தினமலர் FilmiBeat BoldSky GoodReturns DriveSpark தினகரன் விகடன் சமயம் One India புதிய தலைமுறை Polimer News

ட்வீட் கார்னர்...

டென்னிஸ் நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா (26 வயது, செக் குடியரசு) தனது காதலர் மைக்கேல் ஹர்ட்லிக்காவை திருமணம் செய்து கொண்டதாக நேற்று அறிவித்துள்ளார். டிவி தொகுப்பாளரான மைக்கேல் (29 வயது), பிளிஸ்கோவாவின் மேனேஜராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் விம்பிள்டன் தொடர் முடிந்ததும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பிளிஸ்கோவா நேற்று திருமண புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இரட்டை சகோதரியான கிறிஸ்டினா பிளிஸ்கோவா, மைக்கேலின் மகள் (முதல் மனைவிக்குப் பிறந்த பெண்)  உட்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்...
                 

சில்லி பாயின்ட்...

* ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குழுவின் தலைமை நிர்வாகியாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.* பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாடப் போவதாக நெய்மர் ஜூனியர் அறிவித்துள்ளார்.* மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், மிடில்செக்ஸ் கிரிக்கெட் கிளப்புடன் இணைந்து 9-14 வயது இளம் வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி அகடமியை பல்வேறு நகரங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.* நியூபோர்ட்டில் நடக்கும் ஹால் ஆப் பேம் டென்னிஸ் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கனடா வீரர் வாசெக் பாஸ்பிசிலை வீழ்த்தி முதல் முறையாக ஏடிபி தொடரின் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்...
                 

80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்!

                 

`இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்!’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM

                 

`அங்கு உனக்குப் பாதுகாப்பில்லை!’ - சென்னைக்கு வர ஸ்விஸ் வீராங்கனைக்குத் தடைபோட்ட பெற்றோர்

                 

`டிப்ஸ் மட்டும் 16 லட்சம்!' - ஹோட்டல் ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்த ரொனால்டோ

                 

தென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277

கொழும்பு: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்துள்ளது. அபாரமாகப் பந்துவீசிய கேஷவ் மகராஜ் 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 278 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என மும்மிலை வகிக்க, 2வது டெஸ்ட் கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணியின் முதல் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர்.கருணரத்னே 53, குணதிலகா 57, தனஞ்ஜெயா டி சில்வா 60 ரன் எடுத்து கேஷவ் மகராஜின் இடது கை சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் மகராஜின் சுழலை சமாளிக்க முடியாம் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். குசால் 21, மேத்யூஸ் 10, டிக்வெல்லா 5, தில்ருவன் 17, கேப்டன் சுரங்க லக்மல் (0) ஆகியோர் மகராஜ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, ரோஷன் சில்வா 22 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் கிளீன் போல்டானார். முதல் நாள் ஆட்ட நேர..
                 

மகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து - இந்தியா மோதல்

லண்டன்: மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. லண்டன், லீ வாலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் மையத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்று சந்திக்கிறது. இப்போட்டி மாலை 6.30க்கு தொடங்குகிறது. ஜெர்மனி - தென் ஆப்ரிக்கா மோதும் தொடக்க லீக் ஆட்டம் மாலை 4.30க்கு தொடங்கும். இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜூலை 26ம் தேதி அயர்லாந்து அணியையும், 3வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜூலை 29ம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடி கால் இறுதிக்கு முன்னேற வேண்டும்.கால் இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 1, 2 தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 4ம் தேத..
                 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்து பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் சாதனை

புலவயோ: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை ஃபகார் ஜமான் பெற்றுள்ளார்.  சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோகித் சர்மா, கெய்ல், மார்டின் குப்தில் ஆகியோரை தொடர்ந்து இரட்டை சதமடிக்கும் 6 வது வீரர்  ஃபகார் ஜமான் ஆவார். பாகிஸ்தான் அணி ஜிம்பாபேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. புலவயோ என்ற இடத்தில் நடைபெற்ற 4 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்ட காரர்களாக களமிறங்கிய இமாம் உல் கக், ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடினர். ஃபகார் ஜமான் 156 பந்துகளில் 24 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 210 எடுத்து சாதனை படைத்தார். பாகிஸ்தான் வீரர் ஒருவர் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்...
                 

ராஜிவ் சுக்லா உதவியாளர் ராஜினாமா : உ.பி. அணியில் இடம் பெற லஞ்சம் கேட்டதாக புகார்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டுமானால் பெண்களை லஞ்சமாக அனுப்பி வைக்க வேண்டுமென்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜிவ் சுக்லாவின் உதவியாளர் ராஜினாமா செய்துள்ளார். ஐபிஎல் தலைவரும் உத்தரப்பிரேத மாநில கிரிக்கெட் சங்க இயக்குநருமான ராஜிவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபி. இவர் சுக்லாவுக்கு மிகவும் நெருக்கமானவர். இதை பயன்படுத்தி, இளம் கிரிக்கெட் வீரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராகுல் ஷர்மா என்ற வாலிபர், அக்ரம் சைபி மீது புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, செய்தி டிவி சேனல் ஒன்று சைபி, ராகுல் ஷர்மா இடையேயான போன் உரையாடலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராகுல் ஷர்மா அளித்த புகாரில், ‘‘என்னைப் போன்ற இளம் வீரர்களிடம் சைபி ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார். டெல்லியில் உள்ள குறிப்பிட்ட ஓட்டலுக்கு பெண்களையும் அனுப்பி வைக்குமாறும் கூறுகிறார். அவ்வாறு செய்தால் மாநில அணியில் இடம் பெறச் செய்வேன் என உறுதி அளித்தார். இதைப் போன்று சிலர் லஞ்சம் கொடுத்து அணியில் சேர்ந்துள்ளார்கள்’’ என்றார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ..
                 

ரியல் மாட்ரிட்-10, பார்சிலோனா-11...பி.எஸ்.ஜி அதுக்கும் மேல.. உலகக் கோப்பையில் கிளப்களின் பங்கு!

                 

டெஸ்ட் ஹாக்கி: நியூசிலாந்தை வென்றது இந்தியா

பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியா-நியூசிலாந்து ஹாக்கி அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடக்கிறது. இதில் முதல் போட்டி நேற்று நடந்தது. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரூபிந்தர் பால் சிங் 2, 34வது நிமிடங்களில் 2 கோல் அடித்து அசத்தினார். மன்தீப் சிங் 15வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 38வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து தரப்பி–்ல் ஸ்டீபன் ஜென்னஸ் (26, 55) மட்டுமே 2 கோல் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் அளித்தார். இறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2வது போட்டி நாளை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது...
                 

ஹீமா வெற்றியைத் தேடினார்... இங்கே சாதியைத் தேடுகிறார்கள்!

                 

911 புள்ளிகள் பெற்று அசத்தல் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்

துபாய்: இங்கிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவித்த இந்திய அணி கேப்டன் கோஹ்லி, முதல் முறையாக 911 புள்ளிகளை தொட்டதுடன் நம்பர் 1 அந்தஸ்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். மூன்று ஒருநாள் போட்டிகளில் முறையே 75, 45, 71 ரன் விளாசிய கோஹ்லி 2 புள்ளிகள் மட்டுமே பெற்றாலும் முதல் முறையாக 911 புள்ளிகளை தொட்டு அசத்தினார். 1991 மார்ச்சில் ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ் 918 புள்ளிகள் பெற்றதற்குப் பிறகு, இதுவே அதிகபட்சமாகும்.  இந்த தொடரில் 2 சதங்கள் விளாசி அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (818 புள்ளி) 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (808), இந்திய வீரர் ரோகித் ஷர்மா (806), டேவிட் வார்னர் (ஆஸி. 803) அடுத்த இடங்களில் உள்ளனர். இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் முதல் முறையாக டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். குல்தீப் 6வது இடத்திலும், சாஹல் 10வது இடத்திலும் உள்ளனர். இந்திய வேகம் பூம்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்.ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை டாப் 10 அணிகள்எண்    அணி    புள்ளி1    இங்கிலாந்து    1272 ..
                 

வீரர்களை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த குரோஷிய அதிபர்! வைரலாகும் புகைப்படங்கள்

                 

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் 3 போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணி: விராத் கோஹ்லி(கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, சர்துல் தாகூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.   முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் வென்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது...
                 

உலகக்கோப்பையில் சிறந்த இளம் வீரருக்கான அளிக்கப்பட்ட பரிசை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிய மாப்பே

டெல்லி: ரஷ்யாவில் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய இளம் வீரரான பிரான்ஸின் கிலியான் மாப்பே, தனக்கு கிடைத்த ரூ.3.5 கோடி பரிசை, தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். ரஷ்யாவில் நடந்த 21-வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் சாம்பியனானது. அந்த அணியின் 19 வயதாகும் கிலியான் மாப்பே, மிகச் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார்.மிகவும் இளம் வயதில் உலகக் கோப்பையில் கோலடித்த பிரேசிலின் ஜாம்பவான் பீலேவின் சாதனையை அவர் நெருங்கினார். அதேபோல் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை பைனலில் கோலடித்த இளம் வீரர் என்ற பீலேவின் சாதனையையும் அவர் சமன் செய்தார். இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றதன் மூலம் தனக்கு கிடைத்த வருமானம் அனைத்தையும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார் மாப்பே. பிரீமியர்ஸ் டி கோர்டே என்ற அந்த தொண்டு நிறுவனம், காயமடைந்த மற்றும் ஊனமமடைந்த குழந்தைகளுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது. தனக்கு கிடைத்த, ரூ.3.5 கோடி ரூபாயையும் மாப்பே நன்கொடையாக அளித்துள்ளார்...
                 

`குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ்! #FifaWorldCupFinal

                 

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி தொடரை வென்றது இங்கிலாந்து: ஜோ ரூட் 100*; மோர்கன் 88* ரன் விளாசல்

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. இரண்டு போட்டிகளின் முடிவில் 1-1 என சமநிலை நிலவ, தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிப்பதற்கான கடைசி போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடந்தது.இந்திய அணியில் கே.எல்.ராகுல், சித்தார்த் கவுல், உமேஷ் யாதவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் இடம் பெற்றனர். இங்கிலாந்து அணியில் ராய்க்கு பதிலாக வின்ஸ் சேர்க்கப்பட்டார். டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ரோகித், தவான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 2 ரன் மட்டுமே எடுத்து வில்லி பந்துவீச்சில் வுட் வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்..
                 

பாரத் சூப்பர் லீக் கபடி போட்டியில் கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்பு

சென்னை: திறமையான கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரத் சூப்பர் லீக் கபடி போட்டித் தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன்  தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் கூறுகையில், ‘கபடி தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டு. கிராமப்புறங்களில் பெருமளவில் விளையாடுகின்றனர். விளையாட்டில் மட்டுமின்றி உடல் உழைப்பு காரணமாக உறுதி மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் பாரத் சூப்பர் லீக் கபடி போட்டிகளை நடத்தி வருகின்றன.  சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில்  தமிழகத்தின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 128 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரில் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும்’ என்றார். ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் தீபக் ராதி, பாரத் கபடி சங்க நிர்வாகி சுரேந்தர் பஹல் உடனிருந்தனர். மேலும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற 4 அணிகளின் கேப்டன்கள்  பிரபாகரன்(நாமக்கல்),  ர..
                 

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்கு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா அணி 257 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 257 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது...
                 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி பேட்டிங்

லண்டன் : இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்துள்ளது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளதால் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது...
                 

லீட்ஸில் இன்று கடைசி ஒருநாள் போட்டி இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை

லீட்ஸ்,: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று  மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற  கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன.  நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, லண்டன் லார்ட்ஸ்  மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து 86 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.323 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி 50 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் அனுபவ விக்கெட்  கீப்பரும் முன்னாள் கேப்டனுமான டோனி 10,000 ரன் மற்றும் 300வது கேட்ச் என இரண்டு சாதனை மைல்கல்லை எட்டினாலும், அதிரடியில்  இறங்காமல் ஆமை வேகத்தில் பேட் செய்தது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. டோனிக்கு ஆதரவாக கேப்டன் கோஹ்லி கருத்து தெரிவித்த  நிலையில், நடுவரிசை பேட்ஸ..
                 

விவசாயி வீட்டின் 'தடகள சாம்பியன்' ஹீமா... கடைசி 80 மீட்டரில் நிகழ்த்திய மாயாஜாலம்! #HimaDas

                 

2 டெஸ்ட், 4 ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு தடை

கொழும்பு: 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டிஸ் அணிக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரில் மேற்கண்ட உத்தரவை ஐசிசி பிறப்பித்துள்ளது. சண்டிமால் உட்பட இலங்கை பயிற்சியாளர் மற்றும் அணி மேலாளருக்கும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது...
                 

உலகக் கோப்பை கால்பந்தில் வென்ற பிரான்ஸ் அணிக்கு மோடி, டிரம்ப் வாழ்த்து

                 

உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது குரோஷியா!

                 

உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது ஃபிரான்ஸ்!

                 

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி தொடக்கம்: பிரான்ஸ்-குரோஷியா மோதல்

                 

விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் ஜோகோவிச்

லண்டன் : விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். பரபரப்பான 2வது அரை இறுதியில் ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் நேற்று முன்தினம் இரவு மோதிய ஜோகோவிச் 6-4, 3-6, 7-6 (11-9) என்ற கணக்கில் முன்னிலை வகித்தபோது, நேரமாகிவிட்டதால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. 2வது நாளாக நேற்று தொடர்ந்து நடந்த இப்போட்டியில் ஜோகோவிச் 6-4, 3-6, 7-6 (11-9), 3-6, 10-8 என 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 5 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது, முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 7-6 (8-6), 6-7 (5-7), 6-7 (9-11), 6-4, 26-24 என்ற கணக்கில் 6 மணி, 36 நிமிடம் போராடி அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை வீழ்த்தினார். விம்பிள்டன் வரலாற்றில் மிக நீண்ட அரை இறுதியாக இப்போட்டி சாதனை படைத்தது. இன்று நடைபெறும் பைனலில் ஜோகோவிச் - ஆண்டர்சன் மோதுகின்றனர்...
                 

உலக கோப்பையை வெல்ல பிரான்ஸ் - குரோஷியா பலப்பரீட்சை

மாஸ்கோ : உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில், பிரான்ஸ் - குரோஷியா அணிகள் இன்று இரவு மோதுகின்றன. ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் களமிறங்கின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது.நாக் அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே, கோப்பையை கைப்பற்றும் வாய்ப்புள்ள அணிகளாகக் கணிக்கப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், ஸ்பெயின் நடையைக் கட்டியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, உலக அளவில் தலைசிறந்த வீரர்களான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), முகமது சாலா (எகிப்து) ஆகியோர் தங்களின் முத்திரையை பதிக்க முடியாமல் விரக்தியில் ஆழ்ந்தனர்.ரவுண்ட் ஆப் 16ல் 8 அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சுற்றில் வெற்றி பெற்ற 8 அணிகள் கால் இறுதியில் களமிறங்கின. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில்..
                 

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பான விளையாடிய பட்லர் சதம் அடித்தார். அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 113, மோர்கன் 53 டேவிட் வில்லி 50 ரன்கள் அடித்தனர். இதை தொடர்ந்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236  ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரெய்னா 46 ரன்கள், கோலி 45 ரன்கள் எடுத்தனர். ..
                 

விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி

                 

ட்வீட்டால் சர்ச்சை!

யு-20 தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ், செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாமல் தடுமாறியதை குறிப்பிட்டு இந்திய தடகள கூட்டமைப்பு ட்வீட் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. களத்தில் ஹிமா தாஸ் அபாரமாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நிலையில், அவரது ஆங்கில அறிவு குறித்து குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பி ஐஏஎப் நிர்வாகத்தை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்...
                 

கோப்பை யாருக்கு? இன்று இங்கிலாந்து இந்திய அணிகள் மோதும் 3 வது டி20 போட்டி!

                 

டிஎன்பிஎல் டி20ல் இன்று கில்லீஸ் - வாரியர்ஸ் மோதல்

சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில், மொத்தம் 8 அணிகள் களமிறங்கி உள்ளன. திருநெல்வேலியில் நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்திய திருச்சி வாரியர்ஸ் அணி, இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.15க்கு தொடங்குகிறது...
                 

அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் முகமது கைஃப் அறிவிப்பு

டெல்லி: அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்தும் இந்திய வீரர் முகமது கைஃப் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாககும் இவர் 13 டெஸ்ட் மற்றும் 125 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 2000-06 ஆண்டுகளில் விளையாடியவர் முகமது கைஃப். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும், சிறந்த ஃபீல்டராகவும் விளங்கினார். 2002-ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் டிராபியில் இவரது பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த போட்டியில் 75 பந்துகளில் 87 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா அணியுடனான இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இருந்த வீரர்களில் கைஃப் ஒருவர் ஆவார். மேலும் உ.பி. அணிக்காக விளையாடி ரஞ்சி கோப்பையை வென்றுள்ளார். கங்குலி கேப்டனாக இருந்த போது யுவராஜ் சிங்குடன் சேர்ந்து, கைஃப் இந்திய ஃபீல்டிங்கில் முதுகெலும்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
                 

அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் முகமது கைப் அறிவிப்பு

                 

அரசு விளையாட்டு விடுதியில் சேர வாய்ப்பு

சென்னை: அரசு விளையாட்டு விடுதிகளில்  தங்கி விளையாட்டு பயிற்சி பெற 6,  7, 8ம் வகுப்பு படிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் விளையாட்டுத் துறையில் சாதிக்க உதவும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் 5 விடுதிகளை நடத்துகிறது. தங்குமிடம், நல்ல பயிற்சி, சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள்  சென்னை, திருச்சி, திருநெல்வேலி,  ஈரோடு ஆகிய இடங்களில் உள்்ளன.இந்த விடுதிகளில்  இப்போது காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் விளையாட்டுகளில் ஆர்வமும், திறமையும் உள்ள சிறுவர், சிறுமிகள் சேரலாம். டேக்வாண்டா, ஜிம்னாஸ்டிக்ஸ், மேசைப்பந்து, நீச்சல், தடகளம், இறகுப்பந்து , டென்னிஸ்  ஆகிய பிரிவுகளின் கீழ் சேர்வதற்கான தேர்வு முகாம் ஜூலை 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்..
                 

6 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அசத்தல் இந்திய அணிக்கு 269 ரன் இலக்கு

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணிக்கு  269 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி ஜேசன் ராய், பயர்ஸ்டோ அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களின் ஆட்டம் குல்தீப் வரும் வரைதான்.  10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்களுடன் இருந்த இங்கிலாந்து அணி, குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. ஜேசன் ராய் (38), பயர்ஸ்டோ (38), ரூட் (3) விக்கெட்டை வீழ்த்திய குல்தீப், சற்று தாக்கு பிடித்து அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் (50), பட்லர் (53) விக்கெட்டையும் வீழ்த்தினர். தனது கடைசி பந்தில் வில்லியை (1) வெளியேற்றிய குல்தீப், 10 ஓவரில் 25 ரன் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். சீனாமேன் சுழற்பந்துவீச்சாளர்களில் 6 விக்கெட் வீழ்த்தும் முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஒருநாள..
                 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதிக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ்

                 

பிரான்ஸ் அரையிறுதி வெற்றியை குகையில் சிக்கி மீண்ட மாவீரர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்: போக்பா உருக்கம்

மாஸ்கோ : உலக கோப்பை  தொடரில் பைனல் ஆட்டத்திற்கு சென்றுள்ள பிரான்ஸ் அணியின் வெற்றியை தாய்லாந்து வீரர்களுக்கு சமர்பிப்பதாக கூறியுள்ளார் அந்த அணியின்  நட்சத்திர போக்பா கூறியுள்ளார்.மேலும்  செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது இந்த வெற்றிக்கு காரணமாக சாமுவேல் இருந்தார், இந்த நிலையில்  அந்த வெற்றியை குகைக்குள் சிக்கி மீண்ட கால்பந்து வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக போக்பா கூறியது பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பை பெற்றுள்ளது. சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.  குகையில் சிக்கி மீண்ட 12 சிறுவர்களோடு  அவர்களது கோச்சினையும்  ரஷ்யாவிற்கு  உலக கோப்ப..
                 

விம்பிள்டன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்: பெடரர் அதிர்ச்சி தோல்வி

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியுடன் (24வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (12வது ரேங்க்) 6-3, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இப்போட்டி 2 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் 8 முறை சாம்பியனும் நம்பர் 1 வீரருமான ரோஜர் பெடரர் (சுவிஸ்), தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை (8வது ரேங்க்) எதிர்கொண்டார். முதல் செட்டை 6-2 என எளிதாக வென்ற பெடரர், டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த 2வது செட்டில் 7-6 (7-5) என வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த ஆண்டர்சம் 7-5, 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்து விடாப்பிடியாக முன்னேறினர். இதனால் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க முடியாமல் மாரத்தான் மரணப் போராட்டமாக அமைந்த இந்த செட் முடிவே இல்லா..
                 

அரசு விளையாட்டு விடுதிக்கு சென்னையில் தேர்வு முகாம்

சென்னை: பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க உதவும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 5 விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த விடுதிகளில் தற்போது காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும், விளையாட்டுகளில் ஆர்வமும், திறமையும் உள்ள சிறுவர், சிறுமிகள் சேரலாம். தேர்வு முகாம் ஜூலை 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்...
                 

மெஸ்ஸி, கிறிஸ்டியன் எரிக்சனை முடக்கியது போல இங்கிலாந்து வீரர் ஹாரி கேனை முடக்க உள்ளோம்: குரோஷியா கோச் தடாலடி

லுஸ்னிக்கி:  உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் என்ன செய்யப் போகிறார்கள்  என குரோஷியா  அணியின் கோச் மற்றும் கேப்டன்  பகீர் பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. உலக கோப்பை தொடரில் இன்று இரவு 11.30 மணிக்கு  மாஸ்கோவிலுள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இங்கிலாந்தும் குரோஷியாவும் மோதுகிறது. டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரோஷியா அணி  ஆடிய  அனைத்து  ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என  பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரோஷியா, 2வது முறையாக  அரை இறுதியில் விளையாட இருக்கிறது. இந்த அணியின் மிகப்பெரிய பலமே , இதுவரை 2 கோல் அடித்துள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச்சும்,   இவான்  ராகிடிச்சும் மிகச் சிறந்த வீரர்கள் என்பதை  விட இந்த அணியில் உள்ள அனைவரும் கோலடித்து அசத்தும் வீரர்களாக இருக்..
                 

இளம் கபடி வீரர்களுக்கு அஜய் தாக்கூர் டிப்ஸ்!

இந்திய கபடி கூட்டமைப்பின் ‘தங்க வேட்டை’ திட்டத்தின் கீழ் இந்திய அணி வீரரும், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டனுமான அஜய் தாக்கூர் சென்னை, அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது இந்திய கபடி அணியின் சாதனைகள், அணிக்கு மக்கள் அளிக்க வேண்டிய ஆதரவின் அவசியம் மற்றும் கபடி விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்...
                 

மாஸ்கோவில் இன்று 2வது அரை இறுதி இங்கிலாந்து ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்குமா குரோஷியா? பைனலுக்கு முன்னேற பலப்பரீட்சை

மாஸ்கோ : பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் 2வது அரை இறுதியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி மாஸ்கோ லஸ்னிகி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 11.30க்கு தொடங்குகிறது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரை இறுதியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதிய நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போகும் 2வது அணி எது என்பதை தீர்மானிப்பதற்கான அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன, அரை இறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகளுமே ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவை என்பதால், தொடர்ந்து 4வது முறையாக ஐரோப்பிய அணியே உலக கோப்பையை கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. 1966ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ள இங்கிலாந்து, பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணியின் ஹாரி கேன் இதுவரை 6 கோல் அடித்து தங்க ஷூ விருதுக்கான வேட்டையில் முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்துடன், 24 வயது கோல் கீப்பர் ஜார்டன் பிக்போர்டின் சாகசமும் குரோஷிய அணிக்..
                 

தொடர்ச்சியாக 4 வது முறையாக ஐரோப்பிய நாடுகளின் வசமாகும் உலக கோப்பை

மாஸ்கோ: கால்பந்து விளையாட்டில் ஏற்கனவே  ஐரோப்பா கண்டத்தின்  ஆதிக்கம் உலகம் அறிந்தது. அந்த ஆதிக்கம் தற்போது உலகக் கோப்பை வரை பரவியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் அரை இறுதியில் விளையாடும் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய  நான்குமே ஐரோப்பிய நாடுகளாகும். இந்த நான்கு அணியில் ஏதாவது ஒன்றுதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே  தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கே உலகக் கோப்பை செல்ல உள்ளது. 1982 மற்றும் 2006க்குப் பிறகு நடப்பு  உலகக் கோப்பையிலும்   அரை இறுதியில் விளையாடும் நான்கு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளாகவே இருக்கிறது. கடந்த  2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் உலக கோப்பையை கைப்பற்றிய நிலையில் தற்போது   ஐரோப்பிய நாடுகள்  தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலக கோப்பையை கைப்பற்ற உள்ளன...
                 

போலிச்சான்றிதழ் விவகாரம்: இந்திய மகளிர் அணி டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி.எஸ்.பி. பதவியை பறித்த பஞ்சாப் அரசு!

சண்டிகார்: போலிச்சான்றிதழ் சமர்ப்பித்ததாக கூறி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பி. பதவியை பஞ்சாப் அரசு பறித்ததுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவி வகித்து வருகிறார். அவர் பெற்றிருந்த இளங்கலைப் பட்டம் போலியானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுரை கௌரவப்படுத்தும் விதமாக, அவருக்கு காவல்துறை டி.எஸ்.பி பதவியைக் கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு வழங்கியது. இதையடுத்து, டி.எஸ்.பி பதவிக்காக அவரது சான்றிதழ்கள் சரிபார்க்கும் வேலையைக் காவல்துறை தொடங்கியது. இதற்காக ஹர்மன் ப்ரீத் அளித்திருந்த சான்றிதழ்படி, மீரட்டில் உள்ள சௌத்ரி ஷரன் சிங் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிப்பை கடந்த 2011-ம் ஆண்டு முடித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சான்றிதழைச் சரிபார்ப்பதற்காக, பல்கலைக்கழகத்துக்குக் காவல்துறை சார்பில் அனுப்பியதில், அது போலியான பட்டம் என்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தால், அவர் பெற்ற அர்ஜுனா விருதை..
                 

முதல் அரை இறுதியில் இன்று பிரான்ஸ்-பெல்ஜியம் மோதல்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் முதல் அரை இறுதியில், பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் இன்று மோதுகின்றன. ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன. நாக் அவுட் அடிப்படையில் நடைபெற்ற இந்த சுற்றில் 8 அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், கால் இறுதியில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறின.இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போவது யார் என்பதை தீர்மானிப்பதற்காக இன்று இரவு நடைபெறும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெற உள்ள 2வது அரை இறுதியில் இங்கிலாந்து அணி குரோஷியாவை சந்திக்கிறது.உலக கோப்பை வரலாற்றில் 2வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள பெல்ஜியம் அணி, முதல் முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்புடன் களமிறங்குகிறது. கால் இறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம் வீரர..
                 

ரோகித் ஷர்மா அபார சதம் : டி20 தொடரை வென்றது இந்தியா

பிரிஸ்டல் : இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரிஸ்டலில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. புவனேஷ்வர், குல்தீப்புக்கு பதிலாக தீபக் சாஹர் (அறிமுகம்), சித்தார்த் கவுல் இடம் பெற்றனர். இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 94 ரன் சேர்த்தது. ராய் 23 பந்தில் அரை சதம் அடித்தார். பட்லர் 34 ரன் (21 பந்து, 7 பவுண்டரி), ராய் 67 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அலெக்ஸ் ஹேல்ஸ் 30 ரன், ஜானி பேர்ஸ்டோ 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. இந்திய பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 4, சித்தார்த் கவுல் 2, உமேஷ், சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத..
                 

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டி: தொடரை வென்றது இந்திய அணி

பிரிஸ்டல்:  இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்று தொடரை வென்றது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.ரோகித் சர்மா சதம்:இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் ரன்களை கடந்துள்ளார். இந்த சாதனை மூலம் சர்வதேச டி-20 யில், 2000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்...
                 

உலக ஜிம்னாஸ்டிக் போட்டி: தங்கம் வென்றார் தீபா கர்மாகர்

மாஸ்கோ: எம்.ஜ.ஜி. ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலக சேலஞ்ச் கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றுள்ளார். தீபா கர்மாகர் 14.15 புள்ளிகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.  உலக சேலஞ்ச் கோப்பை போட்டியில் தீபா கர்மாகர் தங்கம் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது...
                 

உலக கோப்பை கால்பந்து : ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குரோஷியா

சோச்சி: உலக கோப்பை தொடரை நடத்தி வரும் ரஷ்யாவை வீழ்த்தி,  குரோஷியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ரஷ்ய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆட்டம் துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இதில் ரஷ்யா அணி முந்தியது. இந்த அணி முதல் கோல் அடித்தது. பின்னர் குரோஷியாவும் அடுத்து சில நிமிடங்களில் கோல் அடித்தது. பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததால், பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பில் ரஷ்யா 3 கோல்களையும், குரோஷியா 4 கோல்களையும் அடித்தன. இதனையடுத்து ரஷ்யாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி குரோஷியா, உலககோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது...
                 

ஐரோப்பிய அணியிடம் மீண்டும் மண்டியிட்டது பிரேசில் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதியில் பெல்ஜியம்

கஸான்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில், 5 முறை சாம்பியனான பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணி 2வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது. கஸான் கால்பந்து அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியின் 13வது நிமிடத்தில், பிரேசில் வீரர் பெர்னாண்டினோ பந்தை தடுத்து வெளியேற்ற முயன்றபோது ‘ஓன் கோல்’ ஆக அமைய பெல்ஜியம் முன்னிலை பெற்றது. பதில் கோல் அடிக்க பிரேசில் வீரர்கள் கடுமையாக முயற்சிக்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்து அதிக நேரம் பிரேசில் வீரர்கள் வசம் இருந்தாலும், 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் டி புருயின் மின்னல் வேகத்தில் கோல் அடித்து 2-0 என முன்னிலையை அதிகரித்து அசத்தினார்.இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதலை தீவிரப்படுத்த, அந்த அணியின் ரெனடோ அகஸ்டோ 76வது நிமிடத்தில் கோல் அடித்து நம்பிக்கை கொடுத்தார். நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் அடித்த ஷாட்களை துடிப்புடன் செயல்பட்ட பெல்ஜியம் கோல் கீப்பர் அபாரமாகத் தடுத்து தனது அணியை காப்பாற்றினார். மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சி..
                 

இன்று சுவீடனுடன் மோத உள்ள நிலையில் அரையிறுதிக்குள் நுழைய அற்புதமான வாய்ப்பு பயன்படுத்துமா இங்கிலாந்து?

சமாரா: உலக கோப்பை தொடரின் கால் இறுதியில் இன்று சுவீடன் - இங்கிலாந்து அணிகள்  மோதுகிறது. 1966ல் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இந்த முறை  ஜி பிரிவில் இடம்பெற்றிருந்தது.  இங்கிலாந்து அணி துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்றது.  கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது. இதுவரை உலகக் கோப்பையில் 8 முறை காலிறுதியில் விளையாடிய அணி இன்று சுவீடனை சந்திக்கிறது. 1958ம் ஆண்டு  நடந்த கால்பந்து போட்டியில் சுவீடன் அணி பைனலில் விளையாடியது. இந்த முறை எப் பிரிவில் இடம்பெற்றிருந்த சுவீடன் இந்த உலக கோப்பையில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் தென்கொரியாவை 1-0, மெக்சிகோவை 3-0 என வென்றது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியிடம் 2-1 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்தை 1-0 என வென்றது. இதுவரை 5 முறை காலிறுதியில் விளையாடி அதில் 4 முறை வென்றுள்ளது. இந்த நிலையில் இன்று களம்  காண்கிறது.மண்ணைக் கவ்விய மாவீரர்கள்நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டை கட்டியது. அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகியவை நாக..
                 

பகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்

புலவாயோ: ஜிம்பாப்வே அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 244 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தொடக்க வீரர் பகார் ஸமான் ஆட்டமிழக்காமல் 210 ரன் விளாசி சாதனை படைத்தார். ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் பைனலில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து ஜிம்பாப்வே அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றிய நிலையில், 4வது போட்டி புலவாயோவில் நேற்று நடந்தது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 399 ரன் குவித்தது. இமாம் உல் ஹக் - பகார் ஸமான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 304 ரன் சேர்த்து சாதனை படைத்தது. இது ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடக்க ஜோடியின் 4வது அதிகபட்ச ரன் குவிப்பாக அமைந்தது. முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கேல் - சாமுவேல்ஸ் ஜோடி 2015ல் 372 ரன் குவித்ததே அதிகபட்சமாகும்.இமாம் உல் ஹக் 113 ரன் (122 பந்து, 8 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். பகார் ஸமான் 210 ரன் (156 பந்து, 24 பவுண்டரி, 4 சிக்சர்), ஆசிப் அலி 5..
                 

`புவனேஷ்வர் குமார், ரோஹித் ஷர்மா மிஸ்ஸிங்!’ - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng

                 

சச்சின் மகன் அர்ஜூன் ‘டக் அவுட்’

கொழும்பு: இலங்கை யு-19 அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ‘டக் அவுட்’ ஆனார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர், இந்திய யு-19 அணியில் இடம் பெற்று தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். கொழும்புவில் நடக்கும் இந்தியா, இலங்கை யு-19 அணிகளுக்கு இடையேயான 4 நாள் போட்டியில் அர்ஜூன் களமிறங்கி உள்ளார். சச்சினின் மகன் என்பதால் அர்ஜூனின் செயல்பாடு அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.போட்டியின் 3ம் நாளான நேற்று இந்திய யு-19 அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 525 ரன் குவித்திருந்த நிலையில் அர்ஜூன் களமிறங்கினார். 11 பந்துகளை சந்தித்த அர்ஜூன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய சச்சின் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போல, அர்ஜூனும் முதல் போட்டியில் டக் அவுட்டாகி உள்ளார்.ஆனாலும், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் தனது முதல் விக்கெட்டை வெறும் 12 பந்தில் வீழ்..
                 

இன்று 2வது டெஸ்ட் தொடக்கம் : இலங்கை சுழலை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா?

கொழும்பு: இலங்கை, தென் ஆப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் போட்டியில் இலங்கை 278 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும். முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் முழுமையாக சரணடைந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 126, 2வது இன்னிங்சில் 73 ரன்னில் ஆல் அவுட்டானது. கேப்டன் டுபிளெஸ்சி முதல் இன்னிங்சில் 49 ரன் எடுத்தார். அவரைத் தவிர வேறெந்த பேட்ஸ்மேனும் இலங்கை சுழலை சமாளிக்கவில்லை. பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மட்டுமே 2 இன்னிங்சில் சேர்த்து 7 விக்கெட் கைப்பற்றினார். எனவே, இம்முறையும் இலங்கையின் சுழலை தென் ஆப்ரிக்கா சமாளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.இலங்கையை பொறுத்த வரையில் பேட்டிங்கில் கருணாரத்னே மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். முதல் இன்னிங்சில்..
                 

யு.எஸ். ஓபன் டென்னிஸ் விக்டோரியா அசரன்கா நேரடி தகுதி இல்லை

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் 2 முறை பைனல் வரை முன்னேறிய விக்டோரியா அசரன்கா, இம்முறை நேரடி தகுதி பெறத் தவறியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் 27ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில், சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதல் 101 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியும். நேரடி தகுதிக்கு இந்த வார தரவரிசைப் பட்டியல் கணக்கில் கொள்ளப்பட்டது. இதன்படி, யு.எஸ். ஓபனில் 2 முறை பைனல் வரை முன்னேறியவரான பெலாரசின் விக்டோரியா அசரன்கா மகளிர் ஒற்றையர் பிரிவில் நேரடி தகுதி பெறத் தவறி உள்ளார். இந்த வார தரவரிசையில் அவர் 108வது இடமே பிடித்துள்ளார். முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான அசரன்கா 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.6 முறை யு.எஸ். ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரிய ஷரபோவா உள்ளிட்ட வீராங்கனைகள் நேரடி தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா ..
                 

தோனி ஓய்வு தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி சாஸ்திரி

லண்டன்: ஒருநாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். லீட்ஸில் நடந்த இங்கிலாந்து எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. போட்டி முடிந்ததும் தோனி நடுவரிடம் இருந்து பந்தை கேட்டு வாங்கினார். உடனே தோனி ஓய்வு பெறவே பந்தை கேட்டு வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தோனி பந்தை வாங்கியது ஏன் என்பது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். 45 ஓவருக்கு பின் பந்தின் தன்மை எப்படி மாறியிருக்கிறது என்பதை பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் காட்டவே தோனி அதை வாங்கியதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் தோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான அனைத்து தகவல்களும் பொய்யானவை; அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்...
                 

ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சாட்டிவில் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். பரபரப்பான இறுதிச் சுற்றில் 85.17 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்த நீரஜ் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். மால்டோவா வீரர் ஆண்ட்ரியன் மார்டேர் (81.48 மீ.) வெள்ளிப் பதக்கமும், எடிஸ் மடுசெவிசியஸ் (79.31 மீ.) வெண்கலமும் வென்றனர். கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடரில் நீரஜ் 86.47 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது...