தினமலர் FilmiBeat BoldSky GoodReturns DriveSpark தினகரன் சமயம் One India புதிய தலைமுறை Polimer News

சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்

டோக்கியோ: சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,663லிருந்து 2,715 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 77,658 லிருந்து 78,064 ஆக அதிகரித்துள்ளது. சீன நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு  வருகின்ற மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு கப்பல் பயணிகள் மூலம் ஜப்பானுக்கும் பரவியுள்ளதால் ஒலிம்பிக் கமிட்டி முடிவு என தகவல் அளித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்துக்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும் கூறியுள்ளனர்.கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால், ஜப்பான் துறைமுகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இதன் தாக்கம் வேறு வகையில் உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. தற்போது டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 600-க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. சீன பெருநிலப் பரப்புக்கு வெளியே ஒரே இ..
                 

சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,663லிருந்து 2,715 ஆக அதிகரிப்பு

சீனா: சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,663லிருந்து 2,715 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 77,658 லிருந்து 78,064 ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது...
                 

மே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள் வராவிடில் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்

டோக்கியோ: மே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள் வராவிடில் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு கப்பல் பயணிகள் மூலம் ஜப்பானுக்கும் பரவியுள்ளதால் ஒலிம்பிக் கமிட்டி முடிவு என தகவல் அளித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்துக்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும் கூறியுள்ளனர்...
                 

சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது மரணம் இந்திய வம்சாவளி ஆணழகன் மரணத்தில் மர்மம் இல்லை : விசாரணை அதிகாரி அறிக்கை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது இறந்த இந்திய வீரர் பிரதீப் மரணத்தில் மர்மம் இல்லை என்று தெரியவந்துள்ளது. உலக ஆணழகன் மற்றும் சிங்கப்பூர் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரதீப் சுப்பிரமணியன்(31). இவர் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிங்கப்பூரில் நடந்த பிரபலங்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அப்போது ஸ்டீவன் லிம் (41) என்பவருடன் மோதினார். லிம் விட்ட குத்தில் சரிந்து விழுந்து பிரதீப் சுப்பிரமணியன் இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே இறப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. பிரதீப் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி கமலா பொன்னம்பலம் நேற்று தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:குத்துச்சண்டை நடப்பதற்கு முன்னதாக களத்தில் இருந்த டாக்டர், வீரர் பிரதீப்புக்கு சோதனை நடத்தி தகுதி சான்றளித்தார். அதையடுத்தே பிரதீப் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரது உடல்நிலை நன்றாக இருந்துள்ளது. லிம்முடன் நடந்த மோதலின்போது பிரதீப் மூன்று குத்துக்களை எதிர்கொண்டார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பி..
                 

இந்தியா, மியான்மர் குடியுரிமை சட்டம் மத சுதந்திர ஆணையம் மார்ச் 4ல் விசாரணை

வாஷிங்டன்: இந்தியாவில் சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மதத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்கிறது.இந்த புதிய சட்டம் அண்டை நாடுகளில் மதத்தின் பெயரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியா வந்துள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சர்வதேச மத சுதந்திர ஆணையம் (யுஎஸ்சிஐஆர்எப்) இந்தியா, மியான்மரில் அமலில் உள்ள குடியுரிமை சட்டம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை வரும் மார்ச் 4ல் தொடங்குகிறது என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...
                 

அமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்

வாஷிங்டன்:  ‘‘அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பதற்கு மாறாக அந்நாட்டுடன் இணைந்து பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடலாம்’’ என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான  பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் 50 மாகாணங்களில் கட்சி அளவில் தேர்தல் நடத்தி ேவட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களில் வெற்றி பெறும் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். நிவேடா மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியா வந்துள்ள அதிபர் டிரம்பை விமர்சித்து டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘இந்தியாவிற்கு அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் விற்கப்படும். இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யப்படும்’’ என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பெர்னி தனது டிவிட்டர் பதிவில், “ரூ..
                 

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்: 30 ஆண்டுகள் அதிபராக இருந்தவர்

கெய்ரோ: எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கெய்ரோவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.எகிப்து நாட்டின் மெனோபியா மாகாணத்தில் கடந்த 1928ம் ஆண்டில் பிறந்த முபாரக், இளம் பருவத்திலேயே விமானப் படையில் சேர்ந்தார். கடந்த 1973ல் நடந்த அரபு-இஸ்‌ரேல் போரில் முக்கிய பங்காற்றினார். அதன் பிறகு, அதிபர் அன்வர்  சதாத் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எகிப்தின் அதிபரானார். இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்து ராணுவத்திற்கு பல கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி கிடைத்த போதிலும், மின்பற்றாக்குறை, வேலையின்மை, ஏழ்மை, ஊழல் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன் மீதான ஊழல் புகார்களால், முப்பது  ஆண்டுகளாக அதிபராக இருந்த முபாரக், கடந்த 2011 பிப்ரவரி மாதம், 18 நாள் போராட்டத்துக்கு பின்னர் மக்களின் வற்புறுத்தலினால் பதவி விலக நேரிட்டது. இந்த ஊழல் வழக்குகளில் இருந்து அவர் கடந்த 2017ல் விடுவிக்கப்பட்டார்.தனது கடைசி காலத்தை தெற்கு கெய்ரோவில் உள்ள மாடி ராணுவ மருத்துவமனையில் கழித்து வந்த அவருக்கு கடந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மகன் அலா முபாரக், தனது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் ..
                 

இருநாடுகளும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடுகள்; பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் நட்புறவு காரணமாக பல நன்மைகள் கிடைக்கும்...நிக்கி ஹேலி டுவிட்

வாஷிங்டன்: பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்பிற்கு இடையேயான நட்புறவு காரணமாக பல்வேறு நல்ல நன்மைகள் கிடைக்கும் என ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். முதல்முறையாக இந்தியாவில் 2 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,  மனைவி மெலானியா ட்ரம்புடன் நேற்று இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள்  அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அடுத்தப்படியாக, அகமதாபாத் காந்தி நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட்  மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, ஆக்ரா விமான நிலையம் வந்த டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும்  மருமகனுடன் தாஜ்மகாலை 1 மணி நேரமாக பார்வையிட்டார். அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி  மெலனியாவுடன்  நின்று புகைப்படம் எடுத்துக் ..
                 

தென் அமெரிக்க கனமழை எதிரொலி: பொலிவியா மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு... ஏராளமான வீடுகள் சேதம்!

தென் அமெரிக்கா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. ஆண்டீஸ் மலை தொடரில் உள்ள லாப்பஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கனமழை காரணமாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் உள்ள கோச்சபம்பா நகரின் வீதிகளில் சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்நாட்டின் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழையால் டாக்கினா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதில் பல கட்டுமானங்களும், வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன. பொலிவியா அதிபர் ஜீனைன் அனெஸ் மற்றும அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. ஆண்டீஸ் மலை தொடரில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 16 வீடுகள் மற்றும் 12 மற்ற பல  கட்டிடங்கள் மண்ணுக்குள் இழுத்து செல்லப்பட்டு புதைந்து போய..
                 

ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பான் : ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 138 இந்தியர்கள் பயணம் செய்த நிலையில் கொரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பான் கப்பலில் பயணம் செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 ஆக உயர்ந்துள்ளது...
                 

தேசிய வரைபட கேக் வெட்டி சர்ச்சையில் நேபாள பிரதமர்

காத்மாண்டு;  நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி. இவரது 69வது பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சொந்த ஊரான கிழக்கு நேபாளத்தின் தெர்ஹாத்தும் பகுதியில் நடந்த பிறந்தநாள் ெகாண்டாட்டத்தில் பிரதமர் ஒலி, அவரது மனைவி ராதிகா சாக்கியா, பள்ளி மாணவர்கள், நெருங்கிய நண்பர்கள் என பலர் பங்கேற்றனர். இதையொட்டி வெட்டப்பட்ட 15 கிலோ எடையுள்ள கேக் காத்மாண்டுவில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டது. நேபாள வரைபடம் வரையப்பட்டிருந்த அந்த கேக்கை பிரதமர் ஒலி, கத்தியால் வெட்டி அங்கிருந்தவர்களுக்கு கொடுப்பது போன்ற புகைப்படம் நேற்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது. இதுபற்றி அறிந்த நெட்டிசன்கள் பிரதமர் ஒலிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், ‘‘நேபாள குற்றவியல் சட்டம் 151வது பிரிவின் கீழ் தேசியகீதம், தேசிய கொடி உள்ளிட்டவற்றை அவமதிப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவமதிப்பு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. நேபாள தேச வரைபடத்தை அவமதிப்பு செய்த பிரதமர் மன..
                 

சீன நண்பரை காப்பற்ற முயன்ற இந்திய பெண் மீது தாக்குதல்

லண்டன்: இங்கிலாந்தில் இனரீதியான தாக்குதலில் இருந்து சீன நண்பரை காப்பாற்ற முயன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். இங்கிலாந்தில் பயிற்சி வழக்கறிஞராக இருப்பவர் மீரா சோலன்கா(29). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், தனது நண்பரான சீனாவை சேர்ந்த மேண்டி ஹாங்(28) என்பவருடன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். சோலிஹல் நகரில் உள்ள விடுதி ஒன்றில் மேண்டி மற்றும் மேலும் சில நண்பர்களுடன் மீரா பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது அங்கே இருந்த ஆசியாவை சேர்ந்த ஒருவர், பல்வேறு இனத்தை சேர்ந்த நண்பர்களுடன் இந்தியரான மீரா இருப்பதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.திடீரென அவர் அங்கிருந்த மேண்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா வைரசை சுட்டிகாட்டி இனரீதியாக அவரை திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட மீராவை அடையாளம் தெரியாத அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மீரா சுயநினைவை இழந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் மிட்லேன்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்...
                 

ஆப்கானிஸ்தானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தகவல்

                 

கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு: திடீரென பதவியை ராஜினாமா செய்த பிரதமர் மகாதீர்..மலேசிய அரசியலில் பரபரப்பு!

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் மகாதீர் அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது. மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை. இவர் அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பிறகு, அன்வர் இப்ராஹிம் பிரதமர் பதவியை ஏற்பார் என, மகாதீர் முகம்மது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் காஷ்மீர் விவகாரம், சிஏஏ உள்ளிட்டவை குறித்து மகாதீர் மூக்கை கருத்து தெரிவித்தார். இதையடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. இதனால், மகாதீரை அன்வர் விமர்சித்தார். அதில் கோபமடைந்த மகாதீர், கடுமையான வார்த்தைகளில் அன்வரை விம..
                 

மலேசிய மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மகாதீர்

                 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு

பெய்ஜிங்: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 25 நாடுகளில் பரவியிருக்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2345 லிருந்து 2,442 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 லிருந்து 77,000 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சீனா சென்றுள்ள உலக சுகாதார அமைப்பு குழுவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு  ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை உயர்வு எதிரொலி காரணமாக கம்யூனிஸ்ட் சீனாவில் 'மிகப்பெரிய சுகாதார நெருக்கடி அவசரநிலை' பிரகடனம் செய்யப..
                 

தளபதிக்கு அமெரிக்கா அனுமதி மறுத்ததால் அதிருப்தி: போர் குற்ற தீர்மானத்தில் இருந்து வெளியேற இலங்கை அரசு முடிவு

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி குடும்பத்தினர், அமெரிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தையடுத்து, போர் குற்றம் தொடர்பான ஐ.நா தீர்மானத்தில் இருந்து வெளியேறும் முடிவை இலங்கை நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இலங்கை ராணுவ தளபதியாக இருப்பவர் லெப்டினென்ட் ஜெனரல் சில்வா. கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடான இறுதி கட்ட போரில் ஈடுபட்ட ராணுவப் படைப்பிரிவுக்கு இவர்தான் தலைமை தாங்கினார். இந்த இறுதிகட்ட போரில் 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை தெரிவித்தது. இதில் இருதரப்பினர் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த போர் குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமை அமைப்பு கடந்த 2015ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 11 நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தன.இதற்கு அப்போதைய இலங்கை அதிபர் சிறிசேன அரசும் ஒப்புக் கொண்டது. இதன்படி இந்த போர் குற்றம் குறித்து வெளிநாட்டு நீதிபதிகள், வக்கீல்கள் அடங்கிய குழு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி சில்வா மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் அமெரிக்கா செல்ல முடிவு செய்தனர். போர் கு..
                 

இந்திய மக்களுடன் இருப்பதை நான் எதிர்நோக்குகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

                 

கொரோனா வைரசால் சீனாவில் தீவிர சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது: அதிபர் ஜின்பிங்

சீனா: கொரோனா வைரசால் சீனாவில் தீவிர சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது என அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டதில் ஏற்பட்ட குளறுபடிகளில் இருந்து சீனா பாடம் கற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்...
                 

தென்கொரியாவில் கொரோனாவால் மேலும் 123 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு

                 

அமெரிக்கா - தலிபான் போர் நிறுத்தம் ஹய்ய்யா... ஒரு வாரம் ஜாலி: ஆப்கானிஸ்தான் மக்கள் உற்சாகம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் - அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொள்ளபட்டுள்ளது. இதனால் அங்கு அமைதி நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவர்களுக்கு ஆதரவளித்த தலிபான்களையும் ஒடுக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ல் இறங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களை, ஆப்கன் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வைக்கும் முயற்சிகளை சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், அவ்வப்போது தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி இந்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தினர். இந்நிலையில் தலிபான்கள், அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வாரம் காலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் வரும் 29ம் தேதி  அமெரிக்கா- தலிபான்கள் இடையே இதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானில் ..
                 

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா-தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா மற்றும் தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. தாலிபான் அமைப்பினரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நடத்திய தாக்குதலால் 2001 முதல் ஆப்கானிஸ்தான் அமைதி இழந்து காணப்படுகிறது. ஆப்கனில் தேர்தல் மூலம் அரசுகள் பதவியேற்றும் தாலிபான் ஆதிக்கம் காரணமாக அமெரிக்க துருப்புகள் அந்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாலிபான்கள் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான அமெரிக்கா, மோதல் காரணமாக பலமுறை பின்வாங்க நேர்ந்தது. இந்நிலையில், தாலிபான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசு தரப்பு மத்தியில் ஒரு வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் காணி, முப்படைத் தளபதி என்ற முறையில் எமது படைகள் போர் நிறுத்தத்தை கடைபிடிக்கும் தாலிபான்கள் உடன் ஒருவார காலம் அமைதி காக்கும் நேரம் தொடங்கியுள்ளது. ஒருவார அமைதி காக்கும் நேரத்தில், சுய பாதுகாப்பில் மட்டும் ஆப்கன் படைகள் ஈடுபடும். அல்கொய்தா மற்றும் இதர தீவிரவாத அமைப்புகள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத..
                 

உலகை அச்சுறுத்திய கரோனா வைரஸ்: சீனாவில் இதுவரை 2,345 பேர் உயிரிழப்பு

                 

தீவிரவாத நிதியுதவியை தடுக்க பாகிஸ்தானுக்கு மீண்டும் கெடு

இஸ்லாமாபாத்: தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க,  பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை பணிக்குழு மீண்டும் அவகாசம் அளித்துள்ளது. தீவிரவாதத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவும் நாடுகள் மீது சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வகையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்காததால், அது சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது. இதிலிருந்து பாகிஸ்தான் பெயர் நீக்கப்படுவதற்கு, 27 அம்ச செயல் திட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ,மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவன் ஹபிஸ் சயீத் (70) கடந்தாண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டான். அவனுக்கு சமீபத்தில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், நிதிநடவடிக்கை குழு கூட்டம்(எப்ஏடிஎப்) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் நிதி நடவடிக்கை குழு நிபந்தனைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 650 பக்க அறிக்கையை பாகிஸ்தான் சமர்ப்பித்தது.  நிதி நடவடிக்கை பணிக்குழுவின..
                 

CAA, NPR ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் எச்சரிக்கை

வாஷிங்டன் : குடியுரிமை திருத்தச் சட்டம்,தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சர்வதேச மத சுதந்திரக்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளதாகவும் அந்த சட்டங்கள் பாஜக அரசின் இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்து விலக்கப்படுவதன் மூலம் இஸ்லாமியர்கள் நாடு இழந்தவர்கள் ஆவார்கள் என்றும் நாடு கடத்தலுக்கோ நீண்ட நாட்கள் சிறைக்கோ உட்படுத்தப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்துக்கள் அல்லாத பி..
                 

குழந்தைகள் நல்வாழ்வு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131வது இடம் : ஐநா அறிக்கை வெளியீடு

நியூயார்க்: ஐநா சபை வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா 131வது இடத்தையும், உகந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான நிலைத்தன்மை குறியீட்டில் 77வது இடத்தையும் பெற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. 40 குழந்தைகள் நல நிபுணர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வு அளிக்கக் கூடிய திறன் படைத்த மற்றும் அதற்கேற்ற சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நிலைத்தன்மை குறியீடு, செழிப்பு குறியீடு என இரு பிரிவாக வெளியிடப்பட்டுள்ளது. செழிப்பு குறியீடு என்பது 5 வயதுக்குப்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, தற்கொலை, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை ஆகியவற்றையும், கல்வி, வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையிலிருந்து பாதுகாத்தல் போன்றவற்றையும் கொண்டு கணக்கிடப்படும்.நிலைத்த..
                 

ஜெர்மனியில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல் 2 மதுபான பார்களில் 9 பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் செயலா என சந்தேகம்

ஹனாவ்:  ஜெர்மனியில் இரண்டு மதுபான பார்களில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.ஜெர்மனியின் ஹனாவ் நகரில் உள்ள மதுபான பார்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்தன. மக்கள் மது அருந்தி உற்சாகமாக இருந்தனர். அப்போது, திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் சிலர், கண்மூடித்தனமாக  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், நுழைவு வாயிலேயே 3 பேர் குண்டு பாய்ந்து பலியாகினர். இந்த மதுபான பார், பிராங்க்பர்ட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தாக்குதல் நடத்திய பிறகு, அந்த கும்பல் காரில் தப்பி சென்றது.சிறிது நேரத்தில், ஏரேனாவில் உள்ள மதுபான பாரில் புகைப் பிடிக்கும் பகுதிக்கு சென்ற மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். கொல்லப்பட்ட அனைவரும் குர்தீஷ் வம்சாவளியை சேர்ந்தவர்கள்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார், 30 வாகனங்களில் இயந்திர துப்பாக்கிகளுடன் அங்கு விரைந்தனர். சம்பவம் நடந்த பகுதியை தங்களின் கட்டுப்பாட்ட..
                 

இலங்கை உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல் புகார் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது : பிரதமர் ராஜபக்க்ஷே

கொழும்பு : இலங்கை உள்நாட்டு போரின் போது, போர் குற்றம் நடத்தியதாக எழுந்த குற்றச் சாட்டில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று பிரதமர் ராஜபக்க்ஷே அறிவித்துள்ளார். ராஜபக்க்ஷேவின் இந்த அறிவிப்பு உள்நாட்டு போரால் பாதிப்புக்கு உள்ளாகி நீதி விசாரணையை எதிர்நோக்கி உள்ள தமிழர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. விடுதலை புலிகளுடனான நீண்ட கால போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு மற்றும் அந்நாட்டு ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டன என்பது சர்வதேச நாடுகளின் குற்றச் சாட்டாகும். இனப்படுகொலை நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக இலங்கை பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஐ.நா. அவையில் 2015ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய இலங்கை அரசும் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் இந்த ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் ராஜபக்ஷே தற்போது அறிவித்துள்ளார். அதிபர் மைத்ரிபால சிவசேனாவின் ஆட்சியில் இனப்படுகொலைக்கான தடையங்கள் அழிக்கப்பட்டதாக பல்வேறு  மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பின. இந்த..
                 

கொரோனா வைரஸ் பாதிப்பு..: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இரண்டு பயணிகள் உயிரிழப்பு

டோக்கியோ: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இரண்டு பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் நோக்கி வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால், 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் ஜப்பானின்  யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டனர். பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே சமயம், 14 நாள் கண்காணிப்புக்குப் பிறகு வைரஸ் தொற்று இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதற்கட்டமாக 500 பயணிகள் கப்பலில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களி..
                 

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு

சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதிதாக 394 பேருக்கு மட்டுமே ஆகும். சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2004லிருந்து 2,118 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576 ஆக உயர்ந்துள்ளது...
                 

எனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன்: ‘‘எனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் செய்ய மாட்டேன்,’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் ைகயெழுத்தாகும் என பரபரப்பாக கூறப்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்திய - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் பிறக்கும் என்றும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் செய்யப் போவதில்லை என டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார். இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  வாஷிங்டனில் நேற்று முன்தினம் டிரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய உள்ளது. ஆனால், எனது இந்திய பயணத்தின்போது இது நடக்காது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் செய்யப்படுமா? என்பதும் எனக்கு தெரியாது. ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய ஒப்பந்தம் நடக்கும். பிரதமர் மோடியை எ..
                 

தனது மூளையில் உள்ள கட்டியை அகற்றும்போது வயலின் வாசித்த இசைக்கலைஞர்

லண்டன்: லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் இசைக்கலைஞரின் மூளையில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது அவர் வயலின் வாசித்தார். மில்லிமீட்டர்-துல்லியமான அறுவை சிகிச்சையின் போது நுட்பமான கை அசைவுகளையும் ஒருங்கிணைப்பையும் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்கள் உறுதி செய்ய கருவியை வாசிக்க 53 வயதான டாக்மர் டர்னரை மருத்துவ குழு கேட்டுக் கொண்டதது குறிப்பிடத்தக்கது...
                 

அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அடுத்த வாரம், 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறுகையில், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். இருப்பினும் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். ஆமதாபாத்தில் என்னை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் மைதானம் வரை 7 லட்சம் பேரை நிறுத்த உள்ளனர். எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும். உலகின் மிகப் பெரிய மைதானம் திறக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார். பிப்.,24 ம் தேதி பிற்பகல் குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு வரும் டிரம்ப் மைதான திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கும் டிரம்ப் செல்ல உள்ளார். அன்று மாலை டெல்லி வரும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. போன வருடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்ட..
                 

'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004-ஆக அதிகரிப்பு

சீனா: கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் 74,185ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாள்களாக புதிதாக நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை மட்டுப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென்று அது பல மடங்கு உயர்ந்ததற்கு நோய் இருப்பதை உறுதி செய்யப் பயன்படுத்தும் அளவு கோல் விரிவாக மாற்றப்பட்டுள்ளதே காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் சிக்கியுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மக்களின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் 24 மணி நேரமும் போராடி வருகின்றனர். ஆனால் டாக்டர்களே கொரோனாவுக்கு பலியாவது மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது. அந்த வகையில், வுகானின் வுச்சங் மருத்துவமன..
                 

மக்கள் போராட்டத்தை ஒடுக்க இது ஒன்றும் இந்தியா அல்ல : பாகிஸ்தான் நீதிபதி ஆவேசம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் செயல்படும் பஷ்துன் தகாபஸ் இயக்கத்தின் தலைவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான எப்ஐஆரில், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்திருந்த தேசத் துரோக வழக்கு நீக்கப்பட்டு, தீவிரவாத தடுப்பு சட்டம் சேர்க்கப்பட்டு இருப்பதாக கடந்த 2ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அதார் மினல்லா அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் விலக்கிக் கொள்ளப்படுவதாக இஸ்லாமாபாத் துணை ஆணையர் ஹம்சா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதையடுத்து, இஸ்லாமாபாத் நிர்வாகம் போராட்டக்காரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்றதால், இது தொடர்பான மனுக்கள் பயனற்றதாகி விடுகிறது. இதனால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கு ஏன் திரும்பப் பெறப்பட்டது..
                 

பாகிஸ்தானில் போலியோ மருந்து முகாம் அருகே குண்டு வெடிப்பு: போலீஸ்காரர் பலி, 2 பேர் காயம்

பெஷாவர்:  பாகிஸ்தானில் முதல் முறையாக இந்த ஆண்டு நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   3.9 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 2 லட்சம் ஊழியர்க ஈடுபட்டுள்ளனர். இவர்கள்் வீடு வீடாக சென்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா என கண்டறிந்து, சொட்டு மருந்து வழங்கி வருகின்றனர். இதற்கிடையே, தேரா இஸ்மாயில் கான் நகரில் உள்ள குலாசி பகுதியில் ஊழியர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நின்றனர். அப்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்...
                 

சொகுசு கப்பலில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க ஜப்பான் அரசு முடிவு!

டோக்கியோ: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. டைமன்ட் பிரின்சஸ் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் கடந்த 3ம் தேதி முதல் ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓரு முதியவருக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது 454 பேரை தாக்கியுள்ளது. மொத்தமுள்ள 3,700 பேரில் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவிய வண்ணம் உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் மருந்துகளை செலுத்தி சிகிச்சையளிக்க அந்நாட்டு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, எச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். ஜப்பான் சொகுசு கப்பலில் 138 இந்திய பயணிகள் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனிடையே 300 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு விமானம் மூலம் தனது நாட்டுக்கு கொண்..
                 

பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் பலி: 20 பேர் படுகாயம்

                 

நாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு

பீஜிங்: அண்டை நாடான சீனாவில் 'கோவிட் - 19' எனப்படும் 'கொரோனா' வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன் சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் வுகான் நகரில்  மட்டும், 142 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2000 பேர் நேற்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கே தவித்த தங்கள் நாட்டவர் 175 பேரை, நேபாள அரசு, தனிவிமானம் மூலம் மீட்டு வந்துள்ளது. அவர்கள் அனைவரும், தலைநகர் காத்மண்டுவில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.தற்போது, கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1..
                 

ஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி

துபாய்: ஏமன்  நாட்டில் அரசுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சியாளர்கள்  கடந்த 2015ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகின்றனர். ஏமன் அரசு படைக்கு  சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. ஏமன்-சவுதி கூட்டுப்படைகள் ஹுதி  கிளர்ச்சியாளர்கள் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில்,  நேற்று முன்தினம் இரவு, சவுதி அரேபியாவின் அல் ஜாவ்ப் மாகாணத்தில்  அல்-அய்ஜா பகுதியில் ஏமன்-சவுதி கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல்  நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஏமனுக்கான ஐநா மனித  உரிமை ஒருங்கிணைப்பாளர் லிஸ் கிராண்டே கூறியதாவது: கடந்த 15ம் தேதி இரவு  ஏமன் - சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 31 பேர்  உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன.  சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் சென்ற இரண்டு  அதிகாரிகள், ஊழியர்களின் நிலை என்னவாயிற்று எனத் தெரியவில்லை. இவ்வாறு லிஸ் கிராண்டே கூறினார்.இதற்கிடையே, விமானம் நொறுங்கி விழும் முன், அதில் இருந்த  ஊழியர்கள் வெளியேறி ..
                 

தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்-28 ம் தேதி வரை நீதிமன்ற காவல்

                 

தொடரும் கொரோனா வைரஸ் கொடூரம்: தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1606-ஆக அதிகரிப்பு

சீனா: சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1600-ஐ தாண்டியுள்ளது. னாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 1600க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 1662 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. சீனா முழுவதும் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது...
                 

சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: டெல்லி சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

டெல்லி: சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எனத் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேரை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்தது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இந்த கொடிய நோய்  1500-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் 30 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1631 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸால் 67,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி நிலவரப்படி, சீனா மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 5,700 பயணிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த விசாரணையில் சீனா மற்றும் கரோனா ப..
                 

மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீவிபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபகாக உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
                 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் பேசினார்.  பாகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள துருக்கி அதிபர் எர்டோகான், அந்நாட்டு நடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் நேற்று பேசியதாவது: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த வாரம் நடைபெறும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேறும் முயற்சிக்கு துருக்கி ஆதரவாக இருக்கும். காஷ்மீர் பிரச்னையை போராலும், அடக்குமுறையாலும் தீர்க்க முடியாது. நீதி, நியாயம் அடிப்படையில்தான் தீர்க்க முடியும். நமது காஷ்மீர் சகோதர, சகோதரிகள் பல ஆண்டு காலமாக கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான நடவடிக்கைகளால், அவர்களின் கஷ்டம் இன்னும் மோசமாகியுள்ளது. . காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண துருக்கி எப்போதும் ஆதரவாக இருக்கும். முதலாம் உலகப் போர் காலத்தில் துருக்கியில் நடந்த கலிபோலி போரில் இரு தரப்பிலும் 2 லட்சம் வீரர்கள் பலியாயினர். அதற்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் எந்த வித்தியாசம் இல்லை. அடக்குமுறைக்கு எ..
                 

இலங்கை அரசு அறிவிப்பு இலவச விசா திட்டம் ஏப்.30 வரை நீட்டிப்பு : சீனா பெயர் நீக்கம்

கொழும்பு: இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கான இலவச விசா திட்டத்தை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலால், அந்நாட்டின் சுற்றுலா துறை கடுமையாக  பாதித்தது. இதனால்,  சுற்றுலா துறையை ஊக்குவிக்க, இலங்கை வந்த பின் விசா எடுத்துக் கொள்ளும் 39 நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனாவையும் சேர்த்தது. அத்துடன், 48 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. இதன்படி, விசா வழங்க தெற்காசிய நாடுகளின் மக்கள் ரூ.1,400ம், பிற நாட்டவர்கள் ரூ.2500ம் கட்டணம் செலுத்த வேண்டியது ரத்து செய்யப்பட்டது.இதனால், சுற்றுலா துறை 12 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதற்கிடையே, சீனாவில் கோவிட் வைரஸ் பாதிப்பால் மீண்டும் சுற்றுலா துறை சுணக்கம் கண்டுள்ளதால், இலவச விசா திட்டம் மேலும் 3 மாதத்திற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அமைச்சர் ரமேஷ் பதிரானா தெரிவித்துள்ளார். இருப்பினும், கோவிட் வைரஸ் பாதிப்பால், விசா சலுகை பட்டியலில் இருந்து சீனா நீக்கப்பட்டுள்ளது...
                 

கொடூர கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நேற்று மட்டும் 116 பேர் உயிரிழப்பு...இதுவரை 1,483 பேர் பலி

சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் நேற்று மற்றும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த வைரசினால் சீனாவில் 1350 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சீன அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது.இன்னும் 64,600 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் யோகோஹாமில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கோவிட் -19 என்ற 'கொரோனா' வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு  இந்த வைரஸ் உலகிற்கு கடுமைய..
                 

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி எம்பி நிதியமைச்சராக நியமனம்

லண்டன்: இங்கிலாந்து நிதியமைச்சராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.   இங்கிலாந்தில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி வெற்றி பெற்று போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானார்.  அவர் தற்போது தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். இதில், யார்க்‌ஷயர் மாகாணத்தின் ரிச்மாண்ட் பகுதி எம்பி.யான ரிஷி சுனக், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை மணந்தவர். ரிஷி சுனக் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர்.  ஆக்ஸ்போர்ட், ஸ்டாண்ட்போர்டு பல்கலைக் கழகங்களில் பயின்றவர். இதற்கு முன் இவர் நிதித் துறையில் தலைமை செயலாளராக இருந்தார். இவரை நிதி அமைச்சராக்க இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்...
                 

கோவிட்-19 பிடியில் சீனா ஒரே நாளில் 254 பேர் பலி

பீஜிங்: சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட் -19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மட்டும் 254 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட் -19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள வுகான் நகரில் இந்த வைரஸ் பாதிப்பினால் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 1115 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 1,367 ஆக உயர்ந்துள்ளது. 31 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 254 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்தது. இதில் 242 பேர் வுகான் நகரை சேர்ந்தவர்கள். மேலும், 15,152 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூபெய் மாகாணத்தில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரமாக உய..
                 

ஓடவும் முடியல... ஒளியவும் முடியல...சுற்றுலா கப்பலில் வேகமாக பரவுகிறது கோவிட் வைரஸ்: கடலில் நடக்கும் மரண போராட்டம்

பீஜிங்: ஜப்பான் அருகே கடலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சுற்றுலா கப்பலில் உள்ள பயணிகளுக்கு கோவிட் வைரஸ் தாக்குவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கடந்த 1ம் தேதி ஒருவருக்கு மட்டுமே  கண்டுபிடிக்கபப்ட்ட இந்த நோய், நேற்று 174 ஆக அதிகரித்தது. இதனால், கப்பலில் .உள்ள 3700 பயணிகளும் உயிரை கையில் பிடித்தப்படி தவித்து வருகின்றனர். மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில்  பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட 28 நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த நோயை குணமாக்க,  இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சீனாவில் இதன் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரையில் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸ் தாக்கும் அபாயம்  காரணமாக, சீன நாட்டு மக்கள் வெளியே வர பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக..
                 

26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை : பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இஸ்லாமாபாத் : ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது மீதான 2 வழக்குகளில் தீவிரவாத தடுப்பு நிதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்குகளில் லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நிதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் வழக்கு பாகிஸ்தானில் உள்ள ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னணி அமைப்பு.  கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 188 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். தீவிரவாத அமைப்புகளுக்கு எல்லாம் நிதி அளித்து வந்தான். இவனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்து, இவனது தலைக்கு ரூ.71 கோடி வெகுமதி அறிவித்தது.இந்நிலையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக ஹபிஸ் சயீத் மீது, பாகிஸ்தானின் பஞ்சாப் காவல..
                 

குடிநீர், உணவு கிடைப்பதில் சிக்கல், 3 மணி நேரம் மட்டுமே தூக்கம் : உயிர் தியாகத்திற்கும் தயாராகி உள்ள மருத்துவ பணியாளர்களை கடவுளாக பாவிக்கும் சீன மக்கள்!!

பெய்ஜிங் : மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பலர் வாய் வார்த்தையாக கூறுவது உண்டு. ஆனால் அந்த கூற்று உண்மை தான் என்று தற்போது கண்கூடாக நிரூபணம் ஆகி இருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சற்றும் ஓய்வு எடுக்காமல் உழைத்து வரும் சீன மருத்துவ பணியாளர்கள் தான் அந்நாட்டு மக்களுக்கு கடவுளாக மாறி இருக்கின்றனர். சீனாவில் வூகான் நகரில் உள்ள பாம்பு இறைச்சியில் இருந்து வெடித்து கிளம்பிய இந்த உயிர்கொல்லி வைரஸ், 31 நகரங்களுக்கு பரவியது. விளைவு ஆயிரக்கணக்கான நோயாளிகள் படையெடுப்பில் சிக்கி தத்தளித்தன மருத்துவமனைகள். தீயைவிட தீவிரமாக பரவிய கொரோனவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கிறது. பணிபுரியும் 6 மணி நேரமும் குடிநீர் அருந்த முடியாது, உணவு கிடையாது, கழிப்பறைக்கும் போக முடியாது. இதையும் மீறி மணி ஒலித்ததும் நோயாளிகளை கவனிக்க தவறுவதில்லை. முகக்கவசம் மற்றும் 3 அடுக்கு உரையை நீண்ட நேரம் அணிவதால் தோல்தடிப்பு மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. இதை பொருட்படுத்தாமல் மருத்துவக் துறையில் பணி தொடருகிறது. நோய் தோற்று ஏற..
                 

தென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

சியோல்: தென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய ‘கோவிட் 19’ என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டை புரட்டி போட்டது. 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொரோனா கால்பதிக்க தொடங்கி உள்ளது. இதில் தென்கொரியாவில் வேகமாக பரவி வருகின்றது. இங்கு இதுவரை 8 பேர் கொனோராவிற்கு பலியாகி உள்ளனர். மேலும் நேற்று புதிதாக 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக நோய் பாதித்த 60 பேரில் 49 பேர் ேடகு பகுதியைச் சேர்ந்தவர்கள். வைரஸ் பரவலையடுத்து முககவச தயாரிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.  தென்கொரியாவின் ..
                 

அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் :ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

ஜெனீவா : பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43வது கூட்டம் நடைபெற்று வருகிறது.  இன்றைய நிகழ்வின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பலரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட் ஆகியோர் அடங்குவர். காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் அனைத்து சமூகங்களின் மனித உரிமைகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய  ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ், உலகிலேயே அதிக அளவிலான மனித உரிமை மீறல்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் இருப்பதாக தெரிவித்தார். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மனித உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பது, அமைதி நட..
                 

சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு: ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தகவல்

டோக்கியோ: சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது, சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத்தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசானது சீனாவை மட்டுமின்றி பல்வேறு நாடுகளையும் ஆட்டி படைத்து வருகின்றது. வுகானில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகின்றது. அதே நேரத்தில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வைரசினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள பயணிகளில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கப்பலில் இருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டப்பட்ட பயணிகள் கப்பலில் இருந்து கடந்த ஓரிரு நாட்களாக வெளியேற்றப்பட்டனர். நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கப்பல் ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஆயிரம் பேர் கப்பலிலேயே தொடர்ந்த..
                 

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை, கால்பந்து போட்டிகள் ரத்து...பீதியில் மக்கள்!

சியோல்: சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும், 150 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,600 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும், இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக, தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 893 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். டேகு நகரில் தான், அதிகமானோர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நேற்று மட்டும், இரண்டு பேர் பலியாகினர். வைரஸ் வேகமாக பரவுவதால், தென் கொரியாவில் துவங்கவிருந்த சர்வதேச கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பாதிப..
                 

மன்னருக்கு இரவு 1 மணிக்கு கடிதம் அனுப்பினார்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா: மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமா?

கோலாலம்பூர்: இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த, மலேசிய பிரதமர் மகாதீர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். மலேசியப் பிரதமராக கடந்த 1981ம் ஆண்டில் இருந்து பதவியில் இருந்த மகாதீர்  முகமது (94), 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர்,  2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நம்பிக்கை ஒப்பந்தம்'  என்ற பெயரில் அன்வர் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சியுடன் கூட்டணி  அமைத்து மீண்டும் பிரதமரானார். அப்போது, நவம்பருக்கு பின்னர் அன்வருக்கு  பிரதமர் பதவியைவிட்டு கொடுப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், மலேசியப் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்ட மகாதீர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை அவரது பெர்சாது கட்சியின் தலைமை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மணிக்கு மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னருக்கு அனுப்பியுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.அதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர்தான், மகாதீரின் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக..
                 

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக சுகாதார அமைப்பின் குழு சீன மருத்துவமனைகளில் பார்வை: சிகிச்சைகள் குறித்து ஆய்வு

பீஜிங்: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரில் உள்ள மருத்துவமனைகளை உலக சுகாதார அமைப்பு குழுவினர் நேற்று பார்வையிட்டனர். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தீவிரமடைந்தது. இது பல்வேறு மாகாணங்களிலும் பரவியது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் 31 மாகாணங்களிலும் சேர்த்து நேற்று முன்தினம் வரை 2,592 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 1,846 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் புதிதாக 409 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 31 மாகாணங்களிலும் கொரோனாவிற்கு 150 பேர் பலியாகி உள்ளனர்.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சீனாவில் கொரோனா வைரஸ் சிகிச்சை அளித்து வரும் பல்வேறு மருத்துவமனைகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்கள். டோங்க்ஜி மருத்துவமனை, தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள வுகான் விளையாட்டு மையம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சிகி..
                 

ஈரானையும் வீட்டு வைக்காத கொரோனா: நடப்பு மாதத்தில் 50 பேர் பலி; 270 பேர் தடுப்புக் காவல்...அரசின் கட்டுப்பாட்டு செய்தி நிறுவனம் தகவல்

ஷியாக்: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய  கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 28 நாடுகளில் பரவியிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,592 பேர் வரை பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 79 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் தொடருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி  வருகின்றன. சீனாவுக்கு விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.இந்நிலையில், ஈரானில், ஷியாக்களின் முக்கிய மதக் கல்வி நகரமாக விளங்கும் குவோம் (Qom) நகரில், இந்த மாதம் மட்டும் 50 பேர் கொரானா தொற்றுக்கு உயிரிழந்து விட்டதாக, அர..
                 

மலேசியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் டாக்டர் மகாதீர் மொஹமத்

கோலாலம்பூர்: மலேசியாவின் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமத் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத் ஆவார். 2003-ல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற மகாதீர் 2018-ல் மீண்டும் மலேசியப் பிரதமானார். கடந்த 2018ல் இவர் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. மலேசியாவிற்கு புதிய முகம் கொடுத்தவர் இவர்தான். இவர் மீண்டும் பிரதமராக வந்து அதிரடி அரசியலில் ஈடுபடுவது சந்தோசம் அளிக்கிறது என்று அந்நாட்டு மக்கள் கூறினார்கள். இதனால் அந்நாட்டு அரசியல் குழப்பங்களும் சரியானது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில்தான் தேர்தலை சந்தித்து மகாதீர் மொஹமத் வெற்றிபெற்றார். ஆனால் மகாதீர் மொஹமத் தனியாக வெற்றிபெறவில்லை. மகாதீர் மொஹமத் மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.  ஆனால் இந்த கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் ச..
                 

ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு பின் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் சேவை மீண்டும் தொடக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் அட்டூழியம் அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவர்களுக்கு ஆதரவளித்த தலிபான்களையும் ஒடுக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ல் இறங்கியது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.  தொலைதொடர்பு  சேவைகள் இல்லாமல் மக்கள் தவிப்பு மேலும், தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியும், அங்கு பணிபுரியும் நபர்களை கடத்தி கொலை செய்தும் அட்ட..
                 

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: நேற்று ஒரு நாளில் மட்டும் 150 பேர் உயிரிழப்பு

                 

துருக்கியில் நிலநடுக்கம்; 8 பேர் பலி

இஸ்தான்புல்: துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் பலியாகினர். துருக்கியின் ஈரான் எல்லையில் உள்ள வான் மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் சுமார் 25 பேர் காயம் அடைந்து, சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் இதே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது...
                 

வெள்ளை மாளிகையில் இருந்து இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

                 

'யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்' என்று கூறிய சிறுவனின் முகத்தில் புன்னகை: மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் ரக்பி மைதானத்திற்குள் வந்த குவாடன்

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் பெற்றுவருகிறது, குவாடன் பெய்லஸ் என்னும் சிறுவனின் வீடியோ. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், எலும்பு வளர்ச்சி குறைவு நோய் பாதிப்புடையவர். இதனால் தலை மட்டும் பெரியதாகவும் உயரம் குறைவாகவும் இருக்கிறான் அந்தச் சிறுவன். இதனால் தான் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளான். பலமுறை மனமுடைந்து வந்த அவனை அவரது தாயார் யர்ராகா பெய்லஸ் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவந்தார்.ஆனால், சமீபத்தில் இந்த கேலி கிண்டலால் மிகவும் உடைந்துபோன அவன், 'யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்! எனக்கு ஒரு கயிறு கொடுங்கள், நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்' என்று கதறியிருக்கிறான். இந்த வீடியோவை அவரது தாயார் கேலி மற்றும் கிண்டலுக்கு எதிரான கடும் விமர்சனத்துடன் வெளியிட, சமூக வலைதளங்களில் உலகமெங்கும் இருக்கும் மக்கள் பலரையும் சென்றுசேர்ந்தது அவனின் குரல். அதற்கு செவிசாய்த்து, பலரும் குவாடனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, ஹூக் ஜாக்மேன் ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலங்கள் வரை பல..
                 

சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வரும் கொரோனா வைரஸ்: இத்தாலியில் 2 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இத்தாலியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதியவர் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக இத்தாலியின் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. இத்தாலியில் இன்று நடைபெற இருந்த் 3 சிரீ ஏ கால்பந்து போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் த..
                 

61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்

சியோல்: சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்நாட்டில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டியால் பரவிய இந்த வைரஸ், பிரார்த்தனைக்கு வந்த 9,300 பேரை தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 77 ஆயிரம் பேர் இதில் பாதிக்கப்ட்டுள்ளனர். சீனாவில்  பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்து விட்டது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நாட்டில் 200 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென 142 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனால், அங்கு கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவின் சியாங்டோ என்ற பகுதியில் டேனாம் என்ற மனநல மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 92 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 2 பேர் ெகாரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அடுத்..
                 

இலங்கையில் பர்தா அணிய உடனடி தடை விதிக்க வேண்டும்: பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு அரசுக்கு பரிந்துரை

கொழும்பு: இலங்கையில் பர்தா அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் ஆகியவற்றை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அவற்றில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க எம்.பி. மலித் ஜெயதிலகா தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. நாட்டில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு இக்குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இக்குழு தனது ஆய்வை முடித்துள்ளது. இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை அளித்துள்ள இந்த குழு, அதில் 14 விதமான சர்ச்சைக்குரிய விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது. அவை வருமாறு, இலங்கையில் பர்தா உடை அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும். முகத்தை மறைக்கும்வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க போலீசுக்கு அ..
                 

வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பீதி ஆட்டம் காண்கிறது ஆசிய பங்குச்சந்தை: தென் கொரியாவில் ஒரே நாளில் 100 பேருக்கு பாதிப்பு

ஹாங்காங்: சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தவிர ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் பீதியால், ஆசிய பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 25 நாடுகளில் பரவியிருக்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், கடந்த 3 நாட்களாக புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. இது, சீனாவுக்கு நிம்மதி அளித்தது.ஆனால், இந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளிலும் கொரோனா பரவியிருக்கும் அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியானது. அங்குள்ள 4 சிறைச் சாலைகளில் 200 பெண் கைதிகள் உட்பட 512 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று உறுதி  செய்யப்பட்டது. இதனால், நேற்று மட்டும் இந்நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1109 ஆக அதிகரித்தது. அதேபோல் பலியானோர் எண்ணிக்கை 118 ஆக இருந்தது.  நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 2236 ஆக அதிகர..
                 

கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவில் டிவி பேனல் உற்பத்தி பாதிப்பு...இந்தியாவில் விலை உயர வாய்ப்பு!

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பேனல் உற்பத்தி பாதித்து விநியோகம் முடங்கி இருப்பதால் இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளின் விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. விலை குறைவு என்பதால் சீனாவில் இருந்து பேனல்களை அதிகளவில் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. சீனாவில் கொரோனா தோற்று காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை வரும் மார்ச் மாதம் முதல் 10 விழுக்காடு உயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி தயாரிப்பதற்கு தேவையான முக்கிய உதிரி பாகமான டிவி பேனல்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. டிவிக்களில் உள்ள இந்த பேனல்களின் விலை மொத்த விலையில் சுமார் 60 விழுக்காடாகும். சீன புத்தாண்டையொட்டி அங்கு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் இந்தியாவில் டிவிக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டிவி பேனல்களை இருப்பு வைத்திருந்தன. ஆனால் சீன புத்தாண்டை தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் உற்பத்தி ஆலைகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இ..
                 

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோர் 75,465 ஆக உயர்வு

பீஜிங்: சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576-ல் இருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இந்த வைரசால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது பற்றி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 394 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனாவ..
                 

கார்பன் மாசுவை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை : நியூயார்க் முன்னாள் மேயர் பேச்சு

வாஷிங்டன்: ‘‘கார்பன் மாசுவை குறைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில்தான் யாரும், எதுவும் செய்யவில்லை’’ என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஜனநாயக கட்சியைசேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க். இந்தாண்டு இறுதியில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இவர் போட்டியிட விரும்புகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளர்கள், இங்கு விவாதம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி இறுதி செய்யப்படுகின்றனர். லாஸ்வேகாஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த முதல் விவாதத்தில் ப்ளூம்பெர்க் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்்டும் என அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு கேலிக்கூத்தானது. இந்த விஷயத்தில், சீனா தான் நியாயப்படி செயல்பட்டுள்ளது.  கார்பன் மாசு வெளியேற்றத்தை குறைத்துள்ளது. இந்தியாவில் இது மிகப் பெரிய பிரச்னை. கார்பன் மாசுவை குறைக்க யாரும், எதுவும் செய்வதில்லை. சீனாவுடன் பேசினால், அங்கு கார்பன் மாசு வெளியேற்றத்தை மேலும் குறைக்கலா..
                 

கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார்

வாஷிங்டன்: கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் டெஸ்லர் தனது 74 வது வயதில் காலமானார். முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர், இன்று கணினியை எளிமையாக பயன்படுத்த உதவும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளை கண்டுபிடித்தவர் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர், கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்தார். தொடர்ந்து, ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்தவர். அந்த வகையில் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி அதாவது ப்ரவுசரை உருவாக்கி கணினி மயமாக்கலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். கடைசியாக, கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜிப்சி குறித்து டெஸ்லர் உற்சாகத்துடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இன்றளவில் சிறியவர்கள் மு..
                 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏராளமான சிறுபான்மையின மக்கள் நாடற்று போகும் நிலை ஏற்படும்: ஐ.நா பொதுச்செயலாளர் கவலை

இஸ்லாமாபாத்: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏராளமான சிறுபான்மையின மக்கள் நாடற்று போகும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். புதிதாக சட்டம் இயற்றும்போதோ அல்லது, சட்டத்தில் திருத்தம் செய்யும்போதோ மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றார். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தான் எம்.பி.க்களை கடந்த 17ம் தேதியன்று அன்டோனியோ குடரெஸ் சந்தித்து பேசினார். அப்போது அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி, இந்தியா உடனான கா‌‌ஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். அவரிடம் பாகிஸ்தான் எம்.பி.க்கள், தற்போது போர் பதற்றம் நிலவுகிற சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு பேச்சுவார்த்தையை மறுபடியும் தொடங்க முடியாது; இந்த பதற்றமான சூழ்நிலை..