தினமலர் தினகரன் விகடன் சமயம் One India FilmiBeat BoldSky GoodReturns DriveSpark புதிய தலைமுறை Polimer News

ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்குகள் தற்போது செல்லத்தக்கதல்ல : உயர்நீதிமன்றம்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  அரசியல்  
சென்னை : ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்குகள் தற்போது செல்லத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை வழக்கில் அபராதம் செலுத்தியதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று 2014ல் சமரசம் ஏற்பட்டது. ஜெயலலிதா, சசிகலா , சசி என்டர்பிரைசர்ஸ் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது...
                 

மம்சாபுரம், செண்பகத்தோப்பு பகுதியில் சுழன்று அடித்த சூறைக்காற்றுக்கு தென்னை, வாழை மரங்கள் நாசம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே சுழன்று வீசிய சூறைக்காற்றுக்கு தென்னை, வாழை மரங்கள் ஒடிந்து நாசமாகின. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம், செண்பகத்தோப்பு பகுதியில் ஏராளமான விவசாயிகள் தென்னை, வாழை சாகுபடி செய்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி  மலையடிவாரத்தில் உள்ள இப்பகுதியில் அடிக்கடி சூறைக்காற்றுக்கு வாழை, தென்னை மரங்கள் சேதமடைவது வழக்கம்.நேற்றுமுன்தினம் மாலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் மம்சாபுரம் பகுதியில் தென்னை, வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மம்சாபுரத்தை சேர்ந்த விவசாயி தங்கச்சாமி கூறுகையில், ‘3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தேன். ஏராளமான மரங்களில் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில்  சூறைக்காற்றுக்கு மரங்கள் ஒடிந்து நாசமடைந்துள்ளன. இதனால் ரூ.2 லட்சம்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்...
                 

அது ஏன் என்னை பார்த்து மட்டும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள்?: ஸ்ரீதேவி மகள் கோபம்

11 hours ago  
சினிமா / FilmiBeat/ News  
மும்பை: என்னை பார்த்து மட்டும் ஏன் அந்த கேள்வியே கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் எரிச்சல் அடைந்துள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் இன்று வெளியாகியுள்ளது. சாய்ரத் மராத்தி படத்தின் இந்தி ரீமேக் தான் தடக். சாய்ரத் போன்று தடக் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஜான்வியை..
                 

உங்க நகம் இப்படி இருக்கா?... அதையும் பளபளப்பா மாத்த இதோ ஈஸியான வழி இருக்கு...

11 hours ago  
கலை / BoldSky/ Beauty  
பெண்களுக்கு எப்பொழுதுமே நகங்களை பராமரிப்பதில் ஆர்வம் உண்டு. அதிலும் நகங்களை நீளமாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். மேலும் நகங்களை தூய்மையாகவும் பிரகாசமாகவும் வைத்து கொள்ள விரும்புவர். அது தோற்றத்தை அழிக்கிறது என்பதால், பிணைக்கப்பட்ட நகங்களை அவர்கள் விரும்பமாட்டார். விரல் நகங்கள் அல்லது கால் நகங்கள் எதுவாக இருந்தாலும் அதை தடுப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்து முயற்சியையும் செய்யவேண்டும். ஏனெனில் இது நோய்களுக்கு வழிவகுக்கும்...
                 

பிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்! என்னனு உங்களுக்கு தெரியுமா?

10 hours ago  
கலை / BoldSky/ Health  
உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண காரியமல்ல. எடையை கூட்டுவது எவ்வளவு எளிதாக இருக்கிறதோ, கூட்டிய எடையை குறைப்பது என்பது அசாதாரண சாதனையாக உள்ளது. பொதுவக அறியப்பட்ட 'அணுவை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்' என்ற கூற்று உண்மையாய் இருப்பது போல, உடல் எடையை கூட்டுவதும் குறைவதும் எளிது என்று இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என..
                 

ரூ.2 லட்சம், 'டிபாசிட்' கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ முதல் பக்க செய்திகள்  
                 

சாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..! (வீடியோ)

9 hours ago  
வணிக / GoodReturns/ News  
                 

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

                 

நாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம்.. வெளியில் வெளுத்துக் கட்டிய டின்னர் ஏற்பாடுகள்!

6 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில் வெளியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை உறுப்பினர்கள் சுவைத்தனர். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எம்பி சீனிவாஸ் கேசினேனி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் கேண்டீனுக்கு விடுமுறை என்பதால் உறுப்பினர்களுக்கு வெளியிலிருந்து..
                 

ஜெயலலிதா கைரேகை பொய்:நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

அம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா?

10 hours ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
தாய்மை என்பது அனைத்து பெண்களுக்குமே முக்கியமானதுதான். ஆனால் இது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு பிரசவமும் பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. இது அவர்களின் உடல் வலிமையை பொருத்து எளிதாகவும், கடினமாகவும் இருக்கும். பெண்ணுக்கு குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்குமா அல்லது சிசேரியனில் பிறக்குமா என்பது யாராலும் யூகிக்கமுடியாத ஒன்று. பெண்களின் பிரசவம் என்பது அவர்கள்..
                 

மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லையில் தாமிரபரணி, அகஸ்தியர் ரத யாத்திரைக்கு வரவேற்பு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
நெல்லை: சிருங்கேரியில் இருந்து நெல்லை வந்த தாமிரபரணி தேவி, அகஸ்தியர் மகாபுஷ்கர ரதத்திற்கு டவுனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லையில் அக்.11ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை  தாமிரபரணி மஹா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. மகா புஷ்கர விழாவிற்காக தயாரான தாமிரபரணி, அகத்தியர் சிலைகளுக்கு சிருங்கேரியில்  பாரதி தீர்த்த சுவாமிகளால் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதைதொடர்ந்து அகில இந்திய துறவிகள் சங்க பொதுச்செயலாளர் ராமானந்தர் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக ரத யாத்திரையாக ராஜபாளையம் வழியாக நேற்று காலை தென்காசி வந்தடைந்தது. அங்கு பொதுமக்கள் தரிசனத்தை தொடர்ந்து நேற்று மாலை நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பாக  ரதயாத்திரைக்கு நெல்லை ஒருங்கிணைப்புக்குழு சுவாமி பக்தானந்தா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நெல்லையப்பா் கோயில் சுவாமி சன்னதி கொடிமரம் மு்ன்பாக தாமிரபரணி தேவிக்கும் அகஸ்தியருக்கும் சிறப்பு அபிசேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து  உட்பிரகாரத்தில் வலம் வந்ததும் ஈசான விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு நான்கு ரத வீதிகளில் ..
                 

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூலை 27 முதல் ஒரு சுற்றுக்கு மொத்தம் 1900 மி.க. அடிக்கு மிகாமல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு நீர் திறந்து விட முதல்வர் ஆணையிட்டுள்ளார்...
                 

``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல!’’ - சோகத்தில் கரூர் விவசாயிகள்

an hour ago  
செய்திகள் / விகடன்/ தமிழகம்  
                 

ஜேசன் ஸ்டேதம் வேட்டையாடும் ராட்சத சுறா – ‘தி மெக்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு

10 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தெலுங்கு எங்கள் தாய் போன்றது.. நெஞ்சை தொட்ட பிரதமர் மோடி!

6 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: தெலுங்கு எங்கள் தாய் போன்றது என கூறி தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறிய பிரதமர் மோடி ஆந்திராவை வஞ்சித்துவிட்டதாக அக்கட்சி எம்பிக்கள் விவாதத்தின் போது குற்றச்சாட்டுக்களை அடுக்கின...
                 

ராகுல் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் எங்கே.. பாஜகவுக்கு காங். கேள்வி

7 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: லோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு பாஜக நேரடியாக பதில் தரவில்லை என்று பேச்சு எழுந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை நடந்தபோது ராகுல் காந்தியின் பேச்சுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபாவை அதிர வைத்த அவர் அடுக்கடுக்காக பல பிரச்சினைகளை..
                 

பொதுகட்டட வரைவு விதிகள் தயார் விரைவில் மக்களிடம் கருத்து கேட்பு:துணை முதல்வர் பன்னீர் தகவல்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

மோடியால் என்னை பார்த்து பேச முடியவில்லை... பார்லி.,யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சனம்

8 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

ராமேஸ்வரம் அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் சிவகங்கை ஆயுதக் கிடங்குக்கு மாற்றம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சிவகங்கை : ராமேஸ்வரம் அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் சிவகங்கையில் உள்ள ஆயுதக் கிடங்குக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தங்கச்சி மடம் அருகே அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் கழிவுநீர்த் தொட்டிக்காக பள்ளம் தோண்டிய போது துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள், உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதனை திருவாடனை நீதிபதி பாலமுருகன் பார்வையிட்டு அதனை அழிப்பது குறித்து அறிக்கை தருமாறு சென்னை வெடிபொருள் மையத்துக்கு உத்தரவிட்டார். அந்த அறிக்கை வந்த பின்னர்தான் வெடி பொருட்களை அழிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மதுரை மற்றும் சென்னை வெடிகுண்டு தடுப்பு போலீசார் மற்றும் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். 20 நாட்களாக வெடிகுண்டுகள் அகற்றப்படாததால் எடிசன் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் வெடிகுண்டுகளை மீண்டும் ஆய்வு செய்த திருவாடானை நீதிபதி பாலமுருகன் அவற்றை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை வெடிகுண்டு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவை சேர்ந்த அதிகாரி ஷேக் உசேன், ராமநாதபுரம் முதன்மை நீ..
                 

திருஞானசம்பந்தர், ஈசனின் அடிமலர் தொழுது பாடிய திருவிற்கோலம்..! - கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில் #VikatanPhotoStory

6 hours ago  
செய்திகள் / விகடன்/ தமிழகம்  
                 

தோசக்கல்லால் வந்த விபரீதம்: இயக்குனருக்கு தையல் போட வைத்த அஞ்சலி!

10 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

நான் ஏழை.. அதனால்தான் ராகுல் கண்ணைப் பார்க்க பயப்படுகிறேன்.. மோடி!

7 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: ராகுல் காந்தி கண்களை பார்க்க நான் தயங்குகிறேன். உண்மைதான். காரணம் ஏழை.. அது மட்டுமா, காங்கிரஸின் கண்களைப் பார்த்த பலரின் கதி என்ன என்பது நாடறியும் என்று பிரதமர் மோடி பேசினார். லோக்சபாவில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி இன்று இரவு பேசினார். அவரது உரையில் ராகுல் காந்தியை கடுமையாக..
                 

ராகுல் காந்தி கட்டிதானே பிடித்தார்.. எழுந்திருக்கச் சொன்னதாக சொல்றாரே பிரதமர்!

7 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: ராகுல் காந்தி காலையில் இன்று போட்ட போட்டிற்கு இரவில் பிரதமர் நரேந்திர மோடி சரியான பதிலடி தரத் தவறினார். மாறாக ராகுலை கிண்டலடித்தார் மோடி. மேலும் திசை திருப்பும் வகையிலும் பேசினார் மோடி. ராகுல் காந்தி பதவிக்காக அலைபவர் என்பது போல பிரதமர் மோடி கூறியதால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொதிப்படைந்து கோஷமிட்டனர். நம்பிக்கையில்லாத்..
                 

ஆப்ரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

8 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

கூடுதல் கட்டடம் கட்டியும் மாணவர்கள் அதிகரிக்கவில்லை

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

மின்மோட்டார் பழுதால் பல நாட்களாக குடிநீர் ‘கட்’ பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் சேகரிக்கும் கிராம மக்கள்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருமங்கலம்: ருமங்கலம் அடுத்த நெடுங்குளத்தில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் குண்டாற்றின் நடுவே பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஊறும் தண்ணீரை சேகரித்து கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது பழைய நெடுங்குளம் கிராமம். இந்த கிராமம் வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராமத்தில் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. போர்வெல் மோட்டார்கள் அடுத்தடுத்து பழுது காரணமாக தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீருக்காக பழைய நெடுங்குளம் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த கிராமத்தின் வழியாக கல்லணை செல்லும் ரோட்டில் நடுவே அமைந்துள்ள குண்டாற்றின் மேல் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பாலம் கட்டுமான பணிக்காக அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.அதிக ஆழம் தோண்டப்பட்டதால் தண்ணீர் ஊற்று எடுத்துள்ளது. தண்ணீர் பிரச்னையை இயற்கையே தீர்த்து வைத்துள்ளதாக எண்ணி பழைய நெடுங்குளம் கிராம மக்கள் பள்ளத்தில் ஊறும் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.சிறுவர்கள், ப..
                 

`இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்!’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM

6 hours ago  
செய்திகள் / விகடன்/ விளையாட்டு  
                 

துபாய்க்கு 14 ஆயிரம் கிலோ செம்மரக் கட்டைகளை கடத்த முயற்சி

11 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஆஹா.. அதுக்குள்ள பிரியா வாரியருடன் ராகுலை சேர்த்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்களே!

9 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: மலையாள நடிகை பிரியா வாரியரின் கண்ணடிக்கும் படத்துடன் ராகுல் காந்தி மக்களவையில் கண்ணடித்த படத்தை நெட்டிசன்கள் ஒப்பீடு செய்தனர். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு ராஷ்ட்ரீய கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும்,..
                 

ராகுல் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு.. ரகசிய காப்பு ஷரத்து உள்ளது உண்மைதான் என அறிக்கை!

10 hours ago  
செய்திகள் / One India/ News  
பாரிஸ்: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு ஷரத்து உள்ளது என பிரான்ஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டினார். ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் மோடியின் நண்பர்..
                 

குப்பை சேகரிக்க ரூ.60 லட்சத்தில் புதிய வாகனம்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

சமயபுரம் கோயிலில் யாகத்தில் வைத்திருந்த புனித நீர் ஊற்றி மசினிக்கு சிறப்பு பூஜை

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
மண்ணச்சநல்லூர்: திருச்சி சமயபுரம் கோயில் யானை மசினி கடந்த 2 மாதங்களுக்கு முன் யானை பாகன் கஜேந்திரனை கோயில் வளாகத்தில் மிதித்து கொன்றது. இதையடுத்து யானை மசினி மாகாளிக்குடி உஜ்ஜயினி கோயிலில் உள்ள யானை கொட்டகையில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. அங்கு கால்நடை மருத்துவர்களும் யானை பாகன்களும் மசினி இயல்பு நிலைக்கு திரும்ப சிகிச்சையும் பயிற்சியும் அளித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மசினியின் கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் நீர்க்கட்டிகள் ஏற்பட்டு நடக்க சிரமப்பட்டு வந்தது. இதனால் மசினி ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில், யானை மசினி விரைவில் குணம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. காலை 9 மணி அளவில் ஆயுஸ் யாகம், ஆதிதிய யாகம், சாந்தி யாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் சமயபுரம் கோயிலில் இருந்து யாகம் செய்யப்பட்ட புனித நீர் ஒரத்தநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யானைக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு..
                 

திப்புசுல்தான் கோட்டை அகழி மழை நீரால் நிரம்பியது

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
பாலக்காடு: பாலக்காட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழையால் திருச்சுர் தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் திப்புசுல்தான் கோட்டை சுற்றியுள்ள 20 அடி ஆழ அகழி கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பி உள்ளது. மேலும் கோட்டைக்குள் அமைந்துள்ள குளத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளது. அகழியை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிகையாக இருக்குமாறு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.  மழையால் மலம்புழா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 377.5 அடி கொள்ளளவு கொண்ட அனையில் நேற்றைய நிலவரப்பட்டி 372 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 374 அடியை தாண்டினால் எந்தநேரத்திலும் அணையின் மதகுகள் வாயிலாக உபரிநீர் திறந்துவிடப்படும் என்பதால் கல்பாத்தி, பரளி, மங்கரை நதிகரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
                 

ரபேல் ஒப்பந்தம்.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு.. ஆதாரத்தோடு மறுத்த நிர்மலா சீதாராமன்!

10 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா உரையால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக சில ஆவணங்களை கொண்டு வந்து, அதற்கு விளக்கம் அளித்தார். மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டினார்...
                 

சிறுநீரக மருத்துவ முகாம்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

சேலத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் : ஆக.8 வரை விண்ணப்பிக்கலாம்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

தாராபுரம் பண்ணைக்குள் புகுந்து 89 கோழி கழுத்தை திருகி வீசி 200ஐ அள்ளி சென்றனர்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
தாராபுரம்: தாராபுரம் அருகே பண்ணைக்குள் புகுந்த மர்ம கும்பல் 89 கோழிகளின் கழுத்தை திருகி வீசியதோடு, 200 கோழிகளை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப்போனதால் கால்நடைவளர்ப்பு, பண்ணைகள் அமைத்து கோழிகள் வளர்ப்பு என மாற்றுத்தொழில்கள் செய்து வந்தனர். கடந்த 3 மாதமாக இப்பகுதியில் தோட்டங்களில் உள்ள பண்ணைக்குள் மர்ம நபர்கள் புகுந்து கோழிகளை திருடி செல்லும் சம்பவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் நள்ளிரவில் கோழிகளை திருடி சாக்கு மூட்டையில் கட்டிசென்ற 3 நபர்களை கிராம மக்களே விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த நாட்டுத்துரை(40) என்பவர் தனது பண்ணையில் 3,800 நாட்டுக்கோழிகளை ஒப்பந்த அடிப்படையில் வளர்த்து  வந்தார்.கோழிகள் நன்கு வளச்சியடைந்து தலா 2 கிலோ எடையில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 89 கோழிகளின் கழுத்தை திருகி கொன்று பண்ணைக்குள் வரிசையாக..
                 

தேவாரத்தில் விவசாய நிலங்களில் 45 நாட்களாக அட்டகாசம் செய்யும் ஒற்றையானை

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
உத்தமபாளையம்: தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள நிலங்களில் கடந்த 45 நாட்களாக அட்டகாசம் செய்து வரும் ஒற்றை பெண்யாளையை பிடிப்பதில் தமிழக வனத்துறையினர் போதிய அக்கறை செலுத்தவில்லையென விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மத்திய வனத்துறை அல்லது கும்கி யானை உதவியோடு ஒற்றையானையைப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள நிலங்களில் கடந்த 45 நாட்களாக ஒற்றையாக திரியும் பெண் யானை தினமும் அட்டகாசம் செய்கிறது. கூலித்தொழிலாளி சேகரை தாக்கிக் கொன்றது. டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த காவலாளி குருசாமி படுகாயமடைந்தார். தினமும் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் விளைந்துள்ள கப்பை, மாமரம், தென்னை, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது.கடந்த சில வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட குடிசைகளை துவம்சம் செய்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட மா, தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பிலான பயிர்களை நாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே இதனை மயக்கஊசி போட்டு பிடிக்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்..
                 

8 வழி சாலை வேக பயணத்திற்கு அல்ல.. வேகமான மரணத்திற்கு... சீமான் பாய்ச்சல்

11 hours ago  
செய்திகள் / One India/ News  
சேலம்: 8 வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம் என்றும், 8 வழிச்சாலை போன்ற ஒப்பந்தங்களின் மூலம் பணத்தை குவிக்க பார்க்கிறார்கள் என்றும் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க சென்றார் அப்போது அவரை மல்லூர் போலீசார்..
                 

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும்

11 hours ago  
செய்திகள் / One India/ Astrology  
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். அதிகாலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா,..
                 

சி.ஏ., இறுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

ராஜபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  குற்றம்  
ராஜபாளையம் : ராஜபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தலைமை ஆசிரியரை கைது செய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்...
                 

நாட்டின் ஒரு சில மாநிலங்களை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது...... மக்களவையில் அதிமுக புகார்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி: நாட்டின் ஒரு சில மாநிலங்களை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்.பி. வேணுகோபால் கூறியதாவது: தமிழ்நாடு பல அம்சங்களில் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மத்திய அரசின் பல திட்டங்களுக்கான நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படுவதில்லை. உயர்கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 8 சதவீதம். தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. உள்ளாட்சி மன்றங்களுக்கான நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. 14-வது நிதி கமிஷன் விதிமுறைகளால் தமிழகத்துக்கு பாதிப்பு. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை. பல்கலைக்கழக மானியக் குழுவை ரத்து செய்ய அதிமுக எதிர்ப்பு. மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள உயர்கல்வி ஆணையத்துக்கு அதிமுக எதிர்ப்..
                 

முல்லை பெரியாறு கண்காணிப்பு பொதுப்பணித்துறைக்கு, 'அலர்ட்'

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

கண்மாய்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படுமா

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்: நிர்மாலா சீதாராமன் விளக்கம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி: பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் இல்லை என்று நிர்மாலா சீதாராமன் ராகுல் காந்தியின் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம்சாட்டினார். ராகுல்காந்தியின் பேச்சைத் தொடர்ந்து, ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய அவரது குற்றச்சாட்டுகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி 2008ம் ஆண்டில், ரபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஷரத்தில் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் ஒரு இன்டர்வியூவிலும், பிற நிறவனங்களின் போட்டி காரணமாக, ஒப்பந்த விவகாரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். இதையடுத்து ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஆவணங்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு விட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. பா.ஜ.க உறுப்பினர்களும் பதி..
                 

சக்கம்பட்டி 'காட்டன்' சேலைகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

குச்சனூர் கோயிலில் இன்று சனிவார திருவிழா கொடியேற்றம்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை: டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ நேற்று புதிய குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகிய கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் என்ற தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ரூ.3 ஆயிரத்து 500 கோடி நேரடி வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிரடியாக முடக்கினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து முதற்கட்டமாக சிபிஐயும், அமல..
                 

ஏழைகளின் துயரத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் நாங்கள் கூட்டாளி : மார்தட்டி பேசிய மோடி

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் மீதுள்ள நம்பிக்கையை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்மறை அரசியலை அம்பலப்படுத்திவிட்டன என்று கூறினார். அதிகாரத்தில் அமர வேண்டியது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பேசினார். மக்களின் ஆதரவோ, உறுப்பினர் பலமோ இல்லாமல் தீர்மானம் கொண்டுவந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.மோடி ஒழிக என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே திட்டமாக உள்ளது என பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். 125 கோடி மக்கள் மட்டுமே தம்மை பதவியில் இருந்து அகற்றமுடியுமே தவிர வேறு யாரும் அல்ல என்று பேசினார். தம்மை பதவியில் இருந்து அகற்ற ஏன் அவசரம் என்றும், ஜனநாயகத்தில் பொறுமை தேவை என்றும் கூறினார். தேசிய பாதுகாப்புடன் காங்கிரஸ் கட்சி விளையாட வேண்டாம் எனவும் மோடி பேசினார். பிரதமர் பதவிக்கு ராகுல் ஏன் அவசரப்படுகிறார் என வினவிய மோடி, தோல்வியடையும் என தெரிந்தே எதிர்கட்சிகளால் நம்பிக்கை..
                 

ஆசிரியர்களுக்கு பயிற்சி

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியது

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பின்ன பேசிய தெலுங்கு தேசம் எம்.பி பிரதமர் நல்ல நடிகர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பின், தற்போது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியுள்ளது...
                 

பிரதமர் மோடி 23ம் தேதி வெளிநாடு பயணம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக அடுத்த வாரம் 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் வருகிற 25ம் தேதி முதல் 27 ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி 5 நாள் அரசு முறை பயணமாக  வெளிநாடு செல்கிறார். இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செயலாளர்( பொருளாதார உறவுகள்) திருமூர்த்தி கூறியதாவது:  ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளுக்கும் வருகிற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். முதலில் மோடி ருவாண்டா செல்கிறார். 2 நாட்கள் அங்கிருக்கும் அவர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் 24ம் தேதி பிரதமர் உகாண்டா செல்கிறார். 1997ம் ஆண்டுக்கு பின்னர் உகாண்டா செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும் பிரதமர், அங்குள்ள இந்திய மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். உகாண்டாவில் இருந்து 25ம் தேதி பிரதமர் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார். 10வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்..
                 

மருத்துவ கல்வி கட்டணம் ஒழுங்குபடுத்த கமிட்டி

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

பிளாஸ்டிக் இல்லா கிராமம் : துணிப்பை வழங்கிய போலீசார்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ பொது செய்திகள்  
                 

திருவனந்தபுரத்தில் பாஜக இளைஞர் அணி தொண்டர்கள் போராட்டம்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
                 

வரி ஏய்ப்பு இருப்பதால் 'ரெய்டு' துணை முதல்வர் பேட்டி

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.!

10 hours ago  
வணிக / GoodReturns/ News  
எச்டிசி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. எச்டிசி நிறுவனத்தின் ஆசிய தலைவர் ஃபைசல் சித்திக், விற்பனை தலைவர் விஜய் பாலசந்திரன் மற்றும் தயாரிப்பு தலைவர் ஆர் நாயார் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே ராஜிநாமா செய்துள்ளது இதனை உறுதிபடுத்துகிறது...
                 

அரியானாவில் இளம் பெண்ணை 40 போ் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தீர்மானத்தை எளிதாக முறியடித்த மோடி அரசு.. பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?

5 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 325 வாக்குகளை பெற்று மோடி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி சீனிவாஸ் கேசினேனி கொண்டு வந்தார். அதன் மீது இன்று காலையில் விவாதம் நடைபெற்றது...
                 

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவ அமைச்சர் பதிலடி

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

புதிதாக பருவமான டீன்-ஏஜ் பெண்கள் நாப்கின் மாற்றுவது பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்ன?

11 hours ago  
கலை / BoldSky/ Pregnancy Parenting  
நாப்கின் பயன்படுத்தும் முறை பற்றி உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. உங்கள் வீட்டு பெண் குழந்தை மாதவிடாய் சுழற்சி பருவத்தை அடைந்து விட்டாரா? பெற்றோர் உங்களின் முக்கிய கடமையானது நாப்கின் பயன்படுத்தும் முறை பயிற்றியும், மற்றும் அந்த சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரத்தைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்க..
                 

கூட்டாற்றில் தொடர் வெள்ளம் : ஆற்றை கடக்க முடியாமல் மலை கிராம மக்கள் அவதி

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
உடுமலை: திருப்பூர் மாவட்டம் அமராவதி வனசரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதி வழியே கூட்டாறு செல்கிறது. கொடைக்கானல் பகுதியில் பருவமழை பெய்யும் காலங்களில் மன்னார்க்காடு வழியே இந்த கூட்டாற்றில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அமராவதி அணையில் சென்று கலப்பது வழக்கம். உடுமலை மூணாறு சாலையில் அமைந்துள்ள சின்னாறு செக்போஸ்ட்டில் இருந்து 3கி.மீ தொலைவு வனப்பகுதிக்குள் நடந்து சென்றால் இந்த கூட்டாற்றை காணமுடியும். கூட்டாற்றின் மறுகரையில் இருந்து 4 கி.மீ தொலைவில் தளிஞ்சி,தளிஞ்சிவயல்,கிழான்வயல்,மஞ்சம்பட்டி ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இவற்றில் நெல்,மொச்சைபயிறு,கொள்ளு,தட்டப்பயிறு மற்றும் சிறுதானியங்கள் பயிரிட்டு வருகின்றனர். தளிஞ்சிவயலில் இருந்து 7 கி.மீ தொலைவில் கேரள மாநில எல்லையான சம்பக்காடு பகுதிக்கு அறுவடை செய்த பொருட்களை தலைச்சுமையாக எடுத்து சென்று சந்தைகளில் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 8 மாதத்திற்கு முன்பாக கேரள வனத்துறை இரும்பு கம்பி மூலம் தடுப்பு அமைத்ததால் மலைகிராம மக்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்த முடியாத நிலை ..
                 

சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் தேவை : உயர்நீதிமன்றம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சென்னை : சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தத்தை 6 மாதத்தில் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பேனர்கள்களை ஒழுங்குபடுத்த, தண்டனை வழங்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.முன்னதாக டிஜிட்டல் பேனர்களை ஒழுங்குபடுத்த கடுமையான விதிகளை உருவாக்கக்கோரியும் விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது...
                 

கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..!

an hour ago  
செய்திகள் / விகடன்/ தமிழகம்  
                 

பிரதமர் மோடியை ராகுல் கட்டித்தழுவியது சரியல்ல: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்!

9 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சட்டுபுட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வாங்க: சீமராஜா ரிலீஸ் தேதியில் குழப்பம்?

10 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ராகுல் கண் அடித்ததை நாடே பார்த்து விட்டது... பதிலுரையில் பதிலடி கொடுத்த மோடி!

6 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: ராகுல்காந்தி இன்று கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது என பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்மறை அரசியலை அம்பலப்படுத்திவிட்டன என்று கூறினார். அதிகாரத்தில் அமர வேண்டியது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பேசினார்...
                 

2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவனை வேண்டுகிறேன்-மோடி கிண்டல்

7 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: 2024-ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சிவனை பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம், ஆர்பிஐ, நீதித்துறை எதன்..
                 

பா.ஜ., கூட்டம்

5 hours ago  
செய்திகள் / தினமலர்/ அரசியல் செய்திகள்  
                 

குண்டர் சட்டத்தை எதிர்த்து வழக்கு : டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணை

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
மதுரை: மூதாட்டி கொலை வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பி.சி. பட்டியில் மூதாட்டில ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கலா தேவி என்பவர் கைது செய்யப்பட்டார்...
                 

வேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள்தோறும் ரூ.250 கோடி இழப்பு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

நான் திருமணத்திற்கு தயார்; எனது கடந்த காலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டால்: ஸ்ரீ ரெட்டி!

10 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

கூகுளில் முட்டாள் என்று தேடினால் முதலாவதாக வரும் அமெரிக்க அதிபா்

10 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை... இதில் அரசை எப்படி நம்பும்- மோடி கேள்வி

7 hours ago  
செய்திகள் / One India/ News  
டெல்லி: காங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை. எனவேதான் அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனினும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார் மோடி. அப்போது அவர்..