தினமலர் FilmiBeat BoldSky GoodReturns DriveSpark தினகரன் விகடன் சமயம் One India புதிய தலைமுறை Polimer News

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதல்

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 20 பேரும் ஒருவருக்கு ஒருவர் கத்தியுடன் மோதிக்கொண்டதால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்பு ரயில்வே பாதுகாப்பு படையினரைக் கண்டதும் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சித்ததாக தகவல்...
                 

தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டு

                 

சென்னை சிட்லபாக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

சென்னை: சென்னை சிட்லபாக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் சோபியா தலைமையில் நடைபெற்று வரும் ஆய்வில் போலீசாரும் பங்கேற்றுள்ளனர். லாரி மோதி மின்கம்பம் சாய்ந்ததே விபத்துக்கு காரணம் என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறிய நிலையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது...
                 

தொலைபேசியில் தொடர்புகொண்டால் போதும் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான தரமான உரம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.20-க்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இக்குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தகுந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற..
                 

சென்னையில் எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் எளிதில் வரும் வகையில் எல்லை சாலை திட்டம்: நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் எளிதில் வரும் வகையில் சென்னை எல்லை சாலை திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை எண்ணூர் துறைமுகத்தில் துவங்கி மாமல்லபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி சந்திப்பு வரை அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுக இணைப்பினை மேம்படுத்தும் பொருட்டு சிறந்த வணிக போக்குவரத்து சாலையாக உருவாக்கப்படவுள்ளதாகவும் இந்த பணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதற்காக 12 ஆயிரத்து 301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 42 புறவழிச்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாகவும், 24 புறவழிச்சாலை பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
                 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு: மருத்துவ கல்வி இயக்குநர்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். புகார்தாரர் தந்த புகைப்படங்களை போலீசிடம் அளித்துள்ளோம் எனவும் கூறினார். ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் சேர்க்கை வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார்...
                 

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயன்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்களது விவரங்களைத் திருத்தி பயனடைந்துள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனரோடு ஆலோசணை மேற்கொண்டு வருகிறோம். மகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து மற்ற ஊழியர்களின் பெயர்களைத் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 18 ஆயிரம் பேர் பெயர் திருத்தம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரிகளைச் சரிபார்த்துள்ளனர் என்று சத்யப..
                 

காப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: காப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் வெளியாக உள்ளது. ஜான் சார்லஸ் மனுவை தனிநீதிபதி அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்...
                 

11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனி பாடப்பிரிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 2020-21 கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட முறை அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது...
                 

ரிஷப் பந்த் போன்ற இளம்வீரர்கள் பயமின்மை - கவனக்குறை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம்: பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர்

மொகாலி: ரிஷப் பந்த் பயமில்லாத ஆட்டம் - கவனக்குறைவு ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார். இந்திய சீனியர் கிரிக்கெட் அணி ரிஷப் பந்தை மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. எந்தவொரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும், அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயத்தில் மோசமான ஷாட் ஆடி தேவையில்லாமல் அவுட்டாகி விடுகிறார். இந்திய அணி முக்கியமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவரது அவுட், அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் விராட் கோலி, ரவி சாஸ்திரி ரிஷப் பந்த் சூழ்நிலையை அறிந்து விளையாட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.இந்நிலையில் புதிதாக பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ரதோரும் ரிஷப் பந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ரிஷப் பந்த் ஆட்டம் குறித்து விக்ரம் ரதோர் கூறுகையில் அனைத்து இளம் வீரர்களும் பயமின்மை - கவனக்குறை ஆகியவற்றிற்கு இடையிலான வே..
                 

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா கோரிக்கை!

புதுடெல்லி: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல, இந்தியா தரப்பில் முறையாக அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐநா பொதுச்சபையில் வரும் 27ம் தேதி அவர் உரையாற்றுகிறார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ஐநா பொதுச்சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற உள்ளார். இதில் கலந்துகொள்ள வரும் பல நாட்டு தலைவர்களை, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து, பாகிஸ்தானின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னரே அனுமதி வழங்குவது குறி..
                 

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்; இ-சிகரெட்டுக்கு தடை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள்  11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, ' 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்-ஆக வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாகவே ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக பாஜக அரசு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு ரூ.2.024 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் அளித்துள்ளார். அதேபோல, நாடு முழுவதும் ஏ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரோனிக் சிகிரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இ-சிகரெட்டுக்குத் தடை விதிக்க  அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செயயப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டுக..
                 

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

                 

எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம்: இந்தி திணிப்புக்கு எதிராக ப.சிதம்பரம் ட்வீட்

புதுடெல்லி: எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தி திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் தமது குடும்பத்தார் மூலமாக இந்தி திணிப்புக்கு எதிரான தமது கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தி மொழியால் மட்டுமே நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்ற ஆபத்தான கருத்து உலா வந்துகொண்டிருக்கிறது. தமிழ் மக்களும், அதேபோல் மற்ற மொழிகளைப் பேசும் மக்களும் இந்தியை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா மொழிகளின் வளர்ச்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் இந்தி மட்டுமே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தி திணிப்புக்கு எதிராக 20.09.2019 அன்று திமுக சார்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில், காங்கிரசார் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே்.எஸ் அழகிரியை கேட்டுக்கொள்கிறேன், என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிர..
                 

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு: பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்து ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்க மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மோடியை சந்தித்த போது, இனிப்புகளையும், குர்தாவையும் மம்தா பானர்ஜி பரிசாக வழங்கினார்.  இதனையடுத்து மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை பற்றி மோடியுடன் ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, ரயில்வே ஆகியவை குறித்தும் பேசினார். மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.  உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் அரசியல் ரீதியாக கடுமையாக மம்தா பானர்ஜி சமீப காலமாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. டெல்லியில் பிரதமரை சந்தித்தவுடன் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்..
                 

இந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.. அமித்ஷா விளக்கம்

இந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி மொழி தினத்தையொட்டி அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன், என கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த இந்தி திணிப்பு குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தி குறித்த கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில்..
                 

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

                 

ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தும் ‘ஒற்றை யானை’: வனத்துறையினர் கவனிப்பார்களா?

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒன்றை யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புறம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலை கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள், மலைப்பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில், சிறுவாட்டுகாடு பகுதியில் நேற்று முதல் ஒற்றை யானை சாலையில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரத்திலிருந்து இரவு நேரத்தில் உணவுப் பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களுக்கு முன் யானை ஒன்று, ரேஷன் கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. தற்போது ஒற்றை யானை விவசாயிகளின் நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுத..
                 

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் பல்லாரி விலை எகிறியது: கிலோ ரூ.35க்கு விற்பனை

மதுரை: சின்ன வெங்காயத்திற்கு இணையாக பல்லாரி வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.35 என பல்லாரி விற்பனையானது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுபாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் இன்றைய காலை நிலவரப்படி காய்கறிகளின் வரத்து ஓரளவு இருந்த போதிலும்,  தேவை அதிகமானதால், விலை உயர்வாக இருந்தது. இது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறுகையில், ‘இன்று புராட்டாசி மாதம் பிறந்துள்ளதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலை ஓரளவு அதிகரித்துள்ளது. அதே நேரம் வாழை இலை விலை கடந்த வாரத்தைவிட சற்று குறைந்தாலும், உயர்வாகத்தான் உள்ளது. முக்கியமாக பெரிய வெங்காயமான பல்லாரி விலை சின்ன வெங்காயத்தின் விலைக்கு இணையாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.20க்கு விற்பனையான பல்லாரி தற்போது ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்து வருவதால் இந்த விலை ஏற்றம். இந்த மாதம் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பார்கள..
                 

பெரணமல்லூரில் உள்ள குளத்திற்கு கம்பிவேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே சூரியகுளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்குளத்தின் அருகே சுகாதார மையம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரணமல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக இக்குளம் நிரம்பி வழிகிறது. இதனால், சுகாதார மையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளின் குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இக்குளத்தின் அருகே விளையாடுகின்றனர். எனவே சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இக்குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
                 

தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு

ஆறுமுகநேரி: தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடங்களை பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-முக்காணி தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் மேற்கு தடுப்பணையால் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. அதில் ஒரு வாரத்திற்கு முன் பழை கட்டிடங்களின் சிதைந்த பாகங்கள் வெளியில் தெரிந்தன. இதுபற்றிய விரிவான செய்தியும் படமும் வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை நெல்லை பல்கலைகழக உயிரியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதாகர், சிவகளையைச்சேர்ந்த திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி வரலாற்று பேராசிரியரும் ஆராய்ச்சி மாணவருமான மாணிக்கம், ஆராய்ச்சியாளர் ஆறுமுகநேரி தவசிமுத்து, சமூக ஆர்வலர் ஆத்தூர் நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் பலவிதமான குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சென்றனர். அப்போது அங்கு புதைந்து கிடந்த அன்னம், யாழி, மனித வால் குரங்கு, பெண் ஓவிய சிற்பங்கள், படகுகள் நிறுத்த பயன்படும் கல்லால் செய்யப்பட்ட ராட்சத நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இங்குள்ள கட்டிடங்கள் கொற்கை மன்னன் காலத்து கட்டிடங்களாகவும் அதன்பிறகு வந்த நாயக்கர் மன்னர்களால் அவை புதுப்பிக..
                 

ரயில் நிலையங்களில் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள்: விரைவில் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்

வேலூர்: ரயில் நிலையங்களில் மீண்டும் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் போக்குவரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள ரயில்வேத்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேலும் தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் நகரும் மின்படிக்கட்டுகள், மின்தூக்கிகள், இலவச இணைய சேவை, கண்காணிப்பு கேமராக்கள், குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வறைகள், தானியங்கி ஸ்மார்ட் டிக்கெட் இயந்திரங்கள், ரூபாய் நோட்டுகளை பெற்று சில்லரை வினியோகிக்கும் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரயில்வே துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் முதல்கட்டமாக முக்கிய ரயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல், தனியார் பங்களிப்புடன் தங்கும் விடுதிகள், துரித உணவகம், மொபைல் ஆப் கால்டாக்ஸி சேவை ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், ரயில் நிலைய வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளைய..
                 

நெல்லையில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் குப்பைகளை கொட்டிய மனசாட்சி இல்லா மனிதர்கள்: நீர்நிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி

நெல்லை: நெல்லையில் ரூ.12 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் மீண்டும் மர்ம கும்பல் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனை சீரமைக்க உதவிய சமூக ஆர்வலர்கள் இச்செயலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் நீர்நிலைகள், குளங்கள், கால்வாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் சமூக அமைப்புகள், தொண்டுநிறுவனங்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இப்பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்படுகின்றன. இதில் முதல் பணியாக வேய்ந்தான்குளம் குடிமராமத்துப்பணி தொடங்கி நடந்தது. இக்குளம் அண்ணா பல்கலைக்கழகம், நம் தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் அமைப்புடன் இணைந்து கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சீரமைக்கப்பட்டது. முள்செடிகள், தேவையற்ற மரங்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. குளத்தில் ேதாண்டி எடுத்த மண் கரைகளில் வைக்கப்பட்டு கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டது. குளத்தின் உள்பகுதியில் சிறிய அளவிலான குன்று போன்ற பகுதி அமைத்து அதில..
                 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

                 

இரண்டாவது டி-20 போட்டி: இந்திய அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்க அணி

மொகாலி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 150 ரன்களை தென்னாபிரிக்க அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது...
                 

Delhi HC restrains private school from expelling EWS students on non-payment of fees

34 minutes ago  
செய்திகள் / Indian Express/   
                 

India vs South Africa 2nd T20: विराट का वर्ल्ड रिकॉर्ड, पहुंचे रनों के शिखर पर

                 

Saudi oil attacks an 'act of war': Pompeo

43 minutes ago  
செய்திகள் / Times Of India/   
                 

Tabrez Ansari lynching: Jharkhand police make U-turn, charge sheet accused for murder

                 

Vegetarian diets not always the most climate-friendly, researchers say

                 

Tabrez lynching case: Murder charge back on all accused

an hour ago  
வணிக / Business Standard/   
Eight days after the Jharkhand police dropped the murder charge against 11 accused in the mob lynching case of young Muslim man Tabrez Ansari, they brought back the same charge on the accused on Wednesday after obtaining a fresh medical report, an official said here. Ansari was seen on national television being beaten up with rods while tied to a pole and forced to chant 'Jai Shri Ram' over alleged theft in June. Based on a fresh medical report, the police on Wednesday filed a supplementary charge sheet before a court in Seraikela-Kharsawan district, retaining Section 302 of the IPC (murder) against the 11 accused, the official said. The police also filed charge sheet against the remaining two accused charging them with murder after completing investigation against them. The police had on September 10 dropped murder charges against all the 13 accused in the mob lynching case and converted it into one of culpable homicide not amounting to murder (Section 304 of the IPC) ....
                 

Romanian court says president must appoint interim ministers

                 

K'taka seeks 2 more days to slash traffic fines

                 

Chhattisgarh : 43 नगर पालिकाओं में से 14 में महिलाएं होंगी अध्यक्ष

                 

Misuse of agriculture credit

an hour ago  
வணிக / Business Standard/   
                 

Seven arrested for cheating youths from Nepal after promising jobs in Canada

an hour ago  
வணிக / Business Standard/   
Delhi Police's Crime Branch has arrested seven people for allegedly cheating young job aspirants, mostly from Nepal, on the pretext of providing them good job in Canada by forging passports and visas, officials said on Wednesday. The agents involved in the racket have been identified as Jitender Kumar Mandal, a resident of Dhangarhi in Nepal; Pradeep Kumar Kattamuri, a resident of Visakhapatnam, Andhra Pradesh; and Vipin Sharma, a resident of Paharganj, they said. The mastermind behind the syndicate has been identified as Majeet and his associate has been identified as Vijay Kumar, both residents of Vaishali in Uttar Pradesh, the police said. Two middlemen, identified as Gagan Singh and Asha Rani, and the printing press owner, identified as Jitender Kumar, were also arrested, a senior police official said. A complete lab used for printing and preparing fake visa stickers and fake Indian passport in the city was also raided, the officials said. The matter came to light after police .....
                 

Virat Kohli leads from front as India beat South Africa in 2nd T20I

                 

Delhi govt to pay CBSE exam fees of Class 10, 12 students of govt schools

                 

Supreme Court gets four new judges, its strength reaches highest ever at 34

                 

TV may get cheaper as govt scraps import duty on open cell panels

an hour ago  
வணிக / Business Standard/   
                 

US presidential candidate Booker says he will bolster worker rights, hike taxes on rich

                 

Five cops held for stealing cash seized during raid

an hour ago  
வணிக / Business Standard/   
Five policemen were arrested in Rajkot district of Gujarat on Wednesday for allegedly stealing Rs 8.50 lakh from the cash seized during a raid on a gambling den, a senior police officer said. A head constable and four constables attached to Vinchhiya police station in Jasdan tehsil raided a gambling den at Kandhevaliya village on September 10. The accused in the gambling case, after being released on bail, read in the newspapers that the police had seized Rs 48,340. He tipped off senior police officials that the actual amount seized during the raid was much higher. "We found that these five policemen kept Rs 8.50 lakh with them, and showed Rs 48,340 as the amount recovered," said Balram Meena, superintendent of police, Rajkot (Rural). Rs four lakh were recovered from their possession and further probe was on, he added...
                 

SEBI ने आइएलएंडएफएस पर लगाया 10 लाख का जुर्माना, 45 दिन के भीतर भरना होगा जुर्माना

                 

Sound system to supply vegetables to citizens needed: CM

an hour ago  
வணிக / Business Standard/   
Telangana Chief Minister K Chandrasekhar Rao on Wednesday favoured evolving a sound system to supply fresh vegetables and unadulterated food items to citizens by promoting food processing and other methods. Speaking in the Legislative Assembly, he claimed that agricultural crop output would increase in the wake of the government's success in the irrigation sector. Agricultural productivity would also increase in view of government's efforts, he said. Rao said the'Rythu Samanvaya Samitis' (farmers coordination councils) set up by the government to work on ensuring fair price for produce and others would be activated. A new president for the state-level council would soon be appointed, he said. The PDS dealers and women's Self Help Groups would also be involved in the government's endeavour, Rao said. "Along with strengthening the system of (PDS) dealers, women (self help) groups should be activated and food processing units should be brought in, he said. If fresh .....
                 

Why cigarettes, 'paan masala' shouldn't be banned in country: Maken to govt

an hour ago  
வணிக / Business Standard/   
Senior Congress leader Ajay Maken on Wednesday asked the government why cigarettes and 'paan masala' should not be banned in the country if it can ban e-cigarettes. The government on Wednesday banned production, import and sale of e-cigarettes and similar products, citing health risk to people, especially the youth, and an ordinance is being issued to make it an offence, entailing jail term up to three years as well as fine. "It is good that e-cigarettes are being banned, but we want to ask the government whether they will ban normal cigarettes. If e-cigarettes can be banned, then why other cigarettes cannot be banned or whether there could be a ban on paan masala as well," Maken told reporters when asked about the ban on e-cigarettes. "We want to ask the government if it will ban other cigarettes in the country too," he added. Maken said US President Donald Trump a few days ago had said e-cigarettes should be banned. "If Modi ji would have banned e-cigarettes a few days ago, then we ...
                 

Decide on sanction to prosecute Kanhaiya Kumar, others within a month, court tells Delhi govt

an hour ago  
வணிக / Business Standard/   
A Delhi court on Wednesday asked the Delhi government to take a decision within a month on the sanction to prosecute former JNU Students' Union president Kanhaiya Kumar and others in a sedition case.Chief Metropolitan Magistrate Manish Khurana observed that the delay in granting sanctions caused wastage of judicial time."It is expected of the Delhi government that the decision regarding the sanction or otherwise would be taken within one month so that further processing in the present case may be done," the court observed.It further said: "The time which is being taken to finalise the issue of sanction or otherwise has caused wastage of judicial time as the case had been listed and adjourned repeatedly since the filing of the chargesheet."The court will further take up the matter for hearing on October 25.The court's directions came after the Delhi Police and public prosecutor Vikas Singh apprised it that the sanction of chargesheet is still pending with the Delhi government's Home .....
                 

Guj move to dilute amended MV Act politically motivated: Cong

an hour ago  
வணிக / Business Standard/   
The Congress on Wednesday said the BJP government in Gujarat has taken a decision to slash fines under the amended Motor Vehicles Act and delay its enforcement by 15 days with an eye on upcoming by-elections. Earlier in the day, the government announced that new penalties for traffic offences related to helmet and pollution-under-control (PUC) certificates would come into force from October 15. Earlier, the reduced fines for traffic offences in the state came into force on Monday, after the state BJP government announced dilution of the recently-amended Motor Vehicles (MV) Act that has a provision of steep fines. Meanwhile, the Opposition party also claimed to have received an "unprecedented response" from the common people to its missed call campaign against the provision of hefty penalties. It claimed more than two lakh people gave missed calls within two days of the launch of the campaign. "Due to harassment the people are facing under the amended Central MV Act with ...
                 

Fire tender gets stuck in ground near Patna airport runway,

an hour ago  
வணிக / Business Standard/   
Air traffic remained disrupted for more than two hours at the airport here on Wednesday after a crash fire tender (CFT) got stuck in a stretch of muddy ground close to the runway. The CFT, a specialized fire engine designed for use in aircraft rescue and firefighting at airports, was pressed into service to douse a "minor grassfire" near the runway, a statement from the airport said. Operations at the Jay Prakash Narayan Airport remained suspended from 1.10 pm to 3.30 pm, and three flights were delayed and nine others were diverted. The "minor grassfire was observed at a distance of 22 metres approx. from the runway edge" at around noon and the CFT went there to extinguish it, the statement said. The fire was caused following the use of firecrackers by personnel deployed for scaring away birds. However, the statement said, after extinguishing the fire, the CFT got stuck in the ground which had become soft due to rain at night. The CFT was removed with the help of cranes ....
                 

Sri Lanka to hold presidential election on November 16

                 

AP govt constitutes TTD Board

an hour ago  
வணிக / Business Standard/   
: The Andhra Pradesh government on Wednesday constituted the prestigious Board of Trustees of Tirumala Tirupati Devasthanams, which administers the famous Lord Venkateswara temple in Tirumala among others, bringing in 24 new members, with representation from five states. Several industrialists including India Cements vice-chairman and managing director N Srinivasan (Tamil Nadu), J Rameswara Rao, Putta Pratap Reddy, B Parthasarathi Reddy (all Telangana) have been appointed as members in the new Board of Trustees, the size of which was increased from 19 (including three ex-officio members) to 29 (including four ex-officio members). Former MP Y V Subba Reddy was appointed the Board Chairman on June 21. The state government amended the AP Charitable and Hindu Religious Institutions and Endowments Act through an ordinance last week for expansion of the TTD Board in view of the "high demand" for membership from various quarters, a minister said. While three ruling party MLAs,..
                 

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 குறைந்தது: ஒரு சவரன் ரூ.28,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,600-க்கும் சவரன் ரூ.28,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50.20-க்கு விற்பனையாகிறது. இன்று காலை சவரனுக்கு ரூ.112 குறைந்த நிலையில், மாலை ரூ.88 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888 விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611க்கும், சவரன் ரூ.28,888க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்திருந்தது.. அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கும், ஒரு கிலோ ரூ.50,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 குறைந்துள்ளது. உலக வர்த்தகத்தில் மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாறுதல் ஆகியவற்றால் ..
                 

மின்கம்பம் சாய்ந்த விவகாரம்: விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர் ஆய்வு

சென்னை: சிட்லபாக்கத்தில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சிட்லப்பாக்கம், முத்துலட்சுமி நகர், சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் சேதுராஜ் (42). மினி வேன் வைத்து தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சங்கரி. தம்பதிக்கு கனகதுர்கா என்ற மகள் மற்றும் ஹரிஹரநாதன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேதுராஜ் வீட்டுக்கு வந்த பிறகு தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதில், சேதுராஜ் மீது மின் கம்பி விழுந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சேதுராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கம்பம்  முறிந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேதுராஜின் ..
                 

சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ரூ.4.5 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது. மழைநீர் வடிகால் மற்றும் அது தொடர்பான 45 விதமான பணிகளுக்கு மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ..
                 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்தை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சில நிமிடங்களுக்கு முன்னதாக திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்திருந்தார். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக தரப்பிலும், ஆளுநர் மாளிகை வட்டாரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஆளுநருடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக தற்போது உள்ள அரசிய சூழலில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கை மூலம் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் பொதுவான மொழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக வருகிற 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநர் சந்திப்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொ..
                 

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை; இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. செப்.20-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் பேசினார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று ஆளுநர் விளக்கினார்; அதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது...
                 

11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் மாற்றம்; 6 பாடங்களுக்கு பதில் 5 பாடங்களாக குறைப்பு... தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு, 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள்; கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட 4 பாடங்கள் இருக்கும். அதற்கு பதிலாக 3 பாடங்கள் கொண்ட ஒரு தொகுப்பை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய முறையின் படி மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவர்களுக்கான தனித்தனி பாட பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது உள்ள நடைமுறையின் படி 11-ம் வகுப்பில் இரு மாணவன் சேர்ந்தால், அந்த மாணவர் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற இரண்டு படிப்புகளுக்கும் சேர்ந்து ஒரு பிரிவை தேர்வு செய்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இந்த முறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 11-ம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ளபடி அடுத்து வரக்கூடிய கல்வி ஆண்டுகளில் 600 மதிப்பெண்ணுக்கு எப்பொழுதும் போலவே தேர்வு நடைபெறும். புதிதாக 500 மதிப்பெண்ணுக்க..
                 

இரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மொகாலி: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது...
                 

ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு

                 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறங்காவலர் குழுவில் இடம்

ஆந்திரா; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தமிழகத்தின் சார்பில் 4 பேருக்கு வாய்ப்பு அளித்து ஆந்திர அரசு அரசனை ;வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 28 உறுப்பினர்களை கொண்ட தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியா சிமெண்ட் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், உடுமலை எம்எல்ஏ  குமரகுரு, டாக்டர் நிச்சிதா முத்தரப்பு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரையும் சேர்த்து 29 பேர் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை ஆந்திர அரசு இன்று வெளியிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது புட்டா சுதாகர் ராவ் தலைமையில் இருந்த அறங்காவலர் குழு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கலைக்கப்பட்டது. மூன்று மாதங்களாக அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல் இருந்ததால் தற்போது தேவஸ்தானத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை. விரைவில் புதிய அறங்காவலர் குழு கூட்டம் நடத்..
                 

கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி

ஓடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது...
                 

இந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி: போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

ஒடிசா: கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறி வைத்து தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை அஸ்திரா, சுகோய் 30 ஐ ரக போர் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏற்கனேவே நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் வெற்றியை கண்டது. இந்த வெற்றிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்..
                 

வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டம்

டெல்லி: வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் அடையாளமாகவும், ஜனநாயகத்தின் விளங்குகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பாளர்கள் சர் எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர் ஹெர்பெர்ட் பெக்கர் ஆகிய இருவர்களின் திட்டத்தின் படி கட்டப்பட்டது. இதனை அப்போதைய வைசிராய் லார்ட் இர்வின் திருந்துவைத்தார். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தக் கட்டடம் இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே இதனுடைய பழைமை, பாதுக்காப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் மத்திய அரசு துவங்கியுள்ளது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தோடு, அதன் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்துள்ள உள்ள பிரதமர், உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 மத்திய அரசு அமைச்சக அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையி..
                 

செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு

டெல்லி: செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு கோரி ஏற்கனவே செப்.9 மற்றும் செப்.10 தேதிகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம் செய்தனர். கோரிக்கை குறித்து பொறுப்புடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமானிகள் சங்கம் வலியுறுத்தியது...
                 

கோவை அருகே அட்டகாசம் செய்த 3 காட்டு யானைகள் விரட்டியடிப்பு: ஆற்றில் உற்சாக குளியல்போட்டு வெளியேறியது

பாலக்காடு: கோவை அருகே வாளையாரை அடுத்த கஞ்சிக்கோடு பகுதியில், கடந்த 2 நாட்களாக அட்டகாசம் செய்த 3 யானைகள், காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது. யானைகள், ஆற்றில் உற்சாக குளியல் போட்டு அங்கிருந்து வெளியேறியது.காட்டு யானைகளுக்கு தேவையான உணவுவகைகள், மலையோர கிராமத்தோட்டங்களில் அதிகளவு கிடைப்பதால் யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கோவை அருகே வாளையார், கஞ்சிக்கோடு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் கஞ்சிக்கோடு, மருதுரோடு, கல்லேப்பிள்ளி, வட்டப்பாறை, மலம்புழா, கொட்டேக்காடு வழியாக வந்து சாலைகளை கடந்து ஊருக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்த நிலையில் வாளையார் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்தும், டிரம்ப்ஸ் அடித்தும் நேற்று விரட்டினர். விரட்டப்பட்ட 3 யானைகள் கஞ்சிக்கோடு அருகே கொட்டேக்காடு ஆற்றில் சுகமாக குளியல்போட்டு, நீந்தி விளையாடியபடி வனப்பகுதிக்குள் புகுந்தது. கா..
                 

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

                 

திருச்சி டவுன் பஸ்சில் டிக்கெட் கொடுக்க கண்டக்டர் வரவில்லை: பார்வையற்ற வாலிபருக்கு பேரம் பேசி அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர்: மனிதாபிமானம் எங்கே செல்கிறது?

* வைரலாகும் வீடியோ* இரக்கமின்றி கொந்தளித்த அதிகாரிக்கு வலுக்கும் எதிர்ப்புதிருச்சி: திருச்சியில் டவுன் பஸ்சில் பயணித்த பார்வையற்ற ஒருவருக்கு, டிக்கெட் பரிசோதகர் கறாராக அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண் பார்வை தெரியாத வாலிபர் ஒருவர் பயணித்தார். அவர் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுக்கவில்லை. மேலும், அவரிடம் கண்பார்வையற்றோருக்கான பாசும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், அவருக்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.அப்போது கண்பார்வையற்ற அந்த வாலிபர், ‘‘கண்டக்டர் டிக்கெட் வழங்க என் அருகிலேயே வரவில்லை. கண் தெரியாத நான் எப்படி எழுந்து சென்று டிக்கெட் வாங்க முடியும். என்னை உயர் அதிகாரியிடம் அழைத்து செல்லுங்கள். நான் அவரிடம் பேசி அபராதம் செலுத்துகிறேன்’’ என்றார். உடனே டிக்கெட் பரிசோதகர், ‘‘நான் தான் அதிகாரி, வேறு யார் வேண்டும்’’ என்று குரலை உயர்த்தி பேசினார். அப்போது அங்கு வந்த ஒருவர், கண்பார்வையற்ற ஒருவரிடம் இப்படி கறாராக அபராதம் வசூலிக..
                 

செங்கம் மக்கள் கோரிக்கை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை ஆற்றுப்பாலம் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகரில் புறவழிச்சாலை இல்லாததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணாக உள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு சென்றுவர முடியாத நிலை உள்ளது. அதேபோல் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் சிலநாட்களிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் ரோந்து சென்று விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்..
                 

சீசன் நிறைவடைந்த நிலையிலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

தென்காசி: குற்றாலத்தில் நேற்று சுள்ளென வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் துவக்கத்தில் சற்று ஏமாற்றினாலும் தற்போது சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதுடன் அருவிகளில் தண்ணீரும் நன்றாக விழுகிறது. நேற்று திடீர் மாற்றமாக சுள்ளென்று வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல், லேசான மேகமூட்டம் மெல்லிய சாரல் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சீசன் நிறைவடைந்து விட்ட நிலையில் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது...
                 

கெலமங்கலம் அருகே வாலிபர் எரித்து கொலை?

தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி  மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மூக்கப்பா. இவருடைய  மனைவி சுசீலா (38). இவர் இன்று காலை 6 மணயளவில் வாசல் தெளிப்பதற்காக வெளியே  வந்தார். அப்போது கதவை திறந்தபோது வாசற்படியில் உடல் முழுவதும்  எரிக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த சுசீலா உடனடியாக மூக்கப்பாவிடம் தெரிவித்தார்.  பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து  வந்த டிஎஸ்பி சங்கீதா, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சிவலிங்கம், எஸ்ஐ  செல்வராகவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால்  எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது  தெரியவில்லை. இதையடுத்து அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் ஓச..
                 

இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்

ரஷ்யா: இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற ஐஐபிஏ உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். ரஷ்யாவின் எகடெரின்பர்க்கில் நடைபெற்ற 63 கிலோ போட்டியின் அரையிறுதிக்கு வந்ததன் பின்னர் மனிஷ் கவுசிக் விரைவில் உயரடுக்கு பட்டியலில் சேர்ந்தார்...
                 

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக். 7-ம் தேதி தொடங்குகிறது எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது...
                 

Photos: Virat Kohli’s 22nd T20I fifty guides India to 7-wicket win over South Africa

32 minutes ago  
செய்திகள் / Indian Express/   
                 

केंद्र सरकार ने सुप्रीम कोर्ट से कहा-गर्भपात के लिए 20 हफ्ते की सीमा नहीं बढ़ाई जा सकती