தினமலர் தினகரன் விகடன் சமயம் One India FilmiBeat BoldSky GoodReturns DriveSpark புதிய தலைமுறை Polimer News

இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
ரஷ்யா: இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற ஐஐபிஏ உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். ரஷ்யாவின் எகடெரின்பர்க்கில் நடைபெற்ற 63 கிலோ போட்டியின் அரையிறுதிக்கு வந்ததன் பின்னர் மனிஷ் கவுசிக் விரைவில் உயரடுக்கு பட்டியலில் சேர்ந்தார்...
                 

மணிக்கு 300 மைல் வேகத்தில் பறக்கும் கார்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
ஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் காரில் பயணம் செய்வதற்கான சாத்தியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புகாட்டி சிரான் ( bugati chiron ) என்ற கார் அண்மையில் மணிக்கு 305 மைல்  வேகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற காரை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு தர இருப்பதாக புகாட்டி நிறுவனம் உறுதியளித்துள்ளது. முதன்முதலாக ஆட்டோ உற்பத்தி நிறுவனம் ஒன்று 300 மைல் வேகத்தில் பயணிக்கும் 30  கார்களை மட்டும் உற்பத்தி செய்ய உள்ளது. புகாட்டி திசிரான் சூப்பர் ஸ்போர்ட் 300 பிளஸ் என்ற இக்காரின் விலை ஒருமில்லியன் டாலரை விடவும் குறைவுதான். வழக்கமான ஸ்டாண்டர்ட் புகத்தி சிரான் கார்களில் டிவோ மாடல் காரின் விலை 6 மில்லியன் டாலராகும். சென்டோடியசி( centodieci ) கார் விலை 9 மில்லியன் டாலர் ஆகும். இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். இதே போல் உலகிலேய மிக விலை உயர்ந்த காரான லா வோய்ட்டர் நாய்ர் - ( la voiture noire ) ஒருகார் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். இதன் விலை 19மில்லியன் டாலராகும்...
                 

காரைக்காலில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட காவலர் உள்பட 5 பேர் கைது

7 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
காரைக்கால்: காரைக்காலில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட காவலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கடலோர காவல் நிலைய காவலர் காந்தி மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்...
                 

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் : முக்கிய நிகழ்வுகள்

2 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அப்பாடா... ஒரு வழியா உள்ளாட்சித் தேர்தல் வந்திடும் போலிருக்கே! தேர்தல் அலுவலர்களை நியமிக்க உத்தரவு

2 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஈரோட்டில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

டாஸ் வென்றது இந்தியா. பேட்டிங் தொடங்கியது தென்னாப்பிரிக்கா : மழை வர வாய்ப்புண்டா??

3 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு.!

3 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று இறங்கு முகம்...: சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888க்கு விற்பனை

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தமிழகம்  
சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று இறங்கு முகம் கண்டுள்ளது. அதாவது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611க்கும், சவரன் ரூ.28,888க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கும், ஒரு கிலோ ரூ.50,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக கடும் ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த 4ம் தேதி காலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக பவுன் ரூ.30,120க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய தினம் மாலையிலேயே தங்கம் விலை சற்று சரிந்து ஒரு பவுன் ரூ.29,928க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 5ம் தேதி ஒரு பவுன் ரூ.29,928க்கும், 6ம் தேதி ரூ.29,264, 7ம் தேதி ரூ.29,368, 9ம் தேதி ரூ.29,272க்கும், 10ம் தேத..
                 

மானாமதுரையில் முன்விரோதம் காரணமாக தங்கமணி என்பவரை வெட்ட முயன்ற ரவுடி கும்பல் மீது வங்கி காவலர் துப்பாக்கி சூடு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரவுடி மீது துப்பாக்கிசூடு சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையில் தங்கமணி என்பவரை விரட்டி வெட்டிய ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் மீது வங்கி காவலாளி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். கனரா வங்கி அருகே தங்கமணியை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியபோது வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டுள்ளார். மானாமதுரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக இருந்தவர் சரவணன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் அதில் தங்கமணி  தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்கமணி நீதிமன்ற விசாரணையில் இருந்து ஜாமினில் வழியில் வந்தார். இந்த நிலையில், மானாமதுரை மரக்கடை வீதியில் தங்கமணி இன்று நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளனர். அப்போது, உயிர் தப்பிப்பதற்காக தங்கமணி அருகில் இருந்த கனரா வங்கிக்குள் ஓடியுள்ளார். மேலும் அவரை பின்தொடர்..
                 

Hindi Imposition : சங்கி ரஜினியா? சிங்க ரஜினியா? ட்விட்டரில் நடக்கும் சண்டை

4 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

குற்றவியல் மேல்முறையீடு விசாரணையில் காவல் ஆய்வாளர் ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும்: உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது விசாரணை அதிகாரியான காவல்ஆய்வாளர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகின்றன. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் அவர்களின் விடுதலையை எதிர்த்து சம்பந்தப்பட்ட போலீசார் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி அரசு வழக்கறிஞருக்குத் தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது. தற்போது இந்த நடைமுறை மறைந்து காவல் ஆய்வாளருக்கு பதில் மேல்முறையீட்டு விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பாக எந்த விபரமும் தெரியாத சார்பு ஆய்வாளர் அல்லது தலைமைக் காவலர்கள் பெயரளவுக்கு ஆஜராகியுள்ளனர். நீதிபதிகளோ, அரசு வழக்கறிஞரோ வழக்கு தொடர்பாக இவர்களிட..
                 

நெல்லை ஏர்வாடி அருகே சிறுமளஞ்சியில் ராட்டினத்தில் இருந்து விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

வித்தியாசமா இருக்கே: பா.ரஞ்சித்-ஆர்யா பட டைட்டில் இது தானா?

5 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஏன் கமல், இது உங்களுக்கே நியாயமா இருக்கா?

5 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தும் ‘ஒற்றை யானை’: வனத்துறையினர் கவனிப்பார்களா?

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒன்றை யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புறம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலை கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள், மலைப்பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில், சிறுவாட்டுகாடு பகுதியில் நேற்று முதல் ஒற்றை யானை சாலையில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரத்திலிருந்து இரவு நேரத்தில் உணவுப் பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களுக்கு முன் யானை ஒன்று, ரேஷன் கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. தற்போது ஒற்றை யானை விவசாயிகளின் நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுத..
                 

இந்தியால் ஒற்றுமை, தமிழர்களுக்கு சவால்: சிதம்பரம் டுவிட்

6 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Bigg Boss கவின் படும் கஷ்டத்தை பார்த்து ரேஷ்மாவுக்கு இதயமே நொறுங்கிடுச்சாம்

7 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

திருச்சி டவுன் பஸ்சில் டிக்கெட் கொடுக்க கண்டக்டர் வரவில்லை: பார்வையற்ற வாலிபருக்கு பேரம் பேசி அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர்: மனிதாபிமானம் எங்கே செல்கிறது?

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
* வைரலாகும் வீடியோ* இரக்கமின்றி கொந்தளித்த அதிகாரிக்கு வலுக்கும் எதிர்ப்புதிருச்சி: திருச்சியில் டவுன் பஸ்சில் பயணித்த பார்வையற்ற ஒருவருக்கு, டிக்கெட் பரிசோதகர் கறாராக அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண் பார்வை தெரியாத வாலிபர் ஒருவர் பயணித்தார். அவர் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுக்கவில்லை. மேலும், அவரிடம் கண்பார்வையற்றோருக்கான பாசும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், அவருக்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.அப்போது கண்பார்வையற்ற அந்த வாலிபர், ‘‘கண்டக்டர் டிக்கெட் வழங்க என் அருகிலேயே வரவில்லை. கண் தெரியாத நான் எப்படி எழுந்து சென்று டிக்கெட் வாங்க முடியும். என்னை உயர் அதிகாரியிடம் அழைத்து செல்லுங்கள். நான் அவரிடம் பேசி அபராதம் செலுத்துகிறேன்’’ என்றார். உடனே டிக்கெட் பரிசோதகர், ‘‘நான் தான் அதிகாரி, வேறு யார் வேண்டும்’’ என்று குரலை உயர்த்தி பேசினார். அப்போது அங்கு வந்த ஒருவர், கண்பார்வையற்ற ஒருவரிடம் இப்படி கறாராக அபராதம் வசூலிக..
                 

செங்கம் மக்கள் கோரிக்கை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை ஆற்றுப்பாலம் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகரில் புறவழிச்சாலை இல்லாததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணாக உள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு சென்றுவர முடியாத நிலை உள்ளது. அதேபோல் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் சிலநாட்களிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் ரோந்து சென்று விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்..
                 

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்து அசத்திய நயன்தாரா

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

2வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணி துவங்கியது

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
ஊட்டி: 2வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் இன்று துவங்கியது. 10 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரியில் ஆண்டுதோறும் இரு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் துவங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசனாகவும் கடை பிடிக்கப்படுகிறது. முதல் சீசனில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாள் தோறும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக காணப்படும். மேலும், இந்த சீசனின் போது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை விட தமிழகத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இரண்டாவது சீசனில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் செடிகளில், அனைத்து செடிகளிலும் மலர்கள..
                 

இருளில் மூழ்கியது குமாரபாளையம்: ஜெனரேட்டர் இயக்காததால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
குமாரபாளையம்: குமாரபாளையம் நகரில் பெரும்பான்மையான பகுதிகளில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கியது. ஜெனரேட்டர் இருந்தும் இயக்காததால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.குமாரபாளையம் நகராட்சியில் வேதாந்தபுரம், அரசு மருத்துவமனை, ராமர்கோவில் பகுதிகளில் நேற்று மாலையிலிருந்தே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக மின்வாரியத்தை தொடர்பு கொண்டபோதும் அதற்கான உரிய பதில் தெரிவிக்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கொசுக்கடியால் அவதிப்பட்டனர். ஜெனரேட்டர் இருந்தும் அதற்கான டீசல் இல்லாததால் இயக்கப்படவில்லை. இதனால், மருத்துவமனை இருளில் மூழ்கியது.மின்சாரம் இல்லாததை அறிந்த திமுகவினர் பலரும் அங்கு விரைந்து சென்றனர்.முன்னாள் நகரமன்ற தலைவர் சேகர் மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய போதிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய போதிலும், உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்படும் என உறுதியளித்தனர். இரவு 10 மணி தாண்டிய போதிலும் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை. ஜெனரேட்டருக்கான டீசல் வாங்கித்தருவதாக தி..
                 

பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: ரூ. 6,078 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!

9 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

Bigg Boss 'எனக்கு கோபம் வருகிறது': முதல் முறையாகக் கவினுடன் மல்லுக்கட்டும் தர்ஷன்

9 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

மானாமதுரையில் உள்ள வங்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கிக் காவலாளி துப்பாக்கிச்சூடு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சிவகங்கை: மானாமதுரையில் உள்ள வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கிக் காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும், மற்றொருவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமமுக நிர்வாகி சரவணன் கொலைக்கு பழி வாங்க வங்கியில் இருந்த தங்கமணி என்பவரை வெட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது...
                 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு கல்லூரி டீன் ராஜேந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். தேனி அருகே உள்ள கண்டமனூர் காவல்நிலையத்தில் டீன்  புகார் அளித்துள்ளார். அதில், சென்னையை சேர்ந்த மாணவர் ஆள்மாறாட்டம் செய்து முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு நடந்து முடிந்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், சென்னை மாணவர் ஒருவருக்கு தேனி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர் சேர்ந்ததாக தகவல் வெளியானதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 110 இடங்கள் இருந்தன. அதில் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் 15 மாணவர்களும், தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டில் 85 மாணவர்களுக்கான இடங்களுக்கு சேர்க்கை நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த ஒரு மாணவர் மாநில அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தார். அந்த மாணவர் குறித்து கடந்த சில நாட்களுக்கு ம..
                 

குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டம்: 22 பேர் கைது!

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழித்ததால் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக தகவல் தெழில்நுட்பப் பிரிவு செயலாளரான ஞான பிரகாசம் தலைமையில் 22 பேர் கொண்ட குழு திடீரென குடியாத்தம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை அழித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாட்டில் ஒரே நாடு ஒரே மொழி என்று மத்திய அரசு வகுத்த கொள்கைக்கு எதிராகவும், மத்திய அரசு நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் இந்தி மொழியில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கும் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தெரிவித்திருந்தார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முட..
                 

கடமலை-மயிலை ஒன்றியத்தில் தக்காளி விலை குறைவால் விவசாயிகள் கவலை: சாலையில் கொட்டும் அவலம்

7 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
வருஷநாடு: வருஷநாடு அருகே கடமலை மயிலை ஒன்றியத்தில் தக்காளி விளை குறைவால் விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டும் அவலம் தொடர்கிறது. கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வருஷநாடு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, அய்யனார்புரம், குமணன்தொழு, கோம்பைத்தொழு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தக்காளி விவசாயம் ஏராளமாக நடந்து வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் தக்காளி விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் தக்காளிகளை பறிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.மேலும் சில விவசாயிகள் தக்காளிகளை பறித்துவிட்டு சாலைகளில் கொட்டி வருகின்றனர். மேலும் தக்காளி விலை தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. இதில் முதல் இரண்டு மூன்று ரகங்கள் தக்காளி பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகள் குறைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி விவசாயத்தில..
                 

ஒருபுறம் நிரம்பி வழியும் மேட்டூர் அணை: ஆண்டுக்கணக்கில் வறண்டு கிடக்கும் ஆணைமடுவு அணை

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
வாழப்பாடி: சேலம் மேட்டூர் அணை நிரம்பி, உபரிநீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில் மாவட்டத்திலுள்ள ஆணைமடுவு அணை வறண்டு கிடப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே உபரிநீர் கொண்டு அணையை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சேலம் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக திகழும் மேட்டூர் அணையானது 13 டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கான நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையானால் மாவட்ட விவசாயிகளுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து தினசரி லட்சக்கணக்கான லிட்டர் நீர், உபரியாக வெளியேறி வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சேலம் கிழக்கு பாசன விவசாயிகளுக்கு நீராதாரமாக திகழும் ஆணைமடுவு அணையோ நீரின்றி வறண்டு கிடக்கிறது. ஒரு புறம் மேட்டூர் அணை உபரிநீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் ஆணைமடுவு அணை வறண்டு கிடப்பது விவசாயிகள் மட்டுமன்றி, நீர்வள ஆர்வலர்கள் மத்தியிலும் பெருத்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த, அருநூற்றுமலை ..
                 

அதிமுக அரசால் புறக்கணிப்பு: வீட்டை காலி செய்யும் சமத்துவபுர மக்கள்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
பரமக்குடி: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காரணத்தால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காத அதிமுக அரசால், சமத்துவபுரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டை காலி செய்து வெளியேறி வருகின்றனர். இதனால் பல கோடிகளில் ஏழைகளுக்காக கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் வீடுகள் பயனில்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ சமத்துவபுரம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அனைத்து மாவட்டங்களில் ஒன்றியங்கள் வாரியாக 100 வீடுகளுடன் சமத்துவபுரங்கள் கட்டப்பட்டது. அடிப்படை வசதியான குடிநீர், தெருவிளக்கு, சிறுவர் பூங்கா, சமுதாய கூடம் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த சமத்துவபுரங்கள், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்காமல் விட்டு விட்டனர். இதனால் முற்றலும் சேதமடைந்து உயிர் பலி வாங்க காத்திருப்பதால், பயனாளிகள் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் வாடகைக்கு விட்டு விட்டு வெளியேறி விட்டனர். கட்டிடங்கள், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட எந்த பராமர..
                 

அமலைசெடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேலப்பாவூர் குளம் தூர்வாரப்படுமா?

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் அருகே அமலைசெடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேலப்பாவூர் குளம் முறையாகத் தூர்வாரப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர் வட்டாரம் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, சாலைப்புதூர், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், வெள்ளகால், துவரங்காடு, இடையர்தவணை, மகிழ், அடைக்கலப்பட்டணம், அருணாப்பேரி, நாகல்குளம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் கீழப்பாவூர், மேலப்பாவூர் குளத்தின் மூலமாகவும், கிணற்றுப் பாசனம் மூலமூம் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுமழை பெய்தால் கூட பெருக்கெடுக்கும் தண்ணீரால் இப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வது உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழை சரிவரப்பெய்யாததால் இப்பகுதி குளங்கள் நிரம்புவது அரிதாகிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து நீர்ப்பாதைகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமலை செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதுவிஷயத்தில் அதிகாரிகள் பாராமுகத்தோடு பராமரிப்பின்றி இருந்து வருவதால் இதுபோன்ற அவலம் தொடர்வ..
                 

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாக். வழியே செல்ல இந்தியா அனுமதி

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
                 

ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
                 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறங்காவலர் குழுவில் இடம்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
ஆந்திரா; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தமிழகத்தின் சார்பில் 4 பேருக்கு வாய்ப்பு அளித்து ஆந்திர அரசு அரசனை ;வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 28 உறுப்பினர்களை கொண்ட தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியா சிமெண்ட் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், உடுமலை எம்எல்ஏ  குமரகுரு, டாக்டர் நிச்சிதா முத்தரப்பு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரையும் சேர்த்து 29 பேர் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை ஆந்திர அரசு இன்று வெளியிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது புட்டா சுதாகர் ராவ் தலைமையில் இருந்த அறங்காவலர் குழு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கலைக்கப்பட்டது. மூன்று மாதங்களாக அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல் இருந்ததால் தற்போது தேவஸ்தானத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை. விரைவில் புதிய அறங்காவலர் குழு கூட்டம் நடத்..
                 

கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
ஓடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது...
                 

இந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி: போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
ஒடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறி வைத்து தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை அஸ்திரா, சுகோய் 30 ஐ ரக போர் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏற்கனேவே நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் வெற்றியை கண்டது. இந்த வெற்றிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்..
                 

வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டம்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி: வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் அடையாளமாகவும், ஜனநாயகத்தின் விளங்குகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பாளர்கள் சர் எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர் ஹெர்பெர்ட் பெக்கர் ஆகிய இருவர்களின் திட்டத்தின் படி கட்டப்பட்டது. இதனை அப்போதைய வைசிராய் லார்ட் இர்வின் திருந்துவைத்தார். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தக் கட்டடம் இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே இதனுடைய பழைமை, பாதுக்காப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் மத்திய அரசு துவங்கியுள்ளது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தோடு, அதன் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்துள்ள உள்ள பிரதமர், உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 மத்திய அரசு அமைச்சக அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையி..
                 

செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி: செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு கோரி ஏற்கனவே செப்.9 மற்றும் செப்.10 தேதிகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம் செய்தனர். கோரிக்கை குறித்து பொறுப்புடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமானிகள் சங்கம் வலியுறுத்தியது...
                 

எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி; இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னோக்கி செல்வோம்; இஸ்ரோ

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் இருக்கும் லேண்டர் விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிலவில் சூரிய வெளிச்சம் குறைய தொடங்கியதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பிரிந்தது. ஆனால் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் எனப்படும் ஆய்வு விண்கலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக இறக்கப்பட இருந்தது. ஆனால் தரையை அடைவதற்கு 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது தொடர்பில் இருந்து விலகியது. நிலவின் தரையில் விழுந்த லேண்டர் விண்கலத்தையும், அதில் வைக்கப்பட்டிருந்த ரோபர் ரோபோவையும் மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர அமெரிக்காவும் உதவ முன்வந்தது. ஆனாலும் லேண்டர் விண்கலத்தில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை. ஆனாலும் 20-ம் தேதி வரை 20-ம் தேதி வரை முயற்சிகள் நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துடன் இஸ்ரோ ஒ..
                 

இந்தியாவின் பிரதமராக வீரசாவர்க்கர் இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருந்திருக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
மும்பை: இந்தியாவின் பிரதமராக வீரசாவர்க்கர் இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வீரசாவர்க்கர் கடந்த காலத்தின் மறக்கப்பட்ட எதிரொலிகள் என்ற தலைப்பிலான அந்த புத்தகத்தை சம்பத் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றுள்ளார். உத்தவ் தாக்கரே கூறுகையில், வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை நாங்கள் மறக்கவில்லை, மறுக்கவில்லை. ஜவஹர்லால் நேரு துணிச்சல் மிக்கவர் அவரை வீரர் என்று அழைத்திருக்கிறேன். அவர் 14 நிமிடங்கள் சிறையில் இருந்திருந்திருந்தால் வீரசாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீரசாவர்க்கர் குறித்த இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். அவருக்கு புத்தகத்தின் ஒருநகலை அனுப்பி வைக்க வேண்டும்.வீரசாவர்க்கர் மட்டும் நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் ..
                 

அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு: நவம்பரில் தீர்ப்பு வழங்க வாய்ப்பு

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கேடு விதித்துள்ளது. அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பு வாதங்களையும் அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் கேடு விதித்துள்ளது. அதேபோல சனிக்கிழமைகளிலும் அயோத்தி வழக்கு விசாரணையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில உரிமை தொடர்பாக சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லாலா இடையே வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நவம்பரில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுபெறும் முன் அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமயிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீவிரமாக விசாரித்து வருகிறது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 3 அமைப்புகளும் நிலத்தை பகிர்ந்துகொள்ள 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பிரச்சனையில் தீர்வு காண கடந்த மார்ச் மாதம் ..
                 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியீடு

6 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
                 

பத்ரகாளிக்கு பூஜை செய்து பாம்பு நடனமாடிய நாகராஜ்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
பெங்களூரு: கர்நாடகாவில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ்  ஒசகோட்டை தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எம்டிபி நாகராஜின் பதவியை  பறிக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை பரிசீலனை செய்த  அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார், எம்எல்ஏ பதவியை  ரத்து செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த  உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகராஜ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில்,  நீதிமன்ற விசாரணையில் தனக்கு சாதகமான தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக  கோயிலில் சிறப்பு பூஜை செய்ய நாகராஜ் முடிவு செய்தார். அதன்படி பெங்களூரு  ஊரக மாவட்டம், தேவனஹள்ளி தாலுகா, காளகப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள பழமையான  பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடத்தினார். பின்னர், அம்மனை உற்சாகப்படுத்த பம்பை, வாத்திய இசை கருவிகள்  மூலம் பாடல் இசைக்கப்பட்டது. பம்பை, பாண்டு வாத்திய இசைக்கலைஞர்களின்  வாசிப்புக்கு ஏற்றபடி எம்டிபி நாகராஜ் தனது வாயில் எலுமிச்சை பழத்தை  கடித்துக் கொண்டு பாம்பு நெளிவதை போல் நாகினி நடனமாடி அ..
                 

நர்மதை ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து குஜராத்தில் 69வது பிறந்தநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
கேவதியா: பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை சொந்த ஊரான குஜராத்தில் நேற்று கொண்டாடினார். சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதை ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபட்டார். அவருக்கு பல்வேறு  கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.கடந்த 1950ம் ஆண்டு குஜராத்தின் வத்நகரில் பிறந்தவரான பிரதமர் மோடி நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளில் நாள் முழுவதும் அவர் தனது சொந்த மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தன. அதன்படி, நேற்று முன்தினம் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.அங்குள்ள, உலகின் மிக உயரமான ஒற்றுமையின் சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடி வீடியோ எடுத்து அதை தனது டிவிட்டரில் பதிவிட்டார். பின்னர், சர்தார் சரோவர் அணைக்கு சென்ற அவர், நர்மதை  ஆற்றில் மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜையில் பங்கேற்றார். சர்தார் சரோவர் அணை கடந்த 2017ல் உயரம் அதிகரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அதன் முழு கொள்ளவான 138...
                 

எஸ்சி, எஸ்டி வழக்கு தீர்ப்பு மறுபரிசீலனை சீராய்வு மனுவை விசாரிக்க 3 நீதிபதி அமர்வு நியமனம்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உச்ச நீதிமன்றம்  நியமித்துள்ளது.எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகார்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபரை விசாரணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களுக்கு ஜாமீன் மறுக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்கள் வெடித்தது. இதையடுத்து, இந்த சட்டப்பிரிவுகளை  மீண்டும் வன்கொடுமை சட்டத்தில் இணைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஆகஸ்ட் 9ம் தேதி நிறைவேற்றியது. மேலும், தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு சீராய்வு மனு  தாக்கல் செய்தது. இதை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்..
                 

பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்காக பாக். வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுப்பு: அந்நாட்டு அரசு அறிவிப்பு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/ உலகம்  
இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐநா பொதுச்சபையில் வரும் 27ம் தேதி அவர் உரையாற்றுகிறார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ஐநா பொதுச்சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற உள்ளார். இதில் கலந்துகொள்ள வரும் பல நாட்டு தலைவர்களை, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிய..
                 

இந்தியாவுக்கு வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகரீதியான ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: அதிபர் ட்ரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/ உலகம்  
வாஷிங்டன்: இந்தியாவுக்கு ரத்து செய்யப்பட்ட வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகரீதியான ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்பிடம் குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளார்கள். ஜிஎஸ்பி வர்த்தக சலுகை என்பது வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகச் சலுகையாகும். இந்தியா, அமெரிக்கா இடையிலான மிகப்பழமையான வர்த்தகச் சலுகையாக இருந்து வந்துள்ளது. இந்த சலுகை மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஆட்டோமொபைல், தோல் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் திட்டமாகும். இந்த சலுகை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்க வழங்கி வந்துள்ளது அதில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் இந்தியாவுக்கு 2 ஆயிரம் வகையான பொருட்களுக்கு ஏறக்குறைய அமெரிக்கா 570 கோடி டாலர் வரிச்சலுகை அளித்திருந்தது.ஆனால் கடந்த மார்ச் மாதம் திடீரென இந்த சலுகையை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்கர்க..
                 

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90% பேர் வெளி மாநிலத்தவர்கள்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
மதுரை: மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90% பேர் வெளி மாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்காததே காரணம் என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் குறைவானவர்கள் இடம் பெற்றுள்ளனர்...
                 

கோயில் நிலம் ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கம் வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  சற்று முன்  
                 

தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டிவிடுவதா? : பொதுத் தேர்வு குறித்து கமல் ஆவேசம்

3 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

நான் அப்படி சொல்லவில்லை..! இந்தி சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்..

4 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு எதிராக விழுப்புரத்தில் மாணவர்கள் 2 நாளாக நடத்தி வந்த போரட்டம் வாபஸ்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

காப்பான் ரிலீஸுக்கு வந்தது சிக்கல் : ரசிகர்கள் அதிர்ச்சி

4 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

வந்துட்டேன்னு சொல்லு.. கருத்து சொல்ல மட்டும்தான். அரசியலுக்கு இல்ல : ரஜினியின் அரசியல் பயம்

5 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கடலூர்: கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எண்ணூர் துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்தது. இன்று காலை முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் இன்று 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருவதால் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மாற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள..
                 

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

கோவை அருகே அட்டகாசம் செய்த 3 காட்டு யானைகள் விரட்டியடிப்பு: ஆற்றில் உற்சாக குளியல்போட்டு வெளியேறியது

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
பாலக்காடு: கோவை அருகே வாளையாரை அடுத்த கஞ்சிக்கோடு பகுதியில், கடந்த 2 நாட்களாக அட்டகாசம் செய்த 3 யானைகள், காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது. யானைகள், ஆற்றில் உற்சாக குளியல் போட்டு அங்கிருந்து வெளியேறியது.காட்டு யானைகளுக்கு தேவையான உணவுவகைகள், மலையோர கிராமத்தோட்டங்களில் அதிகளவு கிடைப்பதால் யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கோவை அருகே வாளையார், கஞ்சிக்கோடு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் கஞ்சிக்கோடு, மருதுரோடு, கல்லேப்பிள்ளி, வட்டப்பாறை, மலம்புழா, கொட்டேக்காடு வழியாக வந்து சாலைகளை கடந்து ஊருக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்த நிலையில் வாளையார் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்தும், டிரம்ப்ஸ் அடித்தும் நேற்று விரட்டினர். விரட்டப்பட்ட 3 யானைகள் கஞ்சிக்கோடு அருகே கொட்டேக்காடு ஆற்றில் சுகமாக குளியல்போட்டு, நீந்தி விளையாடியபடி வனப்பகுதிக்குள் புகுந்தது. கா..
                 

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

பழி தீர்க்க வந்த ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டு ஓடவிட்ட வங்கி காவலாளி.! மானாமதுரையில் பரபரப்பு..

6 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்லும் கல்வித்துறை- ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தி!

7 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

கலசப்பாக்கம் அருகே ஆதிதிராவிடர் நல பள்ளியில் குடிநீர் தேடி அலையும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆழ்த்துளை கிணறு, மின்மோட்டார், சின்டெக்ஸ் டேங்க் ஆகியவை கடந்த ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே மின் மோட்டார் பழுதடைந்ததால் மாணவர்கள் இதுநாள் வரை அதனை பயன்படுத்த முடியவில்லை. மேலும் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வராதது வேதனைக்குரியதாக உள்ளது. மாணவர்களுக்கு குடிநீர் தேவையெனில் அருகாமையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து ெகாண்டு வருகின்றனர். அதேபோல் சத்துணவு கூடத்தில் சமையல் செய்வதற்கும் வெளியில் இருந்து குடிநீர் கொண்டுவரும் அவல நிலை நீடிக்கிறது. எனவே ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து உடனிடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும..
                 

'அது' கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்: வினோத்திடம் அஜித் கோரிக்கை

8 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
ஆறுமுகநேரி: தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடங்களை பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-முக்காணி தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் மேற்கு தடுப்பணையால் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. அதில் ஒரு வாரத்திற்கு முன் பழை கட்டிடங்களின் சிதைந்த பாகங்கள் வெளியில் தெரிந்தன. இதுபற்றிய விரிவான செய்தியும் படமும் வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை நெல்லை பல்கலைகழக உயிரியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதாகர், சிவகளையைச்சேர்ந்த திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி வரலாற்று பேராசிரியரும் ஆராய்ச்சி மாணவருமான மாணிக்கம், ஆராய்ச்சியாளர் ஆறுமுகநேரி தவசிமுத்து, சமூக ஆர்வலர் ஆத்தூர் நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் பலவிதமான குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சென்றனர். அப்போது அங்கு புதைந்து கிடந்த அன்னம், யாழி, மனித வால் குரங்கு, பெண் ஓவிய சிற்பங்கள், படகுகள் நிறுத்த பயன்படும் கல்லால் செய்யப்பட்ட ராட்சத நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இங்குள்ள கட்டிடங்கள் கொற்கை மன்னன் காலத்து கட்டிடங்களாகவும் அதன்பிறகு வந்த நாயக்கர் மன்னர்களால் அவை புதுப்பிக..
                 

திருவலஞ்சுழியில் 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்பட்டு வரும் நரிக்குறவர் மக்கள்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
கும்பகோணம்: திருவலஞ்சுழியில் 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி நரிக்குறவர் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை அமைத்து தராவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி ஏழுமாந்திடலில் 70க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நரிக்குறவர் மக்களுக்கு என்று மாவட்ட நிர்வாகம், ஏழு மா நிலங்களை வழங்கியதால் அப்பகுதிக்கு ஏழுமாந்திடல் என்ற பெயர் வந்தது. அவர்களுக்கு திருவலஞ்சுழி ஊராட்சி ரயில்வே கேட் அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திடலில் மனை அமைத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்தனர். இந்த மனைகளில் 70 நரிக்குறவர் மக்கள் தனித்தனியாக கூரை வீடுகளை கட்டி கொடுத்தனர். ஆனால் பாதை அமைத்து கொடுக்காமல் வரப்புகளில் சென்று வரும் வகையில் வழிகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.அப்போது நரிக்குறவர் மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் சாலை வசதி குறித்து கேட்டபோது விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் அதன்பின் நரிக்குறவர் மக்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் மழை காலங்களில் சேறும் சகதியில் சென்று வரும் ..
                 

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்; இதுதான் ரஜினி!!

9 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

திருவில்லிபுத்தூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி சாரை பாம்பு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நெசவாளர் காலனி தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ் (48). நெசவுத் தொழிலாளி. நேற்று 4 மணி அளவில், இவரது வீட்டில் புதர்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், வீட்டில் இருந்த பழைய பொருட்கள் வைத்திருந்த இடத்தில் பதுங்கிக் கொண்டது. இதைப் பார்த்த காளிராஜ் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறை அதிகாரி ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் வீட்டுக்கு வந்து, போக்கு காட்டிய பாம்பை, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 6 அடி நீளமுள்ள சாரையாகும். பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் ஊர் ஒதுக்குப்புறத்தில் பாம்பை விட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது...
                 

தருமபுரியில் விவசாயியிடம் ரூ.3500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

புரட்டாசி மாதம் வந்ததும் இந்த சிக்கனுக்கு எகத்தாளத்தை பார்த்தீர்களா? - வைரலாகும் மீம்ஸ்

10 hours ago  
செய்திகள் / சமயம்/ News  
                 

கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

அரக்கோணம் அருகே கணேஷ் நகரில் அமலு என்பவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிப்பு

4 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பில் மாணவர்கள் யாரும் பெயில் ஆகமாட்டார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
                 

அதிராம்பட்டினம் அருகே ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் அருகே வீட்டுக்கு காம்பவுன்ட் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். ஒரத்தநாடு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வள்ளிகொல்லைக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் காம்பவுன்ட் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 5 அடி ஆழத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து தாசில்தார் மற்றும் ஆர்டிஓவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், ஆர்ஐ ரவிச்சந்திரன், சிவன் கோவில் நிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை 5 அடி உயரமும், 500 கிலோ எடையும் உள்ளது தெரியவந்தது. இந்த சிலை பல லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் சிலைகள் இருக்கும் தடயம் ..
                 

ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியது: ஆபத்தான பாதையில் செல்லும் மாணவர்கள்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
நாகை: நாகை அருகே ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பள்ளி மாணவர்கள் ஆற்றைக் கடக்க 10 அடி உயரம் கொண்ட சட்ரஸ் மீது ஆபத்தான நிலையில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாகை அருகே திருமருகல் அடுத்துள்ள துறையூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தெற்கு புத்தாரில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் மிகவும் பழுதடைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியை நோக்கி வருகிறது. அப்பகுதியில் கட்டுமானம் செய்ய தொடங்கிய பாலம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆற்று தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாலத்தின் கம்பிகள் மட்டுமே வெளியில் தெரிகிறது. கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு மணல், கம்பி, ஜல்லி உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டுமான பொருட்கள் தண்ணீ..
                 

காரைக்குடி நகர் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் தாராளம்

9 hours ago  
செய்திகள் / தினகரன்/  தலையங்கம்  
காரைக்குடி: காரைக்குடி நகர் பகுதியில் உள்ள தரைக்கடைகளில் கள்ளநோட்டு கும்பல் நோட்டுகளை மாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி நகர் பகுதியில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் குடியேறி வருகின்றனர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் இங்கு அதிகளவில் குடியேறி உள்ளனர். தவிர ஆன்மீகம் மற்றும் பராம்பரிய பங்களாக்களை பார்வையிட தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பெரிய வணிக நிறுவனங்களுக்கு இணையாக சாலையோரை சிறிய கடைகளும் அதிகளவில் உள்ளது. இந்த சிறிய கடைகளை குறிவைத்து கள்ளநோட்டு கும்பல் அவ்வப்போது முகாமிட்டு தங்களிடம் உள்ள கள்ளநோட்டுகளை மாற்றி வருவது வாடிக்கையாகி வருகிறது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குன்றக்குடியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பல லட்சம் ஜெராக்ஸ் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிலரை கைது செய்தனர். தற்போது மீண்டும் கள்ளநோட்டு புழக்கம் நகர் பகுதியில் அத..
                 

நாடு முழுவதும் இ-சிகரட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை

2 hours ago  
செய்திகள் / தினகரன்/  இந்தியா  
டெல்லி: நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்