமிழக பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தமுறை உள்பட பல சிறப்பு அம்சங்கள் உத்தரப்பிரதேச பள்ளிகளில் பின்பற்றப்படும் என்றார். உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ்..
                 

சொடக்கு போடற நேரத்துல மினிஸ்டர் கைதா...?

7 days ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மினிஸ்டர் கைது என்பது வேடிக்கையான காட்சியா இருக்கு. நம்பவும் முடியாத காட்சிதான். இந்த காலத்துல ஒரு கவுன்சிலரை பாவம் ஒரு போலீஸ் கைது செய்ய முடியாம தவிக்கறாங்க. ரொம்ப அசால்ட்டா காரில் போய்க்கொண்டு இருக்கும் மத்திய அமைச்சர் சகுந்தலா தேவியை போலீஸ் வழி மறித்து கைது செய்யறாங்க. என்னதான்..
                 

மேற்கு வங்காளத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... 4 பேர் உயிரிழப்பு

8 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை..
                 

கெண்டகி.. சிக்கனுக்கு மட்டும் இல்ல.. விதம் விதமான குதிரைக்கும் ரொம்ப பேமஸ் !

8 days ago  
செய்திகள் / One India/ News  
கெண்டகி: நம்ம ஊரில் கேஎப்சி சிக்கன் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த சிக்கன் சுவைக்காக வெள்ளிக்கிழமை தோறும் அந்த கடையை விசிட் செய்பவர்கள் நகர்ப்புறங்களில் ஏராளம். அந்த கேஎப்சி சிக்கன் அமெரிக்காவில் இருந்து வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். கென்டக்கி பிரைட் (பொறித்த) சிக்கன் என்பதே அதன் விரிவாக்கம். ஆமா கேஎப்சி சிக்கன் பாக்ஸிலும் சிரித்துக்கொண்டிருக்கும்..
                 

75 அடி நீள ரயில்வே பாலத்தை இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாகத் திருடிச் சென்ற பலே திருடர்கள்..!

8 days ago  
செய்திகள் / One India/ News  
மாஸ்கோ: ர‌ஷியாவில் 56 டன் எடை கொண்ட 75 அடி நீள ரயில்வே பாலம் திடீரென காணாமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. வடிவேலு ஒரு படத்தில் கிணத்தைக் காணோம் என புகார் செய்வார் அல்லவா, அதுபோல ரஷ்யாவில் தற்போது மிகப்பெரிய பாலம் ஒன்றைக் காணவில்லை என்ற வினோதமான புகார் ஒன்று விசாரணைக்காக வந்துள்ளது. {image-russian-railway-bridge-stolen-1560057598.jpg..
                 

தமிழகத்திற்கு குறி வைக்கும் பாஜக.. திமுக எம்.பிக்கள் பின்னணி குறித்து தகவல் சேகரிக்குதாம்!

8 days ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: தமிழகத்தை மட்டும் இழந்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது பாஜக தலைமை. இதனால் திமுக எம்பிக்களைக் குறி வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது. ஓபிஎஸ் மகன் போட்டியிட்ட தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும்..
                 

பிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது

9 days ago  
செய்திகள் / One India/ News  
மாலே: பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிஸான் இசுதீன் விருதை அந்நாட்டு அதிபர் இப்ராஹீம் சோலிஹ் வழங்கினார். அதே நேரம், மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு மாலத்தீவின் அதிபர் இப்ராஹீம் சோலிஹ் கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு..
                 

கேம் சேஞ்சரான ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி.. ரோஜாவுக்கு \"பெத்த போஸ்ட் உந்தி\"

9 days ago  
செய்திகள் / One India/ News  
அமராவதி: ஆந்திர அமைச்சரவையில் கேம் சேஞ்சரான நடிகை ரோஜாவுக்கு எந்தவித பதவியும் கொடுக்கப்படவில்லை என்பதால் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவை அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இது ஆந்திர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்முறையாக ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி ஆட்சியை பிடித்தது...
                 

இவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது? கொலையாளிகள் தப்பவே கூடாது.. கொந்தளித்த ராகுல்!

10 days ago  
செய்திகள் / One India/ News  
அலிகார்: உத்தரப்பிரதேசத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளது டப்பல் என்ற நகரம். இந்த பகுதியை சேர்ந்த தம்பதி அதே பகுதியை சேர்ந்த ஜாகீத் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இதனை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில்..
                 

இதனால என்ன யூஸ்? மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை.. மமதா பானர்ஜி அதிரடி!

10 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. நிதி ஆயோக் குழுவின் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில..
                 

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி

10 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளால் நடந்தப்பட்ட தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலோகாட் பகுதியில் அதிகாலை..
                 

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை... இலங்கையில் வருகிறது புதிய சட்டம்!!

11 days ago  
செய்திகள் / One India/ News  
கொழும்பு: சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை நிகழ்த்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள் உள்பட 258 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். {image-esma-02-1464859332-1536483929-1559825241.jpg..
                 

சாலையில் குடங்களை போட்ட நரிக்குறவர்கள்.. வாயில் துணிகட்டி தண்ணீர் கேட்டு திருத்தணியில் \"ஒப்பாரி\"

11 days ago  
செய்திகள் / One India/ News  
திருத்தணி: திருத்தணியில் குடிநீர் கேட்டு வாயில் , வயிற்றில் அடித்துக் கொண்டு ஒப்பாறி வைத்தப்படி நூதன முறையில் சாலை மறியலில் நரிகுறவர்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே தலைவிரித்தாடுகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர்..
                 

துப்பாக்கிச் சூடு, வெட்டு, குத்து கொலைகள்.. பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் மோதலால் மே.வங்கத்தில் பதற்றம்

11 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த இரு நாட்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவங்களில், பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. நடைபெற்று முடிந்த, லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அபார முன்னேற்றம் கண்டது...
                 

Video: மெல்ல வந்த செல்லப் பறவை... மெய் மறக்க செய்த கீச் கீச் ஒலி.. ஒரு அழகிய அனுபவம்

12 days ago  
செய்திகள் / One India/ News  
சார்லேட்: காற்றின் மொழி ஒலியா இசையா.. மறக்க முடியாத ஒரு அழகுப் பாடல்.. உணர முடிந்தவர்களுக்குத்தான் இது பிடிக்கும்.. இயற்கை படைத்த ஒவ்வொரு விருந்துமே அப்படித்தான்.. உணர்ந்து உள்ளுக்குள் போவதுதான் அதன் அழகியலை உணர ஒரே வழி. இதோ இங்கு அப்படி ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அமெரிக்காவின் சார்லேட்டில் வசித்து வரும் சகாயா. அதை..
                 

பட்ஜெட் நிதியை குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு... இம்ரான்கான் பாராட்டு!

12 days ago  
செய்திகள் / One India/ News  
இஸ்லாமாபாத்: அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்காக, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அந்நாட்டு மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசுத் துறை நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளை கையாளுமாறும் வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், வரும்..
                 

எங்களுடன் மோதினால் அழிக்கப்படுவீர்கள்... பாஜவுக்கு மம்தா பானர்ஜி மறைமுக எச்சரிக்கை!

12 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: பாஜகவுடனான கோபம் மம்தாவுக்கு சற்றும் குறைந்தபாடில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி. இந்த நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் ட்விட்டரில் தனது பாணியில் வாழ்த்து செய்தியுடன் கூடுதலாக அதிரடி அரசியல் செய்தியையும் சேர்த்து பகிர்ந்து கொண்டுள்ளார்...
                 

நம்மிடம் மோதினால் அழிவுதான்.. ரம்ஜான் விழாவில் மமதா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை

12 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: யாரெல்லாம் நம்முடன் மோதுகிறார்களோ, அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதுதான் நமது கோஷம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் முஸ்லீம்கள் மத்தியில் உரையாற்றியபோது, அரசியல் எதிராளிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்க அவர் தயங்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், மேற்கு..
                 

ஸ்வீட் எடு கொண்டாடு.. வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

12 days ago  
செய்திகள் / One India/ News  
அட்டாரி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாகா எல்லையில் இந்திய பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பகிரிந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில்..
                 

சீரியல் கில்லர் சர்க்கார்... லஞ்ச் டைமில் பெண்களைக் கொல்லும் கொடூர கொலையாளி கைது

13 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: சினிமாவை மிஞ்சும் கிரைம் திரில்லர் இது. பலஹீனமான இதயம் உள்ளவர்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம். ரொம்ப பில்டப் கொடுக்குறோம்னு நினைக்காதீங்க இது நிஜமாகவே ரத்தத்தை சில்லிட வைக்கும் நிஜமான கிரைம் ஸ்டோரி. மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. லஞ்ச் டைமில் தனிமையில் அசந்து இருக்கும் பெண்களை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து..
                 

24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ

13 days ago  
செய்திகள் / One India/ News  
கவுகாத்தி: அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான விமானத்தை, இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியோடு, தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், நேற்று மதியம் சுமார், 12.27 மணிக்கு, புறப்பட்டது. இந்த விமானத்தில், 13 பேர் இருந்தனர்...
                 

மூவரும் உடலுறவு... போதையில் தடுமாறி விழுந்து மரணித்த மாடல் அழகி- மவுனம் கலைத்த ஜான்சன்

13 days ago  
செய்திகள் / One India/ News  
கோலாலம்பூர்: மாடல் அழகி இவானா ஸ்மித் மர்ம மரணம் பற்றி கோடீஸ்வரர் அலெக்ஸ் ஜான்சன் மவுனம் கலைத்துள்ளார். அந்த மரணத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். கொடூர மரணத்தில் இருந்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்வாணமாக பால்கனியில் சடலமாகக்..
                 

ராஜஸ்தானில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மோதல்... உட்கட்சி பூசல்

13 days ago  
செய்திகள் / One India/ News  
ஜெய்ப்பூர்: ஜோத்பூரில் தனது மகன் வைபவ் கெலாட் தோல்விக்கு துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் பரிதாப தோல்வி அடைந்துள்ளது...
                 

நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை.... ராஜஸ்தானில் வெயில் சுட்டெரித்தது.

13 days ago  
செய்திகள் / One India/ News  
ஜெய்ப்பூர்: நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ராஜஸ்தான் மாநிலத்தில் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் சுட்டெரித்தது. கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் இயல்பைகாட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் அனல் காற்று மற்றும் வெப்ப எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்தநிலையில், பாலைவன மாநிலமான, ராஜஸ்தானில் உள்ள..
                 

இந்திய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் நடவடிக்கை

14 days ago  
செய்திகள் / One India/ News  
குவஹாத்தி: அஸ்ஸாமில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படையின் ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரின் கதி என்ன என்பது குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று பகல் ஏ.என். 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் மெஞ்ச்சுக்கா பள்ளத்தாக்கு நோக்கி..
                 

முகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி

13 hours ago  
செய்திகள் / One India/ News  
ஜெனீவா: சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலனை கண்டுபிடிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து உடனடியாக விளக்க அறிக்கை அளிக்குமாறு பாஜக அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 15 ம் தேதி சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அன்று இரவு..
                 

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் தீவிர அனல் காற்றுக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

17 hours ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: இனி வரும் சில நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில், அதி தீவிர அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம், மேற்கத்திய காற்று வலுவாக வீசுவதால் தமிழகத்தின் பல்வேறு..
                 

புல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.! இந்தியாவை எச்சரித்த பாக்.,

yesterday  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கர சதி திட்டம் தீட்டி வருவதாக பாகிஸ்தான் உளவு நிறுவனம், இந்தியாவை உஷார் படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். புல்வாமா அருகே கோரிபோரா என்ற இடத்தில்..
                 

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி

yesterday  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீநகர்: உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு பிறகும், அடிக்கடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி..
                 

தியாகத் தலைவர்களுக்கு பெரிய சல்யூட்...! #FathersDay

yesterday  
செய்திகள் / One India/ News  
சென்னை: இன்று தந்தையர் தினம்.. உலகமெங்கும் அப்பாக்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டுள்ளனர் பிள்ளைகள். அன்னையர் தினம், மகள்கள் தினம் வரிசையில் இன்று தந்தையர் தினம். இதையொட்டி நமது வாசகர் சண்முகப் பிரியா நமக்கு எழுதி அனுப்பியுள்ள ஒரு குட்டிக் கட்டுரை... One India நேயர்களுக்கு வணக்கம். இன்று சுமைகளை தாங்கிக்கொண்டு தன் குடும்பத்திற்காக உழைக்கும்..
                 

சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி

yesterday  
செய்திகள் / One India/ News  
குவாங்டாங்: சீனாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக செஜ்ஜியாங், ஃப்யூஜியாங் உள்ளிட்ட ஏராளமான மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை வெள்ளத்தில் சிக்கி, 61 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிர்கதியாக தவித்து நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தெற்கு..
                 

ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்

yesterday  
செய்திகள் / One India/ News  
ஆலப்புழா: கேரள மாநில ஆலப்புழாவில் பணிமுடித்து விட்டு வீடு திரும்பிய பெண் காவலர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆலப்புழாவில் வள்ளிகுன்னம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சவுமியா புஷ்பாகரன் (34). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை 3-ஆவது வகுப்பு படித்து வருகிறார். சவுமியாவின் கணவர்..
                 

அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை

2 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறு, மேற்குவங்க மாநில மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிலரை, கடந்த திங்கட்கிழமையன்று நோயாளி ஒருவரது உறவினர்கள் ஒன்று..
                 

அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி... உளவுத் துறை எச்சரிக்கை!

2 days ago  
செய்திகள் / One India/ News  
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியை சேர்ந்த 18 எம்.பி.க்களுடன் நாளை அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்கு செல்கிறார். மேலும், ராமஜென்ம பூமி..
                 

கேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ!

2 days ago  
செய்திகள் / One India/ News  
பாலி: இந்தோனேஷியாவில் குரங்குகள் காட்டில் ஒரு குடும்பத்தினர் செல்பி எடுத்தபோது அங்கு வந்த குரங்கு அந்த கேமராவுக்கு போஸ் கொடுத்து செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஜூடி ஹிக்ஸ். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி கணவர் சைமன், மூன்று குழந்தைகள்..
                 

மே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 119 பேர் கூண்டோடு ராஜினாமா!

3 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்க அரசுக்கு எதிரான மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உட்பட 119 பேர் பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளியின் உறவினர் தாக்கினார். இதையடுத்து பாதுகாப்பு கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தை மேற்கு..
                 

தெலுங்கு தேச எம்.எல்.ஏ-க்கள் என் கட்சிக்கு வந்தால் தகுதி நீக்கம் செய்யுங்கள்.. ஜெகன் மோகன் அதிரடி

3 days ago  
செய்திகள் / One India/ News  
விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.எ.க்கள் யாரவது தங்களது கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வந்தால் அவர்களை உடனே தகுதி நீக்கம் செய்து விடுமாறு சபாநாயகரிடம் கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. தொடர்ந்து ஆந்திர சட்டபேரவையில்..
                 

பதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்

3 days ago  
செய்திகள் / One India/ News  
தெக்ரான்: அமெரிக்க அதிபர் டொனலாட்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தகுதியான ஆள் கிடையாது என ஈரான் நாட்டின் தலைவர் அலி காமேனி, ஜப்பான் பிரதமர் அபேயிடம் தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்ட அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஈரான் தலைவரின் இந்த பேச்சால் கடும் ஆத்திரத்தில் உள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வல்லரசு..
                 

கிர்கிஸ்தானில் சீன அதிபரை சந்தித்த மோடி.. இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு

4 days ago  
செய்திகள் / One India/ News  
பிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு சீன அதிபரான ஜின்பிங்கை சந்தித்து பேசினார். சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான்,ரஷ்யா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நடைபெறுகிறது {image-modi586-1560427947.jpg..
                 

3 மணி நேரத்திற்கும் மேல் தாஜ் மஹாலை சுற்றி பார்த்தால் அபராதம்.. சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

4 days ago  
செய்திகள் / One India/ News  
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்குள் சுற்றுலாப் பயணிகள் 3 மணி நேரத்திற்கும் மேல் இருந்தால், நுழைவு டிக்கெட் விலையே அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். முழுக்க பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. காதலின் சின்னமாக..
                 

\"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா\".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்!

4 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்லம்: "ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா" என்று ரத்தம் சொட்ட சொட்ட நின்ற தாயை பார்த்து பதறிய சிறுவன்தான் கோகுல்.. தனக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அந்த தாய்க்கு 2-வது கல்யாணம் செய்து அனைத்து தரப்பு மக்களிடம் சபாஷ் வாங்கி வருகிறார் மகன் கோகுல்! கேரள மாநிலம் கொல்லம் அருகே பள்ளிமோன் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து..
                 

வாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால்

5 days ago  
செய்திகள் / One India/ News  
அஹமதாபாத்: இன்று கரையை கடக்கும் என கூறப்பட்ட வாயு புயல் குஜராத்தை தாக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரே நாள் இரவில் காற்றின் சுழற்சியில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வேறு திசையை நோக்கி புயல் பயணிக்கிறது. அதேநேரம் குஜராத்தின் வேராவால் மற்றும் போர்பந்தர் கடற்கரை பகுதி அருகே வாயு புயல் இன்று மதியம் கடந்து செல்லும்..
                 

மேற்கு வங்காளத்தில் மீண்டும் ரணகளம்... பாஜகவினர் மீது போலீஸ் தடியடி

5 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதால் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் கலைத்தனர். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே மேற்கு வங்காளத்தில், மோதல்கள் தொடங்கி விட்டன. அதே நேரம், தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில்..
                 

ஜுலை 15ம் தேதி நிலாவுக்கு ஏவப்படுகிறது 'சந்திராயன் 2'... இஸ்ரோ தலைவர் சிவன் முக்கிய தகவல்

5 days ago  
செய்திகள் / One India/ News  
ஸ்ரீகரிகோட்டா: சந்திராயன் - 2 விண்கலம் வரும் ஜுலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிகு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணியில் உள்ள இஸ்ரோ, முதல் முறையாக அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. சந்திராயனுடன் லோண்ட் மற்றும் ரோவர கருவிகள் நிலவுக்கு செல்ல உள்ளன..
                 

புஸ்ஸுன்னு போன வெறும் \"வாயு\".. இந்த 4 மாவட்டத்தில் மட்டும் செம மழை இருக்கு!

6 days ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: வர்ற புயல்கூட தமிழ்நாட்டை ஏமாத்திட்டுதான் போகுது.. அரபிக் கடலில் உருவான "வாயு" புயல்.. புஸ்ஸென போய்விட்டது. இதனால் மற்ற மாநிலங்களில் மழை பெய்தாலும் தமிழகத்துக்கு ஏமாற்றம்தான். ஆனால் 4 மாவட்டங்களில் கன மழை என்பது மட்டும் ஆறுதலான விஷயம்! கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாளைக்கு முன்பு தொடங்கிவிட்டது. இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்..
                 

அரபிக் கடலில் வாயு புயல்.. இந்திய துறைமுகங்களில் தஞ்சமடையும் சீனா கப்பல்கள்!

6 days ago  
செய்திகள் / One India/ News  
ரத்தினகிரி: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயலில் இருந்து தப்பிக்க இந்திய துறைமுகங்களில் சீனாவின் கப்பல்கள் தஞ்சம் கோரியுள்ளன. அரபிக் கடலில் உருவாகி உள்ள வாயு புயல் நாளை முதல் வரும் 14-ந் தேதி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மிக பலமான புயல் காற்றும் கனமழையும் கொட்டித் தீர்க்கும்..
                 

தமிழகத்தில் யாராவது இப்ப இந்தி படிப்பாங்களா...நடக்கவே நடக்காது.... மமதா பானர்ஜி பொளேர்

6 days ago  
செய்திகள் / One India/ News  
கொல்கத்தா: தமிழகத்தில் இப்போது இந்தி படிக்க வேண்டும் என்கிறார்கள்.. இப்போது யாராவது தமிழகத்தில் இந்தி படிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்ததும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி பேசாத மாநிலங்கள் இதற்கு..
                 

மாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!

6 days ago  
செய்திகள் / One India/ News  
இடாநகர்: மாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலபிரதேசத்தில் மலை கிராமம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் ஜோர்காட் விமான படை தளத்தில் இருந்து ஜூன் 3-ந் தேதியன்று 13 பேருடன் ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து..
                 

ஏன் தோற்றீங்க.. 13ம் தேதி தமிழக பாஜக நிர்வாகிகளை கேள்விகளால் துளைக்கப் போகும் டெல்லி மேலிடம்

6 days ago  
செய்திகள் / One India/ News  
சென்னை: தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து டெல்லி பாஜக மேலிடம் வரும் 13ம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்போது தமிழிசை, சிபிராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய ஐந்து பேரும் தோற்றுப்போனதற்கான காரணங்களை தமிழக பாஜக தலைமை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில்..